google-site-verification: googled5cb964f606e7b2f.html பயிர்களில் கரையான் தாக்குதலின் அறிகுறிகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 28 பிப்ரவரி, 2024

பயிர்களில் கரையான் தாக்குதலின் அறிகுறிகள்

தானிய வகை பயிர்கள்:
மக்காச்சோளம்:


  • தரை மட்டத்திலிருந்து 10 முதல் 15 சென்டிமீட்டர் வரை தண்டுப் பகுதியில் மண்ணினால் தாள் போன்று சூழ்ந்திருக்கும். 
  • மண் பகுதியை அகற்றி பார்க்கும் போது தண்டுப் பகுதியில் கரையான்கள் சுரண்டி தின்று இருக்கும்.
  • இதில் மண் துகள்களை காண இயலும்.
  • இந்த வகை செடிகள் அதிக காற்று வீசும்போது எளிதில் சாய்ந்து விடும்.
  • மணிகள் முதிர்ச்சி அடையும் தருணத்தில் ஏற்படும் தாக்குதலால் மகசூல் இழப்பீடு ஏற்படுவது உடன் தரம் குறைகிறது.
  • பயிர்களின் ஆரம்ப நிலையில் ஏற்படும் தாக்குதலால் 100 சதவீதம் வரை இழப்பீடு ஏற்படும்.
  • முதிர்ச்சி அடைந்த செடிகளை பாதிக்கும் போது சுமார் 15 முதல் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது என ஆய்வு அறிக்கை கூறுகிறது.
  • மக்காச்சோள பயிரை  பொறுத்தவரையில் பருவ பருவ மழையின் ஆரம்ப நிலையில் தாக்குதல்கள் ஆரம்பித்து பருவமழை குறைய தொடங்கியது உடன் கரையான் தாக்குதல் குறையும்.

நெல்:

  • பொதுவாக கரையான்கள் நெல் வயல்கள் அதிகம் பாதிப்பதில்லை. நீர் பற்றாக்குறை உள்ள வயல்களின் வரப்புகளுக்கு அருகில் அல்லது  மண்ணுக்கு அடியில் கரையான் புற்றுகள் காணப்படும்.
  • நிலத்தில் இறந்த பயிர் எட்சங்கள் காணப்பட்டது எனில் அதை உண்டு வாழும். போதுமான தீவன வசதி இல்லாத போது வறட்சியாக காணப்படும் நிலத்தில் உள்ள நெற் பயிர்களின் கழுத்துப் பகுதியை சுரண்டி உண்ணும்.

இதர தானிய பயிர்கள்:

  • இதர தானிய பயிர்களான சோளம், கம்பு மற்றும் இதர பயிர்களில் கரையான்கள் அதன் கழுத்துப் பகுதி மற்றும் வேர் பகுதியை தாக்குவதால் செடிகள் வாடி கீழே விழுந்து இறந்து விடுகிறது.

நிலக்கடலை:

  • தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மணல் பாங்கான பகுதியில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலையில் சுமார் 10 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு கரையான்களால் ஏற்படுகிறது.
  • இதன் வேர் மட்டும் தண்டு பகுதியில் சுரண்டி ஒழுங்கற்ற வடிவில் சுரங்கங்களை ஏற்படுத்துகிறது.
  • இதனால் விழுதுகளின் எண்ணிக்கை குறைந்து காய்ப்பு திறன் மிகவும் குறையும். அது மட்டும் அன்றி இதனால் ஏற்படும் பாதிப்பு இதர பூஞ்சான வகைகளை எளிதில் ஈர்க்கக் கூடியதாக திகழ்கிறது.

ஆமணக்கு:

  • ஆமணக்கு பயிரை ஆரம்ப நிலையில் இருந்து இறுதி நிலை வரை கூட கரையான்கள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேர் மட்டும் தண்டுப் பகுதியை சுரண்டி உண்பதால் இலைகள் மஞ்சள் ஆகுதல், செடிகள் வாடுதல் மற்றும் இலை உதிர்தல் காணப்படும்.
  • தண்டுகளை தரை மட்டத்திலிருந்து சுமார் 90 சென்டி மீட்டர் வரை தாக்கி உண்ண உடையது. இதனால் சராசரியாக 20 முதல் 60% மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

கரும்பு:

  • கரும்பின் ஆரம்ப நிலை கரையான் தாக்குதல்களுக்கு மிகவும் உகந்தது. பருவ மழைக்கு முன் நாம் நடவு செய்யும் கரும்பு கரணையின் இரு பக்கமும் உள்ள வெட்டுப் பகுதியை துளைத்து உண்ணும். துவாரம் இடப்பட்ட பகுதியில் மண்கள் நிறைந்து காணப்படும்.
  • இதனால் வளர்ந்து வரும் இளம் தளிர் மற்றும் வளர இருக்கும் கண்கள் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகி வளர்ச்சி பாதிக்கும்.
  • அதுமட்டுமின்றி வேர் பகுதியையும் சேர்த்து உண்ணுவதால் சில நேரங்களில் செடிகள் இறந்துவிடும்.
  • வளரும் பருவத்தில் உள்ள விதை கரணைகள் 25% வரை பாதிப்பு அடைகிறது.
  • வளர்ச்சி அடைந்த செடிகளில் பின் நாளில் ஏற்படும் கரையான் பாதிப்புகளால் 20% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

பருத்தி:


  • மிகவும் உலர்ந்த மண்ணில் கரையான் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
  • பொதுவாக இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் சாகுபடி செய்யப்படும் பருத்தியில் தாக்குதல்கள் காணப்படுகிறது.
  • கரையான் தாக்குதலால் 25% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
  • விதைகள் முளைத்து வரும் தருணத்தில் கரையான் தாக்குதலால் தரை மட்டத்தில் செடிகளை கத்தரித்து விடுகிறது.
  • வளர்ந்த செடிகளின் வேர் மற்றும் தண்டு பகுதி துளைத்து உண்பதால் இலைகள் மஞ்சளாகி உதிர்தல் அல்லது செடிகள் வாடி இறந்து விடுகிறது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts