பயிர்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|காய்கறிகளில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் :
சக்கரவள்ளிக் கிழங்கு/ வெள்ளி, வெள்ளை ஈ என்றழைக்கப்படும் இவை பெரும்பான்மையான காய்கறிகள், பழங்கள் மற்றும் பசுமை குடிலில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் மற்றும் பல்வேறு வேளாண்மை பயிர்களிலும் தாக்குதலை ஏற்படுத்துகிறது.
மிதமான வெப்பநிலை இதன் தாக்குதலுக்கு உகந்தது. பயிர்களை பொருத்து மகசூல் தாக்குதல் 20-60% வரை ஏற்படுத்துகிறது.
வாழ்க்கைச் சுழற்சி:
முட்டை - துளிர் மற்றும் இளம் இலைகளின் கீழ் புறத்தில் வெளிர் மஞ்சள் நிறத்தில் முட்டைகளை கொத்தாக (150 எண்கள்) இடுகின்றன. பின்னர் இவை பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது. இதன் வாழ்நாள் 7-10 நாட்கள்.
நிம்ப்கள் - இவைகளும் சாறை உறிஞ்சும்.
கூட்டுப்புழு - வெளிர் பழுப்பு நிறத்தில் செடிகளிலும் மண்ணிலும் காணப்படும்.
இளம்பூச்சிகள் - வெள்ளை நிறத்தில் காணப்படும். இதன் உடல்பரப்பில் மஞ்சள் முதல் வெள்ளை நிற தூள்கள் காணப்படும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- பூச்சிகள் இலைகளின் கீழ்ப்பகுதியில் சாற்றை உறிஞ்சுவதால் மிகவும் சிறிய மஞ்சள் நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
- நாளடைவில் இப்புள்ளிகள் விரிவடைந்து மஞ்சள் திட்டுகளாக காணப்படும்.
- இலைகள் உருக்குலைந்து தீவிரமாக தாக்கப்பட்ட செடிகள் முற்றிலும் மஞ்சள் நிறமாகி சற்று காய்ந்து உதிரும்.
- செடிகள் வளர்ச்சி குன்றியும், இலைகள் மேற்புறமாக சுருண்டும் காணப்படும்.
- இவை தேன்துளிகளை சுரப்பதால் இலைகளின் மேற்பரப்பு, தண்டு மற்றும் பழங்களின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சாணங்களை தோற்றுவிக்கும்.
- பல்வேறு வகையான பயிர்களில் வைரஸ் நோய்களை இது பரப்புகிறது. (உதாரணம் - கத்தரி, தக்காளி, மரவள்ளி, வாழை, வெண்டை, மிளகாய், பருத்தி மற்றும் இதர பயிர்கள்)
கட்டுப்படுத்தும் முறைகள்:
- பயிர் நடவு செய்யும் போது சரியான பருவத்தில் தேர்வு செய்ய வேண்டும்.
- அதிக அளவு உரமிடுவதை தவிர்க்கவும்.
- நன்கு இடைவெளி விட்டு நடுவதால் இதன் தாக்கம் குறையும். (காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி செடிகளில் ஊடுருவினால் தாக்குதல் குறையும்)
- Monocrotophos, Cypermethin, Quinalphos போன்ற பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதை தவிர்க்கவும். இந்த வகை மருந்துகளுக்கு வெள்ளை ஈக்கள் எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளது.
- களைகள் இன்றி பராமரித்தல், வயலை சுற்றி சூரியகாந்தி அல்லது பூச்செடிகளை நடலாம். (மஞ்சள்)
- வைரஸ் பாதிப்பில் செடிகள் மஞ்சள் நிறத்தில் மாறுதல், குறைந்த பூ மற்றும் காய்ப்புத் திறன், மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
- மஞ்சள் ஒட்டு பொறி ஏக்கருக்கு 20 எண்களை செடிகளின் மட்டத்திற்கு கட்டவும்.
- இயற்கை பூச்சி உண்ணிகளான குளவி மற்றும் வண்டுகளை வயல்களில் அதிகப்படுத்தவும்.
- களைச் செடிகளான துத்தி மற்றும் வெண்டை இனத்தை சார்ந்த மற்ற பயிர்களை அகற்றவும்.
- வேப்பங் கொட்டைச்சாறு 5%- ஐ 5 மி.லி. / லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம். அல்லது நித்திய கல்யாணி இலைச்சாறு அல்லது நொச்சி இலைச்சாறு 5% தெளிக்கலாம்.
- கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை சுழற்சி முறையில் தெளிக்கலாம்.
1. Afidopyropen – 2 ml/ lit
2. Diafenthiuron- 1g/ lit
3. Flonicamid – 2 ml/ lit
4. Imidacloprid + Spirotetramat – 1 ml/ lit.
5. Spiromesiefen –1 ml/lit.
6. Acetamaprid – 1 g/lit.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments:
கருத்துரையிடுக