google-site-verification: googled5cb964f606e7b2f.html ஊட்டச்சத்து மேலாண்மையில் கோழி எரு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

ஊட்டச்சத்து மேலாண்மையில் கோழி எரு எவ்வாறு பயன்படுத்த வேண்டும்

பயிர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து என்பது இன்றியமையாதது என நாம் அனைவரும் அறிந்ததே. பயிர்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை முதன்மை ஊட்டச்சத்துக்கள், இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்ட ஊட்டச்சத்து என வகைப் படுத்துகிறோம்.

பேரூட்ட ஊட்டச்சத்துக்கள் என்றால் என்ன ?

  • தழைச்சத்து மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவற்றை முதன்மை ஊட்டச்சத்துக்கள் என்றும் கால்சியம் மெக்னீசியம் மற்றும் சல்பர் ஆகியவற்றை இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள் என்றும் வகைப்படுத்தலாம்.
  • முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களுடன் வளிமண்டலத்தில் கிடைக்கக்கூடிய கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை பேரூட்ட (macro) ஊட்டச்சத்துக்கள் என்று அழைப்பார்கள். ஏனெனில் பயிர்களின் வளர்ச்சிக்கு இந்த வகை ஊட்டச்சத்துக்கள் தொடர்ச்சியாகவும் அதிக அளவிலும் தேவைப்படுகிறது அதனால் தான் இதற்கு பேரூட்ட ஊட்டச்சத்துக்கள் என்று குறிப்பிடுகிறோம்.
  • இந்த வகை ஊட்டச்சத்துக்களின் குறைபாடு செடிகளில் உடனடியாக தெரிவதுடன் பெரிய அளவில் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். மேலும் அதன் அறிகுறிகள் விரைந்து மற்ற செடிகளில் தெரிய ஆரம்பிக்கும் எனவே உடனடியாக போதுமான அளவு உரங்களை கொடுத்து சரி செய்ய வேண்டும்.

நுண்ணூட்ட ஊட்டச்சத்துக்கள் என்றால் என்ன?

  • பேரூட்ட ஊட்டச்சத்துக்களை தவிர்த்து காணப்படும் ஊட்டச்சத்துக்களை நுண்ணூட்ட சத்துக்கள் என்று அழைப்பார்கள். இவைகள் செடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் குறைவான அளவு மட்டுமே தேவைப்படுகிறது.  போரான், துத்தநாகம், நிக்கல், மாங்கனிசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாலிப்டினம், காப்பர் மற்றும் குளோரின் ஆகியவை இதில் அடங்கும்.
  • இந்த வகை ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டு அறிகுறிகள் செடிகளில் மிகவும் தாமதமாக தான் தென்படும் மேலும் இது மற்ற செடிகளுக்கு மிகவும் மெதுவாகத்தான் பரவும். இதன் குறைபாடு செடிகளில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் மகசூலின் தரத்தை மறைமுகமாக குறைக்கும்.

கோழி எரு...

  • பொதுவாக விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களில் இரண்டு முதல் மூன்று ஊட்டச்சத்துக்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. இதனால் மண் வளம் குறைவதுடன மகசூல் பாதிப்பு அடைகிறது.
  • செயற்கை உரங்களுக்கு மாற்றாக இயற்கை உரங்களை பயன்படுத்தும் போது அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறுவதுடன் மண்ணின் தன்மை மற்றும் வளம் மேம்படுகிறது. 
  • மேலும் உற்பத்தி செலவு குறைவதுடன் ஆரோக்கியமான பயிர்களை உருவாக்கி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நல்ல மகசூலை எதிர்பார்க்கலாம்.
  • இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் டன் அளவில் கோழி எரு கிடைக்கப் பெறுகிறது. இதனை சரியான வழிமுறைகளை பின்பற்றி பயன்படுத்தினால் பல லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடியை மேற்கொள்ள இயலும்.
  • கோழி எருவில் சராசரியாக 1.6 சதவீதம் தழைச்சத்தும், 2 சதவீதம் மணிச்சத்தும், 2 சதவீதம் சாம்பல் சத்தும் இருக்கிறது. இதைத் தவிர பல்வேறு நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் இதில் காணப்படுகிறது.
  • இது அனைத்து விதமான மண் மற்றும் பயிர்களுக்கு இடலாம்.
  • பயிரின் வளர்ச்சி மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து நாம் இடும் கோழி எருவின் அளவு மாறுபடும்.

கோழி எரு பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை...

  • எரு நன்கு மக்கியதாக இருக்க வேண்டும்.. அதாவது பார்ப்பதற்கு மணல் போன்ற இருக்க வேண்டும். மக்காத உரங்களை பயன்படுத்தும் போது இதிலிருந்து வெளியேற்றப்படும் அம்மோனியா செடிகளை பாதிக்கும்.
  • சரியாக மக்காத எரு என்றால் நமது நிலத்தில் நிழற்பாங்கான இடத்தில் கொட்டி வைத்து உலர்த்தி பின்பு இடலாம். மக்கிய கோழி எரு பழுப்பு நிறத்தில் காணப்படும் மேலும் சிறிதளவு அதிலிருந்து வாசனை வராது
  • எருவில் உள்ள நச்சுக்களை போக்க மற்றும் நன்கு சிதைக்க டீ கம்போசர்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் இதில் காணப்படும் நச்சுப் பொருட்களை சிதைத்து வெளியேற்றலாம்.
  • உயிர் உரங்கள், உயிர் பூஞ்சான கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கலந்து ஊட்டம் ஏற்றி இடுவதால் நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடலாம்.
  • கோழி எருவை ஒரே முறை அதிகம் இடாமல் கொஞ்சம் கொஞ்சமாக நீர் வசதி இருக்கும் போது இடவும். ஒரு தென்னை மரத்திற்கு 5 முதல் 10 கிலோ பயன்படுத்தலாம் கண்டிப்பாக போதுமான நீர் வசதி இருக்க வேண்டும்.
  • கோழி எருவை எவ்வாறு மக்க வைக்கும் வேண்டும் என்று விரிவாக தேவைப்படுபவர்கள் கீழே உள்ள இணைப்பில் சென்று பார்க்கலாம். https://agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_poultry_ta.html 
  • இது போன்று வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன் பெறலாம்.

  • https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts