google-site-verification: googled5cb964f606e7b2f.html மக்காச்சோளத்தில் குருத்து அழுகலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 6 ஜனவரி, 2024

மக்காச்சோளத்தில் குருத்து அழுகலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

மக்காசோளத்தில் பாக்டீரியா தண்டு அழுகல்:

 தமிழ்நாட்டில் மானாவரி மற்றும் நீர் பாய்ச்சல் முறையில் மக்காசோளம் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

 ஒரு சில இடங்களில் தட்ப வெப்பம் மற்றும் இதர காரணங்களினால் பாக்டீரியா தண்டு அழுகல் காணப்படுகிறது. கவனிப்பற்ற வயல்களில் 98% வரை மகசூல் இழப்பு ஏற்படும்.

நோய் தோன்றுவதற்கான காரணங்கள்:

  • வெப்பநிலை சராசரியாக 32-35*C நிலவுதல்
  • அதிக காற்றின் ஈரப்பதம் மற்றும் அடிக்கடி மழைப்பொழிவு
  • வெயில் நேரத்தில் தெளிப்பு நீர் பாசனம் மூலம் நீர்பாய்ச்சுதல்
  • செடிகளின் குருத்துகளில் உரமிடுதல்/ மருந்துகள்/ நீர் தேங்குதல்
  • ஏரி அல்லது ஆற்று நீரை பயன்படுத்துவதாலும் இந்நோய் வரலாம்.
  • ஒரே வயலில் சோளம், கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களை தொடர்ச்சியாக சாகுபடி செய்வதாலும் இந்நோய் வர வாய்ப்புள்ளது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • நுனி தண்டு மற்றும் இலை உறைகளில் வெளிர் பழுப்பு நிறமாற்றத்தை ஆரம்ப நிலையில் காணலாம்.
  • நாளடைவில் தண்டுகளின் நடுப்பகுதி மற்றும் அடுத்தடுத்த இலை உறைகளுக்கு பரவும்.
  • தீவிரமடைபோது குருத்துகள் மற்றும் இலைக்காம்பு/ உறை அழுகி காணலாம்.
  • அழுகிய பகுதியிலிருந்து துர்நாற்றம் வெளிவரும்.
  • தண்டின் நுனிப்பகுதியை இழுத்தால் எளிதில் கையில் வந்துவிடும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளின் தண்டுகளை பிளந்து பார்த்தால் சற்று நிறமாற்றம் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • தொடர்ந்து பயிர்களை கண்காணித்தல் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகத்தை தேர்வு செய்து பயிரிடுதல்.
  • தெளிப்பு நீர் அல்லது வெயில் நேரங்களில் நீர்ப் பாய்ச்சுதலை தவிர்த்தல்.
  • அதிக தழைச்சத்து உரத்தை தவிர்த்து நுண்ணூட்டச்சத்தை அதிகப்படுத்துதல்
  • மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரத்தினை அதிகமாக இடுதல். (தலா 80-100கி / 1ஏக்கர்)
  • இந்த வகை பூஞ்சாணம் மண்ணில் அதிக நாட்கள் இருப்பதால் Bacilus மற்றும் Pseudomonas உயிர் பூஞ்சாணம் கொண்டு ஊட்டமேற்றி தொழு உரமிட வேண்டும்.
  • பிளிச்சிங் பவுடர் மற்றும் கால்சியம் ஹைப்போ குளோரைடு ஏக்கருக்கு 10 கிலோ மண்ணில் இட வேண்டும்.
  • காப்பர் ஆக்ஸி குளோரைடு - 2.5-3 கி/ 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  • அல்லது Streptomycin - 0.2 கி/ 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  • அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு - 1கி/ 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts