google-site-verification: googled5cb964f606e7b2f.html தென்னை மரங்களுக்கு வட்டப்பாத்தி அமைத்தலும் உரம் இடுதலும் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 14 மார்ச், 2024

தென்னை மரங்களுக்கு வட்டப்பாத்தி அமைத்தலும் உரம் இடுதலும்

முன்னுரை:

  • "பெத்த பிள்ளை சோறு போடாவிட்டாலும் நட்ட பிள்ளை சோறு போடும்" என்பது பழமொழி. 
  • இந்தக் கூற்றை அடிப்படையாகக் கொண்டுதான் தென்னங்கன்றுகளை தென்னம் பிள்ளைகள் என அழைக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. 
  • இதன் மூலம் தென்னங்கன்றுகளை நாம் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதற்கான புரிதல் இருக்கும் என்று நினைக்கிறேன்.
  • தென்னங்கன்றுகளை பராமரிப்பதில் ஒரு பகுதியாக உர மேலாண்மை பற்றி விரிவாக காண்போம்.
  • தென்னை மரங்களுக்கு உரம் இடுதல் எவ்வளவு முக்கியமோ அதே போல் தான் உரங்களை எவ்வாறு இட வேண்டும் என்பது முக்கியம்.
  • முதலாவதாக தென்னை மரங்களின் வேர் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால் எவ்வாறு உரம் இட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளை வேர்கள் உருவாகுதல்:

  • தென்னங்காய்கள் நடவு செய்யப்பட்டு முளைக்குருத்து வரும் தருணத்தில் சிறிய வெள்ளை வேர்கள் உருவாகிறது.
  • இதை மண்ணின் கிடை மட்டத்தில் காணப்படுகிறது. பெரும்பான்மையாக இந்த வேர்கள் சுவாசிக்க பயன்படுகிறது.

இளம் பழுப்பு நிற வேர்கள் உருவாகுதல்:

  • வெள்ளை வேர்களுக்கு அடுத்தபடியாக உருவாகும் இளம் பழுப்பு நிற வேர்கள் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை செடிகளுக்கு உறிஞ்சி கொடுக்கிறது. 
  • இந்த வகை வேர்கள் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டே இருக்கும். மரங்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க மேலிருந்து கீழ் புறமாக இந்த வேர்கள் செயலிழந்து வரும் ஆனால் இது மிக ஆழமாக சென்று வளரக்கூடிய ஆணி வேர்கள் கிடையாது.

இளம் சிகப்பு நிற வேர்கள் உருவாகுதல்:

  • இளம் பழுப்பு நிற வேர்களை சுற்றி  காணப்படும் திசுக்கள் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி தரும். செடிகளுக்கு வயது ஆக ஆக இந்த திசுக்கள் மறைந்து விடும் அடுத்தடுத்த வேர்களில் திசுக்கள் உருவாகும். வேர்களில் இருந்து திசுக்கள் மறைந்த வேர்கள் சிகப்பு நிறமாக காணப்படும்.
  • சிகப்பு வேர்கள் நாளடைவில் ஆழமாக சென்றாலும் அதில் ஊட்டச்சத்துக்களையும் நீரையும் உறுதி தரக்கூடிய திசுக்கள் இருக்காது எனவே சுமார் 15 சென்டி மீட்டருக்கு கீழ் இருக்கும் சிகப்பு திசுக்கள் பயனற்றது.

ஆணி வேர்கள்:

  • தென்னை மரங்களை பொறுத்தவரையில் ஒரு சில ஆணி வேர்கள் மட்டுமே காணப்படும். இந்த வேர்கள் செடி அல்லது மரங்கள் மண்ணை இறுக பிடித்து நிலைத்து வளர்வதற்கு உதவி புரிகிறது. இது ஊட்டச்சத்துக்களையும் நீரையும் எடுத்து தருவதில்லை.

நினைவில் கொள்ள வேண்டியவை:

  • தென்னை மரங்களின் சுவாச வேர்கள் தரைமட்ட அளவில் வயதிற்கு ஏற்றவாறு இரண்டு மீட்டர் நீளம் வரை வளரும் தன்மை கொண்டது.
  • இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நல்ல காற்றோட்ட வசதியுடைய மண் தென்னை சாகுபடிக்கு உகந்தது.
  • அவ்வாறு இல்லை என்றால் நல்ல காய்ப்பு திறன் மற்றும் செடி வளர்ச்சி பெற சுமார் 2 மீட்டர் ஆழத்திற்கு மண்களை மாற்ற வேண்டும்.
  • எனவே நாம் அமைக்கும் வட்டப்பாத்திகள் செடிகளின் வயதிற்கு ஏற்றவாறு அதிகபட்சமாக 2 மீட்டர் சுற்றளவு இருக்கலாம். அதற்கு அதிகமான அளவு வட்டப்பாத்தி அமைப்பது பயனற்றது என்பது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கருத்தாகும்.
  • 60 வருடம் வயதுடைய தென்னை மரங்களை ஆய்வு செய்யும் போது கூட அதன் சுவாச வேர்கள் இரண்டு மீட்டர் சுற்றளவை தாண்டவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வட்டப்பாத்தி இரண்டு மீட்டருக்கு விடாமல் இருப்பது சால சிறந்தது.
  • நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் வேறானது தரை மட்டத்திலிருந்து சுமார் 15 முதல் 20 சென்டிமீட்டர் ஆழம் வரை மட்டுமே காணப்படும். மிகவும் வயதான மரங்களை ஆய்வு செய்யும் போது கூட அதன் ஊட்டச்சத்து வேர்கள் 15 சென்டிமீட்டர் ஆழத்தை தாண்டி செல்வதில்லை.

  • எனவே நாம் உரமிடும் போது எக்காரணத்தைக் கொண்டும் 15 சென்டிமீட்டர் ஆழத்தை தாண்டி உரம் விடுதவிர்ப்பது நல்லது.
  • சரியான முறையில் வட்டப்பாத்தி அமைப்பது எவ்வாறு என்று மேலே கூறப்பட்டுள்ளது உதாரணத்திற்கு கீழே புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.

உர மேலாண்மை பற்றி காண்போம்:

  • தென்னை ஒரு பல்லாண்டு பயிராக திகழ்கிறது. நாட்டு மரங்களாக இருப்பின் 60-70 வருடங்களும் ஒட்டு ரகங்கள் 40 வருடங்கள் வரை கூட பராமரிக்கலாம். 
  • எனவே இதன் வளர்ச்சி மற்றும் காய்ப்பு திறன் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றவாறு உர மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.

எப்போது உரம் இட ஆரம்பிக்க வேண்டும்...

கன்றுகளை நிலத்தில் நட்ட உடன் புது வெள்ளை வேர்கள் உருவான பிறகு அதாவது சுமார் மூன்று மாதங்கள் கழித்து.

இயற்கை விவசாயத்திற்கு என்ன உரம் இடவேண்டும்...

  • தென்னை பல்லாண்டு பயிர் என்பதால் எந்த அளவிற்கு இயற்கை உரங்களை இடிகிறோமோ அந்த அளவிற்கு மண்ணின் ஊட்டச்சத்து பெருகுவதுடன் மண்ணின் இறுகத்தன்மை குறைந்து மிருதுவாகிறது. மேலும் இதே போதுமான ஊட்டச்சத்து மற்றும் நுண்ணுயிரிகளின் அளவை மேம்படுத்துகிறது. நன்கு மக்கிய தொழு உரம் (அதாவது சராசரியாக 5 மாதங்கள் மக்கியது), கோழி எரு, ஆட்டு எரு, மண்புழு உரம் அல்லது கம்போஸ்ட் முதலீட்டில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை மரத்தைச் சுற்றி ஆறு முதல் எட்டு அடியில் வட்ட பாத்தி அதில் இட வேண்டும்.
  • நமது வயலின் தன்மையை பொறுத்து தொழு உரம் இடும்போது அதனுடன் சேர்ந்து உயிர் உரங்கள்/உயிர் பூஞ்சன கொல்லிகள் அல்லது உயிர் பூச்சிக்கொல்லிகளை கலந்து ஊட்டமேற்றி இட வேண்டும். இல்லையெனில் பசுந்தாள் உர பயிர்களை தென்னை மரங்களை சுற்றி வளர்த்து உரமாக்கலாம்.

ரசாயன உரம் என்ன இடலாம்...

  • தென்னை பல்லாண்டு பயிர் என்பதால் இதற்கு தழைச்சத்து மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து தொடர்ச்சியாக தேவைப்படுகிறது. இந்த முதன்மை ஊட்டச் சத்துக்களின் பற்றாக் குறைகள் பெரிதாக வெளிப்படுவதில்லை.
  • அதற்கு அடுத்தபடியாக போரான், மெக்னீசியம் மாங்கனிசு மற்றும் சல்பர் போன்ற நுண்ணூட்டங்களின் செயல்பாடுகள் இன்றியமையாதாகும்.
  • போரான் சத்தின் பங்கு நாம் அனைவரும் அறிந்ததே. மண்ணில் இடப்படும் போரான் சத்து மண்ணில் நிலை நிறுத்தப் படுவதாலும், எளிதில் கரைந்து விடுவதாலும் மற்றும் மண்ணின் உவர் தன்மை காரணமாகவும் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை. அவ்வாறு கிடைக்கப்பெறும் போரான் சத்து செடிகளின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு போகாது. எனவே இதன் பற்றாக்குறையால் துணி குருத்துகள் போதுமாக வளராமலும், குருத்து இலைகள் சரியாக விரிவடையாமலும், பிரிவடைந்த இலைகளின் நுனிகளில் வலை பின்னல் போன்ற அமைப்பு காணப்படும். தென்னையின் காய்ப்பு தருணத்தில் போதுமான பூ மற்றும் காய்கள் இன்றி காணப்படுவது, இளம் காய்கள் உதிர்தல், உதிர்ந்த காய்களின் உருவம் நீள்வாக்கில் இருத்தல் என பல்வேறு பற்றாக்குறை அறிகுறிகளை தோற்றுவிக்கிறது.
  • மாங்கனிசம் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் இந்த நுண்ணூட்ட சத்துக்கள் இலைகளின் உருவம், ஒளிச்சேர்க்கைக்கு தேவையான பச்சயத்தின் உற்பத்தி மற்றும் பூப்பிடித்தல் மற்றும் காய்ப்பு திறன் போது முக்கியமாக தேவைப்படுகிறது. குறுகிய மற்றும் வெளிர் நிற இலைகள், குறைவான பூ பிடித்தல் மற்றும் அதிக பூ உதிர்தல் என பல அறிகுறிகளை தோற்றுவிக்கிறது.
  • சல்பர் காய்களின் சுவையை மேம்படுத்துவதுடன் எண்ணெயின் அளவை அதிகப்படுத்துகிறது.
  • இதே போன்ற மற்ற நுண்ணூட்டச் சத்தும் தென்னைக்கு முக்கியமானதாகும். இருப்பினும் அவைகள் பெரிதாக அறிகுறிகளை தோற்றுவிப்பதில்லை. 

எனவே 
தொழு உரம் -15-25 கிலோ
தழைச்சத்து - 1.5 கிலோ 
மணிச்சத்து - 2 கிலோ சாம்பல் சத்து -2 கிலோ
நுண்ணூட்ட சத்து - 1 கிலோ
என்ற அளவில் 5 வருடம் ஆன ஒரு மரத்திற்கு சுமார் 5-6 அடி அகலத்தில் வட்டப் பாத்தி இட்டு அதில் 10 முதல் 15 சென்டிமீட்டர் ஆழத்தில் மேலே உள்ள உரங்களை மரத்தைச் சுற்றி இட்டு நீர் பாய்சவும்.

  • இவைகள் அனைத்துமே பொதுவான கருத்து செடிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்
இது போன்ற விவசாய தகவல் மற்றும் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்க கீழ்கண்ட இணைப்பில் உள்ள குழுவில் இணைந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts