செண்டு மல்லியில் நுனிக் கிள்ளுதலின் பயன்கள்
ஏன் செய்ய வேண்டும்:-
- துளிர் முனையில் அக்சின் எனப்படும் வளர்ச்சி ஊக்கியின் அளவு அதிகமாக இருப்பதால் செடிகள் போதுமான அளவு பக்க கிளைகள் விடமால் நேராக மேல் நோக்கி வளர்கிறது.
- பக்கவாட்டு மொட்டுகள் நுனி மொட்டை விட வளர்ச்சி ஊக்கினால் அதிக செயல்திறன் கொண்டவை.
- இருப்பினும் பக்கவாட்டு மொட்டுகளை விட, தளிர்முனைகள் அதிக அளவு ஆக்சின் கொண்டுள்ளதால் பக்கவாட்டு மொட்டுகளால் வளர முடியாமல் போகிறது.
- நுனியை கிள்ளுவதால் தளிர் முனையில் உள்ள ஆக்சின் நீக்கப்படுவதால் பக்கவாட்டு மொட்டுகளில் உள்ள ஆக்சின் செயல்பட்டு அதிக கிளைகளை வெளி தள்ளும்.
எப்போது எப்படி செய்ய வேண்டும்:-
- நடவு செய்த 30-40 நாட்கள் ஆன அல்லது 30 cm உயரம் உள்ள செடிகளின் நுனி குருத்து மற்றும் மொட்டுகளை கிள்ளி எடுத்தல் வேண்டும்.
- பின்பு GA3 150 ppm அல்லது NAA 150ppm தெளிக்க வேண்டும்.
பயன்கள் :-
- மேம்படுத்தப்பட்ட செல்பிரிவு, செல் அளவு மற்றும் ஒளிச்சேர்க்கை.
- அதிக எண்ணிக்கையிலான முதன்மை மற்றும் இரண்டாம் பக்க கிளைகள்.
- நல்ல தண்டு தடிமன்.
- அதிக எண்ணிக்கையிலான இலைகள் மற்றும் இலைப்பரப்பளவு.
- போதுமான செடியின் உயரம்.
- அதிக எண்ணிக்கையில் பூக்கள் மற்றும் பூவின் அளவு.
- 25-50% முதல் கூடுதல்மகசூல் கிடைக்கபெறும்.