google-site-verification: googled5cb964f606e7b2f.html நிலக்கடலையில் டிக்கா இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 2 ஜனவரி, 2024

நிலக்கடலையில் டிக்கா இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நிலக்கடலையில் 'டிக்கா" இலைப்புள்ளி நோய்:

  • இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 70 முதல் 80 இலட்சம் ஹெக்கடர் நிலப்பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • பல்வேறு நோய்கள், பூச்சிகள் மற்றும் வைரஸ் தாக்குதல் காணப்பட்டாலும் குறிப்பிட்ட சில நோய் மற்றும் பூச்சிகள் தீவிர் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • 'டிக்கா" இலைப்புள்ளி நோயினால் 50% மேல் மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

நோய் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலை:

  • சாதகமான /தொடர்சியான காற்றின் ஈரப்பதம் நிலவுதல்
  • குறைந்த வெப்பநிலை நிலவும் போது (20 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக)
  • அதிகப்படியான தழைச்சத்து மற்றும் மணிச்சத்து இடுவதாலும்
  • மெக்னீசியம் சத்து குறைபாடு

நோயின் அறிகுறிகள்:

ஆரம்பகால இலைப்புள்ளி:

  • சிறிய கருப்பு நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படுவதால் இலையின் அடிப்புறத்தில் வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் காணப்டும்.
  • கருப்பு நிற புள்ளிகள் மஞ்சள் நிறத்தால் சூழப்பட்டிருக்கும்.
  • இதன் அளவு சுமார் 1-10mm


தாமதமான இலைப்புள்ளி:

  • சிறிய கருமை நிற புள்ளிகள் அதிகமான எண்ணிக்கையில் காணப்படும்.
  • இதன் அளவு 3-8mm
  • இலைப்புள்ளி நோயானது விதைப்பு மேற்கொண்ட 30-45 நாட்களில் அதிகமாக தென்படும்.
  • இலைப்புள்ளிகளினால் உணவு உற்பத்திக்கு தேவையான இலைப் பரப்பளவு குறைந்து காணப்படும்.
  • செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • நாளடைவில் இலை உதிர்தல் ஏற்படும்.
  • புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பெரிய காயங்கள் போன்று காணப்படும்.
  • இலைப்புள்ளிகள் தண்டு, விழுது மற்றும் காய்களிலும் காணப்படும்.

கட்டுபடுத்தும் முறைகள்:

  • கோடைகாலங்களில் ஆழமான உழுது செய்வதால் மண்ணில் புதைந்து காணப்படும். பூஞ்சாணங்களை அழிக்கலாம்.
  • அடி உரத்துடன் (மக்கிய தொழு உரம்) ட்ரைகோடெர்மா மற்றும் வெர்டிசிலியம் தலா 2-5 கிலோ கலந்து ஊட்டமேற்றி இடுவதால் பெரும்பாலான நோய்களை கட்டுக்குள் வைக்கலாம்.
  • தொடர்ச்சியாக ஒரே நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்வதை தவிர்க்கவும். எனெனில் இப்பூஞ்சானம் சுமார் 3 வருடங்கள் வரை நிலத்தில் உறக்க நிலையில் காணப்படும்.
  • எதிர்ப்புதிறன் கொண்ட இரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
  • Carbendazim+ Mancozeb அல்லது வெர்டிசிலியம் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப்பு மேற்கொள்ளலாம்.
  • ஊடுபயிராக உளுந்துஃ தட்டைப்பயிறு பயிரிடுவதால் இந்நோய் தாக்குதலை குறைக்கலாம்.
  • பருவத்தில் நடவு மேற்கொள்வதால் நோய் தாக்குதலின் தீவிரத்தை மட்டுபடுத்தலாம்.
  • போதுமான பயிர் இடைவெளி விடுவதால் செடிகளுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்கப்பெற்று இப்பூஞ்சான தாக்குதல் மற்றம் பரவுதலை கட்டுபடுத்தலாம்.
  • சரியான முறையில் நீர்ப்பாய்ச்சல் அதாவது காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் விட வேண்டும். 
  • களைகள் இன்றி பராமரித்தல் அவசியம்.
  • முந்தைய பயிர்களின் எச்சங்கள்/ குப்பைகளை உழவு செய்வதற்கு முன் கண்டிப்பாக அகற்ற வேண்டும்
  • காலை நேரங்களில் வயலில் நடப்பதை அல்லது உரமிடுதல் போன்ற பணிகளை தவிர்க்க வேண்டுமு; ஏனெனில் இது பூஞ்சாணங்களின் பரவுதலுக்கு உதவி புரியம்.
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போத வேப்ப எண்ணெய் (அ) வேப்ப இலைக் கரைசல் தெளிக்கலாம் (அல்லது) டிரைகோடெர்மா மற்றும் வெர்டிசியம் 10 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும்.
  • https://agritech.tnau.ac.in/org_farm/orgfarm_prac_agri_groundnut_diseases.html
  • கீழ்கண்ட பூஞ்சான கொல்லிகளில் ஏதேனும் இரண்டை சுழற்சி முறையில் தெளிக்கவும்.

  • Carbendazim+Mancozeb - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Mancozeb - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Metiram+Pyraclostrobin - 50 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Tebuconazole+Trifloxystrobin - 10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Tebuconazole - 25 மில்லி கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Hexaconazole - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Chlorothalonil - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு

மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts