google-site-verification: googled5cb964f606e7b2f.html எலுமிச்சை இலைகளில் பிசுபிசுப்பாக தோன்ற காரணமான சில்லிட் பூச்சி... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 17 நவம்பர், 2023

எலுமிச்சை இலைகளில் பிசுபிசுப்பாக தோன்ற காரணமான சில்லிட் பூச்சி...

சில்லிட் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்

முன்னுரை:

  1. இளம் மற்றும் முதிர் பூச்சிகள் செடிகளின் தளிர், இலைகள், மொட்டுகள் மற்றும் பிஞ்சுகளில் சாற்றை உறிஞ்சுவதால் ஒழுங்கற்ற, சுருங்கிய மற்றும் மெல்லிய இலைகளை தோற்றுவிக்கிறது.
  2. இளம் பூச்சிகள் நச்சுகளை செலுத்துவதால் இலை, பூ உதிர்தல் மற்றும் நுனி கருகுதல் ஏற்படுகிறது.
  3. இலைகள் மற்றும் கிளைகளில் பிசு பிசுப்பாகி கருப்பு நிற பூஞ்சாண வளர்ச்சி காணப்படும்.
  4. நாளடைவில் மகசூல் மற்றும் தரத்தில் பாதிப்பு ஏற்படும்.
  5. இந்த வகை பூச்சி Greening எனப்படும் பாக்டீரியா நோயை ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்புகிறது.

வாழ்க்கை சுழற்சி :

  • முட்டை – ஆரஞ்சு முதல் மஞ்சள் நிறத்தில் இளம் தளிர்களில்  காணப்படும்.
  • இளம் பூச்சி  – பழுப்பு நிறத்தில் தளிர்ஃ கிளைகளில் காணப்படும்
  • பூச்சி – பட்டாம்பூச்சி பழுப்பு நிறத்தில் பெரிய இறக்கைகளுடன் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • வயலை சுத்தமாக வைத்து கொள்ளுதல் மற்றும் ஊடுபயிராக கருவேப்பிலை பயிரிடுவதை தவிர்க்கவும்.
  • அதிக தலைச்சத்து உரமிடுதல் மற்றும் நீர்பாய்யச்சலை தவிர்க்க வேண்டும்.
  • இயற்கை பூச்சி விழுங்கிகளான
  • Metarhizium anisopliae ஏக்கருக்கு 200 கிராம் தெளிப்பதால் 75% வரை இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
  • கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளிக்க வேண்டும்.

1.              5% NSKE or Azadirachtin 1-2 ml / 1 lit Water

2.              Imidacloprid – 1 ml /  Lit of water

3.              Dimethoate – 2.5 ml/ lit of water

4.              Acephate – 2.5 g/ lit of water

5.              Fenpropathrin – 1 ml/ lit of water

6.              Thiamethoxam – 1 g / lit of water

                 7.       Spinetoram – 0.75 -1 ml/ lit of water

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts