google-site-verification: googled5cb964f606e7b2f.html ஜூலை 2024 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 25 ஜூலை, 2024

பாக்கு பயிர் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

நடவு செய்தல்:

  • பொதுவாக பாக்கு அதிக வறட்சி அல்லது தொடர்ச்சியாக நீர் தேங்கும் பகுதியில் சாகுபடி செய்ய உகந்த பயிர் அல்ல. அவ்வாறு சாகுபடி செய்தால் சரியான மகசூல் கிடைக்காது.
  • மேலும் இதற்கு 50% ஆவது நிழல் தேவைப்படுகிறது. எனவே நடவு செய்வதற்கு முன்பதாக இதனை பற்றி யோசிக்கலாம். நிழல் தரக்கூடிய பயிர்களில் ஊடுபயிராகவோ அல்லது வரப்பு பயிராகவும் பாக்கு கன்றுகளை நடவு செய்வதற்கு முன்பு தயார் படுத்த வேண்டும்.
  • மண்ணின் தன்மை நில அமைப்பை பொறுத்து வேர் வளர்ச்சி மாறுபடும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மணல் பாங்கான மண் அமைப்பில் நல்ல வேர் மற்றும் பயிர் வளர்ச்சி காணப்படும்.
  • பொதுவாக பாக்கு மரத்தின் வேர்கள் 70% வரை முப்பது சென்டிமீட்டர் ஆழத்தில் தான் இருக்கும். அதுமட்டுமின்றி தண்டுப் பகுதியிலிருந்து பக்கவாட்டில் சுமார் ஒரு மீட்டர் வரை வளரும் தன்மையுடையது.
  • எனவே மண்ணின் தன்மையை பொறுத்து ஒரு மீட்டர் நீளம், அகலம், ஆழம் உடைய குழிகளை எடுத்து சுமார் 15 முதல் 30 நாட்கள் வரை நன்கு காய விடவும்.
  • நடவு செய்வதற்கு மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு முன்பாக தலா 100 கிராம் Trichoderma மற்றும் Metarhizium ஆகியவற்றை 10  லிட்டர் தண்ணீரில் கலந்து. குழிக்கு ஒரு லிட்டர் வீதம் பொறுமையாக தெளிக்க வேண்டும்.
  • குழி ஒன்றுக்கு ஐந்து கிலோ மண்புழு உரம், தலா 50 கிராம் Trichoderma/Pseudomonas, உயிர் உரம், VAM, 100 கிராம் இடித்த வேப்பங்கொட்டை மற்றும் Humic குருணை  ஆகியவற்றை மேல் மணலுடன் கலந்து மூன்றில் ஒரு பங்கு குழி நிரம்பும் வரை கொட்டவும்.
  • பிறகு இதில் செடிகளை நட்டு மீண்டும் சிறிதளவு மண் கலவையை இட்டு நீர் விட வேண்டும்.
  • கன்றுகள் வளர வளர மண் அணைத்துக் கொண்டே வரவேண்டும் குழிகள் நிரம்பும் வரை.
  • நல்ல வளர்ச்சி மற்றும் அதிக இலைகள் உடைய குறைந்தது ஒரு வருடம் ஆன பாக்கு நாற்றுகளை நடவுக்காக பயன்படுத்தலாம்.

உர /ஊட்டச்சத்து மேலாண்மை: 

  • பாக்கு பயிர் தொடர்ச்சியாக வளரும் தன்மை உடையதாகவும் காய்க்கும் திறன் படைத்ததாகவும் இருப்பதால் தொடர்ச்சியாக ஊட்டச்சத்து கொடுக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும்.
  • பொதுவாக பாக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துக்களை வரிசைப்படுத்தி பார்த்தால் தழைச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மணிச்சத்து, மெக்னீசியம், மாங்கனிசு, காப்பர், போரான் மற்றும் மிகக் குறைந்த அளவில் இதர நுண்ணூட்ட சத்துக்கள்.
  • எனவே இந்த ஊட்டச்சத்துக்களை சரிவிகித அடிப்படையில் பயிர்களுக்கு வழங்க வேண்டும். 
  • வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பரிந்துரைக்கப்படும் உரங்களை பிரித்து போதுமான மண் ஈரப்பதம் இருக்கும் போது இட வேண்டும். 
  • பயிரின் தண்டு பகுதியில் இருந்து சுமார் 50 முதல் 60 சென்டிமீட்டர் தள்ளி 25 முதல் 50 சென்டி மீட்டர் ஆழத்தில் இட வேண்டும். ஏனெனில் இங்கு தான் பெரும்பான்மையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளக்கூடிய வேர்கள் அமைந்துள்ளது.
  • முதல் ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை ரசாயன உரங்களை தவிர்த்து அதிக அளவு இயற்கை உரங்களை மண்புழு உரம்/தொழு உரம்/பசுந்தாள் பசுந்தலை உரங்கள்/புண்ணாக்கு வகைகள் அல்லது கிடைக்கப்பெறும் அல்லது கிடைக்க பெறும் இயற்கை பயன்படுத்தி பயிர் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். இதனால் ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி, மண் வளமாக மாறுதல் மற்றும் வேர்களுக்கு நல்ல காற்றோட்ட வசதி கிடைக்கப்பெறும்.ஒரு வருடங்களுக்குப் பிறகு சிறிது சிறிதாக ரசாயன உரங்களை பயன்படுத்தலாம்.
  • ஒரு மரத்திற்கு தலா 15 கிலோ தொழு உரம்,100 கிராம் தழைச்சத்து, 50 கிராம் மணிச்சத்து, 150 கிராம் சாம்பல் சத்து மற்றும் ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்டச் சத்து ஆகியவற்றை பருவ மழையின் போது இடலாம். மண்ணின் கார அமிலத்தன்மை, பயிர் வளர்ச்சி, ஊடு பயிர் இடுதல் முதலியவற்றை கருத்தில் கொண்டு மேற்கண்ட வழி முறையை வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பின்பற்றலாம்.
  • இதைத் தவிர மண்ணின் தன்மையை மாற்றவும் கால்சியம் ஊட்டச்சத்து போதுமான அளவு கிடைக்கப் பெறவும் பருவ மழையின் போது சுண்ணாம்பு இட வேண்டும். அதேபோன்று நுண்ணூட்டச் சத்துக்கள் குறைபாடு ஏதேனும் தென்படும் தருணத்தில் இலை வழியாக தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்க வேண்டும்.
  • நாம் கொடுத்த ஊட்டச்சத்துக்கள் மண்ணில் நிலை நிறுத்தப்படாமல் பயிர்களுக்கு கிடைக்க ஏதுவாக மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஹுமிக் அமிலம்/வேஸ்ட் டீ கம்போசர்/ஈயம் கரைசல்/உயிர் உரங்கள் அல்லது இயற்கை தயாரிப்பு இடுபொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான பயிர் மற்றும் மண்ணை உருவாக்கலாம்.

பூச்சி மேலாண்மை:

பாக்கு சாகுபடியில் பல்வேறு பூச்சி தாக்குதல்கள் காணப்பட்டாலும் கடந்த ஒரு வருடங்களில் நமது குழுவில் பகிரப்பட்ட முக்கியமான சில பூச்சி தாக்குதல் மற்றும் அவற்றின் மேலாண்மையை பற்றி பார்ப்போம்.

சிகப்பு கூன் உண்டு:

  • இளம் பயிர்களின் தண்டு மற்றும் குருத்துப் பகுதியை துளைத்து உண்பதால் பயிர்கள் படிப்படியாக மஞ்சள் நிறமாக மாறி கருகி பின்னர் இறந்துவிடும். தண்டுப் பகுதியில் சிறிய துளைகள், சாறு வடிதல், மரங்கள் சாய்தல், குருத்துப் பகுதியில் அழுகல், நுனி இலைகள் நிறம் மாறுதல் முதலியவை இவற்றின் பிரதான அறிகுறியாகும்.
  • இதனைக் கட்டுப்படுத்த சுத்தமாக பராமரித்தல், பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றுதல், தொடர்ச்சியாக வயலில் இதன் அறிகுறிகள் தென்படுகிறதா என பார்த்தல், இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்துதல் என பல வழிமுறைகள் உள்ளது.

சிகப்பு மற்றும் வெள்ளை பேன்:

  • பொதுவாக பேன் தாக்குதல் ஆரோக்கியம் குறைந்த பயிர்களை எளிதில் தாக்குகிறது. இளம் மற்றும் முதிர்ந்த பொருட்கள் இலைகளின் அடிப்புரத்தில் சாற்றை உறிஞ்சுவதால் மேல் புறத்தில் மஞ்சள் நிற திட்டுக்கள் உருவாகி நாளடைவில் இலை கருகி விடுகிறது. இலையின் அடி புறத்தில் சிகப்பு நிற பூச்சி மற்றும் அதன் வலைகளை எளிதில் காண இயலும்.
  • இதனை கட்டுப்படுத்த வயதை சுத்தமாக வைத்திருத்தல், பயிர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறுதல், அதிக வறட்சி அல்லது நீர்த்தேக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுதல், கோடை பருவத்தில் மாதம் இரண்டு அல்லது மூன்று முறை Verticillum lecanii தெளித்து வருதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாக்குதலின் தீவிரம் அதிகமாகும் பொழுது இரசாயன மருந்தான spiromesifen 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி தெளிக்கலாம்.

நோய் மேலாண்மை: 

அடித்தண்டு அழுகல் நோய்:

  • பராமரிப்பு அற்ற, அடர் நடவு மற்றும் போதுமான வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பாக்கு பயிரில் இந்த நோய் பொதுவாக காணப்படுகிறது. அடி இலைகள் மஞ்சள் நிறமாதல் நாளடைவில் நுனி இலைகளுக்கும் பரவுதல், தரை மட்டத்திற்கு அருகில் உள்ள தண்டுப் பகுதியில் புள்ளிகள் உருவாகி நாளடைவில் பெரிதாகும். இந்த இடங்களில் சாறு வடிதல் மற்றும் அழுகல் இதன் பிரதான அறிகுறிகள் ஆகும். 
  • எனவே முறையான பராமரிப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை மிக அவசியம். ஆரம்ப நிலையில் Trichoderma vridae இயற்கை உயிர் பூஞ்சான கொல்லியையும் தீவிர நிலையின் போது Hexaconazole, Fosetyl aluminium, Metalaxyl மற்றும் COC போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை வேர்ப்பகுதியில் ஊற்றலாம். 

மஞ்சள் இலை நோய்: 

  • முதிர்ந்த இலைகளின் நுனிப்பகுதியில் மஞ்சள் நிற மாற்றத்தை ஆரம்ப நிலையில் காண இயலும். நாளடைவில் இது இலையின் மையப் பகுதியை நோக்கி நகரும். தீவிரமடையும் பொழுது பயிரின் அனைத்து இலைகளிலும் அறிகுறிகள் பரவி இலைகள் கருகி விடும். 
  • வயலை சுத்தமாக பராமரித்தல், நன்கு இயற்கை வழி ஊட்டச்சத்து கொடுத்தல் மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துதல் போன்றவற்றின் இந்த நோய் பரவுதலை தவிர்க்கலாம்.


ஞாயிறு, 21 ஜூலை, 2024

பயிர் சாகுபடியில் வளர்ச்சி ஊக்கியின் பயன்பாடுகள்-2

Napthyl Acetic acid:

  • செல் பிரிதல் மற்றும் நீளமாதல் நிகழ்வின் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
  • பயிர்களில் அதிக அளவு பக்கக் கிளைகள் உருவாவதற்கு துணை புரிகிறது. குறிப்பாக பருத்தி 
  • பெரும்பான்மையான பயிர்களில் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
  • காய்கள் முதிர்ச்சி அடையும் முன்பு உதிர்வதை குறைக்கிறது. உதாரணத்திற்கு திராட்சை.
  • காய்களின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. உதாரணத்திற்கு திராட்சை, மா மற்றும் அன்னாசி பழம்
  • இதை மற்ற ரசாயன மருந்துகளுடன் பயன்படுத்தும் போது கவனம் அவசியம் அதேபோல் சற்று பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பயன்படுத்தப்பட்டால் இலை மஞ்சள் நிறமாதல், இலை உதிர்தல் மற்றும் செடிகள் வாடுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
  • வணிக ரீதியாக Planofix என்ற பெயரில் கிடைக்கப்பெறுகிறது.

Ethylene:

  • இது இயற்கையாகவே பயிரில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வளர்ச்சி சீராக்கியாகும். 
  • கொடி வகை காய்கறி பயிர்களில் அதிக அளவு பெண் பூக்களை தூண்ட பயன்படுத்தப்படுகிறது.
  • வணிக ரீதியாக முதிர்ந்த காய்களை பழுக்க வைக்க, ஒருமித்த நேரத்தில் பழுக்க, நிறம் மாற்றத்தை தூண்ட பயன்படுத்தப்படுகிறது குறிப்பாக வாழை.
  • அதேபோன்று ரப்பர் பப்பாளி போன்ற பயிர்களில் பால் விளைச்சலை அதிகப்படுத்த தெளிக்கப்படுகிறது.
  • வணிக ரீதியாக Ethrel என்ற பெயரில் கிடைக்கப்படுகிறது.

Chlormequat chloride:

  • பயிரின் இலை வளர்ச்சிக்கு செல்லும் ஊட்டத்தை தடை செய்து வணிக ரீதியாக தேவைப்படும் பயிரின் பாகத்திற்கு மாற்றி அனுப்புகிறது.
  • சின்ன வெங்காயம் நிலக்கடலை போன்ற மண்ணிற்கு அடியில் விலை கூடிய பயிர்களுக்கு பிரமாதமாக செயல்படுகிறது. 
  • சரியான தருணத்தில் தெளித்து வருவதால் மற்ற பயிர்களிலும் மகசூலை அதிகரிக்க உதவி புரிகிறது.
  • அதிக வறட்சி,வெள்ளம் மற்றும் பல சூழ்நிலைகளில் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
  • குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிப்பதால் மகசூலை அதிகப்படுத்தலாம். 
  • வணிக ரீதியாக Lihocin என்ற பெயரில் கிடைக்கப்பெறுகிறது.

Paclobutrazol:

  • பயிரின் இலை மற்றும் நுனிப்பகுதி அதிகம் வளர்வதை தடை செய்து ஆரோக்கியமான பயிரை உருவாக்குகிறது. இதன் மூலம் இதன் உயரத்தை குறிப்பிட்ட அளவில் வைத்திருக்க உதவுகிறது. 
  • இதனால் பெரும்பான்மையான ஊட்டச்சத்து பூ மற்றும் காய் பிடிப்பதற்கு செல்வதால் மகசூல் அதிகரிக்க உறுதுணையாக உள்ளது.
  • இதனால் காய்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் அதிகரிப்பதுடன் தரமும் உயர்கிறது. 
  • உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தத்தை தாங்கி வளரும் தன்மை பெறுகிறது. 
  • வணிகரீதியாக மா, நாவல், மாதுளை, பருத்தி போன்ற பல பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது.
  • இதை ஒரு முறை பயன்படுத்தினால் மீண்டும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு பயிர்கள் தள்ளப்படலாம். 
  • வணிக ரீதியாக Cultar என்ற பெயரில் விற்கப்படுகிறது.

Triacontanol:

  • பயிர்களை நாற்றங்காலில் இருந்து பிடுங்கி வயலில் நடவு செய்யும்போது ஏற்படும் தொய்வை சரி செய்ய பயன்படுத்தலாம்.
  • அதிக வெப்பநிலை வெள்ளம் மற்றும் உப்புத் தன்மையினால் ஏற்படும் அழுத்தத்தை விடுவிக்க பயன்படுத்தப்படுகிறது. 
  • பயிரின் உணவு உற்பத்தி திறனை அதிகரித்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. 
  • அதிக அளவு பூக்கள் பூப்பதற்கும் பூக்கள் உதிர்வதை தடுப்பதற்கும் இதனை பயன்படுத்தலாம் எதனால் மகசூல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. 
  • வணிக ரீதியாக Vipul, Rigal என்ற பெயரில் இதனை பெற இயலும்.

2,4-D:

  • மிக மிக குறைந்த அளவு பயன்படுத்தும் போது வளர்ச்சி முக்கியமாக செயல்படுகிறது. உதாரணத்திற்கு வாழை எலுமிச்சை போன்ற பயிர்களில் குறைந்த அளவு பயன்படுத்தும் போது  பூ உதிர்தல் குறைந்து மற்றும் காய் பிடித்தல் அதிகமாகிறது.
  • மிதமான மற்றும் அதிக அளவு பயன்படுத்தும் பொழுது களைக் கொல்லியாக பயன்படுகிறது குறிப்பாக அகன்ற இலை களைகளை அப்புறப்படுத்த. 
  • இது பல்வேறு நிறுவனங்களில் கிடைக்கப்பெறுகிறது. உதாரணத்திற்கு Salix என்ற பெயரில் Atul நிறுவனத்தில் கிடைக்கப்பெறுகிறது.


சனி, 20 ஜூலை, 2024

சாமந்தி பயிரை நூற்புழு தாக்குதலுக்கு எதிராக பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை.


1. சாமந்தி பயிரில் வணிக ரீதியாக இரண்டு வகைகளும் பல்வேறு ரகங்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இவை அனைத்துமே நூற்புழுவை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.

2. நூற் புழுக்களில் பல்வேறு வகைகள் உள்ளது... இந்த அனைத்து வகைகளையும் சாமந்தி பயிரால் கட்டுப்படுத்த இயலாது என்பது நிதர்சனமான உண்மை.

3. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இருக்கக்கூடிய நூற்புழு வகைகளில் 3 அல்லது 4 வகைகளை மட்டுமே சாமந்தி பயிரால் கட்டுப்படுத்த இயலும் என்பதை பல்வேறு ஆய்வுகள் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

4. அந்த நான்கு நூற்புழு வகைகளுக்கு ஏற்றவாறு சாமந்தி பயிரின் செயல்பாட்டுத் திறன் வேறுபடுகிறது.

5. சாமந்தி பயிரை வரப்பு பயிராகவோ அல்லது ஊடுபயிர்/கலப்பு பயிராகவோ பயிரிட்டு நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

6. சாமந்தி பயிரின் வேர்களில் இருந்து சுரக்கப்படும் Alpha terthienyl எனப்படும் ஒரு வகை வேதிப்பொருள் நூற்புழுக்களின் முட்டைகளை பொறிக்க விடாமல் தடுத்து படிப்படியாக தாக்குதலை குறைக்கிறது. 

7. இது மட்டும் இன்றி பல்வேறு வகையான பூஞ்சான, பாக்டீரியா, பூச்சி தாக்குதல் மற்றும் வைரஸ் நோய்க்கு எதிராகவும் இந்த வேதிப்பொருள் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

8. சாமந்தி பயிர்கள் நன்கு வளர்ந்து தரையில் இருந்து சற்று ஆழமாக இருக்கக்கூடிய வேர்களில் இருந்து சுரக்கக்கூடிய வேதி பொருள் மட்டுமே நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது. 

9. எனவே பயிர் சாகுபடிக்கு சுமார் 50 முதல் 60 நாட்களுக்கு முன்னதாக சாமந்தி பயிரை நடவு செய்ய வேண்டும் அப்போதுதான் இது செயல்படும்.

10. சாமந்தி பயிர் ஒருபோதும் நூற்புழுக்களை அழிக்காது.. இனப்பெருக்கத்தை மட்டுமே கட்டுப்படுத்தும் அதுவும் தொடர்ச்சியாக பயன்படுத்தினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்...

இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்..
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

தென்னை மரத்தை சுத்தம் செய்தல் அல்லது சிரை எடுத்தல் ஏன் செய்ய வேண்டும்.

முன்னுரை:

தென்னை மரத்தின் தேவையற்ற பாளை, பன்னாடை, மட்டை மற்றும் கூராஞ்சிகள் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு சுத்தம் செய்தல் அல்லது அசடு பார்த்தல் அல்லது சிரை எடுத்தல் என்று கூறுவார்கள்.

ஏன் செய்ய வேண்டும்: 

  • மரத்தின் அடிப்பகுதியில் காணப்படும் பன்னாடைகள் காய்ந்து தொங்கும். ஆனால் மரத்தின் நுனி பாகத்தில் இருக்கும் பன்னாடைகள் மரத்தோடு சேர்த்து கட்டியது போல் காணப்படும். இதனால் இது எந்த இடையூறும் விளைவிக்காது. 
  • ஆனால் மரத்தின் அடிப்பாகத்தில் தாறுமாறாக தொங்கும் காய்ந்த பன்னாடைகள் காற்றில் உள்ள தூசிகளையும் பறந்து வரும் வேறு மரத்தின் இலை பாகங்களையும் தடுத்து மட்டை இடுக்குகளில் தேக்கி வைப்பதால் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. 
  • இந்தப் பகுதிகள் பாம்பு, தேள், குளவி போன்றவை இனப்பெருக்க இடங்களாக பயன்படுத்துவதால் மரத்தை சுத்தம் செய்பவர்களுக்கு இடையூறாக திகழும்.
  • இங்கு கூராஞ்சிகள் எனப்படுவது தென்னங் காய்கள் அறுவடை செய்யப்பட்டு மீதமுள்ள குலை ஆகும். கிராமங்களில் நன்கு காய்ந்த கூராஞ்சியை சுற்றி கட்டி கூட்டும் விளக்குமாறாக பயன்படுத்துவார்கள்.
  • காய்ந்த கூராஞ்சிகள் மரத்திலேயே விட்டு விட்டால் அதில் சிலந்தி அல்லது குளவி கூடு கட்டும். இந்த சிலந்தி கூட்டினால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் பெண் பூக்களை அடைய முடியாமல் வலையில் சிக்கி இறந்து விடுகிறது. 
  • இது மட்டும் இன்றி கூராஞ்சிகள் சீக்கிரம் காய்வது இல்லை இதனால் வேர்கள் மூலம் கிடைக்க பெறும் நீர் மற்றும் ஊட்டச்சத்தை இதுவும் பங்கு போட்டுக் கொள்கிறது. 
  • கூராஞ்சிகள் அகற்றப்படாமல் இருப்பதனால் மரத்தில் அதிக அளவு பொய் பாளைகள் மற்றும் சூரிய வெளிச்சம் போதுமான அளவு குறித்து பகுதிக்கு கிடைப்பது இல்லை என ஆய்வுகள் கூறுகிறது. 
  • மரத்தின் அடிப்பகுதியில் இருந்து மட்டை இடுக்குகளில் அதிக அளவு கழிவுகள் தங்கி இருப்பதால் அங்கு குடும்பம் நடத்தும் எலி மற்றும் அணில்கள் பூ மற்றும் இளநீரை சுவைப்பதால் மகசூல் தரம் பாதிக்கப்படுகிறது. 
  • இது மட்டுமின்றி சில நேரங்களில் எலிகள் மரத்தின் குருத்துப் பகுதி அல்லது பாலையின் அடிப்பகுதியை ஓட்டை இடுவதால் மகசூல் இழப்பு சில நேரங்களில் செடிகளும் இறக்க நேரிடுகிறது.
  • அதேபோன்று மட்டைகள் நெருக்கமாக உள்ள மரங்களில் மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள மட்டைகளில் சுமார் அரை அடி முதல் ஒரு அடி வரை ஓலைகளை எடுக்கலாம்.

மரத்தை எவ்வாறு சுத்தம் செய்வது:

  • மரத்தில் ஏறுவதற்கு முன்னதாக மரத்தின் நுனிப்பகுதியில் பாம்பு அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பதை சோதனை செய்து கொள்ளவும்.
  • அனுபவம் உள்ள மரம் சுத்தம் செய்பவர்களை ஏறச் செய்து காய்ந்து போன பாளை, பன்னாடை, கூராஞ்சிகள் மற்றும் இதர பகுதிகளை அகற்ற வேண்டும். 
  • மரத்தின் நுனி பகுதியில் இருக்கும் பன்னாடைகளை பெரிய அளவு எடுக்க வேண்டாம். 
  • மரம் ஏறுபவர்கள் பாலை அல்லது தென்னங் கொலைகளில் உட்காராமல் தேவையற்ற பகுதியை அகற்ற வேண்டும்.
  • மரம் சுத்தம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை: 
  • எக்காரணத்தை கொண்டும் பன்னாடைகளை அருளால் அகற்றக்கூடாது. இது தேவையற்ற காயங்களை ஏற்படுத்தும். 
  • மர இடுக்குகளில் காணப்படும் குப்பைகளை கையாள அகற்றக் கூடாது ஏனெனில் அங்கு பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • தேன் அல்லது குழுவில் ஏதேனும் கூடு கட்டி உள்ளதா என்பதை அறிய சிறிய கற்களை எரிந்து சோதித்து விட்டு பின்பு மரம் ஏறலாம். 
  • நன்கு விளைச்சல் தரும் மரம் மற்றும் மட்டைகள் சாய்ந்துள்ள மரங்களில் ஓலைகளை அகற்ற வேண்டாம்.
  • ஓரிரு பிஞ்சுகள் இருக்கும் கொலைகளில் உள்ள இதர கூராஞ்சிகளை அகற்றலாம் தவறில்லை. 
  • சில நேரங்களில் மட்டைகள் பாதியாக உடைந்து தொங்கும் அதை முழுமையாக அகற்றாமல் ஒடிந்த பகுதி வரை மட்டும் அகற்றவும். 
  • காற்றாடி காலத்திலும் கோடை பருவத்திலும் மரம் சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது மரத்தை சுத்தம் செய்வது ஆரோக்கியமான விளைச்சலுக்கு அடித்தளமாக திகழும். 
  • முற்றிய தேங்காய்கள் பறிக்கும் பொழுது காய்கறி மட்டும் பறிக்காமல் குலையோடு வெட்டி எடுப்பது சால சிறந்தது. 

இதுபோன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.


வெள்ளி, 19 ஜூலை, 2024

இளநீர்/தேங்காய் தண்ணீர் ஏன் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தப்பட வேண்டும்

  • நாம் ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சிக்காக குடிக்கக்கூடிய இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் தென்னங்காய்கள் வளர்வதற்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுக்கும் ஆதாரமாக திகழ்கிறது.
  • இதில் நாம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஒன்று இளநீர் மற்றொன்று முற்றிய/விளைந்த தென்னை காய்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர். இளநீர் பொதுவாக பருகுவதற்கும் மற்றும் பல பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது ஆனால் விளைந்த காய்களில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர் பெரும்பான்மையாக  பயன்படுத்தப்படாமல் உள்ளது.
  • இளநீரில் அதிக அளவு நோய் எதிர்ப்பு காரணிகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் இருப்பதால் பாக்கெட் மட்டும் பாட்டில்களில் நிரப்பி விற்கப்பட்டு வருகிறது.
  • ஆனால் முற்றிய தேங்காய் தண்ணீரில் தான் அதிக அளவு தாது உப்புக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், வேதியல் பொருட்கள் மற்றும் சர்க்கரை சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த தண்ணீரில் தான் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது.
  • இந்தப் பண்பை அடிப்படையாகக் கொண்டு இளநீரை பல்வேறு மருத்துவ மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துவதுடன் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்த தேங்காய் தண்ணீரில் பல்வேறு வளர்ச்சி ஊக்கிகள் (உதாரணத்திற்கு சைட்டோகைன், ஜிப்ரலிக் ஆசிட், ஆக்ஸின் மற்றும் இதர), வேதிப்பொருட்கள்,ஊட்டச்சத்துகள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ளது. 
  • இது மட்டுமின்றி பல்வேறு விதமான வகைப்படுத்தப்படாத வளர்ச்சி ஊக்கிகள் இதில் நிறைந்துள்ளதால் இதன் முழுமையான பயனை நாம் எட்ட இயலவில்லை. 

  • பன்முகத் தன்மை வாய்ந்த வளர்ச்சி ஊக்கிய கருதப்படும் Brassinostroid, jasmonates மற்றும் சில வளர்ச்சி ஊக்கிகள் இருப்பதாக பல்வேறு ஆய்வு கட்டுரைகள் குறிப்பிடுகிறது.
  • எனவே நாம் இளநீரை விவசாய பணிகளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
  • இயக்க வழி தயாரிப்பு பொருட்களான பஞ்சகாவியா, மீன் அமிலம், ஜீவாமிர்தம், துளசி தேங்காய் கரைசல் எந்த வகை கரைசலாக இருந்தாலும் அதனை தயார் செய்வதில் இளநீரை கலந்து பயன்படுத்தலாம். 
  • இதில் இருக்கக்கூடிய வளர்ச்சி ஊக்கிகள் ஆய்வுக்கூடங்களில் திசு வளர்ப்பில் பயன்படுத்தப்படுவதால் தற்போது இளநீர் திசு வளர்ப்பு செடிகளுக்கு வேர் மற்றும் தளிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
  • களைக்கொல்லி அல்லது தவறான மருந்துகள் அடித்து பயிர்களில் ஏற்படும் அறிகுறிகளில் இருந்து மீள பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வீதம் இளநீர் கலந்து தெளிப்பதால் உடனடியாக பயிர் புத்துணர்ச்சி பெறும். 
  • இளநீரில் இருக்கும் தாது பொருட்கள் உடனடியாக பயிர்களால் எடுத்துக் கொள்ளக் கூடியதால் தொடர்ச்சியாக பயிர்களுக்கும் தெளித்து வருவதால் உர பயன்பாட்டை குறைக்க வழி வகை செய்யும்.
  • USDA ஊட்டச்சத்து தகவலின் படி 100 மில்லி லிட்டர் தேங்காய் தண்ணீரில் கீழ்க்கண்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

  • இளநீரில் இருக்கும் பல்வேறு வேதிய பொருட்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் பயிர்களை வறட்சி, அதிக தண்ணீர் தேங்குதல், நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து காத்து உதவி புரிகிறது.
  • இது மட்டும் இன்றி ஒவ்வொரு பகுதியிலிருந்து வரக்கூடிய இளநீர் ஒவ்வொரு விதமான வளர்ச்சி ஊக்கி மற்றும் வேதிய பொருட்களைக் கொண்டுள்ளதால் எந்தெந்த பகுதியிலேயே பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
  • பயிர்களில் பூ பிடித்தலை ஊக்கப்படுத்துகிறது. பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்வதை தடை செய்கிறது. 
  • மகசூலின் தரம், நிறம் மற்றும் சுவையை மாற்றி அமைத்து மேம்படுத்துகிறது தருகிறது. 
  • காய்கறி பயிர்களில் இதனை தவிப்பதால் அதிக அளவு காய் பிடிப்பதை காண இயலுகிறது எனவே இதன் எண்ணற்ற பயனை நம்மால் முழுமையாக கூற இயலாது. 

  • இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

சாமந்தி பயிரில் பூ கருகல் (Botrytis blight) நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • ஆடி மாதத்தில் நடவு செய்யப்படும் காய்கள் மற்றும் பூக்களுக்கு அறுவடை தருணத்தில் நல்ல விலை கிடைக்கும் என்பது பொதுவான கருத்து அதனால் தமிழ்நாட்டில் பரவலாக காய்கறிகள் மற்றும் பூ பயிர்கள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • தற்போது சாகுபடியில் இருக்கும் சாமந்தி பூக்களில் பல்வேறு விதமான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுகிறது. அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய நோயாக Botrytis எனப்படும் பூ கருகல் நோய். ஏனெனில் இது நேரடியாக பூக்களை பாதித்து உடனடியாக பூக்களின் தரத்தை குறைப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
  • Botrytis எனப்படும் பூஞசானத்தால் ஏற்படக்கூடிய இந்த நோயானது கிரே மோல்ட் (Gray mold) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோயானது பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பூ பயிர்களை தாக்கும் வல்லமை படைத்தது. உதாரணத்திற்கு செவ்வந்தி, சாமந்தி, ரோஸ், துளிப் மற்றும் பல பூ பயிர்களின் வணிக ரீதியாக தேவைப்படும் பகுதியை பாதித்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

நோயின் அறிகுறிகள்: 


  • பூ இதழ்களில் பழுப்பு/ காவி நிற புள்ளிகள் ஆரம்பத்தில் காணப்படும்.
  • நாளடைவில் இந்த புள்ளிகள் விரிவடைந்து கருகல் போன்று காணப்படும்.
  • இதன் அறிகுறி மற்ற இதழ்களுக்கும் பரவி பூக்களை முழுவதும் பாதித்துவிடும். 
  • பின்னாளில் அழுகல் ஏற்பட்டு உருமாற்றம் ஏற்பட்டு இதழ்கள் உதிரும்.
  • தீவிர தாக்குதலின் போது இதன் அறிகுறிகள் மொட்டுகள், இலை மற்றும் தண்டுப் பகுதியிலும் காணப்படும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாம்பல் நிற பூஞ்சான வளர்ச்சியை காண இயலும்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை: 

  • தொடர்ச்சியான மழைப்பொழிவு, தூறல், பனிப்பொழிவு மற்றும் மேக மூட்டமான தட்பவெப்ப சூழ்நிலை.
  • அதிகளவு நீர் பாய்ச்சுதல் மற்றும் வடிகால் வசதி இல்லாமல் இருத்தல். 
  • நெருங்கிய நடவு 
  • பூக்கும் தருணத்தில் தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்துவது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பூக்கும் தருணம் பருவ மழைக்கு இணையாக வராத அளவிற்கு நடவு மேற்கொள்ளும்.
  • மேட்டுப் பாத்தி அமைத்து நல்ல வடிகால் வசதியுடன் சாகுபடி செய்ய வேண்டும். 
  • அடி உரமாக பயன்படுத்தும் தொழு உரத்துடன் ஏக்கருக்கு தலா 1.5 கிலோ Trichoderma மற்றும் Pseudomonas கலந்து ஊட்டமேற்றி இட வேண்டும்.
  • போதுமான பயிர் இடைவெளி இருக்க வேண்டும் அப்போதுதான் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
  • மாதம் ஒருமுறை அல்லது மழைப்பொழிவு காலத்தில் மாதம் இருமுறை என ஏக்கருக்கு இரண்டு லிட்டர் Trichoderma vridae பாசன நீர் வழியாக கொடுக்க வேண்டும். 
  • வாரம் ஒரு முறை Bacillus subtilis/ Pseudomonas fluorescence இலை வழியாக நன்கு தெளிக்க வேண்டும்.
  • மழைப்பொழிவு காலத்தில் ஏக்கருக்கு 50 கிலோ அமோனியம் சல்பேட் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து மண்ணில் இட வேண்டும். 
  • பாதிக்கப்பட்ட பூக்கள் அல்லது செடிகளை முழுமையாக அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
  • பயிர்கள் பூக்கும் தருணத்தில் இருந்து தெளிப்பு நீர் பாசன வழியாக நீர் விடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
  • பயிர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் தருணத்தில் வயலில் எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது.
  • வயலில் களைகள் அல்லது இதர குப்பைகள் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • தழைச்சத்து உரம் அதிகம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம், போரான், மக்னீசியம் மற்றும் சிலிக்கான் ஊட்டச்சத்துக்கள் சரிவிகித அளவில் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும்.
  • தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு நேரத்தில் பயிர்களுக்கு வெப்பநிலையை ஏற்படுத்தக்கூடிய ரசாயன மருந்துகளை தெளிக்கலாம்.
  • மாலை நேரத்தில் மருந்துகளோ அல்லது நீரில் கரையும் உரத்தினையோ தெளிக்க கூடாது. ஏனெனில் இது இரவு முழுவதும் ஈரப்பதத்தை ஏற்படுத்தி நோய் தாக்குதலை ஊக்குவிக்கும். காலை நேரத்தில் தெளிப்பதால் வெப்பநிலை காரணமாக ஈரப்பதம் நீங்கிவிடும்.
  • நாற்றுகளை இயற்கை வழி பூஞ்சான கொல்லி மற்றும் உயிர் உரம் பயன்படுத்தி நேர்த்தி செய்து நடவு செய்யலாம். அல்லது Carbendazim+ Mancozeb என்ற ரசாயன மருந்தை பயன்படுத்தியும் நேர்த்தி செய்யலாம்.
  • நோய் தாக்குதலின் தீவிரம் அதிகமாக காணப்படும் தருணத்தில் இது கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். (கொடுக்கப்பட்டுள்ள அளவு 10 லிட்டர் தண்ணீருக்கு)

Captan -25 கிராம் 

Zineb- 25 கிராம்

Carbendazim+ Mancozeb- 25 கிராம்

Chlorothaonil- 15 கிராம்

Thiophenate methyl - 15-20 கிராம்

Azoxystrobin+Mancozeb - 10 மில்லி

இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 18 ஜூலை, 2024

பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள்

முன்னுரை:

  • நாம் பயிரிடும் பயிர்களின் வளர்ச்சி முதல் மகசூலின் தரம் மற்றும் அளவு வரை வளர்ச்சி ஊக்கிகளின் பங்கு இன்றியமையாததாகும். 
  • நாம் பயன்படுத்தும் வளர்ச்சி ஊக்கிகளின் அடிப்படை செயல் திறனை தெரிந்து கொண்டால் போதுமானது அதுவே பெரிய அளவில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும். இந்தப் பதிவில் ஒரு சில வளர்ச்சி ஊக்கிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

  • பெரும்பான்மையான வளர்ச்சி ஊக்கிகள் இயற்கையாகவே தாவரங்களின் வேர், தளிர், விதை என பல்வேறு பாகங்களில் மிகக் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் செயல்பாடுகளை கண்டறிந்து ஆய்வுக் கூடங்களில் உற்பத்தி செய்து வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • வளர்ச்சி ஊக்கிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று பயிரின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது மற்றொன்று வளர்ச்சியை தடை செய்து பூ அல்லது பழங்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்தை கொடுக்கக் கூடியது என இரண்டாக வகைப்படுத்தலாம்.

Brassinosteroid:

  • இது ஒரு பன்முக தன்மை வாய்ந்த வளர்ச்சி ஊக்கியாக கருதப்படுகிறது.
  • செல்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்திற்கு இதர வளர்ச்சி ஊக்கியுடன் இணைந்து செயல்பட்டு பயிர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. 
  • செல் சுவர்களின் தடிமனை அதிகப்படுத்துகிறது. 
  • விதை முளைப்புத்திறன், இளம் தளிர் மற்றும் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 
  • பயிர்களில் மகரந்தங்களின் செயல் திறனை நீட்டித்து அதிக அளவு கருவறுதலை உறுதிப்படுத்தும். 
  • இதனால் அதிக அளவு பூக்கள் மற்றும் காய்கள் உதிர்வது தடுக்கப்படுகிறது. 
  • காய்களின் அளவு, எடை, சுவை மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. 
  • இது மட்டும் இன்றி உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தத்திலிருந்து செடிகளை சற்று விடுவிக்கிறது.
  • பெரும்பான்மையாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய இந்த வளர்ச்சி ஊக்கி Double என்ற பெயரில் வணிகரீதியாக கிடைக்கப் பெறுகிறது.
  • பயிர்களின் வளர்ச்சியை பொறுத்து 10 லிட்டர் தண்ணீருக்கு 5 முதல் 10  மில்லி வரை பயன்படுத்தலாம்.

Gibberlic acid:(GA3)

  • பயிர்களில் செல் பிரிதல் மற்றும் நீளமாக்குதலில் முக்கிய பங்கு வகிப்பதால் வளர்ச்சிக்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. 
  • பயிர்களில் இடைவெளியை அதிகப்படுத்துகிறது உதாரணத்திற்கு கரும்பு
  • உறக்க நிலையில் உள்ள விதைகளை முளைக்க வைக்க இதனை பயன்படுத்தி நேர்த்தி செய்யலாம். 
  • கொடி வகை காய்கறி பயிர்களில் ஆண் பூக்களை அதிகரித்து விளைச்சலை மேம்படுத்துகிறது. 
  • வாழையில் காய்கள் திரட்சியாக வளர துணை புரிகிறது. 
  • திராட்சையில் மலர் கொத்துகளை விரிவடையச் செய்வதோடு பழங்களின் எண்ணிக்கை, எடை மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. 
  • வணிக ரீதியாக paushak, progibb என பல பெயர்களில் கிடைக்கப்பெறுகிறது.

Mepiquat Chloride:


  • இது ஒரு வளர்ச்சி தடை செய்யும் மருந்தாக செயல்படுகிறது. 
  • அதாவது ஒரு சில நேரங்களில் பயிர்களால் எடுத்துக் கொள்ளக்கூடிய மொத்த ஊட்டச்சத்து பயிரின் இலை மற்றும் தண்டு வளர்ச்சிக்கு செல்லும். 
  • அதை தடை செய்து ஊட்டச்சத்துக்களை கிழங்கு பகுதிக்கு அல்லது பழங்களுக்கு மாற்றி கொடுப்பதால் விவசாயிகளுக்கு  உதவியாக திகழ்கிறது.
  • அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 
  • Chamatkar என்ற வணிக பெயரில் இது கிடைக்கப்பெறுகிறது. 
  • உதாரணத்திற்கு சின்ன வெங்காயம் அல்லது நிலக்கடலையில் அதிக அளவு தாள்/இலை வளர்ச்சி காணப்படும் பொழுது கிழங்கு பகுதிக்கு கூட்டம் பெரியளவு செல்லாமல் காய்கள் சிறிதாக காணப்படும். இது போன்ற தருணத்தில் இதை பயன்படுத்தினால் காய்கள் திரட்சியாக உருவாக துணை புரியும்.

Cytokinins:

  • பயிர்களில் வேர் வளர்ச்சியை மேம்படுத்துவதால் பயிர்கள் அதிக அளவு ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வளர்கிறது. 
  • செல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதால் வளர்ச்சியை தூண்டுகிறது. 
  • பயிர்களின் அதிக அளவு கிளைகள் அல்லது மொட்டுக்கள் பிரிய உதவி புரிகிறது. 
  • இலைகளுக்கு போதுமான அளவு பச்சயத்தை பெற்று தருகிறது. இதனால் பயிர் வளர்ச்சி திடகார்த்தமாக இருக்கும்.
  • நாம் அறுவடை செய்யும் பொருட்களின் அறுவடைக்குப் பின் இருக்கும் காலத்தை அதிகப்படுத்துகிறது. 
  • பயிரில் தூர்களின் எண்ணிக்கை, பக்க கிளை பிரிதல் என பல்வேறு பணிகளை செய்து அதிக உற்பத்தியை கொடுக்க உதவி புரிகிறது.
  • வணிக ரீதியாக Spic Cytocyme, Dhanzyme Gold என்ன பல பெயர்களில் கிடைக்கப்பெறுகிறது.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA



புதன், 10 ஜூலை, 2024

பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் உயிர் பூச்சிக்கொல்லி செயல்படும் விதம்

முன்னுரை:

  • பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் என்பது ஒருவகை பாக்டீரியா ஆகும். இது மண், தண்ணீர், இறந்த பயிர் மற்றும் பூச்சிகளின் பாகங்கள், பல்வேறு விலங்கினங்கள் மற்றும் சில நேரங்களில் மனிதர்களில் கூட இயற்கையாகவே இருக்க கூடியது. 
  • இந்த பாக்டீரியா வித்துக்களை(spores) அதன்மூலம் இனப்பெருக்கம் அடைகிறது. இதில் பல்வேறு வகையான தீமை செய்யக்கூடிய புரதங்கள் உள்ளன இதனை நச்சு புரதம் என அழைக்கலாம். இந்த புரதங்கள் அடங்கிய வித்து பகுதியை புழுக்கள் உண்ணுவதால் புழுக்கள் இறக்கும் அபாயம் உள்ளது எனவே தான் இதனை உயிர் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகிறோம். 
  • Bacillus thuringiensis (Bt.) பாக்டீரியா இயற்கையாகவே கிடைப்பதால் இதனை இயற்கை பூச்சிக்கொல்லி என்று அழைக்கிறோம்.  புழுக்களை கொள்ளும் திறன் உடைய இதன் பண்புகளைப் பிரித்து எடுத்து B.t ரக பயிர்களை உருவாக்கி புழு தாக்குதலுக்கு எதிராக செயல்பட வைக்கிறார்கள்.

Bt. செயல்படும் விதம்: 

  • பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் பாக்டீரியா தனது இனப் பெருக்கத்திற்காக உற்பத்தி செய்யும் வித்துக்களில், பல்வேறு வகை தீங்கு செய்யக்கூடிய புரதங்கள் நிறைந்திருக்கும்.
  • உதாரணத்திற்கு Cry, Cyt, Vip, Sip போன்ற நச்சு இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான புழுக்களுக்கு எதிராக செயல்படும் திறன் படைத்தது. இதில் Cry பல்வேறு வகையான புழுக்களுக்கு எதிராக செயல்படுவதால் இதை வணிகரீதியாக நாம் பயன்படுத்துகிறோம். புழுக்கள் இதனை உண்ணும் பொழுது இந்த புரதங்கள் அடங்கிய வித்துக்கள் புழுக்களின் குடல் பகுதியை சென்றடைகிறது. 
  • புழுக்களின் குடல் பகுதி 8 முதல் 10 இருக்கும் மேல் கார அமிலத்தன்மை உடையதால் தான் உண்ணக்கூடிய தீங்கு விளைவிக்கக் கூடிய புரதங்களை அதன் வயிற்று பகுதியில் protease எனப்படும் என்சைம் உதவியுடன் கரைக்கிறது. இதனால் புழுக்களின் குடல் பாகங்கள் சிதைந்து, பசி மற்றும் நோய் தொற்றால் அதிகபட்சமாக 5-7 நாட்களில் இறந்து விடுகிறது.
  • இளம் புழுக்கள் இதில் அதிக அளவு பாதிக்க கூடியது. எனவே பயிர் சாகுபடியில் இதனை பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் தெளித்து வர வேண்டும்.
  • பேசில்லஸ் பேரினத்தில் பல்வேறு வகையான சிற்றினங்கள் உள்ளது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பூச்சிகளை அழிக்கும் திறன் கொண்டிருக்கும் என்பதால் பயிர்களுக்கு ஏற்றவாறு இதனை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.

மனிதன்/விலங்குகளில் பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் செயல்படும் விதம்:

  • பாக்டீரியா வித்துக்களில் உள்ள நச்சு புரதங்கள் மனிதர்களையும் அல்லது விலங்குகளையும் பாதிப்பதில்லை.
  • ஏனெனில் நச்சு புரதம் மனிதர்கள் அல்லது விலங்குகளின் குடல்களை சென்றடையும் பொழுது நமது உடலில் இருக்கும் அமிலத்தன்மை என்றால் நச்சு புரதம் சிதைக்கப்பட்டு செயல் இழக்கிறது.
  • இது மட்டும் இன்றி நச்சு புரதங்களை தூண்டி செயல்பட வைக்கக்கூடிய நொதிகள் மனிதர்கள் அல்லது விலங்குகள் உடலில் இல்லை. எனவே இது மனிதர்களுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது.

இதன் இதர பயன்கள்: 

  • மரபணு மாற்ற பயிர்- Bt. பாக்டீரியாவால் உருவாக்கப்படும் நச்சு புரதத்தை உருவாக்கக்கூடிய மரபணு பிரித்து எடுக்கப்பட்ட அதிக அளவு புழு தாக்குதல் இருக்கும் வணிகப் பயிர்களுக்கு செலுத்தி புழு இல்லாதவாறு வடிவமைக்கப்படுகிறது உதாரணத்திற்கு பருத்தி... மேலை நாடுகளில் 10 மேற்பட்ட மரபணு மாற்ற பயிர் சாகுபடியில் உள்ளது.
  • வளர்ச்சி ஊக்கியாக செயல்படுதல்- பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் பாக்டீரியா மறைமுகமாக வேர் வளர்ச்சியை தூண்டுதல், மண்ணில் பயிர்களுக்கு கிடைக்கப்பெறாமல் இருக்கும் மணிச்சத்து & இரும்புச்சத்தை கிடைக்கச் செய்தல், பயிறு வகை பயிர்களில் வேர் முடிச்சுகளை அதிகப்படுத்துதல் என பல்வேறு பணிகளையும் செய்கிறது.

பயன்படுத்து கவனிக்கப்பட வேண்டியவை: 

  • காய், குருத்து, தளிர், இலை, தண்டு பயிர்களில் மறைந்திருந்து பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து வகையான புழுக்களுக்கு எதிராக இதை பயன்படுத்தலாம்.
  • Bt. உயிர் பூச்சிக்கொல்லி நேரடியாக புழுக்கள் மீது பட வேண்டிய அவசியமில்லை. 
  • மிதமான வெப்பநிலை குறிப்பாக 30 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக இருக்கும் தருணத்தில் பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். எனவே மாலை வேளையில் தெளிப்பது சால சிறந்தது. 
  • மனிதர்களுக்கு இது தீங்கு விளைவிக்காத என்றாலும் இதன் தயாரிப்பில் துணைப் பொருளாக பயன்படுத்தப்படும் பல்வேறு கன உலோகங்கள் மனிதர்களுக்கு தீங்கானது எனவே பயன்படுத்தும் போது கை உறை அணிவது நல்லது.
  • இதைத் தெளித்த மூன்று நாட்களுக்கு ரசாயன பூச்சிக்கொல்லிகளை தெளிக்க கூடாது. 
  • இந்த பூச்சிக்கொல்லி புழுக்களை சென்றடைந்து செயல்பட போதுமான கால அவகாசம் தேவைப்படுவதால் 5 முதல் 7 நாட்கள் வரை இதன் செயல்பாடுகளுக்கு காத்திருக்கலாம்.
  • தனிப்பட்ட முறையில் இதை பயன்படுத்தும் போது பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் வரை தெளிக்கலாம். இரண்டு தெளிப்புகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளி ஏழு நாட்கள் வரை இருக்கலாம்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


செவ்வாய், 9 ஜூலை, 2024

தென்னையில் குரும்பை/காய்கள் உதிர்வதற்கான காரணங்கள் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள்:

முன்னுரை:

பொதுவாக இளம் தென்னை மரங்களில் குரும்பை மற்றும் காய்கள் உதிர்வது இயற்கையான ஆகும். ஆனால் வளர்ந்த மற்றும் நன்கு பராமரிக்க கூடிய மரங்களில் குரும்பை மற்றும் காய் உதிர்வு என்பது பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டதாகும். குரும்பை மற்றும் காய்கள் உதிர்வு காரணமாக சுமார் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

காரணங்கள்: 
மண்ணின் கார அமிலத்தன்மை: 

  • மண்ணின் கார அமிலத்தன்மை 5 -க்கு குறைவாக இருந்தால் அதனை அமிலத்தன்மை உடைய மண் என்பார்கள். இதனை சரி செய்ய மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு சுண்ணாம்பு சத்து இடவேண்டும். அதேபோன்று மண்ணின் கார அமிலத்தன்மை 8-க்கு அதிகமாக இருந்தால் உவர்/களர் மண் என்பார்கள் இதனை சரி செய்ய தேவையான அளவு ஜிப்சம் இடவேண்டும். 
  • மண்ணின் கார அமிலத்தன்மையை பொறுத்தே நாம் மண்ணில் இடும் ஊட்டச்சத்துக்கள் பயிர்களை சென்றடையும். நாம் எவ்வளவுதான் ஊட்டச்சத்துக் கொடுத்து பராமரித்தாலும் மண்ணின் கார அமிலத்தன்மை குறிப்பிட்ட நிலையை தாண்டும் பொழுது ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைப்பதில் கண்டிப்பாக பற்றாக்குறை ஏற்படும்.

ஊட்டச்சத்து பற்றாக்குறை: 

  • போரான் நுண்ணூட்ட சத்து குறைபாட்டால் குரும்பை மற்றும் காய்கள் உதிரும் என நாம் அறிந்ததே. ஆனால் சரிவிகித முறையில் மற்ற ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கொடுக்கவில்லை என்றாலும் குறும்பை உதிர்வு காணப்படும். எனவே பேருட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை சரிவிகித அடிப்படையில் மரங்களுக்கு கொடுக்க வேண்டும்.
  • மரம் ஒன்று இருக்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 முதல் 25 கிலோ, தழைச்சத்து 1.5 கிலோ, மணிச்சத்து 2 கிலோ, சாம்பல் சத்து 2 கிலோ, நுண்ணூட்டச் சத்து 150-200 கிராம், Humic குருணை - 250 கிராம் மற்றும் VAM -100 கிராம் ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு என வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இடலாம்.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து மரம் ஒன்றுக்கு வேர் வழியாக வருடத்திற்கு இரண்டு முறை கொடுத்தல் குறும்பை மற்றும் இளம் காய்கள் உதிர்வை தவிர்க்கலாம்.

நீர் மேலாண்மை: 

  • கடுமையான வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை தென்னையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஒருமுறை தென்னை மரங்கள் கடுமையான வறட்சியை சந்தித்து விட்டால் சுமார் 2 முதல் 3 வருடங்கள் வரை அதன் பாதிப்பு மறைமுகமாக இருக்கும். எனவே சராசரியாக மரம் ஒன்று இருக்கு சொட்டுநீர் பாசன வழியாக தினசரி 50 லிட்டர் எனவும் வாய்க்கால் வழி பாசன மரங்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை 400 லிட்டர் என்ற முறையிலும் நீர் பாய்ச்ச வேண்டும். 
  • மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து சுமார் ஒரு மீட்டர் தள்ளி சொட்டுநீர் அளவு பட்ட பாதி அமைத்து நீர் விட வேண்டும். நீர் இழப்பீட்டை தவிர்க்க பசுந்தாள் பயிர்களை வளர்த்தல், மூடாக்கு இடுதல், தென்னை நார் கழிவு மற்றும் மண் புழு உரம் இடலாம். உப்பு/உவர் தண்ணீர் உடைய நிலங்களுக்கு மாதம் ஒருமுறை ஈயம் அல்லது வேஸ்ட் டீ கம்போசர் பயன்படுத்த வேண்டும். கோடை காலங்களில் அதிக அளவு குறும்பை/இளம் காய்கள் உதிர்வதால் அதற்கு ஏற்றவாறு நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.

மண் மேலாண்மை: 

மரத்தை சுற்றி உள்ள மண் அதிக இறுக்கம் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். மரத்தைச் சுற்றி 1.5 மீட்டர் வரை வருடத்திற்கு நான்கு முறை கொத்தி விட்டு கலைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். அதிக மழைப்பொழிவு நேரத்தில் சிறிதளவு உப்பு மற்றும் அம்மோனியம் சல்பேட் இடுவதால் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். தொடர்ச்சியாக மண் இறுக்கமாக இருந்தால் கால்சியம், போரான் மாங்கனிசு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் செடிகளுக்கு கிடைப்பதில் பின்னடைவு ஏற்படும்.

போரான் ஊட்டச்சத்து குறைபாடு:

  • பொதுவாக ஊட்டச்சத்து குறைபாடு காய் மற்றும் பூக்கள் உதிர காரணமாக இருந்தாலும் தென்னையில் போரான் நுண்ணூட்ட சத்து  குறைபாட்டை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி விரிவாக ஏற்கனவே நமது வலைதளத்தில் பதிவு செய்துள்ளோம் அதனை கீழே காணவும்.
  • போரான் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய மரம் ஒன்று இருக்கு வருடம் 250 முதல் 500 கிராம் போராக்ஸ் இட வேண்டும்.

மகரந்த சேர்க்கை: 

  • தென்னை மரம் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக காய்களை உருவாக்குகிறது. அதாவது காற்று மற்றும் பூச்சிகளின் உதவியால் ஒரு பூக்களில் இருந்து மற்றொரு பூக்கள் மகரந்தம் சென்று இனப்பெருக்கம் அடைவதால் காய்கள் உருவாகிறது. 
  • அளவுக்கு அதிகமான மழை அல்லது வெப்பம் காரணமாக போதுமான அளவு மகரந்த சேர்க்கை நடைபெறாத காரணத்தினால் பல்வேறு நிலைகளில் பூ மற்றும் காய்கள் உதிர்கிறது. மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்க தேனீ பெட்டிகள் வைக்கலாம், மரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பூச்செடிகளை வளர்க்கலாம் என பல வழிமுறைகள் உள்ளது. 

தேர்வு செய்யும் ரகத்தின் செயல்பாடுகள்: 

  • ஒவ்வொரு தென்னை ரகங்களும் தனக்கே உரித்தான பண்புகளை கொண்டிருக்கும் அதன்படி குட்டை ரகங்களில் அதிகப்படியான பூ மற்றும் காய் உதிர்வு காணப்படும். குட்டை வகை தென்னை ரகங்களில் 50 முதல் 95 சதவீதம் வரையிலும் நெட்டை ரகங்களில் 40 முதல் 75 சதவீதமும் குறும்பை மற்றும் இளம் காய்கள். எனவே நாம் தேர்வு செய்யும் ரகத்தின் பண்புகளை தெரிந்து கொண்டு பின்னர் சாகுபடி செய்ய வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகளின் செயல்பாடு:

  • இயற்கையாகவே எந்த ஒரு மரங்களும் தனக்கு தேவையான வளர்ச்சி ஊக்குகளை உற்பத்தி செய்யும். ஆனால் அசாதாரண சூழ்நிலை காரணமாக தன்னால் உற்பத்தி செய்ய இயலாத வளர்ச்சி ஊக்கியை நாம் செடிகளுக்கு வழங்க வேண்டும். அதன்படி தென்னை மரங்கள் பூக்கும் தருணத்தில் NAA எனப்படும் நாப்தலின் அசிட்டிக் ஆசிட்டை 10 லிட்டர் தண்ணீருக்கு இரண்டு முதல் மூன்று மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை: 

எந்த ஒரு பயிரிலும் நோய் மற்றும் பூச்சியை முறையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மறைமுகமாக பயிர்களின் உற்பத்தி திறனை பாதித்து மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். தென்னையில் பூக்கள் வெடிக்கும் தருணத்தில் அதிக அளவு பூஞ்சாண மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் தாக்கும் அதை சரியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://www.blogger.com/blog/post/edit/4214495925679616483/3870744730597550618

ஞாயிறு, 7 ஜூலை, 2024

வாழையில் மஞ்சள் மற்றும் கருப்பு இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • வாழை சாகுபடியில் இலைப் பகுதியை பாதிக்க கூடிய பல்வேறு நோய்களில் பிரதான நோயாக சிகடோகா இலைப்புள்ளி நோய் திகழ்கிறது. இந்த நோய் பூஞ்சானம் இரண்டு வகையான அறிகுறிகளை பயிர்களில் தோற்றுவிக்கிறது. 
  • நோய் அறிகுறியை அடிப்படையாகக் கொண்டு இதனை மஞ்சள் மற்றும் கருப்பு சிகடோகா என்று கூறுவார்கள். பாதிப்பின் தன்மையை பொறுத்து சராசரியாக 50% மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துகிறது. இது மட்டும் இன்றி வாழைத் தார்களின் தரத்தில் குறைபாடு ஏற்படுகிறது.

நோயின் அறிகுறிகள்: 
மஞ்சள் சிகடோகா:

  • வெளிர் மஞ்சள் முதல் பச்சை நிற புள்ளி அல்லது கோடுகள் இலையின் மேற்புறத்தில் காணப்படும். 
  • படிப்படியாக இந்தப் புள்ளி அல்லது கோடுகளின் அகலம் மற்றும் நீளம் பெரிதாகி புண்கள் போன்று கருப்பு முதல் பழுப்பு நிற நடுப்பகுதியை கொண்டிருக்கும் அதனைச் சுற்றி மஞ்சள் வளையம் காணப்படும்.
  • பின்பு புண்களின் நடுப்பகுதியில் உள்ள திசுக்கள் காய்ந்து பழுப்பு நிறத்தில் மாற்றம் அடைந்து கருப்பு நிற வளையத்துடன் காணப்படும்.

கருப்பு சிகடோகா:

  • வெள்ளை அல்லது வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் அல்லது கோடுகள் இலையின் அடிப்புறத்தில் காணப்படும். 
  • நாளடைவில் இதன் நிலம் மற்றும் அகலம் அதிகரித்து புண்களாக மாறும். 
  • பின்னர் புண்களின் நடுப்பகுதி கருப்பு நிறத்துடனும் அதனைச் சுற்றி மஞ்சள் நிற வளையம் காணப்படும்.
  • தீவிர நிலையில் புண்களின் நடுப்பகுதி வெள்ளை முதல் வெளிர் நிறத்திலும் அதனை சுற்றி மஞ்சள் நிறமும் காணப்படும்.

அனைத்து அறிகுறிகளும் ஆரம்பத்தில் இளம் இலைகளில் இருந்து பின்னர் முதிர்ந்த இலைகளுக்கு பரவும்.மஞ்சள் நிற சிகடோகா இலைப்புள்ளி நோயை விட கருப்பு நிற சிகடோகா நோய் மிக தீவிரமானது. இதனால் செடிகளின் உணவு உற்பத்தி தரும் குறைந்து மகசூல் இழப்பீடு கண்டிப்பாக ஏற்படும்.

காய்கள் முதிர்ச்சி அடையும் முன்னரே பழுக்க ஆரம்பிக்கும் இதனால் காய்களின் தரம் குறைகிறது. வாழை தார்களில் உள்ள காய்கள் சீரற்ற முறையில் பழுப்பதால் தாரை விற்பனை செய்வதில் பின்னடைவு ஏற்படும்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை: 

  • தொடர்ச்சியான ஈரப்பதம் பனிப்பொழிவு, அதிக வெப்பநிலை மற்றும் காற்று ஈரப்பதம், இலைகளில் தொடர்ச்சியான ஈரப்பதம் இருத்தல்.
  • முறையான பராமரிப்பு இல்லாதது 
  • போதுமான வடிகால் வசதி இன்மை 
  • ஊட்டச்சத்தை பற்றாக்குறை குறிப்பாக பொட்டாசியம் 
  • நோய் தாக்குதலுக்கு உகந்த ரகங்களை சாகுபடி செய்தல் உதாரணத்திற்கு கேவண்டிஸ் மற்றும் ரோபஸ்டா

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகம் அல்லது வீரிய ஓட்டு ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • நல்ல வடிகால் வசதி உடைய மண் மற்றும் நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். 
  • அடர் நடவு மேற்கொள்வதை தவிர்க்கவும் ஏனெனில் இது நோய் தாக்குதலுக்கு சாதகமான தட்பவெட்ப சூழ்நிலையை உருவாக்கும். 
  • பக்கக் கன்றுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும் ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பக்கக் கன்றுகள் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு நோய் தாக்குதல் எளிதில் ஏற்படும்.
  • வயலில் முந்தைய பயிர்களின் எச்சம் மற்றும் களைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும்.
  • சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மை இன்றியமையாததாகும். குறிப்பாக தழைச்சத்து, பொட்டாசியம், போரான், மாங்கனீஸ் மற்றும் இரும்பு.
  • நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இலைகளை அப்புறப் படுத்தலாம். அதாவது 20 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட இலையை முழுமையாக அகற்றலாம்.
  • அதற்கும் குறைவான தாக்குதல் இருக்கும் குறிப்பிட்ட இலை பகுதியை மட்டும் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • காற்று ஈரப்பதம் நோய் தாக்குதல் மற்றும் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதால் அதனை குறைக்க சொட்டு நீர் பாசனம் அமைத்தல், இரு வரிசைகளில் உள்ள மரத்தின் இலைகள் ஒன்றுடன் ஒன்று தொடாமல் இருக்கும்படி இலைகளை அறுத்து விடுதல் மற்றும் களைகள் இல்லாமல் பராமரித்தல் அவசியமாகும்.
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது 10 லிட்டர் தண்ணீருக்கு Pseudomonas fluorescence மற்றும் bacillus subtillis ஆகியவற்றைத் தலா 50 மில்லி கலந்து இலை வழியாக தெளிக்கலாம்.
  • அதே போன்று 10 லிட்டர் தண்ணீருக்கு தலா 75 மில்லி Trichoderma viride மற்றும் bacillus subtillis கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறையை வாரம் ஒரு முறை என நோயின் தீவிரம் குறையும் வரை பின்பற்ற வேண்டும்.
  • ரசாயன முறையில் நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். 

  • Copper oxychloride -25 கிராம் 
  • Copper hydroxide- 10 கிராம் 
  • Chlorothaonil- 25 கிராம்
  • Propiconazole - 10 மில்லி
  • Merriam+ pyroclostrobin - 30-40 கிராம் 
  • Hexaconazole+ captan- 20 கிராம்
  • Tebuconazole Trifloxystrobin - 10 கிராம் 
  • Tebuconazole+sulphur -25 கிராம்
  • Fluopyram+Tebuconazole - 10-12 மில்லி
  • Fluxapyraxad + pyroclostrobin - 4 மில்லி

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.



வெள்ளி, 5 ஜூலை, 2024

எலுமிச்சையில் சூனியக்காரர்களின்(Witchesbroom) துடைப்பம் நோய் மேலாண்மை

முன்னுரை:

  • ஆங்கிலத்தில் Witches broom என்று அழைக்கப்படும் நோயினை தமிழில் சூனியக்காரர்களின் துடைப்பம் என்று அழைப்பார்கள். இந்த நோயானது பைட்டோபிளாஸ்மா எனப்படும் உயிரினத்தால் ஏற்படுகிறது. 
  • பிரதானமாக எலுமிச்சை சாகுபடி செய்யப்படும் மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பரவலாக இதன் தாக்குதல் தற்பொழுதும் காணப்படுகிறது.

நோயின் அறிகுறிகள்:

  • மரத்தின் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு கிளை பகுதியின் நுனியில் அதிக பக்க கிளைகள் காணப்படும். 
  • இந்த பக்க கிளைகளில் தோன்றக்கூடிய இலைகள் வெளிர் பச்சை முதல் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும். 
  • இந்த பகுதியில் காணப்படும் பக்க கிளைகள் குறைந்த கணு இடைவெளி கொண்டிருக்கும். 
  • இந்தக் கிளையின் அடி புரத்தில் உள்ள இலை மற்றும் கிளை பகுதியில் காய்ந்து காணப்படும். 
  • இதனை பார்க்கும் பொழுது துடைப்பம் போன்று காட்சியளிக்கும் எனவே தான் இந்த நோயை சூனியக்காரர்களின் துடைப்பம் என்று அழைக்கிறார்கள்.
  • நாளடைவில் இந்த பகுதியில் காணப்படும் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறி உதிர்ந்து, பின் கருகல் நோயாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.
  • இவ்வாறாக அறிகுறிகளை தோற்றுவிக்கும் கிளைப் பகுதியில் எந்த வித பூ அல்லது காய்கள் தோன்றாது.
  • நோயின் அறிகுறிகள் தென்படும் மரங்கள் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு இறந்துவிடும் அபாயமும் இதில் உள்ளது. 

பரவும் விதம்: 

இந்த நோயானது ஒட்டு செடிகளில் அதிகம் காணப்படுவதற்கு காரணம் பிரதானமாக ஒட்டுக்கட்டுதல் மூலம் பரவுகிறது. அதாவது உணவு பாதை வழியாக பரவுகிறது. 

இதைத் தவிர சாறு உறிஞ்சும் பூச்சான பச்சை ஈக்கள் மற்றும் சில்லிட் மூலமும் பரவும் தன்மை உடையது. 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • எலுமிச்சை செடிகளில் ஒட்டுக்கட்டி பயன்படுத்துவதை தவிர்க்கலாம். 
  • ஒட்டுக் கட்டுதலுக்கு பயன்படுத்தப்படும் தாய் மற்றும் வேர் செடிகளை நன்கு ஆய்வு செய்து ஃபைட்டோபிளாஸ்மா நோய் தாக்காத மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் ஏனெனில் வயலில் இருக்கும் வயதான/ பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் களைகள், நோய் அல்லது வைரஸ் நோயை பரப்பும் பூச்சிகளின் வாழ்விடமாக இருக்கலாம்.
  • நோயைப் பரப்ப கூடிய சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை வழி திரவங்கள் அல்லது ரசாயன திரவங்களை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
  • மரங்களைப் பராமரிப்பதில் அதிக கவனம் தேவை எனவே பின் கருகல் நோயைக் கட்டுப்படுத்த நாம் எடுக்கும் நடவடிக்கை இதற்கும் பின்பற்ற வேண்டும் அதைப் படிப்பதற்கு கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும். https://www.xn--2023-usl0k8ahcj0im72acc.com/2024/07/blog-post_4.html
  • பூச்சிகளின் ஆரம்ப நிலை தாக்குதல் போது இயற்கை வழி பூச்சிக் கொல்லியான Verticillum lecanii ஐ 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என கலந்து வாரம் ஒருமுறை தெளித்து வர வேண்டும். 
  • அல்லது கீழ்க்கண்ட ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பச்சை ஈக்களை கட்டுப்படுத்த தெளிக்கலாம்.
  • Imidacloprid, Acetamaprid, spiromesifen, phenthoate, broflonilide, flonicamid etc...

Recent Posts

Popular Posts