google-site-verification: googled5cb964f606e7b2f.html மல்லிகை பயிரைத் தாக்கும் கழுத்து அழுகல்/ வேர் அழுகல் நோய் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 21 பிப்ரவரி, 2024

மல்லிகை பயிரைத் தாக்கும் கழுத்து அழுகல்/ வேர் அழுகல் நோய்

கழுத்து அழுகல்/ வேர் அழுகல் நோய்...

        இந்த நோய் Sclerotium rolfsii என்ற மண்ணில் வாழும் தீங்கு விளைவிக்க கூடிய பூஞ்சான வகையாகும். சுமார் 500க்கும் மேற்பட்ட செடி வகைகளை தாக்கி அழிக்க கூடிய வல்லமை படைத்த இந்த வகை பூஞ்சானத்தைப் பற்றி சற்று விரிவாக காண்போம்.

  • நெல், கத்தரி, தக்காளி, மக்காச்சோளம், நிலக்கடலை, வெள்ளரி, பீன்ஸ் சூரியகாந்தி, தர்பூசணி மற்றும் பல பயிர்களில் இந்த பூஞ்சானம் நோயை ஏற்படுத்துகிறது.
  • பாதிப்புக்கு உள்ளாகும் பயிர்களை பொறுத்து இந்த பூஞ்சான நோயை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு கழுத்து அழுகல், வாடல் நோய், வேர் அழுகல் நோய், Sclerotium வாடல் நோய், நாற்று அழுகல் நோய், கருகல் நோய், நாற்றங்கால் கருகல் நோய் என பல்வேறு பெயர்களில் இதனை வகைப்படுத்தலாம்.
  • மண்ணில் வாழக்கூடிய இந்த பூஞ்சானம் காற்று, தண்ணீர், மண் மற்றும் பண்ணை உபகரணங்களால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகிறது.
  • பாதிப்புகளின் தீவிரத்தை பொறுத்து சுமார் 70-75% வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் திறன் படைத்தது.

நோயின் அறிகுறிகள்:

  • ஆரம்ப நிலையின் போது செடியின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் பச்சை நிறத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றமடைகிறது.
  • பிறகு இந்த நிற மாற்றம் அடுத்தடுத்த இலைகளுக்கு பரவுதுடன் இலைகள் மஞ்சளாக மாறி உதிர ஆரம்பிக்கிறது.
  • செடிகளை உலுக்கினால் இலைகள் கொட்டும்.
  • நாளடைவில் செடிகள் இறந்து விடுகிறது.
  • செடிகளின் வளர்ச்சி அல்லது வயது பாகுபாடின்றி அனைத்துச் செடிகளையும் தாக்கக்கூடிய வல்லமை கொண்டது.
  • இறந்த செடிகளை அல்லது இறக்கும் தருணத்தில் உள்ள செடிகளை பிடுங்கிப் பார்க்கும்போது வேர்ப்பகுதியில் வெள்ளை நிற பூஞ்சான வளர்ச்சி காணப்படுகிறது.
  • அது மட்டுமல்லாமல் வெள்ளை நிறத்தில் கடுகு போன்ற அமைப்புடைய Sclerotium இழை முடிச்சுகள் காணப்படுகிறது.
  • உதிரும் நிலையில் இந்த முடிச்சுகள் பழுப்பு நிறமாக மாற்றம் அடைகிறது.
  • தாக்குதலின் தீவிரம் அதிகமாகும் போது இந்த பூஞ்சான வளர்ச்சி தண்டுப் பகுதியிலும் காணப்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட செடிகளின் வேர்களை உடைத்துப் பார்த்தால் அதன் உட் திசுக்களில் நிற மாற்றத்தை காண முடிகிறது.
  • அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட பகுதியில்  மிகவும் குறைந்த அளவு துர்நாற்றத்தை உணர முடிகிறது.



கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • இந்த நோயினை கட்டுப்படுத்துவது சற்று கடினமாக இருப்பினும் ஒருங்கிணைந்த முறையில் நோய் மேலாண்மை முறையை பின்பற்றுவதால் செடிகள் தாங்கி வளரும் தன்மை பெறுகிறது.
  • கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அனைத்தும் அநேக பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
  • குறுகிய கால பயிர் சாகுபடி செய்யும் போது இதன் தாக்குதல் தென்பட்டால் முடிந்த அளவு ஒரு வருடத்திற்கு மீண்டும் அதே பயிரை சாகுபடி செய்வதை தவிர்க்கவும்.
  • பயிர் சுழற்சி மேற்கொள்வதால் மண்ணின் தன்மை மற்றும் வளம் மேம்படுவதுடன் மண்ணில் இருக்கக்கூடிய பூஞ்சானங்கள் மாற்று பயிரை தாக்க முடியாமல் மண்ணிலே இருந்து அழியக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • மாற்று பயிராக சின்ன வெங்காயம், பருத்தி, கம்பு போன்ற பயிர்களை பயிரிடலாம்.
  • கோடை பருவத்தின் போது நிலத்தை நன்கு நீர் பாய்ச்சி பாலித்தீன் போர்வைகளை கொண்டு சுமார் ஒரு மாத காலம் மூடி வைப்பதால் மண்ணின் வெப்பநிலை அதிகரிக்கப்பட்டு அதில் உயிர் வாழும் பூஞ்சானங்களை அழித்திட இயலும். இதே முறையில் பல்வேறு மருந்துகளை பயன்படுத்தியும் பூஞ்சானங்களை அழிக்கலாம்.
  • பொதுவாக இந்த வகை பூஞ்சானங்கள் மண்ணின் வளமான பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. அதாவது மண்ணின் மேற்பகுதியில் 10 சென்டிமீட்டர் வரையிலும் காணப்படுகிறது. எனவே கோடைகாலங்களில் ஒற்றைக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்வதால்  பூஞ்சானங்கள் மண்ணின் ஆழமான பகுதிக்கு தள்ளப்பட்டு தாக்குதலின் தீவிரத்தை குறைக்கலாம்.
  • பல்லாண்டு பயிர்களை சாகுபடி செய்யும் போது செடிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மண்ணை மேம்படுத்தக்கூடிய பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்யலாம்.
  • மண்ணின் அதிகபட்ச இருப்பதும் இந்த பூஞ்சான தாக்குதல்களை மேலும் அதிகப்படுத்துவதால் சொட்டுநீர் பாசனம் வழியாக நீர் பாய்ச்சுவது உகந்தது.
  • வாய்க்கால் வாய்க்கால்  மூலம் பாசனம் செய்யும் போது நீர் நேரடியாக சென்று தண்டு பகுதியில் படாமல் இருக்கும் படி மண் அணைக்க வேண்டும்.
  • முடிந்தால் வாய்க்கால் பாசனத்தை தவிர்க்கவும் இது பூஞ்சான தாக்குதல் மேலும் அதிகப்படுத்தும்.
  • இந்த பூஞ்சானம் செடிகளின் வேர்களை தாக்குவதால் செடிகளுக்கு ஏற்படும் phenol வேதிப்பொருள் குறைபாட்டால் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்த வகை வேதிப்பொருள் இயற்கை உரங்களில் மிகுந்து காணப்படுவதால் இயற்கை உரங்களை அதிக அளவு பயன்படுத்த வேண்டும்.
  • மண்புழு உரம் /கம்போஸ்ட் /நன்கு மக்கிய தொழு உரம் / கோழி எருவை அதிக அளவு பயன்படுத்த வேண்டும். இவற்றை பயன்படுத்தும் போது இந்த பூஞ்சானத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக்கூடிய உயிர் பூஞ்சான கொல்லிகள் Trichoderma harzianum/viridae, Pseudomonas fluorescence மற்றும் Bacillus subtills முதலியவற்றை பயன்படுத்தி எருவை ஊட்டம் ஏற்றி இட வேண்டும்.
  • இலுப்பை விதை புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு மற்றும் வேப்பங்கொட்டை புண்ணாக்கு இவற்றில் ஏதேனும் ஒன்றை அதிக அளவில் பயன்படுத்துவதால் பூஞ்சான வளர்ச்சியை மட்டுப்படுத்தலாம்.
  • விதைகளை அல்லது நடவுப்பொருட்களை நேர்த்தி செய்து நடவு செய்யலாம். விதை/நாற்றுகள்/செடிகளை நேர்த்தி செய்திட கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு மருந்துகளை பயன்படுத்தலாம்.
  • Carboxin + Thiram - 2 கிராம்/கிலோ விதை
  • Tebuconazole -2 கிராம்/கிலோ விதை
  • Bacillus subtills +Trichoderma harzianum/viridae- 5-8 கிராம்/கிலோ விதை
  • தீவிர நோய் தாக்குதலின் போது கீழ்க்கண்ட பூஞ்சான கொல்லிகளில்  ஏதேனும் இரண்டு அல்லது மூன்றை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்.(வேரில் ஊற்றவும்)
  • Carboxin + Thiram - 3 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Tebuconazole+ Trifloxystrobin - 10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Cymoxanil + Mancozeb - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Propiconazole+ Hexaconazole - 1+2 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு

இது போன்று வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன் பெறலாம்.


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts