google-site-verification: googled5cb964f606e7b2f.html வெண்டையில் மஞ்சள் இலை/தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 4 ஜனவரி, 2024

வெண்டையில் மஞ்சள் இலை/தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் காய்கறிகளில் தக்காளி, கத்தரி, மிளகாய், சின்ன வெங்காயம் போன்ற பிரதான பயிர்களின் வரிசையில் முக்கியமான பயிராகும்.
  • வெண்டை இந்தியளவில் அதிகம் சாகுபடி செய்யப்படுவதுடன் நுகர்வோர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.பல்வேறு வகையான நோய்கள் வெண்டை பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை மதிப்படையை செய்தாலும் சில நோய்கள் மட்டுமே விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. 
  • அது போன்று ஒருவகை நோயான மஞ்சள் தேமல் நோயை பற்றி நாம் இன்று விரிவாக காண உள்ளோம். இந்த தேமல் நோயினை எதிர்கொள்ள தேவையான  முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றாமல் உள்ள வயல்களில் சுமார் 80 சதவீதம் கூட மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • இந்த வைரஸ் நோயானது வெயில் காலங்களில் அதிகம் காணப்பட்டாலும் சில வருடங்களாக அனைத்து பருவத்திலும் செடிகளை தாக்குவதுடன் வரன்முறை இல்லாமல் பயிர்களின் ஆரம்ப காலம் முதல் அறுவடை காலம் வரை இந்த நோய் பாதிப்பை நாம் காண இயலும்.சாறு உறிஞ்சும் பூச்சான வெள்ளை ஈக்கள் மூலமாக இந்த நோய் பரவுகிறது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் இலைகள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறமாக மாற்றமடையும்.
  • நுனி இலைகளின் நடு மற்றும் பக்க நரம்புகள் மஞ்சள் நிறமாக மாறுதல் அடையும்.
  • பின்பு நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள இலை பச்சையங்களும் மஞ்சள் நிறமாக மாறும்.
  • இலைகளில் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் திட்டுத்திட்டாக காணப்படுவதால் இதனை மொசைக் நோய்  என்பார்கள்.
  • இதனால் செடிகளின் உணவு உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் முழுமையாக மஞ்சள் நிறத்திலும் இலைகள் சுருண்டும் காணப்படும்.
  • புதிய தளிர், பூக்கள் மற்றும் காய் உற்பத்தி மிகக் குறைவாகவே காணப்படும் சில நேரங்களில் காய்கள் ஒழுங்கற்ற வடிவில் தோன்றும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • நாம் அனைவரும் அறிந்ததே வைரஸ் நோய்களை சரி செய்ய இயலாது ஆனால் வைரஸ் செடிகளை தாக்காமல்  அல்லது பரவாமல் பார்த்துக்கொள்ள இயலும்.
  • முடிந்தவரை வெயில் காலங்களில் வெண்டை சாகுபடியை தவிர்ப்பது நல்லது.
  • சாகுபடி செய்யும் பட்சத்தில் இந்நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட வீரிய ஒட்டு ரகங்களை வாங்கி பயன்படுத்தலாம்.
  • கோடை காலங்களில் விதைக்கும் போது அடி உரமாக வேப்பங்கொட்டை அல்லது வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
  • வழக்கத்துக்கு மாறாக சற்று அதிகமான பயிர் இடைவெளி விடுவதால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் போது வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தி நோய் பரவாமல் இருக்க இது உதவி புரியும்.
  • செடிகளின் ஆரம்ப நிலையிலிருந்து ஏக்கருக்கு 10 எண்கள் மஞ்சள் ஒட்டு பொறியை கண்டிப்பாக பொருத்த வேண்டும்.
  • தழைச்சத்து அதிகம் இடுவதை தவிர்த்து மற்ற இயற்கை உரங்கள்  மற்றும் நுண்ணூட்ட உரங்களை போதுமான அளவு  பயன்படுத்த வேண்டும். இது செடிகளுக்கு போதுமான அளவு எதிர்ப்பு தன்மையை கொடுக்கக்கூடியது.
  • வயலை சுற்றி சாமந்தி, சூரியகாந்தி,செவ்வந்தி போன்ற மஞ்சள் நிற பூக்கும் செடிகளை நடுவதால் வெள்ளை ஈக்களை கவருவதுடன் நன்மை செய்யும் பூச்சிகளையும் வயலில் அதிகப்படுத்துகிறது.
  • வயலை சுற்றி சாமந்தி, சூரியகாந்தி,chrysanthemm, போன்ற மஞ்சள் நிற பூக்கும் செடிகளை நடுவதால் வெள்ளை ஈக்களை கவருவதுடன் நன்மை செய்யும் பூச்சிகளையும் வயலில் அதிகப்படுத்துகிறது.
  • கோடை காலங்களில் கண்டிப்பாக நீர் பாய்ச்சுதலை முறைப்படுத்த வேண்டும். அதாவது எப்போதுமே மண்ணின் அடி ஈரம் இருக்குமாறு நீர் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் போதுமான வெப்பம் செடிகளை தாக்காமல் இருக்கும் இதனால் வெள்ளை ஈக்களின் தொல்லையும் குறையும்.
  • நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் கீழ்க்கண்ட இயற்கை முறை பூச்சி  விரட்டுகளில் ஏதேனும் இரண்டினை தேர்வு செய்து சுழற்சி முறையில் 10 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வர வேண்டும்.

    • வேப்ப எண்ணெய்- 3-5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
    • வேப்பங்கொட்டை விதை கரைசல்- 5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
    • 3G கரைசல்- 5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
    • Beauveria - 2.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
    • நன்கு புளித்த தயிரை 10 லிட்டர் தண்ணீர் 50 கிராம் கலந்து தெளிக்கலாம்

  • நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அப்புறப்படுத்தவும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளையே அப்புறப்படுத்துவது நல்லது

  • பயிர்கள் மிக நெருக்கமாக இருத்தல் மற்றும் அதிக களைகள் வயலில் இருப்பதால் வெள்ளை ஈக்கள் எளிதில் பெருக்கம் அடைந்து தாக்குதலை தீவிரப்படுத்தும் எனவே களைகளை அவ்வப்போது அகற்றுவது சிறந்தது.
  • கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள கீழே காணும் லிங்கை சொடுக்கவும்.


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts