google-site-verification: googled5cb964f606e7b2f.html நிலக்கடலையில் விதைத்தேர்வில் கவனிக்கப்பட வேண்டியவை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 3 ஜனவரி, 2024

நிலக்கடலையில் விதைத்தேர்வில் கவனிக்கப்பட வேண்டியவை

கடலையில் விதைத்தேர்வு :

  • நடவு செய்யப்படும் பருவம், தங்களது பகுதியில் நிலவும் மண் தன்மை, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற அதிக மகசூல் தரக்கூடிய உள்ளூர் அல்லது உயர் இரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் இரகம் நோய் மற்றும் பூச்சித்தாக்குதலை தாங்கி வளரக்கூடிய அல்லது எதிர்ப்புத்திறன் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
  • தேர்வு செய்த இரகங்களை வேளாண்மை துறை அல்லது அறிவியல் ஆராய்ச்சி நிலையம் அல்லது வேளாண் கல்லூரி அல்லது பல்கலைக் கழங்களிலிருந்து பெறப்பட வேண்டும். 
  • ஏனெனில் இந்த விதைகள் சான்றிதழ் பெறப்பட்டதால் இரகத்தின் உறுதி மற்றும் முளைப்புத்திறனில் நம்பகத்தன்மை இருக்கும்.
  • தேர்வு செய்யப்படும் இரகம் அப்பகுதியில் பெரும்பான்மையான விவசாயிகளால் சாகுபடி செய்யக்கூடிய ரகமாக  இருக்கும் பட்சத்தில் எளிதில் விற்பனை செய்திடவும் மேலும் அதில் ஏற்படும் சந்தேகங்களை மற்ற விவசாயிகளிடம் கலந்து யோசிக்கவும் இயலும்.
  • ஒருவேளை தேர்வு செய்யப்பட்ட இரகத்தின் விதைகள் விவசாயிகளிடமிருந்து பெறப்படுகிறது எனில், அறுவடை செய்து 45-150 நாட்கள் மட்டுமே ஆனதா என உறுதி செய்ய வேண்டும்.
  • 45 நாட்களுக்கு குறைவான விதை நிலக்கடலையில் ஒருமித்த முளைப்பு மற்றும் அதிகப்படியான முளைப்பு திறனை எதிர்பார்க்க இயலாது.
  • அதே போன்று 150 நாட்களுக்கு மேற்பட்ட விதை நிலக்கடலையை தேர்வு செய்யும்போது முளைப்பு திறன் மிகவும் குறைவாக காணப்படும்.
  • பெறப்பட்ட விதைக்கடலை முளைப்பு திறனுக்கு உட்படுத்த வேண்டும். இவை குறைந்தது 90% முளைப்புத் திறன் இருக்க வேண்டும். இல்லையெனில் விதையின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.
  • 200 கிலோ விதைக்கடலையை உடைத்தால் அதிலிருந்து நல்ல விதை பருப்பு சுமார் 50-80 கிலோ வரை மட்டுமே பெற முடியும்.
  • பிரித்தெடுக்கப்பட்ட விதைக்கடலைகள் 7.2 மி.மி விட்டமுள்ள சல்லடைக் கொண்டு சலித்து நல்ல பருமனான நோய் தாக்காத பெரிய விதைகளையே விதைக்க பயன்படுத்த வேண்டும்.
  • இயந்திரத்தை பயன்படுத்தி நிலக்கடலையை உடைக்கும் போது எப்போது உடைக்கப்பட்டது என்ற விபரம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்
  • பெறப்பட்ட விதை கடலை நடவுக்கு 3-4 நாட்களுக்கு முன்னதாக உடைத்து விதைக்கடலையை பிரித்தெடுக்கப்பட வேண்டும்.
  • இதனை சல்லடை கொண்டு சலிக்கும்போது ஒரு கிலோ விதைபருப்பிலிருந்து 80-100 கிராம் விதைகள் நீக்கப்படும்.
  • உடைந்துபோன, சுருங்கிய, வற்றிபோன மற்றும் நோய் தாக்கிய பருப்புகளை நீக்கி விடவேண்டும்.
  • நாம் தேர்வு செய்யும் ரகத்தினை பொறுத்து அதற்கு பயன்படுத்தும் களைக்கொல்லிகளை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து ரகத்திற்கும் ஒரே மாதிரியான களைக்கொல்லியை அதை அதை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts