சவுக்கு மரம் சாகுபடியில் இரகத் தேர்வில் கவனிக்கப்பட வேண்டியவை
|- விவசாயக் கூலி ஆட்கள் பற்றாக்குறை, மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் மேலும் இடு பொருட்களின் விலை போன்ற பல்வேறு காரணங்கள் விவசாயிகள் நீண்ட நாட்கள் பயிரை தேர்வு செய்து சாகுபடி செய்து வருகின்றனர்.
- அந்த வகையில் சவுக்கு மரம் சாகுபடி தென் தமிழகத்தில் ஒரு இன்றியமையாத மரப்பயிராக மாறி வருகிறது.
- காகிதம் தயாரித்தல், விறகு, கம்பங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டிற்காக சாகுபடி செய்யப்படும் சவுக்கு மரமானது காற்று தடுப்பானாகவும் வளர்க்கப்படுகிறது.
- அனைத்து வகையான மண் அமைப்பிலும் வளரக்கூடிய திறனுடையது. குறைந்த செலவினம், குறைந்த ஆள் தேவை, நோய் மற்றும் பூச்சிகள் தாக்குதல் இல்லாமல் இருத்தல், நல்ல விலை போன்ற காரணங்களால் சவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது.
- சவுக்கு மரத்தில் பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் குறிப்பிட்ட சில நேரத்தில் பண்புகள் விளைச்சலை இருமடங்காக உதவி புரியும்.
- கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தேசிய அளவிலான மரப்பயிர் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சிறந்த ரகங்களை வெளியிட்டுள்ளது.
- விதை பண்ணை விதைகள் கலப்பின ரகங்கள், Clone வகைகள் பல்வேறு ரகங்களை வெளியிட்டுள்ளது.
- உதாரணத்திற்கு, IFGTB- CH -1, IFGTB- CH -2, IFGTB- CH -5. இதில் குறைந்த வாழ்நாள் திறன் அதிக மகசூல் கொடுக்க கூடிய ரகமாக CH -5 திகழ்கிறது.
CH -5 சவுக்கு ரகத்தின் சிறப்பு பண்புகள்...
- தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
- தொடர்ச்சியாக தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களை தவிர மற்ற இடங்களில் சாகுபடி செய்ய மிக உகந்தது.
- அனைத்து வகையான மண் வகைகளும் சாகுபடி செய்யலாம்.
- மரங்கள் சீரான மற்றும் ஒருமித்த வளர்ச்சியுடன் காணப்படும்.
- தண்டுப் பகுதிகள் தொடர்ச்சியாகவும் நேராகவும் வளரும் திறன் உடையது.
- சராசரியாக 30 மாத காலத்தில் அறுவடைக்கு தயாராகும்.
- வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.
- நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது.
- மற்ற ரகங்களை விட அதிக விளைச்சல் சராசரியாக விளைச்சலை இருமடங்காக்கும் திறனுடையது.
- மற்ற ரகங்கள் சுமார் 40 டன் விளைச்சல் கொடுக்கக் கூடியதாக இருக்கும் நிலையில் இந்த ரகம் 70 முதல் 80 டன் மகசூல் தரக்கூடியது.
- சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான கன்றுகளை தேர்வு செய்வது மிக மிக அவசியம்.
- இதை எளிதாக்கும் வகையில் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு ஆராய்ச்சி நிறுவனம் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு சில நிறுவனங்கள் மற்றும் தனியார் நர்சரிகளை உரிமம் கொடுத்து இந்த ரகங்களை விற்பனை செய்து வருகிறது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX