பயிர்களில் மணிச்சத்து குறைபாடு மற்றும் அதன் மேலாண்மை
|முன்னுரை:
- பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் மொத்த ஊட்டச் சத்துக்களில் மிகவும் முக்கியமானதாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து பார்க்கப்படுகிறது ஏனென்றால் மற்ற ஊட்டச்சத்துக்களை விட இவை செடிகளுக்கு சற்று அதிகமாக தேவைப்படுகிறது எனவே தான் இவற்றை முதன்மை ஊட்டச்சத்து என்று அழைப்பார்கள்.
- ஆங்கிலத்தில் பாஸ்பரஸ் என்று அழைக்கப்படும் மணிச்சத்து உரத்தினை பற்றி சற்று விரிவாக காண்போம்.
மணிச்சத்தின் பயன்கள்:
- பயிர்கள் தனக்குத் தேவையான உணவை தானே தயாரித்துக் கொள்ளும் ஒளிச்சேர்க்கை நிகழ்வுக்கு மணிச்சத்து இன்றியமையாதது.
- நல்ல வேர் வளர்ச்சி காணப்படும்
- செல்லின் ஒரு அங்கமாக திகழ்வததுடன் செல் பெருக்கத்திற்கு உதவுகிறது.
- செடிகளுக்கு தேவையான ஆற்றலை தருவதுடன் ஆற்றலை மற்ற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது.
- சில பயிர்களில் வளிமண்டல தழைச்சத்தை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்துகிறது.
- பயிர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, பூ பிடித்தல், பயிர்கள் ஒரே உயரத்தில் வளருதல், எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல் மற்றும் மகசூலின் தரத்தை நிர்ணயத்தில் என இதன் பயன்கள் எண்ணற்றது.
குறைபாட்டை எவ்வாறு கண்டறிவது:
- குன்றிய பயிர் வளர்ச்சி காணப்படும்
- இலைகளில் திட்டு திட்டாக வெளிர் சிகப்பு முதல் ஊதா நிற திட்டுக்கள் காணப்படும்.
- விதை உற்பத்தி மற்றும் அதன் திறன் பாதிக்கப்படும்.
ஏன் மணிச்சத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்...
- பொதுவாக இந்தியாவில் உள்ள பல்வேறு வகையான மண்ணில் காணப்படும் மணிச்சத்தின் அளவு பயிர்களுக்கு போதுமானதாக தான் உள்ளது. ஆனால் அவைகள் பயிர்கள் எடுத்துக் கொள்ளாத அளவிற்கு மண்ணில் மாற்றம் அடைந்துள்ளது.
- மேலும் நாம் செயற்கை உரம் மூலம் இடும் மணிச்சத்தில் 10-30 சதவீதம் மட்டுமே செடிகள் எடுத்துக் கொள்கிறது மற்ற உரங்கள் மண்ணில் பயன்படாத வடிவில் மாற்றப்படுகிறது.
- எனவே மண்ணில் புதைந்து கிடக்கும் மணிச்சத்து மற்றும் நாம் இடும் மணி சத்தையும் பயிர்களுக்கு சரியான தருணத்தில் சரியான முறையில் இடுவதன் மூலம் உர பயன்பாட்டை குறைத்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.
ஏன் மணிச்சத்து செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை...
- மண்ணில் காணப்படும் கரிம பொருட்களின் அளவு, கார அமிலத்தன்மை, மண் ஈரப்பதம், வெப்பம் மற்றும் காற்றோட்டம் முதலியவற்றை பொறுத்து செடிகளுக்கு கிடைக்கப்பெறும் மணி சத்தின் அளவு மாறுபடுகிறது.
- மண்ணின் கார அமிலத்தன்மை 6.5க்கு கீழ் இருப்பின் ராக் பாஸ்பேட் உரத்தினை இடுவது மண்ணிற்கும் செடிகளுக்கும் உகந்தது. ஏனென்றால் மண்ணின் அமிலத்தன்மை ராக் பாஸ்பேட்டை போதுமான அளவு கரைத்து செடிகளுக்கு கொடுக்கிறது.
- மண்ணின் கார அமிலத்தன்மை 6.5-7.5 வரை உள்ள வயல்களுக்கு டி ஏ பி பயன்படுத்தலாம்.
- கார அமிலத்தன்மை 7.5க்கு மேல் அதாவது உவர்/களர் நிலங்களுக்கு சூப்பர் பாஸ்பேட் இடுவது உகந்தது.
- வேறு என்ன உரங்கள் பயன்படுத்தலாம் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இன்று மாலை காண்போம்...
- இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன் பெற அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments:
கருத்துரையிடுக