சின்ன வெங்காயத்தில் ஊதா கொப்புள நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
- சமையலறையின் அரசி என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயம் காய்கறி பயிர்களில் மிகவும் பழமையான காய்கறி பயிர் ஒன்றாகும்.
- இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.25 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்கள் வெங்காய உற்பத்தியை பாதிப்படைய செய்கிறது அதில் முக்கியமானதாக ஊதா கொப்புள நோய் பார்க்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
நோய் தாக்குதல்/ பரவுவதற்கு உகந்த தட்பவெட்ப சூழ்நிலை:
- ஜூன் ஜூலை மற்றும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் இந்த நோய் தாக்குதல் அதிகம் காணப்படும்.
- இந்த நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சானம் பெரும்பான்மையாக மண்ணிலும் ஒரு சில நேரங்களில் பயிர் எச்சங்களில் சுமார் ஒரு வருடம் வரை உயிருடன் இருக்கக் கூடியதாகும்.
- நீர் பாய்ச்சுதல், காற்று, பண்ணைகளில் பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் மற்றும் பூச்சிகளால் இந்த பூஞ்சானம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது.
- உகந்த தட்பவெப்ப சூழ்நிலை அதாவது வெப்பநிலை 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் காற்று ஈரப்பதம் 80 முதல் 90% இருக்கும்போது இன் நோய் தாக்குதல் மற்றும் பரவுதல் அதிகம் காணப்படும்.
- கடுமையான பனிப்பொழிவு இந்நோய் தாக்குதலுக்கு மிகவும் உகந்ததாகும்.
- அது போன்ற சமயங்களில் காலை வேளையில் வயலில் இறங்கி வேலை செய்வதை தவிர்க்கவும்.
- பெரும்பான்மையாக இந்நோய் ஆனது மண் மூலம் பரவுவதால் செடிகளின் அடி இலைகள் முதலில் பாதிப்பு அடைகிறது.
நோய் தாக்குதலின் அறிகுறிகள்:
- பொதுவாக இந்த நோயானது முதிர்ந்த இலைகள் அதாவது 30 நாட்களுக்கு மேற்பட்ட பயிரில் மற்றும் பூ தண்டுகளில் தென்படும்.
- ஆரம்பத்தில் ஒழுங்கற்ற சற்று பள்ளமான வெண்மை நிற புள்ளிகள் உருவாகும்.
- சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை நிலவும் போது இப்புண்கள் நீள் வட்ட வடிவில் பெரிதாகும்.
- புண்களின் மையப்பகுதி அடர் ஊதா நிறத்தில் மாற்றம் அடையும் அதனை சுற்றி மஞ்சள் முதல் வெண்மை நிற எல்லைப் பகுதி காணப்படும்.
- நாளடைவில் புண்கள் பெரிதாக வளர்வது உடன் அடர் ஊதா நிற மையப்பகுதி பழுப்பு முதல் சாம்பல் நிறத்தில் மாற்றம் அடையும்.
- நாளடைவில் புண்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து உரு குலைந்து இலைகள் மற்றும் மலர் தண்டுகளை காய்ந்து கீழே விழ செய்கிறது.
- இதனால் போதுமான உணவு உற்பத்தி நடைபெறாமல் 40-50 சதவீதம் அளவிற்கு மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சானம் விதை கிழங்குகளில் நான்கு மாதங்கள் வரை கூட வாழக்கூடிய திறன் படைத்தது. எனவே தேர்வு செய்யவும் கிழங்குகளில் நோய் தாக்குதல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
- பருவத்திற்கு 15 நாட்களுக்கு முன்பே நடவு மேற்கொள்வதால் ஓரளவிற்கு நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.
- நடவு செய்வதற்கு முன்பு நிலத்தின் நன்கு ஆழமாக இரண்டு முறை உழவு செய்து பூஞ்சானங்களை சூரிய வெப்ப நிலையில் அழிக்க முயற்சி செய்யலாம்.
- நடவு செய்யும்போது பயிர் இடைவெளியை சற்று அதிகப்படுத்தி போதுமான அளவு காற்றோட்ட வசதியை ஏற்படுத்தவும் இதனால் தாக்குதல் சற்று குறையும்.
- வயலில் களைகள் வளர்வதை தவிர்க்கவும் அவ்வப்போது களைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் அறுவடை செய்த பிறகு சாகுபடி நிலத்தில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
- காலை நேரங்களில் உரமிடுதல், களைகளை அகற்றுதல் மற்றும் மருந்து அடித்தல் போன்ற பணிகளை தவிர்ப்பது நல்லது.
- வருடத்திற்கு ஒரு முறை பயிர் சுழற்சி கண்டிப்பாக மேற்கொள்வது அவசியம்.
- 30 முதல் 40 நாட்கள் வயது உடைய செடிகளுக்கு ஏக்கருக்கு ஐந்து கிலோ/லிட்டர் Trichoderma மற்றும் Pseudomonas நீரில் கரைத்து விடவும்.
- கீழ்க்கண்ட பூஞ்சான கொல்லிகள் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
- Mancozeb - 30 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Tebuconazole - 10 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Difenconazole- 10 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Tebuconazole+Trifloxystrobin - 10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Mettiram+ Pyroclostrobin - 50 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Cymoxanil+Mancozeb-10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
மேலும் தகவலுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
0 Comments:
கருத்துரையிடுக