பயிர் சாகுபடியில் வளர்ச்சி ஊக்கியின் பயன்பாடுகள்-2
|Napthyl Acetic acid:
- செல் பிரிதல் மற்றும் நீளமாதல் நிகழ்வின் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
- பயிர்களில் அதிக அளவு பக்கக் கிளைகள் உருவாவதற்கு துணை புரிகிறது. குறிப்பாக பருத்தி
- பெரும்பான்மையான பயிர்களில் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
- காய்கள் முதிர்ச்சி அடையும் முன்பு உதிர்வதை குறைக்கிறது. உதாரணத்திற்கு திராட்சை.
- காய்களின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. உதாரணத்திற்கு திராட்சை, மா மற்றும் அன்னாசி பழம்
- இதை மற்ற ரசாயன மருந்துகளுடன் பயன்படுத்தும் போது கவனம் அவசியம் அதேபோல் சற்று பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பயன்படுத்தப்பட்டால் இலை மஞ்சள் நிறமாதல், இலை உதிர்தல் மற்றும் செடிகள் வாடுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
- வணிக ரீதியாக Planofix என்ற பெயரில் கிடைக்கப்பெறுகிறது.
Ethylene:
- இது இயற்கையாகவே பயிரில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வளர்ச்சி சீராக்கியாகும்.
- கொடி வகை காய்கறி பயிர்களில் அதிக அளவு பெண் பூக்களை தூண்ட பயன்படுத்தப்படுகிறது.
- வணிக ரீதியாக முதிர்ந்த காய்களை பழுக்க வைக்க, ஒருமித்த நேரத்தில் பழுக்க, நிறம் மாற்றத்தை தூண்ட பயன்படுத்தப்படுகிறது குறிப்பாக வாழை.
- அதேபோன்று ரப்பர் பப்பாளி போன்ற பயிர்களில் பால் விளைச்சலை அதிகப்படுத்த தெளிக்கப்படுகிறது.
- வணிக ரீதியாக Ethrel என்ற பெயரில் கிடைக்கப்படுகிறது.
Chlormequat chloride:
- பயிரின் இலை வளர்ச்சிக்கு செல்லும் ஊட்டத்தை தடை செய்து வணிக ரீதியாக தேவைப்படும் பயிரின் பாகத்திற்கு மாற்றி அனுப்புகிறது.
- சின்ன வெங்காயம் நிலக்கடலை போன்ற மண்ணிற்கு அடியில் விலை கூடிய பயிர்களுக்கு பிரமாதமாக செயல்படுகிறது.
- சரியான தருணத்தில் தெளித்து வருவதால் மற்ற பயிர்களிலும் மகசூலை அதிகரிக்க உதவி புரிகிறது.
- அதிக வறட்சி,வெள்ளம் மற்றும் பல சூழ்நிலைகளில் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
- குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிப்பதால் மகசூலை அதிகப்படுத்தலாம்.
- வணிக ரீதியாக Lihocin என்ற பெயரில் கிடைக்கப்பெறுகிறது.
Paclobutrazol:
- பயிரின் இலை மற்றும் நுனிப்பகுதி அதிகம் வளர்வதை தடை செய்து ஆரோக்கியமான பயிரை உருவாக்குகிறது. இதன் மூலம் இதன் உயரத்தை குறிப்பிட்ட அளவில் வைத்திருக்க உதவுகிறது.
- இதனால் பெரும்பான்மையான ஊட்டச்சத்து பூ மற்றும் காய் பிடிப்பதற்கு செல்வதால் மகசூல் அதிகரிக்க உறுதுணையாக உள்ளது.
- இதனால் காய்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் அதிகரிப்பதுடன் தரமும் உயர்கிறது.
- உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தத்தை தாங்கி வளரும் தன்மை பெறுகிறது.
- வணிகரீதியாக மா, நாவல், மாதுளை, பருத்தி போன்ற பல பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது.
- இதை ஒரு முறை பயன்படுத்தினால் மீண்டும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு பயிர்கள் தள்ளப்படலாம்.
- வணிக ரீதியாக Cultar என்ற பெயரில் விற்கப்படுகிறது.
Triacontanol:
- பயிர்களை நாற்றங்காலில் இருந்து பிடுங்கி வயலில் நடவு செய்யும்போது ஏற்படும் தொய்வை சரி செய்ய பயன்படுத்தலாம்.
- அதிக வெப்பநிலை வெள்ளம் மற்றும் உப்புத் தன்மையினால் ஏற்படும் அழுத்தத்தை விடுவிக்க பயன்படுத்தப்படுகிறது.
- பயிரின் உணவு உற்பத்தி திறனை அதிகரித்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
- அதிக அளவு பூக்கள் பூப்பதற்கும் பூக்கள் உதிர்வதை தடுப்பதற்கும் இதனை பயன்படுத்தலாம் எதனால் மகசூல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
- வணிக ரீதியாக Vipul, Rigal என்ற பெயரில் இதனை பெற இயலும்.
2,4-D:
- மிக மிக குறைந்த அளவு பயன்படுத்தும் போது வளர்ச்சி முக்கியமாக செயல்படுகிறது. உதாரணத்திற்கு வாழை எலுமிச்சை போன்ற பயிர்களில் குறைந்த அளவு பயன்படுத்தும் போது பூ உதிர்தல் குறைந்து மற்றும் காய் பிடித்தல் அதிகமாகிறது.
- மிதமான மற்றும் அதிக அளவு பயன்படுத்தும் பொழுது களைக் கொல்லியாக பயன்படுகிறது குறிப்பாக அகன்ற இலை களைகளை அப்புறப்படுத்த.
- இது பல்வேறு நிறுவனங்களில் கிடைக்கப்பெறுகிறது. உதாரணத்திற்கு Salix என்ற பெயரில் Atul நிறுவனத்தில் கிடைக்கப்பெறுகிறது.
0 Comments:
கருத்துரையிடுக