எலுமிச்சையில் நுனி கருகல்/ பின் கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
- தமிழகத்தில் நாளுக்கு நாள் எலுமிச்சை சாகுபடி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பிரதான காரணமாக மாறுபட்ட தட்பவெப்ப நிலை மற்றும் புளிப்பு வகை சார்ந்த இதர பழ சாகுபடி குறைந்து வருவதே ஆகும்.
- எலுமிச்சை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் அறிந்த பிரதான நோயாக நுனி கருகல் நோய் திகழ்கிறது. இதை ஆங்கிலத்தில் Die back/ Wither dip/Anthracnose/ Citrus Decline நோய் என்று அழைப்பார்கள்.
- இந்த நோயானது பூஞ்சை தாக்குதல்,பூச்சி தாக்குதல், முறையற்ற பராமரிப்பு, மாறுபட்ட தட்பவெப்ப சூழ்நிலை, ஊட்டச்சத்து பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய ஒரு வகை நோய் அல்லது சீர்குலைவு எனலாம்.
- இந்த நோயினால் சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
நோய் தாக்குதலின் அறிகுறிகள்:
- மரத்தின் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு கிளைகளில் உள்ள நுனி இலைகள் வாடி பழுப்பு நிறம் அடைந்து பின்னர் உதிர ஆரம்பிக்கும்.
- அடுத்த கட்டமாக இலை உதிர்வு நுனியில் இருந்து கிளையின் அடிப்புரத்தை நோக்கி பரவும். எனவே தான் இதனை பின் கருகல் நோய் என்றும் கூறுவார்கள்.
- தண்டுப் பகுதியில் மரப்பட்டைகள் உதிர்தல் பிசின் வெளி வருதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட கிளையில் கருப்பு நிற பூஞ்சான வளர்ச்சியை காண இயலும்.
- நாளடைவில் பாதிக்கப்பட்ட கிளைகள் முற்றிலும் காய்ந்து விடும்.
- நோய் தாக்குதலினால் செடிகள் அல்லது மரங்கள் இறப்பது மிகவும் அரிது. ஆனால் ஒரு சில கிளைகள் காய்ந்து வளர்ச்சி குன்றி காணப்படும்.
- இதனால் மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
- இந்த வகை நோய் இளம் மரங்களில் வேகமாக பரவும் தன்மை உடையது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- காய்ந்து போன கிளைப் பகுதியை அகற்ற வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் குறிப்பிட்ட கிளை பகுதி முற்றிலும் காய்ந்து இருக்க வேண்டும். கிளையின் தண்டுப் பகுதியில் பச்சையம் இருக்கும் போது அதை அகற்றினால் நோய் பரவுதல் காணப்படும்.
- இது செடியின் காய்ப்பு திறனை பெரிய அளவில் பாதிக்கும்.
- நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
- மற்ற நோய் மற்றும் பூஞ்சை தாக்குதலுக்கு செடிகள் ஏதுவாக அமையும். எனவே குறிப்பிட்ட கிளை பகுதியை அகற்றிய பிறகு அதில் நோய் பரவாமல் இருப்பதற்கு காப்பராக்சி குளோரைடு என்ற மருந்தை தடவி விட வேண்டும்.
- மரங்களுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும்.
- மரம் ஒன்றிற்கு 15 முதல் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 100 கிராம் Trichoderma, 100 கிராம் VAM மற்றும் 100 கிராம் Humic அமிலம் ஆகியவற்றை மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இட்டு நன்கு நீர் பாய்ச்ச வேண்டும்.
- ரசாயன உரங்களாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு 250:150:200 கிராம் என்ற அளவில் வருடத்திற்கு நான்கு முறை கொடுக்க வேண்டும்.
- இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் மாதம் ஒரு முறை வேர் வழியாகவும் இலை வழியாகவும் ஊட்டச்சத்துக் கொடுக்க வேண்டும்.
- நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் கண்டிப்பாக வட்டப்பாத்தி இட்டு அதன் நீர் பாய்ச்ச வேண்டும்.
- அளவுக்கு அதிகமாக நீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும்.
- நாம் பாய்ச்சும் நீர் தண்டுப் பகுதியை தொடாமல் இருக்க மண் அணைக்க வேண்டும்.
- இதர நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாதவாறு செடிகளை பராமரிக்க வேண்டும்.
- மரங்களுக்கு தேவையான அளவு நுண்ணூட்ட சத்து கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக காப்பர், துத்தநாகம், மாங்கனிசு, இரும்பு மற்றும் மாலிப்டினம்.
- நுண்ணூட்ட ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் வருடம் இரண்டு முறை இடவேண்டும்.
- பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாதம் ஒரு முறை காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 அல்லது 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
- இயற்கை வழி திரவங்களை பயன்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு தலா 50 கிராம் Pseudomonas மற்றும் Bacillus ஆகியவற்றைக் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக