google-site-verification: googled5cb964f606e7b2f.html எள் பயிரில் தத்துப் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

எள் பயிரில் தத்துப் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் எண்ணெய் பயிர்களில் எள் மிகவும் பழமை வாய்ந்த பயிராகும். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.75 முதல் 2 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் எள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது
  • உலக அளவில் இந்தியா எள் சாகுபடி நிலப்பரப்பில் அதிக நிலப்பரப்பை கொண்டிருந்தாலும் அதன் உற்பத்தி சற்று குறைவாக காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.

  • அதன் முதல் காரணமாக இது மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டு வருவதால் இதன் உற்பத்தி குறைவு மேலும் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக இதன் உற்பத்தி குறைகிறது.
  • பைட்டோபிளாஸ்மா வகை பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய நோய் Phyllody. இதனால் சுமார் 55 -80% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
  • இந்த நோயை ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிகளுக்கு பரப்ப கூடியது தத்துப் பூச்சியாகும். இதனைப் பற்றி சற்று விரிவாக காண்போம்.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • தத்துப் பூச்சிகள் செடிகளின் ஆரம்ப நிலையில் இருந்து காய்கள் முதிர்ச்சி தருணம் வரை செடியில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் படைத்தது.
  • இதன் இளம் புழு மற்றும் முதிர்ந்த பூச்சிகள் குருத்து மற்றும் இளம் தளிர்களில் சாற்றை உறிஞ்சுவதால் வளர்ச்சி குன்றும்.
  • இலைகள் மற்றும் சிறிய பூக்கள் நிறம் மாறி காணப்படுவதுடன் நரம்புகளின் தடிப்பு தன்மை குறையும். இலைகளை பார்ப்பதற்கு தேமல் நோய் அறிகுறி போன்று தெரியும்.
  • இலைகளின் விளிம்புகள் மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி வளையும்.
  • தாக்கப்பட்ட செடிகளின் வளர்ச்சி குன்றி குறைந்த கணு இடைவெளி காணப்படும்.
  • செடிகளின் நுனிப்பகுதியில் இலைகள் மற்றும் குருத்து பகுதி ஒருங்கிணைந்து அடர்த்தியாக காணப்படுவதால் பார்ப்பதற்கு மந்திரவாதிகளின் கையில் இருக்கும் குச்சி போன்று காணப்படும்
  • நாளடைவில் குருத்துப் பகுதி மற்றும் தாக்கப்பட்ட இளம் தளிர்கள் பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும்.
  • இந்த வகை தத்துப் பூச்சிகள் Phyllody எனப்படும் நோயை பரப்புகிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • சான்றிதழ் பெறப்பட்ட விதைகளை விதைக்கும் போது இதன் தாக்குதல் பெரிய அளவில் காணப்படுவதில்லை. ஒருவேளை தென்பட்டாலும் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம்.
  • சான்றிதழ் பெறப்படாத விதைகளை பயன்படுத்தும் போது இதன் தாக்குதல் ஆரம்ப நிலையிலே காணப்படுகிறது. அதுபோன்று பயன்படுத்தும் போது விதைகளை pymetrozine அல்லது imidacloprid+ ethiprole என்ற மருந்தினை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து விதைப்பு செய்ய வேண்டும்.
  • விதைப்பு செய்வதற்கு முன் அடி உரமாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பங்கொட்டை இடித்து இடவேண்டும்.
  • போதுமான பயிர் இடைவெளி இருக்க வேண்டும்.
  • வயலில் காணப்படும் களைகளை அவ்வப்போது அப்புறப்படுத்தி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • சில பயிறு வகைகள், பருத்தி மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்கள் ஊடு பயிராகவோ வயலை சுற்றியோ அல்லது வயல்களுக்கு அருகில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • 6:1 என்ற விகிதத்தில் எள் மற்றும் துவரை ஆகிய பயிர்களை ஒரே வயலில் சாகுபடி செய்ய வேண்டும்.
  • இந்த பூச்சிகள் தாக்குவதற்கு முன்னதாக மீன் அமிலம், பஞ்சகாவியா அல்லது வேப்ப எண்ணெய் மூன்று முதல் ஐந்து சதவீதம் தெளித்து வர வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளின் பகுதிகளை அவ்வப்போது சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • தாக்குதல் தீவிரமடையும் போது கீழ்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
  • Pymetrozine- 6 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Imidacloprid- 10 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Thiamethoxam- 8-10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Acephate+imidacloprid -25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Dimethoate - 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு 

மேலும் தகவலுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts