தென்னையில் வேர் வாடல்/ கேரளா வாடல் நோயின் அறிகுறிகள்
|முன்னுரை:
- பனை மரங்களின் அரசன் என்று அழைக்கப்படும் தென்னை மரத்தின் அனைத்து பகுதிகளும் ஏதேனும் ஒரு வழியில் மனிதர்களுக்கு பயன் அளிக்கிறது எனவே இதனை Kalpavriksha என்று அழைப்பார்கள்.
- இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 90% தேங்காய் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
- சுமார் பத்து மில்லியன் நபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தென்னை சார்ந்த விவசாயம் அல்லது தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென்னை பயிரை பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் தாக்கினாலும் ஒரு சில நோய் அல்லது பூச்சிகள் மட்டுமே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
- அதில் மிக முக்கியமான ஒன்றாக தென்னை வேர் வாடல் நோய் கருதப்படுகிறது. இந்த நோயினால் சுமார் 40 லிருந்து 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
- இந்த நோய் கேரளா மற்றும் கேரளாவை ஒட்டி உள்ள ஒரு சில தமிழக மாவட்டங்களில் மிகை படியாக காணப்படுவதால் இதனை கேரளா வாடல் நோய் என்றும் கூறுகிறார்கள்.
நோய் காரணிகள்:
- இந்த நோயானது Phytoplasma எனப்படும் செல் சுவர் அற்ற பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது.
- வைரஸ் நோய்களைப் போன்று இந்நோயும் சாறு உறிஞ்சும் பூச்சிகளால் ஒரு செடிகளில் இருந்து மற்றொரு செடிக்கு பரவுகிறது.
- கண்ணாடி இறக்கை பூச்சி மற்றும் தத்துப்பூச்சி இந்நோயை பாதிக்கபட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு பரப்புகிறது.
நோய் தாக்குதலின் அறிகுறிகள்:
- இந்நோயால் பாதிக்கப்பட்ட செடிகள் சுமார் 6 முதல் 12 மாதங்களுக்கு பிறகு தான் அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
- மரத்தின் அடி இலைகளின் விரைப்புத்தன்மை குறைந்து மஞ்சள் நிறமாக மாறும்.
- இலை மடல்களின் ஓரங்கள் கருகி கீழ்ப்புறமாக வளைந்து காணப்படும் இதை பார்ப்பதற்கு பொட்டாசியம் சத்துக் குறைபாடு போன்று தெரியும்.
- நோயின் தாக்குதல் தீவிரமடையும் போது இலைகள் மரத்திலிருந்து தொங்கும். நாளடைவில் இலை மடல்கள் உதிர்ந்து குச்சி மட்டும் காணப்படும்.
- பத்து வருடத்திற்கு குறைவான வயது கொண்ட மரங்கள் இந்த நோய்க்கான அறிகுறியை பெரிதளவில் வெளிப் படுத்துவதில்லை.
- ஆனால் இலைகளின் உற்பத்தி மற்றும் அதன் அளவு குறைந்து காணப்படும்.
- நோய் தாக்குதல் தீவிரமடையும் போது மரங்களில் குருத்து அழுகல், வேர் மற்றும் இலை அழுகல் காணப்படும்.
- மரங்கள் தனக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதில் தொய்வு ஏற்பட்டு பூ பிடித்தல் திறன் குறையும். பாலைகளின் அளவு சிறிதாக காணப்படும்.
- சில நேரங்களில் பாலைகள் சரியாக திறக்காமல் நுனியில் இருந்து கருக ஆரம்பிக்கும். சரியாக வெடித்த பாலைகளில் உள்ள பூக்கள் கருகும்.
- பூ மற்றும் காய் உதிர்தல் அதிகம் இருக்கும்.
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD
0 Comments:
கருத்துரையிடுக