google-site-verification: googled5cb964f606e7b2f.html பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் உயிர் பூச்சிக்கொல்லி செயல்படும் விதம் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 10 ஜூலை, 2024

பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் உயிர் பூச்சிக்கொல்லி செயல்படும் விதம்

முன்னுரை:

  • பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் என்பது ஒருவகை பாக்டீரியா ஆகும். இது மண், தண்ணீர், இறந்த பயிர் மற்றும் பூச்சிகளின் பாகங்கள், பல்வேறு விலங்கினங்கள் மற்றும் சில நேரங்களில் மனிதர்களில் கூட இயற்கையாகவே இருக்க கூடியது. 
  • இந்த பாக்டீரியா வித்துக்களை(spores) அதன்மூலம் இனப்பெருக்கம் அடைகிறது. இதில் பல்வேறு வகையான தீமை செய்யக்கூடிய புரதங்கள் உள்ளன இதனை நச்சு புரதம் என அழைக்கலாம். இந்த புரதங்கள் அடங்கிய வித்து பகுதியை புழுக்கள் உண்ணுவதால் புழுக்கள் இறக்கும் அபாயம் உள்ளது எனவே தான் இதனை உயிர் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகிறோம். 
  • Bacillus thuringiensis (Bt.) பாக்டீரியா இயற்கையாகவே கிடைப்பதால் இதனை இயற்கை பூச்சிக்கொல்லி என்று அழைக்கிறோம்.  புழுக்களை கொள்ளும் திறன் உடைய இதன் பண்புகளைப் பிரித்து எடுத்து B.t ரக பயிர்களை உருவாக்கி புழு தாக்குதலுக்கு எதிராக செயல்பட வைக்கிறார்கள்.

Bt. செயல்படும் விதம்: 

  • பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் பாக்டீரியா தனது இனப் பெருக்கத்திற்காக உற்பத்தி செய்யும் வித்துக்களில், பல்வேறு வகை தீங்கு செய்யக்கூடிய புரதங்கள் நிறைந்திருக்கும்.
  • உதாரணத்திற்கு Cry, Cyt, Vip, Sip போன்ற நச்சு இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான புழுக்களுக்கு எதிராக செயல்படும் திறன் படைத்தது. இதில் Cry பல்வேறு வகையான புழுக்களுக்கு எதிராக செயல்படுவதால் இதை வணிகரீதியாக நாம் பயன்படுத்துகிறோம். புழுக்கள் இதனை உண்ணும் பொழுது இந்த புரதங்கள் அடங்கிய வித்துக்கள் புழுக்களின் குடல் பகுதியை சென்றடைகிறது. 
  • புழுக்களின் குடல் பகுதி 8 முதல் 10 இருக்கும் மேல் கார அமிலத்தன்மை உடையதால் தான் உண்ணக்கூடிய தீங்கு விளைவிக்கக் கூடிய புரதங்களை அதன் வயிற்று பகுதியில் protease எனப்படும் என்சைம் உதவியுடன் கரைக்கிறது. இதனால் புழுக்களின் குடல் பாகங்கள் சிதைந்து, பசி மற்றும் நோய் தொற்றால் அதிகபட்சமாக 5-7 நாட்களில் இறந்து விடுகிறது.
  • இளம் புழுக்கள் இதில் அதிக அளவு பாதிக்க கூடியது. எனவே பயிர் சாகுபடியில் இதனை பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் தெளித்து வர வேண்டும்.
  • பேசில்லஸ் பேரினத்தில் பல்வேறு வகையான சிற்றினங்கள் உள்ளது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பூச்சிகளை அழிக்கும் திறன் கொண்டிருக்கும் என்பதால் பயிர்களுக்கு ஏற்றவாறு இதனை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.

மனிதன்/விலங்குகளில் பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் செயல்படும் விதம்:

  • பாக்டீரியா வித்துக்களில் உள்ள நச்சு புரதங்கள் மனிதர்களையும் அல்லது விலங்குகளையும் பாதிப்பதில்லை.
  • ஏனெனில் நச்சு புரதம் மனிதர்கள் அல்லது விலங்குகளின் குடல்களை சென்றடையும் பொழுது நமது உடலில் இருக்கும் அமிலத்தன்மை என்றால் நச்சு புரதம் சிதைக்கப்பட்டு செயல் இழக்கிறது.
  • இது மட்டும் இன்றி நச்சு புரதங்களை தூண்டி செயல்பட வைக்கக்கூடிய நொதிகள் மனிதர்கள் அல்லது விலங்குகள் உடலில் இல்லை. எனவே இது மனிதர்களுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது.

இதன் இதர பயன்கள்: 

  • மரபணு மாற்ற பயிர்- Bt. பாக்டீரியாவால் உருவாக்கப்படும் நச்சு புரதத்தை உருவாக்கக்கூடிய மரபணு பிரித்து எடுக்கப்பட்ட அதிக அளவு புழு தாக்குதல் இருக்கும் வணிகப் பயிர்களுக்கு செலுத்தி புழு இல்லாதவாறு வடிவமைக்கப்படுகிறது உதாரணத்திற்கு பருத்தி... மேலை நாடுகளில் 10 மேற்பட்ட மரபணு மாற்ற பயிர் சாகுபடியில் உள்ளது.
  • வளர்ச்சி ஊக்கியாக செயல்படுதல்- பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் பாக்டீரியா மறைமுகமாக வேர் வளர்ச்சியை தூண்டுதல், மண்ணில் பயிர்களுக்கு கிடைக்கப்பெறாமல் இருக்கும் மணிச்சத்து & இரும்புச்சத்தை கிடைக்கச் செய்தல், பயிறு வகை பயிர்களில் வேர் முடிச்சுகளை அதிகப்படுத்துதல் என பல்வேறு பணிகளையும் செய்கிறது.

பயன்படுத்து கவனிக்கப்பட வேண்டியவை: 

  • காய், குருத்து, தளிர், இலை, தண்டு பயிர்களில் மறைந்திருந்து பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து வகையான புழுக்களுக்கு எதிராக இதை பயன்படுத்தலாம்.
  • Bt. உயிர் பூச்சிக்கொல்லி நேரடியாக புழுக்கள் மீது பட வேண்டிய அவசியமில்லை. 
  • மிதமான வெப்பநிலை குறிப்பாக 30 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக இருக்கும் தருணத்தில் பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். எனவே மாலை வேளையில் தெளிப்பது சால சிறந்தது. 
  • மனிதர்களுக்கு இது தீங்கு விளைவிக்காத என்றாலும் இதன் தயாரிப்பில் துணைப் பொருளாக பயன்படுத்தப்படும் பல்வேறு கன உலோகங்கள் மனிதர்களுக்கு தீங்கானது எனவே பயன்படுத்தும் போது கை உறை அணிவது நல்லது.
  • இதைத் தெளித்த மூன்று நாட்களுக்கு ரசாயன பூச்சிக்கொல்லிகளை தெளிக்க கூடாது. 
  • இந்த பூச்சிக்கொல்லி புழுக்களை சென்றடைந்து செயல்பட போதுமான கால அவகாசம் தேவைப்படுவதால் 5 முதல் 7 நாட்கள் வரை இதன் செயல்பாடுகளுக்கு காத்திருக்கலாம்.
  • தனிப்பட்ட முறையில் இதை பயன்படுத்தும் போது பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் வரை தெளிக்கலாம். இரண்டு தெளிப்புகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளி ஏழு நாட்கள் வரை இருக்கலாம்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts