google-site-verification: googled5cb964f606e7b2f.html பயிர்களை தாக்கும் கரையான்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

பயிர்களை தாக்கும் கரையான்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

முன்னுரை:

பொதுவாக இரண்டு வகையான கரையான்கள் உள்ளது ஒன்று பயிரை உண்ண கூடியது மற்றொன்று மரத்தின் தண்டுப் பகுதி அதாவது செல்லுலோஸ் நிறைந்த பகுதியை உண்ணும்.
பயிர் சாகுபடியை பாதிக்கும் கரையான்கள் வயலில் சுமார் 5 அடி ஆழம் வரை புற்றுக்களை அமைத்து வாழும் திறன் படைத்தது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

கோடை உழவு:

  • கோடைகாலத்தில் நிலத்தை ஆழமாக உழவு செய்வதால் நிலத்திற்கு கீழே காணப்படும் கரையான் புற்றுகள் அல்லது சுரங்கங்கள் அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தி தாக்குதலை குறைக்கலாம். இது மட்டும் அல்லாமல் கரையான்களை உண்ணக்கூடிய பறவைகள் அல்லது விலங்கினங்கள் இதனை உண்பதால் வெகுவாக இதன் எண்ணிக்கை நிலத்தில் குறையும்.

நிலத்தை சுத்தமாக பராமரித்தல்:

  • உழவு செய்வதற்கு முன்னதாக முந்தைய பயிர்களின் எச்சங்கள் அல்லது வேறு ஏதேனும் வகையான குப்பைகள் வயலில் இல்லாதவாறு நிலத்தை சுத்தம் செய்து பின்பு உழவு செய்ய வேண்டும். ஏனெனில்  குப்பைகள் கரையான்களின் பெருக்கத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.

உரம் பயன்பாடு:

  • நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் பயன்படுத்த வேண்டும். சரிவர மக்காத தொழு உரத்தில் காணப்படும் செல்லுலோஸ் மற்றும் அதன் ஈரப்பதம் கரையான்களின் இனப்பெருக்கத்திற்கு  உதவி புரியும்.

பயிர் சுழற்சி:

  • பயிர் சுழற்சி முறையை பின்பற்றுவதால் நிலத்தில் உள்ள கரையான்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கலாம்.

நீர் பாய்ச்சுதல்:

  • தொடர்ச்சியாக நீர் பாய்ச்சி நிலத்தின்  ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதால் நாளடைவில் கரையான்களின் எண்ணிக்கை குறையும். 

  • நீர் தேவையால் ஏற்படும் அழுத்தத்தினால் செடிகளில் கரையான்களின் தாக்குதல் அதிகமாக காணப்படும். உதாரணத்திற்கு சொட்டுநீர் பாசனத்தில் நீர் பாய்ச்சும் செடிகளில் அதிக கரையான் தாக்குதல்கள் காணப்படுகிறது வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்சும் செடிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது.
  • நிலத்தில் அதிக அளவு நீர் பாய்ச்சி நிலத்தில் காணப்படும் கரையான்களை மூழ்கடித்து இதனை கட்டுப்படுத்தலாம் இதன் மூலம் சுமார் 80 சதவீதம் வரை கட்டுப்படுத்தலாம் என ஆய்வுகள் சொல்கிறது.

களை மேலாண்மை:

  • வயல்களில் அதிகமாக களைகள் தென்பட்டால் நீர், ஊட்டச்சத்து மற்றும் வெப்ப நிலை குறைபாட்டால் பயிர்கள் எளிதில் கரையான் தாக்குதல்களுக்கு உட்படுகிறது.

ஊட்டச்சத்து மேலாண்மை:

  • பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரியான விகிதத்தில் அளிப்பதால் கரையான் தாக்குதல் குறையும்.

உயிர் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல்:

  • Beauveria bassiana மற்றும் Metarhizium anisopliae ஆகிய இரண்டு உயிர் பூஞ்சான கொல்லிகள் கரையான்களுக்கு எதிராக செயல்படும் தன்மை வாய்ந்தது. பூச்சி தாக்குதலை பொறுத்து ஏக்கருக்கு மூன்று முதல் ஐந்து லிட்டர் என்ற வீதத்தில் நீரில் விடலாம். இதைத்தவிர பல்வேறு வகையான நூற்புழுக்களும் 70-80 சதவீதம் வரை கரையான்களை கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது.
  • Bacillus sp மற்றும் Pseudomonas sp வெவ்வேறு பயிர்களில் வெவ்வேறு வகையான கரையான்களை கட்டுப்படுத்து.

இதர வழிமுறைகள்:

  • ஆமணக்கு அல்லது பிரண்டை செடியை வயலை சுற்றி வளர்ப்பதால் அதிலிருந்து வெளியிடப்படும் ஒரு வகை திரவத்தால் கரையான்கள் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • பாசன அல்லது மானாவாரி முறையில் சாகுபடி செய்யப்படும் நெல் வயல்களுக்கு அதிக அளவு வேப்பம் இலைகளை இட்டு பின்னர் சேர் உழவு ஓட்டுவதால் கரையான் தாக்குதல் வெகுவாக குறைக்கலாம்.
  • மாட்டு கோமியம், புகையிலை கரைசல், இருக்கு இலை கரைசல், ஐந்து சதவீதம் உப்பு கரைசல் போன்றவைகள் கரையான் இனப்பெருக்கத்திற்கு எதிராக செயல்பட்டு தாக்குதலை கட்டுப்படுத்துகிறது.

  • சுடு தண்ணீரில் உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றை கலந்து கரையான் காணப்படும் இடங்களில் நன்றாக சுத்தம் செய்து ஆழமாக ஊத்த வேண்டும்.
  • ஏக்கருக்கு 5 கிலோ சுண்ணாம்பு மற்றும் 5 கிலோ உப்பு இடுவதால் கரையான்களை சுமார் 65 சதவீதம் வரை கட்டுப்படுத்தலாம்.
  • மாட்டு தொழு உரத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற சாம்பலை அதிக அளவில் அடி உரமாக இடுவதால் கரையான்களை கட்டுப்படுத்தலாம்.
  • மர வகை பயிர்களுக்கு நிலத்திலிருந்து சுமார் 60 சென்டிமீட்டர் வரை டீசல் எண்ணெயை பயன்படுத்தி பெயிண்ட் அடிப்பது போன்று நன்றாக பூசி விட வேண்டும். இதனால் கரையான்கள் செடிகளை நெருங்காமல் இருக்கும்.
  • மரம் அல்லது செடிகளின் துளைகளில் காணப்படும் கரையான்களை கட்டுப்படுத்த தார் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய இரண்டையும் 2:1  என்ற விகிதத்தில் தயார் செய்து துளைகளை அடைக்க வேண்டும்.
  • கரையான் புற்றுகளில் குப்பைகளை வைத்து புகை மூட்டுவதால் பெரும்பான்மை வகை கரையான்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

விதை நேர்த்தி:

  • கரையான்கள் அதிகம் காணப்படும் வயல்களில் சாகுபடி செய்வதற்கு முன்னதாக விதைகளை Chlorpyriphos அல்லது imidacloprid அல்லது Thiamethoxam கொண்டு விதை நேர்த்தி செய்வதால் செடிகள் தாங்கி வளரும் தன்மை பெறுகிறது.

ரசாயன பூச்சிக்கொல்லி பயன்படுத்துதல்:

  • Chlorpyriphos
  • Thiamethoxam
  • Imidacloprid
  • Acephate+ Imidacloprid
  • Clothianidin

போன்ற மருந்துகள் கரையான்களுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts