நிலக்கடலை விதை நேர்த்தியில் கவனிக்கப்பட வேண்டியவை
ஜனவரி 05, 2024
In மற்றவைகள் |
|
கடலையில் விதை நேர்த்தி:
- புதிதாக சாகுபடிக்கு கொண்டுவரப்பட்ட நிலம்/ குறைந்த மண் வளம்/ தொடர்ச்சியாக பயிரிடப்படும் வயல்களில் ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் என்பதால் விதைப்புக்கு 20-30 நிமிடங்களுக்கு முன்னதாக 1 லிட்டர் அரிசி கஞ்சியில் 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் சூடோமோனஸ், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 200 கிராம் டிரைக்கோடெர்மா கலந்து விதை கடலையில் கலந்து சற்று நிழலில் உலர வைத்து விதைப்பதால் தழைச்சத்து நிலை நிறுத்துதல், போதுமான மணிச்சத்தை செடிகளுக்கு கிடைக்கப்பெறுதல் மற்றும் பல்வேறு நோய் தாக்குதலை கட்டுப்டுத்துகிறது.
- மண் மூலமாகவும், விதை மூலமாகவும் பரவும் நோய் தாக்குதல் அதிகம் உள்ள நிலத்தில் 200 கிராம் கார்பென்டாசிம் + மான்கோசெப் மருந்தினை ஒரு ஏக்கருக்கான விதையுடன் நன்கு கலந்து சற்று நிழலில் உலர வைத்து நடவு செய்வதால் கடலையில் தோன்றும் வேர் அழுகல், கழுத்து அழுகல், இலைப்புள்ளி நோய் மற்றும் பல்வேறு நோய்த் தாக்குதலை மட்டுப்படுத்தலாம்.
- அல்லது டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் டிரைக்கோடெர்மா ஹார்சியானம் தலா 5 கிராம்ஃ ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் நேர்த்தி செய்து விதைக்கலாம்.
- வேர் கரையான், சாறு உறுஞ்சி பூச்சிகள் மற்றும் வெள்ளை/ சானி புழு தாக்குதல் காணப்படும் வயல்களுக்கு விதைகளை இமிடாக்ளோபிரிட் 2 மில்லி மற்றும் குளோர்பைரிபாஸ் 5 மி.லி. என்ற அளவில் ஒரு கிலோ விதை பருப்புகளுக்கு நேர்த்தி செய்து சிறிது நேரம் கழித்து விதைக்கலாம்.
- ஒரு சில கடலை இரகங்கள் அறுவடை செய்து 150 நாட்கள் வரை உறக்கத்தில் இருக்கும் தன்மை பெற்றவை. அது போன்ற இரகங்களுக்கு 5 மிலி. Ethrel-ஐ ஒரு லிட்டர் தண்ணீரிலி; கலந்து விதைகள் மீது தெளித்து சிறிது நேரம் கழித்து விதைக்கவும்.
- அல்லது விதை ப்ரைமிங் செய்யலாம். இம்முறையில் ஈரமான மணலில் தேவையான விதைக்கடலையை 24 மணி நேரம் ஊற வைத்து நடுவதால் நல்ல முளைப்பு திறன் முதல் ஒருமித்த வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிப்பது முதலிய நன்மைகளை பெறலாம்.
- மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD
0 Comments:
கருத்துரையிடுக