google-site-verification: googled5cb964f606e7b2f.html பிப்ரவரி 2024 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 28 பிப்ரவரி, 2024

பயிர்களில் கரையான் தாக்குதலின் அறிகுறிகள்

தானிய வகை பயிர்கள்:
மக்காச்சோளம்:


  • தரை மட்டத்திலிருந்து 10 முதல் 15 சென்டிமீட்டர் வரை தண்டுப் பகுதியில் மண்ணினால் தாள் போன்று சூழ்ந்திருக்கும். 
  • மண் பகுதியை அகற்றி பார்க்கும் போது தண்டுப் பகுதியில் கரையான்கள் சுரண்டி தின்று இருக்கும்.
  • இதில் மண் துகள்களை காண இயலும்.
  • இந்த வகை செடிகள் அதிக காற்று வீசும்போது எளிதில் சாய்ந்து விடும்.
  • மணிகள் முதிர்ச்சி அடையும் தருணத்தில் ஏற்படும் தாக்குதலால் மகசூல் இழப்பீடு ஏற்படுவது உடன் தரம் குறைகிறது.
  • பயிர்களின் ஆரம்ப நிலையில் ஏற்படும் தாக்குதலால் 100 சதவீதம் வரை இழப்பீடு ஏற்படும்.
  • முதிர்ச்சி அடைந்த செடிகளை பாதிக்கும் போது சுமார் 15 முதல் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது என ஆய்வு அறிக்கை கூறுகிறது.
  • மக்காச்சோள பயிரை  பொறுத்தவரையில் பருவ பருவ மழையின் ஆரம்ப நிலையில் தாக்குதல்கள் ஆரம்பித்து பருவமழை குறைய தொடங்கியது உடன் கரையான் தாக்குதல் குறையும்.

நெல்:

  • பொதுவாக கரையான்கள் நெல் வயல்கள் அதிகம் பாதிப்பதில்லை. நீர் பற்றாக்குறை உள்ள வயல்களின் வரப்புகளுக்கு அருகில் அல்லது  மண்ணுக்கு அடியில் கரையான் புற்றுகள் காணப்படும்.
  • நிலத்தில் இறந்த பயிர் எட்சங்கள் காணப்பட்டது எனில் அதை உண்டு வாழும். போதுமான தீவன வசதி இல்லாத போது வறட்சியாக காணப்படும் நிலத்தில் உள்ள நெற் பயிர்களின் கழுத்துப் பகுதியை சுரண்டி உண்ணும்.

இதர தானிய பயிர்கள்:

  • இதர தானிய பயிர்களான சோளம், கம்பு மற்றும் இதர பயிர்களில் கரையான்கள் அதன் கழுத்துப் பகுதி மற்றும் வேர் பகுதியை தாக்குவதால் செடிகள் வாடி கீழே விழுந்து இறந்து விடுகிறது.

நிலக்கடலை:

  • தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மணல் பாங்கான பகுதியில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலையில் சுமார் 10 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு கரையான்களால் ஏற்படுகிறது.
  • இதன் வேர் மட்டும் தண்டு பகுதியில் சுரண்டி ஒழுங்கற்ற வடிவில் சுரங்கங்களை ஏற்படுத்துகிறது.
  • இதனால் விழுதுகளின் எண்ணிக்கை குறைந்து காய்ப்பு திறன் மிகவும் குறையும். அது மட்டும் அன்றி இதனால் ஏற்படும் பாதிப்பு இதர பூஞ்சான வகைகளை எளிதில் ஈர்க்கக் கூடியதாக திகழ்கிறது.

ஆமணக்கு:

  • ஆமணக்கு பயிரை ஆரம்ப நிலையில் இருந்து இறுதி நிலை வரை கூட கரையான்கள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேர் மட்டும் தண்டுப் பகுதியை சுரண்டி உண்பதால் இலைகள் மஞ்சள் ஆகுதல், செடிகள் வாடுதல் மற்றும் இலை உதிர்தல் காணப்படும்.
  • தண்டுகளை தரை மட்டத்திலிருந்து சுமார் 90 சென்டி மீட்டர் வரை தாக்கி உண்ண உடையது. இதனால் சராசரியாக 20 முதல் 60% மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

கரும்பு:

  • கரும்பின் ஆரம்ப நிலை கரையான் தாக்குதல்களுக்கு மிகவும் உகந்தது. பருவ மழைக்கு முன் நாம் நடவு செய்யும் கரும்பு கரணையின் இரு பக்கமும் உள்ள வெட்டுப் பகுதியை துளைத்து உண்ணும். துவாரம் இடப்பட்ட பகுதியில் மண்கள் நிறைந்து காணப்படும்.
  • இதனால் வளர்ந்து வரும் இளம் தளிர் மற்றும் வளர இருக்கும் கண்கள் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகி வளர்ச்சி பாதிக்கும்.
  • அதுமட்டுமின்றி வேர் பகுதியையும் சேர்த்து உண்ணுவதால் சில நேரங்களில் செடிகள் இறந்துவிடும்.
  • வளரும் பருவத்தில் உள்ள விதை கரணைகள் 25% வரை பாதிப்பு அடைகிறது.
  • வளர்ச்சி அடைந்த செடிகளில் பின் நாளில் ஏற்படும் கரையான் பாதிப்புகளால் 20% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

பருத்தி:


  • மிகவும் உலர்ந்த மண்ணில் கரையான் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
  • பொதுவாக இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் சாகுபடி செய்யப்படும் பருத்தியில் தாக்குதல்கள் காணப்படுகிறது.
  • கரையான் தாக்குதலால் 25% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
  • விதைகள் முளைத்து வரும் தருணத்தில் கரையான் தாக்குதலால் தரை மட்டத்தில் செடிகளை கத்தரித்து விடுகிறது.
  • வளர்ந்த செடிகளின் வேர் மற்றும் தண்டு பகுதி துளைத்து உண்பதால் இலைகள் மஞ்சளாகி உதிர்தல் அல்லது செடிகள் வாடி இறந்து விடுகிறது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

பயிர்களை தாக்கும் கரையான்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

முன்னுரை:

பொதுவாக இரண்டு வகையான கரையான்கள் உள்ளது ஒன்று பயிரை உண்ண கூடியது மற்றொன்று மரத்தின் தண்டுப் பகுதி அதாவது செல்லுலோஸ் நிறைந்த பகுதியை உண்ணும்.
பயிர் சாகுபடியை பாதிக்கும் கரையான்கள் வயலில் சுமார் 5 அடி ஆழம் வரை புற்றுக்களை அமைத்து வாழும் திறன் படைத்தது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

கோடை உழவு:

  • கோடைகாலத்தில் நிலத்தை ஆழமாக உழவு செய்வதால் நிலத்திற்கு கீழே காணப்படும் கரையான் புற்றுகள் அல்லது சுரங்கங்கள் அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தி தாக்குதலை குறைக்கலாம். இது மட்டும் அல்லாமல் கரையான்களை உண்ணக்கூடிய பறவைகள் அல்லது விலங்கினங்கள் இதனை உண்பதால் வெகுவாக இதன் எண்ணிக்கை நிலத்தில் குறையும்.

நிலத்தை சுத்தமாக பராமரித்தல்:

  • உழவு செய்வதற்கு முன்னதாக முந்தைய பயிர்களின் எச்சங்கள் அல்லது வேறு ஏதேனும் வகையான குப்பைகள் வயலில் இல்லாதவாறு நிலத்தை சுத்தம் செய்து பின்பு உழவு செய்ய வேண்டும். ஏனெனில்  குப்பைகள் கரையான்களின் பெருக்கத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.

உரம் பயன்பாடு:

  • நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் பயன்படுத்த வேண்டும். சரிவர மக்காத தொழு உரத்தில் காணப்படும் செல்லுலோஸ் மற்றும் அதன் ஈரப்பதம் கரையான்களின் இனப்பெருக்கத்திற்கு  உதவி புரியும்.

பயிர் சுழற்சி:

  • பயிர் சுழற்சி முறையை பின்பற்றுவதால் நிலத்தில் உள்ள கரையான்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கலாம்.

நீர் பாய்ச்சுதல்:

  • தொடர்ச்சியாக நீர் பாய்ச்சி நிலத்தின்  ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதால் நாளடைவில் கரையான்களின் எண்ணிக்கை குறையும். 

  • நீர் தேவையால் ஏற்படும் அழுத்தத்தினால் செடிகளில் கரையான்களின் தாக்குதல் அதிகமாக காணப்படும். உதாரணத்திற்கு சொட்டுநீர் பாசனத்தில் நீர் பாய்ச்சும் செடிகளில் அதிக கரையான் தாக்குதல்கள் காணப்படுகிறது வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்சும் செடிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது.
  • நிலத்தில் அதிக அளவு நீர் பாய்ச்சி நிலத்தில் காணப்படும் கரையான்களை மூழ்கடித்து இதனை கட்டுப்படுத்தலாம் இதன் மூலம் சுமார் 80 சதவீதம் வரை கட்டுப்படுத்தலாம் என ஆய்வுகள் சொல்கிறது.

களை மேலாண்மை:

  • வயல்களில் அதிகமாக களைகள் தென்பட்டால் நீர், ஊட்டச்சத்து மற்றும் வெப்ப நிலை குறைபாட்டால் பயிர்கள் எளிதில் கரையான் தாக்குதல்களுக்கு உட்படுகிறது.

ஊட்டச்சத்து மேலாண்மை:

  • பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரியான விகிதத்தில் அளிப்பதால் கரையான் தாக்குதல் குறையும்.

உயிர் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல்:

  • Beauveria bassiana மற்றும் Metarhizium anisopliae ஆகிய இரண்டு உயிர் பூஞ்சான கொல்லிகள் கரையான்களுக்கு எதிராக செயல்படும் தன்மை வாய்ந்தது. பூச்சி தாக்குதலை பொறுத்து ஏக்கருக்கு மூன்று முதல் ஐந்து லிட்டர் என்ற வீதத்தில் நீரில் விடலாம். இதைத்தவிர பல்வேறு வகையான நூற்புழுக்களும் 70-80 சதவீதம் வரை கரையான்களை கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது.
  • Bacillus sp மற்றும் Pseudomonas sp வெவ்வேறு பயிர்களில் வெவ்வேறு வகையான கரையான்களை கட்டுப்படுத்து.

இதர வழிமுறைகள்:

  • ஆமணக்கு அல்லது பிரண்டை செடியை வயலை சுற்றி வளர்ப்பதால் அதிலிருந்து வெளியிடப்படும் ஒரு வகை திரவத்தால் கரையான்கள் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • பாசன அல்லது மானாவாரி முறையில் சாகுபடி செய்யப்படும் நெல் வயல்களுக்கு அதிக அளவு வேப்பம் இலைகளை இட்டு பின்னர் சேர் உழவு ஓட்டுவதால் கரையான் தாக்குதல் வெகுவாக குறைக்கலாம்.
  • மாட்டு கோமியம், புகையிலை கரைசல், இருக்கு இலை கரைசல், ஐந்து சதவீதம் உப்பு கரைசல் போன்றவைகள் கரையான் இனப்பெருக்கத்திற்கு எதிராக செயல்பட்டு தாக்குதலை கட்டுப்படுத்துகிறது.

  • சுடு தண்ணீரில் உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றை கலந்து கரையான் காணப்படும் இடங்களில் நன்றாக சுத்தம் செய்து ஆழமாக ஊத்த வேண்டும்.
  • ஏக்கருக்கு 5 கிலோ சுண்ணாம்பு மற்றும் 5 கிலோ உப்பு இடுவதால் கரையான்களை சுமார் 65 சதவீதம் வரை கட்டுப்படுத்தலாம்.
  • மாட்டு தொழு உரத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற சாம்பலை அதிக அளவில் அடி உரமாக இடுவதால் கரையான்களை கட்டுப்படுத்தலாம்.
  • மர வகை பயிர்களுக்கு நிலத்திலிருந்து சுமார் 60 சென்டிமீட்டர் வரை டீசல் எண்ணெயை பயன்படுத்தி பெயிண்ட் அடிப்பது போன்று நன்றாக பூசி விட வேண்டும். இதனால் கரையான்கள் செடிகளை நெருங்காமல் இருக்கும்.
  • மரம் அல்லது செடிகளின் துளைகளில் காணப்படும் கரையான்களை கட்டுப்படுத்த தார் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய இரண்டையும் 2:1  என்ற விகிதத்தில் தயார் செய்து துளைகளை அடைக்க வேண்டும்.
  • கரையான் புற்றுகளில் குப்பைகளை வைத்து புகை மூட்டுவதால் பெரும்பான்மை வகை கரையான்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

விதை நேர்த்தி:

  • கரையான்கள் அதிகம் காணப்படும் வயல்களில் சாகுபடி செய்வதற்கு முன்னதாக விதைகளை Chlorpyriphos அல்லது imidacloprid அல்லது Thiamethoxam கொண்டு விதை நேர்த்தி செய்வதால் செடிகள் தாங்கி வளரும் தன்மை பெறுகிறது.

ரசாயன பூச்சிக்கொல்லி பயன்படுத்துதல்:

  • Chlorpyriphos
  • Thiamethoxam
  • Imidacloprid
  • Acephate+ Imidacloprid
  • Clothianidin

போன்ற மருந்துகள் கரையான்களுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


சனி, 24 பிப்ரவரி, 2024

பயிர்களில் மணிச்சத்து குறைபாடு மற்றும் அதன் மேலாண்மை

முன்னுரை:

  • பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் மொத்த ஊட்டச் சத்துக்களில் மிகவும் முக்கியமானதாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து பார்க்கப்படுகிறது ஏனென்றால் மற்ற ஊட்டச்சத்துக்களை விட இவை செடிகளுக்கு சற்று அதிகமாக தேவைப்படுகிறது எனவே தான் இவற்றை முதன்மை ஊட்டச்சத்து என்று அழைப்பார்கள்.
  • ஆங்கிலத்தில் பாஸ்பரஸ் என்று அழைக்கப்படும் மணிச்சத்து உரத்தினை பற்றி சற்று விரிவாக காண்போம்.

மணிச்சத்தின் பயன்கள்:

  • பயிர்கள் தனக்குத் தேவையான உணவை தானே தயாரித்துக் கொள்ளும் ஒளிச்சேர்க்கை நிகழ்வுக்கு மணிச்சத்து இன்றியமையாதது.
  • நல்ல வேர் வளர்ச்சி காணப்படும்
  • செல்லின் ஒரு அங்கமாக திகழ்வததுடன் செல் பெருக்கத்திற்கு உதவுகிறது.
  • செடிகளுக்கு தேவையான ஆற்றலை தருவதுடன் ஆற்றலை மற்ற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது.
  • சில பயிர்களில் வளிமண்டல தழைச்சத்தை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்துகிறது.
  • பயிர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, பூ பிடித்தல், பயிர்கள் ஒரே உயரத்தில் வளருதல், எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல் மற்றும் மகசூலின் தரத்தை நிர்ணயத்தில் என இதன் பயன்கள் எண்ணற்றது.

குறைபாட்டை எவ்வாறு கண்டறிவது:

  • குன்றிய பயிர் வளர்ச்சி காணப்படும்
  • இலைகளில் திட்டு திட்டாக வெளிர் சிகப்பு முதல் ஊதா நிற திட்டுக்கள் காணப்படும்.
  • விதை உற்பத்தி மற்றும் அதன் திறன் பாதிக்கப்படும்.

ஏன் மணிச்சத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்...

  • பொதுவாக இந்தியாவில் உள்ள பல்வேறு வகையான மண்ணில் காணப்படும் மணிச்சத்தின் அளவு பயிர்களுக்கு போதுமானதாக தான் உள்ளது. ஆனால் அவைகள் பயிர்கள் எடுத்துக் கொள்ளாத அளவிற்கு மண்ணில் மாற்றம் அடைந்துள்ளது. 
  • மேலும் நாம் செயற்கை உரம் மூலம் இடும் மணிச்சத்தில் 10-30 சதவீதம் மட்டுமே செடிகள் எடுத்துக் கொள்கிறது மற்ற உரங்கள் மண்ணில் பயன்படாத வடிவில் மாற்றப்படுகிறது.
  • எனவே மண்ணில் புதைந்து கிடக்கும் மணிச்சத்து மற்றும் நாம் இடும் மணி சத்தையும் பயிர்களுக்கு சரியான தருணத்தில் சரியான முறையில் இடுவதன் மூலம் உர பயன்பாட்டை குறைத்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.

ஏன் மணிச்சத்து செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை...

  • மண்ணில் காணப்படும் கரிம பொருட்களின் அளவு, கார அமிலத்தன்மை, மண் ஈரப்பதம், வெப்பம் மற்றும் காற்றோட்டம் முதலியவற்றை பொறுத்து செடிகளுக்கு கிடைக்கப்பெறும் மணி சத்தின் அளவு மாறுபடுகிறது.
  • மண்ணின் கார அமிலத்தன்மை 6.5க்கு கீழ் இருப்பின் ராக் பாஸ்பேட் உரத்தினை இடுவது மண்ணிற்கும் செடிகளுக்கும் உகந்தது. ஏனென்றால் மண்ணின் அமிலத்தன்மை ராக் பாஸ்பேட்டை போதுமான அளவு கரைத்து செடிகளுக்கு கொடுக்கிறது.
  • மண்ணின் கார அமிலத்தன்மை 6.5-7.5 வரை உள்ள வயல்களுக்கு டி ஏ பி பயன்படுத்தலாம்.
  • கார அமிலத்தன்மை 7.5க்கு மேல் அதாவது உவர்/களர் நிலங்களுக்கு சூப்பர் பாஸ்பேட் இடுவது உகந்தது.
  • வேறு என்ன உரங்கள் பயன்படுத்தலாம் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இன்று மாலை காண்போம்...
  • இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன் பெற அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


வியாழன், 22 பிப்ரவரி, 2024

வேம்/VAM உயிர் உரம் பற்றிய விரிவான தகவல்


வேம் (VAM) உயிர் உரம் என்றால் என்ன...
முன்னுரை:

  • முதலில் வேம் ஒரு உரம் கிடையாது என்பது நாம் அனைவரும் தெரிந்தது தான். ஏனெனில் இது தனிப்பட்ட முறையில் ஊட்டச்சத்துக்களை செடிகளுக்கு வழங்குவதில்லை. 
  • என்னைப் பொறுத்த வரையில் இதனை வேம் என நாம் அழைப்பது தவறானதாகும். மேலும் இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்த தேவையில்லை.எனவே இதைப் பற்றி விரிவாக எடுத்துரைக்க கீழ்கண்ட கட்டுரை பதிவிடப்படுகிறது.

வேம் என்ற பெயருக்கு விளக்கம்:

  • வேம் உயிர் உரத்தினை ஆங்கிலத்தில் Vesicular Arbuscular Mycorrzhial (VAM) என்று கூறுவார்கள். 
  • இதில் Vesicular என்பது அனேக வகை செடிகளில் இருக்கக்கூடிய ஒரு வகை திசு இது நீர், உணவு மற்றும் இதர வேதிப் பொருட்களை ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. இதில் கவனிக்க வேண்டியது இந்த அமைப்பு அனைத்து வகையான செடிகளிலிலும் இருக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை.
  • Arbuscules என்பது சில வகை செடிகளின்/மரங்களின் திசுக்களில் காணப்படக்கூடிய ஒருவகை பூஞ்சான அமைப்பு. இந்த அமைப்புதான் பூஞ்சானம் மூலம் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மற்றும் மூலக்கூறுகளை செடிகளுக்கு கொடுக்கிறது.
  • இங்கு Mycorrzhial என்பது செடிகளின் வேர்களில் இணைந்து வாழக்கூடிய ஒரு வகை பூஞ்சானம் ஆகும்.
  • எனவே மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அமைப்புகள் மற்றும் அம்சங்கள் ஒன்றிணையும் பயிர்களில் மட்டும் நாம் இந்த வகை பூஞ்சானத்தை பயன்படுத்த வேண்டும்.
  • எளிதில் கூற வேண்டும் என்றால் இந்த வகை பூஞ்சானம் குறிப்பிட்ட சில வகை செடிகளின் வேர்களில் வாழ்ந்து கொண்டு செடிகளுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்வதுடன் மேலும் பல பணிகளை செய்கிறது.

இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்:
விதை நேர்த்தி:

  • அனைத்து வகையான பயிர்களுக்கும் விதை நேர்த்தி செய்ய உகந்தது அல்ல இருப்பினும் அனேக பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
  • பயிர்களை பொறுத்து ஒரு கிலோ விதைக்கு 25 முதல் 50 கிராம் வரை பயன்படுத்தலாம். எப்பவும் போல் சோற்று கஞ்சியுடன் கலந்து நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்பு விதைப்பு/நடவு செய்யலாம்.

மண்ணில் இடுதல்:

வேர் நேர்த்தி செய்தல்:

சொட்டு நீர் பாசனம்:

  • சொட்டுநீர் பாசனத்தில் இதை பயன்படுத்த நினைத்தால் திரவ வேம் ஐ ஏக்கருக்கு இரண்டு லிட்டர் கலந்து விடலாம்.

வேம் உயிர் உரம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

  • தன்மை மற்றும் வளத்தை மேம்படுத்துகிறது.
  • இயற்கையில் இது மண்ணில் வாழக்கூடிய நன்மை செய்யும் பூஞ்சான வகையை சார்ந்ததாகும். இது குறிப்பிட்ட சில தாவரங்களின் வேர்ப்பகுதியில் செடிகளுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து மண்ணின் வளத்தை மேம்படுத்துவதுடன் செடிகளுக்கு தேவையான மணிச்சத்து(p), துத்தநாக சத்து(zn), மாங்கனிசு (Mn) காப்பர் (Cu), மாலிப்பிடம், தண்ணீர் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை செடிகளுக்கு எளிதில் கிடைக்க செய்கிறது.
  • மண்ணில் காணப்படும் உரங்களை சிதைத்து செடிகளுக்கு கிடைக்கச் செய்கிறது. இதனால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் செடிகளுக்கு கிடைக்கப்பெறுகிறது.
  • மண்ணில் காணப்படும் கன உலோகங்களை சிதைத்து மண் வளத்தை மேம்படுத்துகிறது.
  • மண்ணில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் பூஞ்சானங்களில் இருந்து  செடிகளை பாதுகாக்கிறது.
  • பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
  • மண்ணில் காணப்படும் நன்மை செய்யும் பூஞ்சானங்களை ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த மண் வளத்தை மேம்படுத்துகிறது.
  • மண் வறட்சி, அதிக வெப்பநிலை, நோய் மற்றும் பூச்சி தாக்குதல் மற்றும் அதிகப்படியான மண்ணின் கார அமிலத்தன்மை நிலவும் போது செடிகளுக்கு ஏற்படும் அழுத்தத்தை தாங்கி வளர உதவுகிறது.
  • மறைமுகமாக மண்ணில் காணப்படும் தழைச்சத்தை அதிகப்படுத்துகிறது.

மேலும் இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.



புதன், 21 பிப்ரவரி, 2024

மல்லிகை பயிரைத் தாக்கும் கழுத்து அழுகல்/ வேர் அழுகல் நோய்

கழுத்து அழுகல்/ வேர் அழுகல் நோய்...

        இந்த நோய் Sclerotium rolfsii என்ற மண்ணில் வாழும் தீங்கு விளைவிக்க கூடிய பூஞ்சான வகையாகும். சுமார் 500க்கும் மேற்பட்ட செடி வகைகளை தாக்கி அழிக்க கூடிய வல்லமை படைத்த இந்த வகை பூஞ்சானத்தைப் பற்றி சற்று விரிவாக காண்போம்.

  • நெல், கத்தரி, தக்காளி, மக்காச்சோளம், நிலக்கடலை, வெள்ளரி, பீன்ஸ் சூரியகாந்தி, தர்பூசணி மற்றும் பல பயிர்களில் இந்த பூஞ்சானம் நோயை ஏற்படுத்துகிறது.
  • பாதிப்புக்கு உள்ளாகும் பயிர்களை பொறுத்து இந்த பூஞ்சான நோயை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு கழுத்து அழுகல், வாடல் நோய், வேர் அழுகல் நோய், Sclerotium வாடல் நோய், நாற்று அழுகல் நோய், கருகல் நோய், நாற்றங்கால் கருகல் நோய் என பல்வேறு பெயர்களில் இதனை வகைப்படுத்தலாம்.
  • மண்ணில் வாழக்கூடிய இந்த பூஞ்சானம் காற்று, தண்ணீர், மண் மற்றும் பண்ணை உபகரணங்களால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகிறது.
  • பாதிப்புகளின் தீவிரத்தை பொறுத்து சுமார் 70-75% வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் திறன் படைத்தது.

நோயின் அறிகுறிகள்:

  • ஆரம்ப நிலையின் போது செடியின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் பச்சை நிறத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றமடைகிறது.
  • பிறகு இந்த நிற மாற்றம் அடுத்தடுத்த இலைகளுக்கு பரவுதுடன் இலைகள் மஞ்சளாக மாறி உதிர ஆரம்பிக்கிறது.
  • செடிகளை உலுக்கினால் இலைகள் கொட்டும்.
  • நாளடைவில் செடிகள் இறந்து விடுகிறது.
  • செடிகளின் வளர்ச்சி அல்லது வயது பாகுபாடின்றி அனைத்துச் செடிகளையும் தாக்கக்கூடிய வல்லமை கொண்டது.
  • இறந்த செடிகளை அல்லது இறக்கும் தருணத்தில் உள்ள செடிகளை பிடுங்கிப் பார்க்கும்போது வேர்ப்பகுதியில் வெள்ளை நிற பூஞ்சான வளர்ச்சி காணப்படுகிறது.
  • அது மட்டுமல்லாமல் வெள்ளை நிறத்தில் கடுகு போன்ற அமைப்புடைய Sclerotium இழை முடிச்சுகள் காணப்படுகிறது.
  • உதிரும் நிலையில் இந்த முடிச்சுகள் பழுப்பு நிறமாக மாற்றம் அடைகிறது.
  • தாக்குதலின் தீவிரம் அதிகமாகும் போது இந்த பூஞ்சான வளர்ச்சி தண்டுப் பகுதியிலும் காணப்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட செடிகளின் வேர்களை உடைத்துப் பார்த்தால் அதன் உட் திசுக்களில் நிற மாற்றத்தை காண முடிகிறது.
  • அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட பகுதியில்  மிகவும் குறைந்த அளவு துர்நாற்றத்தை உணர முடிகிறது.



கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • இந்த நோயினை கட்டுப்படுத்துவது சற்று கடினமாக இருப்பினும் ஒருங்கிணைந்த முறையில் நோய் மேலாண்மை முறையை பின்பற்றுவதால் செடிகள் தாங்கி வளரும் தன்மை பெறுகிறது.
  • கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அனைத்தும் அநேக பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
  • குறுகிய கால பயிர் சாகுபடி செய்யும் போது இதன் தாக்குதல் தென்பட்டால் முடிந்த அளவு ஒரு வருடத்திற்கு மீண்டும் அதே பயிரை சாகுபடி செய்வதை தவிர்க்கவும்.
  • பயிர் சுழற்சி மேற்கொள்வதால் மண்ணின் தன்மை மற்றும் வளம் மேம்படுவதுடன் மண்ணில் இருக்கக்கூடிய பூஞ்சானங்கள் மாற்று பயிரை தாக்க முடியாமல் மண்ணிலே இருந்து அழியக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • மாற்று பயிராக சின்ன வெங்காயம், பருத்தி, கம்பு போன்ற பயிர்களை பயிரிடலாம்.
  • கோடை பருவத்தின் போது நிலத்தை நன்கு நீர் பாய்ச்சி பாலித்தீன் போர்வைகளை கொண்டு சுமார் ஒரு மாத காலம் மூடி வைப்பதால் மண்ணின் வெப்பநிலை அதிகரிக்கப்பட்டு அதில் உயிர் வாழும் பூஞ்சானங்களை அழித்திட இயலும். இதே முறையில் பல்வேறு மருந்துகளை பயன்படுத்தியும் பூஞ்சானங்களை அழிக்கலாம்.
  • பொதுவாக இந்த வகை பூஞ்சானங்கள் மண்ணின் வளமான பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. அதாவது மண்ணின் மேற்பகுதியில் 10 சென்டிமீட்டர் வரையிலும் காணப்படுகிறது. எனவே கோடைகாலங்களில் ஒற்றைக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்வதால்  பூஞ்சானங்கள் மண்ணின் ஆழமான பகுதிக்கு தள்ளப்பட்டு தாக்குதலின் தீவிரத்தை குறைக்கலாம்.
  • பல்லாண்டு பயிர்களை சாகுபடி செய்யும் போது செடிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மண்ணை மேம்படுத்தக்கூடிய பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்யலாம்.
  • மண்ணின் அதிகபட்ச இருப்பதும் இந்த பூஞ்சான தாக்குதல்களை மேலும் அதிகப்படுத்துவதால் சொட்டுநீர் பாசனம் வழியாக நீர் பாய்ச்சுவது உகந்தது.
  • வாய்க்கால் வாய்க்கால்  மூலம் பாசனம் செய்யும் போது நீர் நேரடியாக சென்று தண்டு பகுதியில் படாமல் இருக்கும் படி மண் அணைக்க வேண்டும்.
  • முடிந்தால் வாய்க்கால் பாசனத்தை தவிர்க்கவும் இது பூஞ்சான தாக்குதல் மேலும் அதிகப்படுத்தும்.
  • இந்த பூஞ்சானம் செடிகளின் வேர்களை தாக்குவதால் செடிகளுக்கு ஏற்படும் phenol வேதிப்பொருள் குறைபாட்டால் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்த வகை வேதிப்பொருள் இயற்கை உரங்களில் மிகுந்து காணப்படுவதால் இயற்கை உரங்களை அதிக அளவு பயன்படுத்த வேண்டும்.
  • மண்புழு உரம் /கம்போஸ்ட் /நன்கு மக்கிய தொழு உரம் / கோழி எருவை அதிக அளவு பயன்படுத்த வேண்டும். இவற்றை பயன்படுத்தும் போது இந்த பூஞ்சானத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக்கூடிய உயிர் பூஞ்சான கொல்லிகள் Trichoderma harzianum/viridae, Pseudomonas fluorescence மற்றும் Bacillus subtills முதலியவற்றை பயன்படுத்தி எருவை ஊட்டம் ஏற்றி இட வேண்டும்.
  • இலுப்பை விதை புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு மற்றும் வேப்பங்கொட்டை புண்ணாக்கு இவற்றில் ஏதேனும் ஒன்றை அதிக அளவில் பயன்படுத்துவதால் பூஞ்சான வளர்ச்சியை மட்டுப்படுத்தலாம்.
  • விதைகளை அல்லது நடவுப்பொருட்களை நேர்த்தி செய்து நடவு செய்யலாம். விதை/நாற்றுகள்/செடிகளை நேர்த்தி செய்திட கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு மருந்துகளை பயன்படுத்தலாம்.
  • Carboxin + Thiram - 2 கிராம்/கிலோ விதை
  • Tebuconazole -2 கிராம்/கிலோ விதை
  • Bacillus subtills +Trichoderma harzianum/viridae- 5-8 கிராம்/கிலோ விதை
  • தீவிர நோய் தாக்குதலின் போது கீழ்க்கண்ட பூஞ்சான கொல்லிகளில்  ஏதேனும் இரண்டு அல்லது மூன்றை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்.(வேரில் ஊற்றவும்)
  • Carboxin + Thiram - 3 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Tebuconazole+ Trifloxystrobin - 10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Cymoxanil + Mancozeb - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Propiconazole+ Hexaconazole - 1+2 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு

இது போன்று வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன் பெறலாம்.


செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

ஊட்டச்சத்து மேலாண்மையில் கோழி எரு எவ்வாறு பயன்படுத்த வேண்டும்

பயிர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து என்பது இன்றியமையாதது என நாம் அனைவரும் அறிந்ததே. பயிர்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை முதன்மை ஊட்டச்சத்துக்கள், இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்ட ஊட்டச்சத்து என வகைப் படுத்துகிறோம்.

பேரூட்ட ஊட்டச்சத்துக்கள் என்றால் என்ன ?

  • தழைச்சத்து மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவற்றை முதன்மை ஊட்டச்சத்துக்கள் என்றும் கால்சியம் மெக்னீசியம் மற்றும் சல்பர் ஆகியவற்றை இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள் என்றும் வகைப்படுத்தலாம்.
  • முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களுடன் வளிமண்டலத்தில் கிடைக்கக்கூடிய கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை பேரூட்ட (macro) ஊட்டச்சத்துக்கள் என்று அழைப்பார்கள். ஏனெனில் பயிர்களின் வளர்ச்சிக்கு இந்த வகை ஊட்டச்சத்துக்கள் தொடர்ச்சியாகவும் அதிக அளவிலும் தேவைப்படுகிறது அதனால் தான் இதற்கு பேரூட்ட ஊட்டச்சத்துக்கள் என்று குறிப்பிடுகிறோம்.
  • இந்த வகை ஊட்டச்சத்துக்களின் குறைபாடு செடிகளில் உடனடியாக தெரிவதுடன் பெரிய அளவில் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். மேலும் அதன் அறிகுறிகள் விரைந்து மற்ற செடிகளில் தெரிய ஆரம்பிக்கும் எனவே உடனடியாக போதுமான அளவு உரங்களை கொடுத்து சரி செய்ய வேண்டும்.

நுண்ணூட்ட ஊட்டச்சத்துக்கள் என்றால் என்ன?

  • பேரூட்ட ஊட்டச்சத்துக்களை தவிர்த்து காணப்படும் ஊட்டச்சத்துக்களை நுண்ணூட்ட சத்துக்கள் என்று அழைப்பார்கள். இவைகள் செடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் குறைவான அளவு மட்டுமே தேவைப்படுகிறது.  போரான், துத்தநாகம், நிக்கல், மாங்கனிசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாலிப்டினம், காப்பர் மற்றும் குளோரின் ஆகியவை இதில் அடங்கும்.
  • இந்த வகை ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டு அறிகுறிகள் செடிகளில் மிகவும் தாமதமாக தான் தென்படும் மேலும் இது மற்ற செடிகளுக்கு மிகவும் மெதுவாகத்தான் பரவும். இதன் குறைபாடு செடிகளில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் மகசூலின் தரத்தை மறைமுகமாக குறைக்கும்.

கோழி எரு...

  • பொதுவாக விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களில் இரண்டு முதல் மூன்று ஊட்டச்சத்துக்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. இதனால் மண் வளம் குறைவதுடன மகசூல் பாதிப்பு அடைகிறது.
  • செயற்கை உரங்களுக்கு மாற்றாக இயற்கை உரங்களை பயன்படுத்தும் போது அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறுவதுடன் மண்ணின் தன்மை மற்றும் வளம் மேம்படுகிறது. 
  • மேலும் உற்பத்தி செலவு குறைவதுடன் ஆரோக்கியமான பயிர்களை உருவாக்கி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நல்ல மகசூலை எதிர்பார்க்கலாம்.
  • இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் டன் அளவில் கோழி எரு கிடைக்கப் பெறுகிறது. இதனை சரியான வழிமுறைகளை பின்பற்றி பயன்படுத்தினால் பல லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடியை மேற்கொள்ள இயலும்.
  • கோழி எருவில் சராசரியாக 1.6 சதவீதம் தழைச்சத்தும், 2 சதவீதம் மணிச்சத்தும், 2 சதவீதம் சாம்பல் சத்தும் இருக்கிறது. இதைத் தவிர பல்வேறு நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் இதில் காணப்படுகிறது.
  • இது அனைத்து விதமான மண் மற்றும் பயிர்களுக்கு இடலாம்.
  • பயிரின் வளர்ச்சி மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து நாம் இடும் கோழி எருவின் அளவு மாறுபடும்.

கோழி எரு பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை...

  • எரு நன்கு மக்கியதாக இருக்க வேண்டும்.. அதாவது பார்ப்பதற்கு மணல் போன்ற இருக்க வேண்டும். மக்காத உரங்களை பயன்படுத்தும் போது இதிலிருந்து வெளியேற்றப்படும் அம்மோனியா செடிகளை பாதிக்கும்.
  • சரியாக மக்காத எரு என்றால் நமது நிலத்தில் நிழற்பாங்கான இடத்தில் கொட்டி வைத்து உலர்த்தி பின்பு இடலாம். மக்கிய கோழி எரு பழுப்பு நிறத்தில் காணப்படும் மேலும் சிறிதளவு அதிலிருந்து வாசனை வராது
  • எருவில் உள்ள நச்சுக்களை போக்க மற்றும் நன்கு சிதைக்க டீ கம்போசர்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் இதில் காணப்படும் நச்சுப் பொருட்களை சிதைத்து வெளியேற்றலாம்.
  • உயிர் உரங்கள், உயிர் பூஞ்சான கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கலந்து ஊட்டம் ஏற்றி இடுவதால் நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடலாம்.
  • கோழி எருவை ஒரே முறை அதிகம் இடாமல் கொஞ்சம் கொஞ்சமாக நீர் வசதி இருக்கும் போது இடவும். ஒரு தென்னை மரத்திற்கு 5 முதல் 10 கிலோ பயன்படுத்தலாம் கண்டிப்பாக போதுமான நீர் வசதி இருக்க வேண்டும்.
  • கோழி எருவை எவ்வாறு மக்க வைக்கும் வேண்டும் என்று விரிவாக தேவைப்படுபவர்கள் கீழே உள்ள இணைப்பில் சென்று பார்க்கலாம். https://agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_poultry_ta.html 
  • இது போன்று வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன் பெறலாம்.

  • https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

எள் பயிரில் தத்துப் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் எண்ணெய் பயிர்களில் எள் மிகவும் பழமை வாய்ந்த பயிராகும். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.75 முதல் 2 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் எள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது
  • உலக அளவில் இந்தியா எள் சாகுபடி நிலப்பரப்பில் அதிக நிலப்பரப்பை கொண்டிருந்தாலும் அதன் உற்பத்தி சற்று குறைவாக காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.

  • அதன் முதல் காரணமாக இது மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டு வருவதால் இதன் உற்பத்தி குறைவு மேலும் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக இதன் உற்பத்தி குறைகிறது.
  • பைட்டோபிளாஸ்மா வகை பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய நோய் Phyllody. இதனால் சுமார் 55 -80% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
  • இந்த நோயை ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிகளுக்கு பரப்ப கூடியது தத்துப் பூச்சியாகும். இதனைப் பற்றி சற்று விரிவாக காண்போம்.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • தத்துப் பூச்சிகள் செடிகளின் ஆரம்ப நிலையில் இருந்து காய்கள் முதிர்ச்சி தருணம் வரை செடியில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் படைத்தது.
  • இதன் இளம் புழு மற்றும் முதிர்ந்த பூச்சிகள் குருத்து மற்றும் இளம் தளிர்களில் சாற்றை உறிஞ்சுவதால் வளர்ச்சி குன்றும்.
  • இலைகள் மற்றும் சிறிய பூக்கள் நிறம் மாறி காணப்படுவதுடன் நரம்புகளின் தடிப்பு தன்மை குறையும். இலைகளை பார்ப்பதற்கு தேமல் நோய் அறிகுறி போன்று தெரியும்.
  • இலைகளின் விளிம்புகள் மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி வளையும்.
  • தாக்கப்பட்ட செடிகளின் வளர்ச்சி குன்றி குறைந்த கணு இடைவெளி காணப்படும்.
  • செடிகளின் நுனிப்பகுதியில் இலைகள் மற்றும் குருத்து பகுதி ஒருங்கிணைந்து அடர்த்தியாக காணப்படுவதால் பார்ப்பதற்கு மந்திரவாதிகளின் கையில் இருக்கும் குச்சி போன்று காணப்படும்
  • நாளடைவில் குருத்துப் பகுதி மற்றும் தாக்கப்பட்ட இளம் தளிர்கள் பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும்.
  • இந்த வகை தத்துப் பூச்சிகள் Phyllody எனப்படும் நோயை பரப்புகிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • சான்றிதழ் பெறப்பட்ட விதைகளை விதைக்கும் போது இதன் தாக்குதல் பெரிய அளவில் காணப்படுவதில்லை. ஒருவேளை தென்பட்டாலும் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம்.
  • சான்றிதழ் பெறப்படாத விதைகளை பயன்படுத்தும் போது இதன் தாக்குதல் ஆரம்ப நிலையிலே காணப்படுகிறது. அதுபோன்று பயன்படுத்தும் போது விதைகளை pymetrozine அல்லது imidacloprid+ ethiprole என்ற மருந்தினை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து விதைப்பு செய்ய வேண்டும்.
  • விதைப்பு செய்வதற்கு முன் அடி உரமாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பங்கொட்டை இடித்து இடவேண்டும்.
  • போதுமான பயிர் இடைவெளி இருக்க வேண்டும்.
  • வயலில் காணப்படும் களைகளை அவ்வப்போது அப்புறப்படுத்தி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • சில பயிறு வகைகள், பருத்தி மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்கள் ஊடு பயிராகவோ வயலை சுற்றியோ அல்லது வயல்களுக்கு அருகில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • 6:1 என்ற விகிதத்தில் எள் மற்றும் துவரை ஆகிய பயிர்களை ஒரே வயலில் சாகுபடி செய்ய வேண்டும்.
  • இந்த பூச்சிகள் தாக்குவதற்கு முன்னதாக மீன் அமிலம், பஞ்சகாவியா அல்லது வேப்ப எண்ணெய் மூன்று முதல் ஐந்து சதவீதம் தெளித்து வர வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளின் பகுதிகளை அவ்வப்போது சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • தாக்குதல் தீவிரமடையும் போது கீழ்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
  • Pymetrozine- 6 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Imidacloprid- 10 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Thiamethoxam- 8-10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Acephate+imidacloprid -25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Dimethoate - 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு 

மேலும் தகவலுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

திங்கள், 12 பிப்ரவரி, 2024

சின்ன வெங்காயத்தில் ஊதா கொப்புள நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • சமையலறையின் அரசி என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயம் காய்கறி பயிர்களில் மிகவும் பழமையான காய்கறி பயிர் ஒன்றாகும்.
  • இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.25 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில்  வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்கள் வெங்காய உற்பத்தியை பாதிப்படைய செய்கிறது அதில் முக்கியமானதாக ஊதா கொப்புள நோய் பார்க்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

நோய் தாக்குதல்/ பரவுவதற்கு உகந்த தட்பவெட்ப சூழ்நிலை:

  • ஜூன் ஜூலை மற்றும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் இந்த நோய் தாக்குதல் அதிகம் காணப்படும்.
  • இந்த நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சானம் பெரும்பான்மையாக மண்ணிலும் ஒரு சில நேரங்களில் பயிர் எச்சங்களில் சுமார் ஒரு வருடம் வரை உயிருடன் இருக்கக் கூடியதாகும்.
  • நீர் பாய்ச்சுதல், காற்று, பண்ணைகளில் பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் மற்றும் பூச்சிகளால் இந்த பூஞ்சானம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது.
  • உகந்த தட்பவெப்ப சூழ்நிலை அதாவது வெப்பநிலை 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் காற்று ஈரப்பதம் 80 முதல் 90% இருக்கும்போது இன் நோய் தாக்குதல் மற்றும் பரவுதல் அதிகம் காணப்படும்.
  • கடுமையான பனிப்பொழிவு இந்நோய் தாக்குதலுக்கு மிகவும் உகந்ததாகும். 
  • அது போன்ற சமயங்களில் காலை வேளையில் வயலில் இறங்கி வேலை செய்வதை தவிர்க்கவும்.
  • பெரும்பான்மையாக இந்நோய் ஆனது மண் மூலம் பரவுவதால் செடிகளின் அடி இலைகள் முதலில் பாதிப்பு அடைகிறது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • பொதுவாக இந்த நோயானது முதிர்ந்த இலைகள் அதாவது 30 நாட்களுக்கு மேற்பட்ட பயிரில் மற்றும் பூ தண்டுகளில் தென்படும்.
  • ஆரம்பத்தில் ஒழுங்கற்ற சற்று பள்ளமான வெண்மை நிற புள்ளிகள் உருவாகும்.
  • சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை நிலவும் போது இப்புண்கள் நீள் வட்ட வடிவில் பெரிதாகும்.
  • புண்களின் மையப்பகுதி அடர் ஊதா நிறத்தில் மாற்றம் அடையும் அதனை சுற்றி மஞ்சள் முதல் வெண்மை நிற எல்லைப் பகுதி காணப்படும்.
  • நாளடைவில் புண்கள் பெரிதாக வளர்வது உடன் அடர் ஊதா நிற மையப்பகுதி பழுப்பு முதல் சாம்பல் நிறத்தில் மாற்றம் அடையும்.
  • நாளடைவில் புண்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து உரு குலைந்து இலைகள் மற்றும் மலர் தண்டுகளை காய்ந்து கீழே விழ செய்கிறது.
  • இதனால் போதுமான உணவு உற்பத்தி நடைபெறாமல் 40-50 சதவீதம் அளவிற்கு மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சானம் விதை கிழங்குகளில் நான்கு மாதங்கள் வரை கூட வாழக்கூடிய திறன் படைத்தது. எனவே தேர்வு செய்யவும் கிழங்குகளில் நோய் தாக்குதல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
  • பருவத்திற்கு 15 நாட்களுக்கு முன்பே நடவு மேற்கொள்வதால் ஓரளவிற்கு நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • நடவு செய்வதற்கு முன்பு நிலத்தின் நன்கு ஆழமாக இரண்டு முறை உழவு செய்து பூஞ்சானங்களை சூரிய வெப்ப நிலையில் அழிக்க முயற்சி செய்யலாம்.
  • நடவு செய்யும்போது பயிர் இடைவெளியை சற்று அதிகப்படுத்தி போதுமான அளவு காற்றோட்ட வசதியை ஏற்படுத்தவும் இதனால் தாக்குதல் சற்று குறையும்.
  • வயலில் களைகள் வளர்வதை தவிர்க்கவும் அவ்வப்போது களைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும்.
  • சின்ன வெங்காயம் அறுவடை செய்த பிறகு சாகுபடி நிலத்தில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
  • காலை நேரங்களில் உரமிடுதல், களைகளை அகற்றுதல் மற்றும் மருந்து அடித்தல் போன்ற பணிகளை தவிர்ப்பது நல்லது.
  • வருடத்திற்கு ஒரு முறை பயிர் சுழற்சி கண்டிப்பாக மேற்கொள்வது அவசியம்.
  • 30 முதல் 40 நாட்கள் வயது உடைய செடிகளுக்கு ஏக்கருக்கு ஐந்து கிலோ/லிட்டர் Trichoderma மற்றும் Pseudomonas நீரில் கரைத்து விடவும்.
  • கீழ்க்கண்ட பூஞ்சான கொல்லிகள் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
  • Mancozeb - 30 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Tebuconazole - 10 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Difenconazole- 10 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Tebuconazole+Trifloxystrobin - 10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Mettiram+ Pyroclostrobin - 50 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Cymoxanil+Mancozeb-10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
மேலும் தகவலுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

வியாழன், 8 பிப்ரவரி, 2024

தென்னையில் வேர் வாடல் /கேரளா வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • வயலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
  • செடி அல்லது மரங்களின் வட்டப் பாத்திகளில் பசுந்தாள் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழவு செய்ய வேண்டும். இதனால் மண்ணிற்கு போதுமான ஊட்டச்சத்து மற்றும் காற்றோட்டம் கிடைக்கப்பெறும். மேலும் இந்த பயிர்கள் ஊட்டச்சத்துக்களை மண்ணில் அதிகப்படுத்துவதுடன் நீரின் அளவை கட்டுப்படுத்துகிறது.
  • குறைந்த அல்லது அதிக அளவு நீர் விடுவதை தவிர்க்கவும். சராசரியாக 200 முதல் 250 லிட்டர் வாரம் ஒரு முறை விடவும்.
  • வயலில் வடிகால் வசதி சரியாக இருக்க வேண்டும்.
  • மரங்களுக்கு குறைந்தபட்ச அளவு உரங்கள் கிடைக்கப் பெற வழிவகை செய்ய வேண்டும். சராசரியாக மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு யூரியா 1-1.5 கிலோ, பாஸ்பரஸ்- 1.5-2 கிலோ, பொட்டாசியம்- 2 கிலோ, மெக்னீசியம் சல்பேட் - 0.50 0 கிலோ, நுண்ணூட்ட உரம் - 0.150 கிலோ மற்றும் போதுமான அளவு இயற்கை உரங்கள் இட வேண்டும்.
  • ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன்- ஜூலை மற்றும் செப்டம்பர் -அக்டோபர்) மரம் ஒன்றுக்கு தலா 100 கிராம் Pseudomonas, Trichoderma மற்றும் Bacillus இடுவதால் மரங்கள் வகை பூஞ்சானத்திற்கு எதிர்ப்பு பெறுவதுடன் நல்ல வேர் வளர்ச்சி காணப்படுவதால் மகசூல் இழப்பீடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு.
  • மண்ணின் கார அமிலத்தன்மை குறைவாக உள்ள நிலங்களுக்கு சுண்ணாம்பு இடுவதால்  கட்டுப்படுத்தலாம் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து கிடைக்கப்பெற்று இந்த நோய்க்கு எதிர்ப்பு திறன் பெறுகிறது.
  • குருத்து அழுகல் பூஞ்சான நோயினால் ஏற்படுவதால் இதை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் நன்கு சுத்தம் செய்து COC அல்லது Hexaconazole என்ற மருந்தினை குருத்துக்களில் ஊற்ற வேண்டும். இயற்கை முறையில் கட்டுப்படுத்த தலா 50 கிராம் Pseudomonas மற்றும் Bacillus  ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

  • இந்த நோயை பரப்பக்கூடிய பூச்சிகளை கட்டுப்படுத்த குருத்துகளில் வேப்பங்கொட்டை அல்லது குருணை மருந்தினை இடுவதால் பூச்சிகள் நோய் பரப்புவதை குறைக்கலாம்.
  • பொதுவாக இந்த நோய் phenol எனப்படும் வேதிப்பொருட்கள் செடிகளில் குறைவதால் வருகிறது எனவே இந்த வேதிப்பொருட்கள் அதிகமாக இருக்கக்கூடிய இயற்கை உரங்களை பயன்படுத்தினாலே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

தென்னையில் வேர் வாடல்/ கேரளா வாடல் நோயின் அறிகுறிகள்

முன்னுரை:

  • பனை மரங்களின் அரசன் என்று அழைக்கப்படும் தென்னை மரத்தின் அனைத்து பகுதிகளும் ஏதேனும் ஒரு வழியில் மனிதர்களுக்கு பயன் அளிக்கிறது எனவே இதனை Kalpavriksha என்று அழைப்பார்கள். 
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 90% தேங்காய் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. 
  • சுமார் பத்து மில்லியன் நபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தென்னை சார்ந்த விவசாயம் அல்லது தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • தென்னை பயிரை பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் தாக்கினாலும் ஒரு சில நோய் அல்லது பூச்சிகள் மட்டுமே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 
  • அதில் மிக முக்கியமான ஒன்றாக தென்னை வேர் வாடல் நோய் கருதப்படுகிறது. இந்த நோயினால் சுமார் 40 லிருந்து 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

  • இந்த நோய் கேரளா மற்றும் கேரளாவை ஒட்டி உள்ள ஒரு சில தமிழக மாவட்டங்களில் மிகை படியாக காணப்படுவதால்  இதனை கேரளா வாடல் நோய் என்றும் கூறுகிறார்கள்.

நோய் காரணிகள்:

  • இந்த நோயானது  Phytoplasma எனப்படும் செல் சுவர் அற்ற பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது.
  • வைரஸ் நோய்களைப் போன்று இந்நோயும் சாறு உறிஞ்சும் பூச்சிகளால் ஒரு செடிகளில் இருந்து மற்றொரு செடிக்கு பரவுகிறது.
  • கண்ணாடி இறக்கை பூச்சி மற்றும் தத்துப்பூச்சி இந்நோயை பாதிக்கபட்ட செடிகளில் இருந்து மற்ற  செடிகளுக்கு பரப்புகிறது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • இந்நோயால் பாதிக்கப்பட்ட செடிகள் சுமார் 6 முதல் 12 மாதங்களுக்கு பிறகு தான் அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
  • மரத்தின் அடி இலைகளின் விரைப்புத்தன்மை குறைந்து மஞ்சள் நிறமாக மாறும்.
  • இலை மடல்களின் ஓரங்கள் கருகி கீழ்ப்புறமாக வளைந்து காணப்படும் இதை பார்ப்பதற்கு பொட்டாசியம் சத்துக் குறைபாடு போன்று தெரியும்.
  • நோயின் தாக்குதல் தீவிரமடையும் போது இலைகள் மரத்திலிருந்து தொங்கும். நாளடைவில் இலை மடல்கள் உதிர்ந்து குச்சி மட்டும் காணப்படும்.
  • பத்து வருடத்திற்கு குறைவான வயது கொண்ட மரங்கள் இந்த நோய்க்கான அறிகுறியை பெரிதளவில்  வெளிப் படுத்துவதில்லை.
  • ஆனால் இலைகளின் உற்பத்தி மற்றும் அதன் அளவு குறைந்து காணப்படும்.
  • நோய் தாக்குதல் தீவிரமடையும் போது மரங்களில் குருத்து அழுகல், வேர் மற்றும் இலை அழுகல் காணப்படும்.

  • மரங்கள் தனக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதில் தொய்வு ஏற்பட்டு பூ பிடித்தல் திறன் குறையும். பாலைகளின் அளவு சிறிதாக காணப்படும்.
  • சில நேரங்களில் பாலைகள் சரியாக திறக்காமல் நுனியில் இருந்து கருக ஆரம்பிக்கும். சரியாக வெடித்த பாலைகளில் உள்ள பூக்கள் கருகும்.

  • பூ மற்றும் காய் உதிர்தல் அதிகம் இருக்கும்.



மேலும் தகவலுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

Recent Posts

Popular Posts