எலுமிச்சையில் சூனியக்காரர்களின்(Witchesbroom) துடைப்பம் நோய் மேலாண்மை
|முன்னுரை:
- ஆங்கிலத்தில் Witches broom என்று அழைக்கப்படும் நோயினை தமிழில் சூனியக்காரர்களின் துடைப்பம் என்று அழைப்பார்கள். இந்த நோயானது பைட்டோபிளாஸ்மா எனப்படும் உயிரினத்தால் ஏற்படுகிறது.
- பிரதானமாக எலுமிச்சை சாகுபடி செய்யப்படும் மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பரவலாக இதன் தாக்குதல் தற்பொழுதும் காணப்படுகிறது.
நோயின் அறிகுறிகள்:
- மரத்தின் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு கிளை பகுதியின் நுனியில் அதிக பக்க கிளைகள் காணப்படும்.
- இந்த பக்க கிளைகளில் தோன்றக்கூடிய இலைகள் வெளிர் பச்சை முதல் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும்.
- இந்த பகுதியில் காணப்படும் பக்க கிளைகள் குறைந்த கணு இடைவெளி கொண்டிருக்கும்.
- இந்தக் கிளையின் அடி புரத்தில் உள்ள இலை மற்றும் கிளை பகுதியில் காய்ந்து காணப்படும்.
- இதனை பார்க்கும் பொழுது துடைப்பம் போன்று காட்சியளிக்கும் எனவே தான் இந்த நோயை சூனியக்காரர்களின் துடைப்பம் என்று அழைக்கிறார்கள்.
- நாளடைவில் இந்த பகுதியில் காணப்படும் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறி உதிர்ந்து, பின் கருகல் நோயாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.
- இவ்வாறாக அறிகுறிகளை தோற்றுவிக்கும் கிளைப் பகுதியில் எந்த வித பூ அல்லது காய்கள் தோன்றாது.
- நோயின் அறிகுறிகள் தென்படும் மரங்கள் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு இறந்துவிடும் அபாயமும் இதில் உள்ளது.
பரவும் விதம்:
இந்த நோயானது ஒட்டு செடிகளில் அதிகம் காணப்படுவதற்கு காரணம் பிரதானமாக ஒட்டுக்கட்டுதல் மூலம் பரவுகிறது. அதாவது உணவு பாதை வழியாக பரவுகிறது.
இதைத் தவிர சாறு உறிஞ்சும் பூச்சான பச்சை ஈக்கள் மற்றும் சில்லிட் மூலமும் பரவும் தன்மை உடையது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- எலுமிச்சை செடிகளில் ஒட்டுக்கட்டி பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
- ஒட்டுக் கட்டுதலுக்கு பயன்படுத்தப்படும் தாய் மற்றும் வேர் செடிகளை நன்கு ஆய்வு செய்து ஃபைட்டோபிளாஸ்மா நோய் தாக்காத மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
- வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் ஏனெனில் வயலில் இருக்கும் வயதான/ பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் களைகள், நோய் அல்லது வைரஸ் நோயை பரப்பும் பூச்சிகளின் வாழ்விடமாக இருக்கலாம்.
- நோயைப் பரப்ப கூடிய சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை வழி திரவங்கள் அல்லது ரசாயன திரவங்களை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
- மரங்களைப் பராமரிப்பதில் அதிக கவனம் தேவை எனவே பின் கருகல் நோயைக் கட்டுப்படுத்த நாம் எடுக்கும் நடவடிக்கை இதற்கும் பின்பற்ற வேண்டும் அதைப் படிப்பதற்கு கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும். https://www.xn--2023-usl0k8ahcj0im72acc.com/2024/07/blog-post_4.html
- பூச்சிகளின் ஆரம்ப நிலை தாக்குதல் போது இயற்கை வழி பூச்சிக் கொல்லியான Verticillum lecanii ஐ 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என கலந்து வாரம் ஒருமுறை தெளித்து வர வேண்டும்.
- அல்லது கீழ்க்கண்ட ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பச்சை ஈக்களை கட்டுப்படுத்த தெளிக்கலாம்.
- Imidacloprid, Acetamaprid, spiromesifen, phenthoate, broflonilide, flonicamid etc...
- சில்லிட் பூச்சிகளை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பார்க்கவும்...https://www.xn--2023-usl0k8ahcj0im72acc.com/2023/11/blog-post_17.html
0 Comments:
கருத்துரையிடுக