பாக்கில் குருத்து / மொட்டு அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|பாக்கில் குருத்து/மொட்டு அழுகல் :
Phytopthora எனப்படும் பூஞ்சாணத்தால் ஏற்படும் மொட்டு அழுகல் நோய் நவம்பர் முதல் டிசம்பர் மற்றும் தொடர்ச்சியான மழைப்பொழிவு இருக்கும் தருணத்தில் காணப்படுகிறது.
அதிக மழைப்பொழிவு மற்றும் காற்றின் ஈரப்பதம் இந்நோய் தாக்குதலை ஊக்கப்படுத்துகிறது. இதனால் 50-100% வரை மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் செடிகளும் இறக்க நேரிடும்.
நோய் தாக்குதலின் அறிகுறிகள்:
- ஆரம்ப நிலையில் மரத்தின் வெளி/அடி இலைகள் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும்.
- நாளடைவில் இந்த இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்தில் மாறும்.
- வெளி இலைகளிலில் இருந்து மேல்நோக்கி அடுத்தடுத்த இலைகளுக்கும் இந்த நோய் தாக்குதல் பரவும்.
- பாதிக்கப்பட்ட இலைகளை பிடுங்கினால் எளிதில் கையில் வந்துவிடும்.
- தண்டிலிருந்து வெளிவரும் இடத்தில் இலைகளில் பழுப்பு நிற புண்கள் காணப்படும்.
- இலைகள் மற்றும் மொட்டுகள் அழுகுவதால் செடிகள் இறக்க நேரிடும்.
- தீவிரமாக பாதிக்கப்படும் மரங்களின் பூங்கொத்துகளும் பாதிக்கப்பட கூடும்.
கட்டுப்படுத்தும் முறைகள் :
- வயலை களைகள் மற்றும் குப்பைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
- நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி அப்புறப்படுத்தவும்.
- மணிச்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின்பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்.
- Trichoderma viride உயிரியல் நோய் எதிர்ப்பு காரணியை நோய் தாக்குதலுக்கு முன் பயன்படுத்துவதால் 65% வரை தாக்குதலை தவிர்க்கலாம்.
- உயிரியல் நோய் கட்டுப்பாட்டு காரணிகளான Trichoderma, Pseudomonas மற்றும் Bacillus தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் புதிய வேர் வளர்ச்சி மற்றும் குருத்துகளில் இருந்து புதிய இலைகள் காணலாம்.
- மருதாணி இலை சாறுகளை தெளிப்பதால் நோய் தாக்குதல் பரவுவதை தடுக்கலாம்.
- கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு பூஞ்சாண கொல்லியை பருவ மழைக்கு முன் அல்லது பின் தெளிக்கவும்.
- Dimethomorph - 1g /lit water
- Fosetyl Aluminium - 2.5g /lit water
- Metalaxyl - 2g /lit water
- கீழ்க்கண்ட கலவையில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் வேரில் ஊற்றவும்.
- Fibronil - 2.5ml+COC – 2.5g
- Chlorpyriphose - 3-5 ml +COC -2.5g
- Chlorpyriphose- 3-5 ml + Fosetyl Aluminium – 2.5g
- Fibronil -2.5 ml + Metalaxyl – 2.5g
மேலும் தகவலுக்கு கீழ் கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்....
0 Comments:
கருத்துரையிடுக