google-site-verification: googled5cb964f606e7b2f.html சாமந்தி பயிரை நூற்புழு தாக்குதலுக்கு எதிராக பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை. ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 20 ஜூலை, 2024

சாமந்தி பயிரை நூற்புழு தாக்குதலுக்கு எதிராக பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை.


1. சாமந்தி பயிரில் வணிக ரீதியாக இரண்டு வகைகளும் பல்வேறு ரகங்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இவை அனைத்துமே நூற்புழுவை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.

2. நூற் புழுக்களில் பல்வேறு வகைகள் உள்ளது... இந்த அனைத்து வகைகளையும் சாமந்தி பயிரால் கட்டுப்படுத்த இயலாது என்பது நிதர்சனமான உண்மை.

3. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இருக்கக்கூடிய நூற்புழு வகைகளில் 3 அல்லது 4 வகைகளை மட்டுமே சாமந்தி பயிரால் கட்டுப்படுத்த இயலும் என்பதை பல்வேறு ஆய்வுகள் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

4. அந்த நான்கு நூற்புழு வகைகளுக்கு ஏற்றவாறு சாமந்தி பயிரின் செயல்பாட்டுத் திறன் வேறுபடுகிறது.

5. சாமந்தி பயிரை வரப்பு பயிராகவோ அல்லது ஊடுபயிர்/கலப்பு பயிராகவோ பயிரிட்டு நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

6. சாமந்தி பயிரின் வேர்களில் இருந்து சுரக்கப்படும் Alpha terthienyl எனப்படும் ஒரு வகை வேதிப்பொருள் நூற்புழுக்களின் முட்டைகளை பொறிக்க விடாமல் தடுத்து படிப்படியாக தாக்குதலை குறைக்கிறது. 

7. இது மட்டும் இன்றி பல்வேறு வகையான பூஞ்சான, பாக்டீரியா, பூச்சி தாக்குதல் மற்றும் வைரஸ் நோய்க்கு எதிராகவும் இந்த வேதிப்பொருள் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

8. சாமந்தி பயிர்கள் நன்கு வளர்ந்து தரையில் இருந்து சற்று ஆழமாக இருக்கக்கூடிய வேர்களில் இருந்து சுரக்கக்கூடிய வேதி பொருள் மட்டுமே நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது. 

9. எனவே பயிர் சாகுபடிக்கு சுமார் 50 முதல் 60 நாட்களுக்கு முன்னதாக சாமந்தி பயிரை நடவு செய்ய வேண்டும் அப்போதுதான் இது செயல்படும்.

10. சாமந்தி பயிர் ஒருபோதும் நூற்புழுக்களை அழிக்காது.. இனப்பெருக்கத்தை மட்டுமே கட்டுப்படுத்தும் அதுவும் தொடர்ச்சியாக பயன்படுத்தினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்...

இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்..
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts