google-site-verification: googled5cb964f606e7b2f.html ஜனவரி 2024 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 31 ஜனவரி, 2024

காய்கறி பயிர்களில் கோண வடிவ காய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கோண வடிவ காய்கள் தோன்ற காரணங்கள் :

1. சீரற்ற மகரந்த சேர்க்கை

-

1. இளம் காய்கள் / பூக்கள் ஒழுங்கற்ற மகரந்த சேர்க்கையினால் நுனிபகுதியிலிருந்து பழுப்பு நிறமாகி சுருங்கி கருகி பின்னர் உதிரும்.

2. சீரற்ற / போதுமான மகரந்த சேர்க்கை இல்லாததால் கருமுட்டை போதிய அளவு வளர்ச்சியின்றி ஒழுங்கற்ற / சிதைந்த வடிவில் காய்கள்/ பழங்களை உருவாக்குகிறது.

2. போரான் சத்து குறைபாடு

-

1. மண்ணின் கார அமில தன்மை அதிகமாக இருப்பதால் போதுமான போரான் சத்து செடிகளுக்கு கிடைக்காது.

2. இதனால் இலைகள் சற்று தடித்து ஒழுங்கற்ற வடிவில் காணப்படும்.

3. பழங்களில்/ காய்களில் வெடிப்புகள் தோன்றும்.

3. கால்சியம் சத்து குறைபாடு

-

1. குறைந்த கணு இடைவெளி, குன்றிய செடி வளர்ச்சி, இலைகள் கீழ்புறமாக சுருங்குதல் மற்றும் புதிய வெள்ளை வேர்களின் வளர்ச்சியின்றி காணப்படுதல்

2. நாளடைவில் காய்கள்/ பழங்களில் அழுகல் ஏற்படும் (BER)


4. தட்பவெப்ப சூழ்நிலை

-

பூக்கும் தருணத்தில் அதிக வெப்பநிலை / அதிக மழைப்பொழிவு மகரந்த சேர்க்கைக்கு சாதகமற்றதாக திகழ்வதால் குறைந்த பூ பிடித்தம் மற்றும் ஒழுங்கற்ற காய்களை உருவாக்கும்.

5. பூச்சி மற்றும் நோய்     தாக்குதல்

-

பழ ஈ தாக்குவதால் பெரும்பான்மையாக இவ்வகையான காய்கள் உருவாகிறது. இருப்பினும் பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினாலும் மறைமுகமாக காய்கள் பாதிக்கப்படுகிறது.

 

6. சில இரகங்கள் இயற்கையாகவே மரபியல் காரணங்களினால் சிதைந்த/ ஒழுங்கற்ற   காய்களை தோற்றுவிக்கிறது.

7. தவறான மருந்துகளை பூ பிடிக்கும் தருணத்தில்; தெளிப்பதால்; பூக்களின் மகரந்த

    சேர்க்கையில் மாறுதல் ஏற்பட்டு பழ உற்பத்தியில் சிதைவு ஏற்படுகிறது.

8. சிறிய காய்களில் காயங்கள் ஏற்படுவதால் ஒழுங்கற்ற வளர்ச்சியை காணலாம்.

 

ஒருங்கிணைந்த மேலாண்மை :

  • சான்றிதழ் பெறப்பட்ட இரகங்களை தேர்வு செய்தல்
  • மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்க தேனி பெட்டிகளை ஆங்காங்கே 4-5 எண்கள் இடுதல் (அல்லது) கருவுறாக்கனி கிரகங்களை தேர்வு செய்து பயிரிடுதல்
  • அதிக வெப்பநிலை/ மழை மகரந்த சேர்க்கையை பாதிப்பால் அதற்கேற்றவாறு நடவு செய்யும் பருவத்தை தேர்வு செய்தல்
  • உயிர் உரங்கள், உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை மக்கிய தொழு உரத்துடன் ஊட்டமேற்றி அடியுரமாக இடுவதால் மண்ணின் தன்மை மற்றும் வளத்தினை மேம்படுத்தி இதர ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெற செய்தல்.
  • மண் பரிசோதனை அடிப்படையில் நுண்ணூட்டச்சத்தை ஏக்கருக்கு 5-10 கிலோ  வீதம் அடியுரமாக இடுதல்
  • பூ பிடிக்கும் தருணத்தில் மருந்துகள் தெளிப்பதை தவிர்த்தல்
  • போதுமான அளவு போரான் மற்றும் கால்சியம் இடுதல் (ஏக்கருக்கு 2 கிலோ கால்சியம் சல்பேட் அடியுரம் இடுதல் மற்றும் நடவு செய்த 30, 45 மற்றும் 60 நாட்களில் CaNo3/Cacl -ஐ இலை வழியாகவும் தெளிக்கலாம்) 
  • சரியான இடைவெளியில் நீர் பாய்ச்சுதலை உறுதி செய்தல் அதுவும் பூ பிடிக்கும் தருணத்தில் செய்ய வேண்டும்.
  • வயலை சுத்தமாக வைத்தல், நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுக்குள் வைத்தல்.
  • மண்ணின் கார அமில தன்மையை சரி செய்தல் அடியுரமாக அல்லது இலை வழியாக போரான் சத்தை கொடுக்கலாம்.
  • செடியின் 15,30 மற்றும் 45 நாட்களில் கீழ்க்காணும் வளர்ச்சி ஊக்கியை தெளிக்கலாம்.
  • NAA- 0.5 ml/ 10 lit water
  • 13:00:45- 50 g/ 10 lit water
  • பழ ஈக்களை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியம்.  (ஊட்டச்சத்து மற்றும் பழ ஈக்களை கட்டுப்படுத்த ஏற்கனவே உழவன் நண்பன் குழுவில்  பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை காணவும்)

மேலும் தகவலுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

வெள்ளி, 26 ஜனவரி, 2024

பயிர் சுழற்சியின் முக்கியத்துவம்-விரிவான தொகுப்பு

பயிர் சுழற்சி என்றால் என்ன...

  • பயிர் சுழற்சி என்பது நமது விளை நிலத்தில் குறிப்பிட்ட வயலில் தொடர்ச்சியாக அல்லது அடுத்தடுத்த என்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே தீர்மானிப்பது ஆகும்.
  • பயிர் சுழற்சி என்பது மிகவும் பழமையான சாகுபடி முறைகளில் ஒன்றாகும். ஆனால் தற்போது விவசாயிகள் இதை பெரிதளவில் கருத்தில் கொள்வதில்லை. ஆனால் இதை முறைப் படியாக பின்பற்றும் போது இதன் மூலம் நமக்கும் மண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எண்ணற்ற பயன்களை தருகிறது.
  • நமது வயலின் அமைப்பு, மண் தன்மை, கிடைக்க பெறும் நீரின் தன்மை மற்றும் அளவு, மண் வளம், நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை, பருவம், நமது வயலில் தொடர்ச்சியாக காணப்படும் களைகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல், நுகர்வோர்களின் தேவை என பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு தான் பயிர் சுழற்சி மேற்கொள்ள வேண்டும்.

பயிர் சுழற்சியின் பயன்கள்/ முக்கியத்துவம்:

1. ஊட்டச்சத்துக்கள் சுழற்சி அடைதல்:

  • ஒவ்வொரு பயிரும் குறிப்பிட்ட சில வகை ஊட்டச்சத்துக்களை அதிகம் மண்ணில் இருந்து எடுத்துக் கொள்ளும். ஆனால் மண்ணிற்கும் பயிருக்கும் தேவையான உர அளவை அதற்குத் தேவையான விகிதத்தில் நாம் இடுவதில்லை. 
  • இதனால் குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக்கள் குறிப்பிட்ட சில பயிர்களால் அதிகம் எடுத்துக் கொள்ளப்பட்டு அது மண்ணில் மிக குறைவான அளவில் காணப்படும்.
  • ஒரே பயிரை தொடர்ச்சியாக ஒரே நிலத்தில் பயிர் செய்வதால் நாளடைவில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுகிறது.
  • உதாரணத்திற்கு வாழை சாகுபடி செய்யும் போது அது அதிக அளவிலான பொட்டாஸ் சத்தினை மண்ணில் இருந்து எடுத்துக் கொள்கிறது. ஒரே வயலில் மீண்டும் நாளை சாகுபடி செய்யும் போது அது மேலும் சத்துக்களை உறிஞ்சி கொண்டு மண்ணின் வளத்தை குறைத்து விடுகிறது.

2. களைகள் கட்டுப்பாடு:

  • நாம் பயிர் சுழற்சி மேற்கொள்வதால் களைகளை எளிதில் கட்டுப்படுத்தலாம்.எப்படி என்றால் ஒவ்வொரு பயிரும் வெவ்வேறு அளவு நீர் தேவை, உர தேவை வேர் வளர்ச்சி, வளர்ச்சி தன்மை மற்றும் பல விஷயங்கள் மாறுபடுவதால் களைகளும் பயிருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. 

  • எனவே பயிற்சி மேற்கொள்வதாலும் தலைகளை கட்டுக்குள் வைக்கலாம்.
  • உதாரணத்திற்கு வயலில் காணப்படும் சுனை புல்லை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக சிகப்பு சோளம் விதைப்பதால்  அதன் வேரிலிருந்து வரக்கூடிய திரவம் குறிப்பிட்ட வகை புல் வகைகளை கட்டுப்படுத்தும்.

3. நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு:

  • ஒரே விதமான நோய் அல்லது பூச்சிகள் நமது பயிரை தாக்குவதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
  • ஒவ்வொரு பயிரும் ஒரு சில வகையான நோய் மற்றும் பூச்சி தாக்குதல் மட்டும் கொண்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது ஒரே பயிரை தொடர்ச்சியாக நாம் பயிரிடுவதால் நோய் அல்லது பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தா வண்ணம் எதிர்ப்பு திறன் பெற்று விடுகிறது இதனால் சாகுபடி செலவு மிக அதிகமாகிறது.
  • பயிர் சுழற்சியை மேற்கொள்வதால் மண்ணில் குறிப்பிட்ட சில நோய் அல்லது  பூச்சிகளின் வாழ்க்கை படிநிலைகள் அதிகமாவதை தவிர்க்கலாம்.
  • உதாரணத்திற்கு சில பயிர் மற்றும் அதை தாக்கும் நோய்/ பூச்சிகள் கொண்டுள்ள எதிர்ப்பு திறன்.
  • வாழை- பனாமா வாடல் நோய்
  • மல்லிகை- மல்லிகை மலரில் மிட்ஜ் பூச்சி தாக்குதல்
  • கத்தரி- குருத்து மற்றும் காய்ப்புழு
  • தக்காளி- லீப் மைனர் எனப்படும் இலை துளைப்பான்
  • சின்ன- வெங்காயம் திருகல்/ தவளை நோய்
  • மிளகாய்- முரணை சிலந்தி பேன் தாக்குதல்
  • அனைத்து விதமான கொடி காய்கறி பயிர்களில்- இலை சுரங்க பூச்சி தாக்குதல்
  • மக்காச்சோளம்- படைப்புழு
  • இது மட்டும் அன்றி பல்வேறு பயிர்களில் வைரஸ் நோய்கள் மற்றும் பல பூச்சி தாக்குதல்கள் கட்டுப்படுத்தா வண்ணம் காணப்படுகிறது இதற்கு முதன்மையான காரணம் தொடர்ச்சியாக ஒரே பயிரை ஒரே நிலத்தில் சாகுபடி செய்து வருவதால் தான்.

4. மண்ணின் தன்மை மற்றும் வளத்தை மேம்படுத்துதல்:

பயிர் சுழற்சி மேற்கொள்வதால் ஒவ்வொரு பயிரும் அதற்கே உரித்தான வேர் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் மாறுபடும். இதனால் மண்ணில் ஊட்டச்சத்துக்கள் குறைபாடுகள் இன்றி அனைத்து ஊட்டச் சத்துகளும் சராசரியாக காணப்படும் மேலும் வேர் வளர்ச்சி மண் கட்டிகளை உடைத்து மண்ணிற்கு காற்றோட்டம் ஏற்படுத்தி தருவதால் அதன் தன்மை மேம்படுகிறது.

5. மேம்பட்ட பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல்:

  • பயிர் சுழற்சி செய்வதால் மண்ணில் ஊட்டச்சத்துக்கள் சராசரியான அளவில் காணப்படுகிறது மேலும் மண் தன்மை மற்றும் பயிர் வளர்ச்சி போதுமான அளவு காணப்படும் என்பதை நாம் ஏற்கனவே கண்டோம்.
  • அதேபோன்று குறைந்த அளவு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுவதால் ஒட்டுமொத்தமாக நல்ல பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிப்பை நாம் காணலாம்.

6.சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவும்:

  • தொடர்ச்சியாக ஒரே பயிரை பயிரிடுவதால் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு சற்று அதிகமாக காணப்படும். இதை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் நன்மை செய்யக்கூடிய பூச்சிகளின் வரவை தடை செய்கிறது.
  • பயிர் சுழற்சி மேற்கொள்வதால் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைத்து நன்மை செய்யும் பூச்சிகளின் வரவை அதிகப்படுத்தலாம்.

இதர சில பயன்கள்:

  • பயிர் சுழற்சி செய்வதால் மண் தன்மை மேம்படுவதுடன் மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது.
  • பயிர் சுழற்சியில் பயிறு வகை பயிர்களை பயிரிடுவதால் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தி தழைச்சத்து உர தேவையை குறைக்கிறது.
  • சில பயிறு வகை பயிர்கள் நிலத்தை போர்வை போன்று மூடுவதால் களைகளை கட்டுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வைக்கிறது.
  • இயற்கை விவசாயத்தில் நீர் சுழற்சி என்பது ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது.
  • நுகர்வோர் தேவை மற்றும் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு பயிர் சுழற்சி மேற்கொள்ளும் போது விலை பொருட்களுக்கு நல்ல சந்தை மதிப்பை விவசாயிகள் பெறலாம்.
இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் சார்ந்த சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

செவ்வாய், 23 ஜனவரி, 2024

பொட்டாஷ் உயிர் உரத்தின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்

திரவ பொட்டாஷ் உயிர் உரம்:

  • பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற திரவ பொட்டாஷ் நுண்ணுயிர்கள் மண்ணில் இருக்கும். கரையாத அல்லது பயிர்களுக்கு கிடைக்கப் பெறாத சாம்பல் சத்தை பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கிறது. 
  • இத்தகைய பாக்டீரியா/ பூஞ்சைகளும் கரிம அமிலங்களான டார்டாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் ஆக்சாலிக் அமிலம் மண்ணில் இருக்கும் பொட்டாஷை கரைத்து பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

இதன் நன்மைகள்:

  • அனைத்து விதமான மண்ணிலும் இத்தகைய பாக்டீரியா சாம்பல் சத்தை பயிர்களுக்கு எடுத்து கொடுக்கிறது.
  • பயிரில் ஒளிச் சேர்க்கையை அதிகரிக்கிறது. இதனால் 15-25% வரை கூடுதல் மகசூல் பெறலாம்.
  • பயிர்களுக்கு வறட்சியை தாங்கும் தன்மையை அதிகரிக்கும்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளில் சுவையை மேம்படுத்தும். இதனால் விளை பொருட்களின் தரம் உயருகிறது.
  • சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது.
  • மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • இவை மண்ணில் நுண்ணுயிரி எதிர்ப்புகளை (Antibiotics) உற்பத்தி செய்வதால் உயிர் கட்டுப்பாட்டு காரணியாகவும் செயல்படுகிறது.

பயன்படுத்தும் முறைகள் :

விதை நேர்த்தி செய்தல்:

1 கிலோ விதைக்கு 2.5 மிலி முதல் 3.5 மிலி என்ற விகிதத்தில் போதுமான அளவு தண்ணீர் கலந்து நேர்த்தி செய்து அரை மணி நேரம் நிழலில் விதைகளை உலர்த்தி பின்பு நடவு செய்ய வேண்டும்.

நாற்றுகளை நேர்த்தி செய்தல்:

ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மிலி கலந்து அரைமணி நேரம் நீரில் அமிழ்த்தி பின்னர் நடவு செய்யவும்.

மண்ணில் இடுதல்:

250 மிலி முதல் 500 மிலி வரை திரவ பொட்டாஷ் பாக்டீரியத்தை நன்கு மக்கிய 100 கிலோ தொழு உரத்தில் கலந்து 15 நாட்கள் நிழலில் மூடி வைத்து பின்னர் அடியுரமாக இட வேண்டும்.

சொட்டு நீர் பாசனத்தில் இடுதல்:

   ஏக்கருக்கு 500-750 மிலி திரவ பொட்டாஷ் பாக்டீரியத்தை ஒரு ஏக்கருக்கு பாய்ச்சலாம்.

இலைவழி தெளித்தல்:

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1-2 மிலி கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்படலாம்...

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


திங்கள், 22 ஜனவரி, 2024

வெண்டையில் Cercospora இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • வெண்டையில் cercospora இலைப்புள்ளி நோயானது இரண்டு விதமான பூஞ்சனாங்களால் ஏற்படுகிறது.
  • தாக்குதலின் அறிகுறிகள் அதை ஏற்படுத்தும் பூஞ்சான வகை, தாக்குதலின் தீவிரம் மற்றும் செடியின் வயதை பொறுத்து மாறுபடும்.
  • முதல் வகை பூஞ்சானத்தால் ஏற்படும் அறிகுறி: சிறிய ஒழுங்கற்ற வடிவில் பழுப்பு நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும். இந்த புள்ளிகளை சுற்றி சிகப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற வளையத்தை காண முடியும்.
  • கோண வடிவ புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சான வளர்ச்சி போன்று காணப்படுவது மற்றொரு வகை பூஞ்சானதால் ஏற்படும் அறிகுறி.
  • பொதுவாக செடியின் அடிபுரத்தில் காணப்படும் இலைகளின் கீழ்ப்புறத்தில் அறிகுறிகள் தென்படும்.
  • நாளடைவில் இது இலையின் மேற்பரப்பிற்கு பரவுவதுடன் செடிகளின் நுனி இலையிலும் அறிகுறிகள் காணப்படும்.
  • இதனால் குன்றிய செடி வளர்ச்சி, இலை சுருண்டு காணப்படுதல், இலைகள் மஞ்சள் நிறமாகி பின்னர் உதிர்தல் மற்றும் மகசூல் பாதிப்பு என பல்வேறு அறிகுறிகளை தோற்றுவிக்கிறது.

நோய் எவ்வாறு பரவுகிறது:

  • தொடர்ச்சியான மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவு.
  • அடர் நடவு மேற்கொள்ளுதல் எளிதில் பரவுகிறது.
  • நுண்ணீர் பாசன தெளிப்பான் பயன்படுத்தி நீர் விடுவதால் எளிதில் பரவுகிறது.
  • காலை வேளையில் நாம் வயலில் இறங்கி வேலை செய்வதால் நோய் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • இந்த வகை பூஞ்சானம் மண் மற்றும் பண்ணை கழிவு/பயிர் எச்சங்களில் மிக நீண்ட நாட்கள் வாழக்கூடிய திறன் படைத்தது.
  • இன் நோய் தாக்குதல் தென்படும் தருணத்தில் தொடர்ந்து ஒரே வயலில் வெண்டை சாகுபடி செய்வதை தவிர்க்கவும்
  • இந்த வகை பூஞ்சானங்களுக்கு எதிராக எதிர்ப்பு திறன் மற்றும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்ட ரகங்கள் அல்லது வீரிய ஒட்டு ரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும்.
  • பயிர்களை மிக நெருக்கமாக நடவு செய்வதால் இது பூஞ்சானங்களுக்கு தேவையான சீதோசன நிலையை உருவாக்கி தருகிறது. எனவே போதுமான அளவுக்கு பயிர் இடைவெளி கொண்டு நடவு செய்யவும்.
  • வயலில் காணப்படும் களைகள், குப்பைகள் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து உதிரக்கூடிய இலை, காய்கள் முதலியவற்றில் பூஞ்சானங்கள் நீடித்திருப்பதால் இவற்றை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
  • இல்லையெனில் இது அடுத்தடுத்த செடிகளுக்கு பரவுதுடன் அடுத்த பயிர்களையும் பாதிக்கும் வல்லமை படைத்தது.
  • வாய்க்கால் மூலம் நீர்பாச்சுதல் மற்றும் தெளிப்பு நீர் பயன்படுத்தி நீர் பாய்ச்சுவதால் பயிர் இடைவெளியில் பூஞ்சான வளர்ச்சிக்கு தேவையான சாதகமான தட்பவெட்ப நிலை நிலவுவதால் இது எளிதில் பெருகி பரவுகிறது. எனவே சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவது மிகவும் உகந்தது.
  • இந்த வகை பூஞ்சானங்கள் தாக்காத பயிர்களான வெங்காயம் மற்றும் கொடி காய்கறி பயிர்களை பயிரிடுவதால் இதன் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • ஏக்கருக்கு ஒரு மூட்டை எள்ளு புண்ணாக்கு இடுவதால் நோய் பரவுதல் தடுக்கலாம்.
  • எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை  0.15 சதவீதம் தெளிப்பதால் இவ்வகை பூஞ்சனா வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.
  • அல்லது கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் இரண்டை சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
  • Mancozeb - 2.5 கி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
  • Carbendazim+Mancozeb -2.5 கி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
  • COC -2.5 கி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
  • Zineb- 2.5 கி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
  • Propiconazole - 1 மி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
  • Difenconazole- 1 மி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
  • Cymoxil+Mancozeb - 1-2 கி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
மேலும் தகவலுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

சனி, 20 ஜனவரி, 2024

உளுந்து பயிரில் சாம்பல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஏக்கருக்கு சுமார் 200 கிலோ மகசூல் விளைவிக்க கூடியது.
  • பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சிகள் உளுந்து பயிரை தாக்கினாலும் சாம்பல் நோய் மற்றும் தேமல் நோய் ஆகிய இரண்டும் மிக முக்கியமானது.சாம்பல் நோயினால் 40 முதல் 90% வரை கூட மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • ஆரம்பத்தில் சாம்பல் முதல் வெள்ளை நிற புள்ளிகள் ஒழுங்கற்ற வடிவில் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
  • நாளடைவில் இந்த புள்ளிகள் பெரிதாகி இலையின் மேற்பரப்பை பெரிதளவில் பூஞ்சான வளர்ச்சியால் மூடும்.
  • நோய் தாக்குதல் தீவிரமடையும் போது தளிர், தண்டு மற்றும் காய்களில் சாம்பல் நிற பூஞ்சான வளர்ச்சியை காணலாம்.
  • சில நேரங்களில் இலையின் அடிப்பகுதியில் சாம்பல் நிற பூஞ்சாண வளர்ச்சியை காணலாம்.
  • இதனால் செடிகளின் உணவு உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றும்.
  • பின்னர் இலைகள் வெகுவாக பழுப்பு நிறமாகி இலை உதிர்வு அதிகமாக காணப்படும்.
  • இதனால் சுமார் மகசூல் இழப்பீடு ஏற்படுவது உடன் காய்கள் எண்ணிக்கை மற்றும் அளவில் சிறிதாக காணப்படும். இது சந்தை மதிப்பீட்டையும் குறைக்கிறது.

எப்போது பாதிப்பு காணப்படுகிறது:

  • காற்றில் அதிக ஈரப்பதம் காணப்படும் போது..
  • குளிர்காலத்தில் மிக நெருக்கமாக பயிரிடும் போது..
  • குறிப்பாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் அதிகமாக தென்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பற்றி பார்ப்பதற்கு முன்பு எளிதில் இந்த சாம்பல் நோய் பயிர்களை தாக்காத வண்ணம் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதை நாம் தடுப்பு நடவடிக்கைகள் என்போம்.
  • இவ்வகை சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து பயிரிடுதல் வேண்டும்.
  • Trichoderma அல்லது Pseudomonas 500 கிராம் கொண்டு விதைகளை 30-60 நிமிடம் வரை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • குளிர்காலத்தில் பயிரிடும் போது பயிர்கள் மிக நெருக்கமாக இல்லாதவாறு விதைகளை தெளிக்க வேண்டும்.
  • பயிர்கள் முளைத்து வரும் மற்றும் பூ பிடிக்கும் தருணத்தில் காலை வேளையில் உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.
  • அவ்வாறு நம் மேற்கொள்ளும் போது இந்த பூஞ்சான நோய் எளிதில் ஒரு செடிகளில் இருந்து இன்னொரு செடிகளுக்கு பரவுகிறது.
  • வயலில் களைகள் அல்லது இதர பயிர்களின் எச்சங்கள் இருப்பின் அதில் இந்த வகை பூஞ்சானங்கள் நீண்ட நாட்கள் வாழக் கூடியதாகும். எனவே அவற்றை வயலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • உரம் இடுவதை முறைப் படுத்தவும் அதாவது நோய் எதிர்ப்பு திறன் கொண்ட நுண்ணூட்ட உரங்களை போதுமான அளவு பயன்படுத்த வேண்டும்.
  • தழைச்சத்து உர பயன்பாட்டை முறைப்படுத்தி போதுமான அளவு மட்டுமே இட வேண்டும்.
  • இலையில் சாம்பல் வளர்ச்சி காணப்படும் போது உடனடியாக அவற்றை அகற்றி விடவும்.
  • தாக்குதலின் ஆரம்ப நிலையின் போது வேப்ப எண்ணெய் விதை கரைசல் 5 சதவீதம் அல்லது ஆமணக்கு எண்ணெய் 1 சதவீதம் தெளிப்பதால் நோய் பரவுதல் தடுப்பதுடன் 15 சதவீதம் மகசூல் அதிகரிப்பு காணப்படுகிறது.
  • தீவிரமாக பாதிக்கப்படும் தருணத்தில் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்.
  • Carbendazim+ Mancozeb- 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Wettable sulphur -40-50 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Propiconazole - 10 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Captan+ hexaconazole -15 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு 
  • Tridemorph- 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
மேலும் தகவலுக்கு கீழ்காணும் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

வெள்ளி, 19 ஜனவரி, 2024

அசாடிராக்டின்-பிரித்தெடுக்கும் முறை மற்றும் பயன்கள்

அசாடிராக்டின்:

  • அசாடிராக்டின் என்பது வேப்ப எண்ணெயில் காணப்படும் இயற்கையான பூச்சிகளின் வளர்ச்சியில் மாறுதல்களை ஏற்படுத்தக்கூடிய  மூலக்கூறு ஆகும்.
  • விதைகளிலிருந்து எடுக்கப்படும் அசாடிராக்டின் பூச்சிகளில் வளர்ச்சியை பல்வேறு நிலைகளில் சீர்குலைத்து பூச்சிவிரட்டி மற்றும் பூச்சிகளை பாதிக்குமாறு செயல்படுகிறது.
  • மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது.
  • நன்மை செய்யும் பூச்சிகளுக்கு குறைந்த நச்சுத்தன்மையை மட்டுமே ஏற்படுத்தும்.

பிரித்தெடுக்கும் முறை :

  • வேப்பம் பழங்களிலிருந்து விதையை பிரித்தெடுத்தல்
  • வேப்ப விதையின் வெளிப்புற உமியை அகற்றுதல்
  • வேப்ப விதை கர்னல்களை நிழலில் நன்கு உலர வைத்தல்
  • பின்பு இதனை தூளாக அரைக்க வேண்டும்.
  • எத்தனால் / ஆல்கஹால்/ தண்ணீர் போன்ற கரைப்பானில் விதையை ஊற வைக்க வேண்டும்.
  • இதிலிருந்து எச்சங்களை பிரித்தெடுக்க வேண்டும்.
  • பின்னர் கொள்கலன்கள் மூலம் ஆவியாதல் முறை கொண்டு அசாடிராக்டின் பிரித்தெடுக்கப்படுகிறது.

நன்மைகள் :

  • பூச்சிகளில் ஹார்மோன் சுரப்பிகளில் குறுக்கிட்டு வளர்ச்சியை பல்வேறு நிலைகளில் தடை செய்கிறது.
  • நன்மை செய்யும் பூச்சிகளான தேனீக்கள், பட்டாம்பூச்சி மற்றும் வண்டுகளை பாதிக்காது.
  • எளிதில் சுற்று சூழலிருந்து மட்குவதால் இதன் எச்சங்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு கேடு விளைவிக்காது.
  • பூச்சிகள் அசாடிராக்டின்னுக்கு எதிராக எதிர்ப்பு தன்மை பெறாது.
  • இது செடிகளின் வளர்ச்சியை ஊக்குவித்து மகசூலை அதிகப்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகளில் கூறப்படுகிறது.
  • மேலும் இவை பல்வேறு பூஞ்சாண நோய்களிலிருந்தும் செடிகளை பாதுகாக்கிறது. (பயிர் மற்றும் நோயை பொருத்து 20-60% வரை)
  • இயற்கை விவசாயத்திற்கு மிகவும் உகந்தது. மேலும், விவசாயிகளுக்கு சாகுபடி செலவை கணிசமாக குறைக்கின்றது.


வெள்ளி, 12 ஜனவரி, 2024

மஞ்சளில் கொப்புள நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

மஞ்சளில் கொப்புள நோய்:

    மிதமான வெப்பநிலை 21-28C மற்றும் காற்றின் ஈரப்பதம், இந்த வகை பூஞ்சாணத்திற்கு உகந்தது. இது தென்னிந்தியாவில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலங்களில் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும். எளிதில் கட்டுப்படுத்தக் கூடியது.

அறிகுறிகள்:

  • இவ்வகை பூஞ்சாணத்தால் ஆரம்பத்தில் அறிகுறிகள் இலையின் அடிப்பக்கத்தில் தோன்றும்.
  • சிறிய வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் இலையின் கீழ்புறத்தில் இலை நரம்புகளுக்கு இடையே ஒழுங்கற்று காணப்படும். பின்னர் இலையின் மேற்பரப்பில் தென்படும்.
  • இப்புள்ளிகள் விரிவடைந்து சிதைந்து செம்பழுப்பு நிறத்தில் காணப்படும்.
  • நாளடைவில் இலைகள் கருகி காணப்படும். இதனால் மகசூல் இழப்பு கணிசமாக ஏற்படும்.
  • பொதுவாக இவற்றின் அறிகுறிகள் நுனி இலைகளில் தென்படுவதில்லை.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • வயலை சுத்தமாக பராமரித்தல் மற்றும் அவ்வப்போது கருகிய இலைகளை அகற்றுதல்.
  • நோய் தாக்கப்படாத கிழங்குளிலிருந்து விதை பொருட்களை தேர்வு செய்தல்.
  • பயிற் சுழற்சி மற்றும் ஊடு பயிரிடுதல் முறையை பின்பற்றுதல்

  • நடவு செய்யும் முன் விதை கிழங்குகளை டிரைக்கோ டெர்மா விரிடி - 5 கி/ கிலோ என்ற விகிதத்தில் நேர்த்தி செய்து சற்று நிழலில் உலர வைத்து நடவு செய்ய வேண்டும். 
  • அல்லது Carbendazim/ Mancozeb - 3கி/ கிலோ என்ற  விகிதத்தில் விதை நேர்த்தி செய்தல்.

  • நன்கு இடைவெளி விட்டு நடுவதால் இவ்வகை பூஞ்சாணத் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • கீழ்க்கண்ட வற்றில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்கலாம்
  • Azoxystrobin + Difenoconazole – 1 ml/ lit water
  • Copper oxychloride – 2g / lit water
  • Carbendazim/ Mancozeb – 2.5 g / lit water
  • Bordeaux mixture – 3-4 ml/ lit water
  • Zineb – 2.5 g / lit water

மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


வெண்டையில் தண்டு மற்றும் காய்ப்புழு மேலாண்மை

வெண்டையில் தண்டு மற்றும் காய்ப்புழு:

முட்டை

:

வெளிர் நீல நிற முட்டைகள் (200-300 எண்கள்) தளிர், மொட்டு மற்றும் பூக்களில் இடப்படுகிறது. இதன் ஆயுட்காலம் 3-4 நாட்கள்.

இளம்புழு

:

பழுப்பு நிறத்தில் காணப்படும்.

கூட்டுப்புழு                             

:

தளிர், மொட்டு/ மலர்களில் படகு வடிவில் காணப்படும்.

பூச்சி                             

:

வெண்ணிறம் முதல் வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும். 

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழுக்கள் நுனி தளிர், மொட்டு, பூக்கள் மற்றும் காய்களை துளைத்து உட்பகுதியை உண்ணும்.
  • இதனால் பாதிக்கப்பட்ட தளிர் மற்றும் காய்களிலிருந்து எச்சங்கள் வெளிவரும்.
  • மொட்டுகள் மற்றும் பூக்கள் நிறம் மாறி காய்ந்து உதிரும்.
  • பாதிப்படைந்த தளிர்கள் வாடி காய்ந்து விடும்.
  • இளம் இலைகளும் இதனால் பாதிப்படைவதால் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளில் 25-30% குருத்துகள் பாதிப்பும் 60-90% வரை காய்கள் பாதிப்பும் ஏற்படுகிறது.
  • காய்களின் வளர்ச்சி குன்றி நிலை குலையும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழித்தல்
  • ஆரம்ப கால தாக்குதலின் போது Bacillius thuringiensis – 400ml/ acre
  • அல்லது Beaurenia bassiana -500 g/acre (அல்லது) Verticillium lecani - 400ml/ acre ஏதேனும் ஒன்றை 15 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதால் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • ஏக்கருக்கு 200 கிலோ வேப்ப கொட்டையை இட்டு நீர் பாய்ச்சுதல்.
  • தென்படும் புழுக்களை சேகரித்து அழித்தல்
  • வயலை சுற்றி சோளம்/ செஞ்சோளம் தெளிப்பதால் தாக்குதலை குறைக்கலாம்.
  • இனக்கவர்ச்சி பொறி 5-7/acre (20-30 நாட்களுக்கு மாற்ற வேண்டும்)
  • 40-45 நாட்களில் Trichogramma ஒட்டுண்ணி முட்டைகளை வெளியிடுவதால் இப்புழுவை நன்கு கட்டுப்படுத்தலாம்.
  • NSKE@5%-ஐ 3 முறை 10-15 நாட்களுக்கு இடைவெளியில் தெளிக்கலாம்.
  • விளக்கு பொறிகளை வைப்பதால் தாய் அந்துப்பூச்சியை கவரலாம்.
  • கீழ்க்காணும் உயிர் பூஞ்சாண கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்கலாம்.
  • Spinetoram                  - 0.5 ml/ lit water
  • Spinosad                      - 0.5 ml/ lit water
  • Chlorfenapyr                - 1-1.5 ml/ lit water
  • Emamectin benzoate - 0.6 g/ lit water
  • Fibronil + Spinosad     - 0.5 ml/ lit water
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

வியாழன், 11 ஜனவரி, 2024

மா மரத்தில் இலை வலைப் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

மாமரத்தில் இலை வலைப் பூச்சி:

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

முட்டை-நுனி இலைகளில் இடப்படுகிறது. இதன் வாழ்நாள் ஒரு   வாரம் ஆகும்.

இளம் புழுக்கள் -வெளிர் பழுப்பு நிறத்தில், உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிற கோடுகள் காணப்படும்.

கூட்டு புழுக்கள் - இலை வலைகளில் அல்லது மண்ணில் காணப்படும். இதன் வாழ்நாள் 5-15 நாட்கள் 

பட்டாம்பூச்சி - பழுப்பு நிறத்தில் முன் இறக்கையில் கோடுகள் காணப்படும்.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழுக்கள் ஆரம்பத்தில் நுனி இலைகளில் திசுக்களை உண்பதால் சல்லடை போன்று காட்சியளிக்கும்.
  • பின்னர் இளம் தளிர்கள் மற்றும் இலைகளை இணைத்து வலை போன்று மாற்றும்.
  • தளிர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இலைகளை உண்ணுவதால் நரம்புகள் மட்டும் காணப்படும்.
  • நாளடைவில் இலைகள் உலர்ந்து பழுப்பு நிறமாக மாறி உதிரும்.
  • பராமரிப்பு இல்லாத தோட்டத்தில் சுமார் 25-80% வரை மகசூல் இழப்பு ஏற்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • மரங்களுக்கு இடையில் போதுமான அளவு இடைவெளி இட வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட நுனி இலைகளை சேகரித்து அழித்தல்
  • அல்லது இலை வலைகளை அகற்றும் கருவியை பயன்படுத்தி வலைகளை அகற்றலாம்.
  • கோடை காலங்களில் மரங்களின் இடைவெளியில் உழுதல்/ பயிரிடுவதால் கூட்டு புழுக்களை அழிக்கலாம்.
  • அல்லது மரம்/ செடிகளை சுற்றியுள்ள மண்ணை கிளறி விட வேண்டும்.
  • இதற்கு எதிர்ப்பு திறன் கொண்ட இரகங்களை ((Kesar, Alphonsa போன்ற) பயிரிடலாம். 
  • Beauverina bassiana உயிர் பூஞ்சாணத்தை தெளிப்பதாலும் இதன் தாக்குதலை குறைக்கலாம்.
  • பருத்திகரை பூச்சி, தரை வண்டு மற்றும் குளவி போன்றவை வயலில் ஊக்கப்படுத்த வேண்டும்.
  • கீழ்க்கண்ட பூஞ்சாண கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்க பயன்படுத்தலாம்.
  • Lambda cyhalothrin - 1 ml/lit water
  • Quinalphos - 2 ml / lit water
  • Novaluron + Emamectin - 4 ml/ lit water
மேலும் சந்தேகங்களுக்கு கீழ்காணும் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...



கொடி காய்கறிகளில் வளர்ச்சி ஊக்கி எப்போது பயன்படுத்தப்பட வேண்டும்

கொடி காய்கறிகளில் வளர்ச்சி ஊக்கிகளின் பங்கு: 

பரங்கி, பூசணி, வெள்ளரி, பீர்கன், சுரை, புடலை, முலாம்பழம், பாகல், தர்பூசணி மற்றும் பல்வேறு காய்கறி பயிர்கள் சுரை குடும்பத்தைச் சேர்ந்ததாகும். 

சமையல் பயன்பாடு இன்றி அவற்றின் காய்கறி மற்றும் விதைகளின் பயன்பாடுகள் எண்ணற்றது.

பூக்கும் தன்மை:

  • இவற்றில் பெரும்பாலான காய்கறிகள் தட்ப வெப்ப சூழ்நிலையைப் பொருத்து விதைத்த 35-45 நாட்களுக்கு பிறகு பூ பிடிக்க ஆரம்பிக்கும். 
  • பூக்களின் பாலினம், சுற்றுச்சூழல், மரபணு மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் (ஹார்மோன்) காரணத்தினால் வேறுபடுகிறது. 
  • பொதுவாக பெண் பூக்கள் குறைந்த வெப்பநிலை, அதிக ஈரப்பதம், வெப்பநிலையின் தீவரம் பொருத்து செடிகளில் உற்பத்தி செய்யப்படும் வளர்ச்சி விகிதத்தில் (எத்திலின், ஆக்சிஜன் மற்றும் இதர) மாற்றம் ஏற்படுத்தி பூக்களின் பாலினத்தை நிர்ணயிக்கிறது.

கீழ்க்கண்ட காரணங்கள் பூவின் பாலினத்தை நிர்ணயிக்கிறது

  • நீர்ப் பாய்ச்சுதல் மற்றும் ஈரப்பதம்/ வறட்சி
  • ஊட்டச்சத்து விகிதம்
  • நடவு பருவம்
  • மழையளவு/ தட்ப வெப்பநிலை
  • மரபணு காரணங்கள்
  • வளர்ச்சி ஊக்கிகளின் விகிதம்

பெண் பூக்கள் எப்போது அதிகமாக பூக்கும்:

  • குறைந்த வெப்பநிலை, அதிக மண் ஈரப்பதம்
  • உயிர் உரங்கள், சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின் பயன்பாடு
  • வளர்ச்சி ஊக்கி தெளிக்கும் அளவு
  • ஆண் பூக்கள் செடியின் நான்கு முதல் ஆறாவது கணுக்களில் தோன்றுகிறது. பின்னர் 6-8வது கணுக்களில் பெண் பூக்கள் தோன்றுகின்றது. இது போன்று மாறி மாறி பூக்கள் தோன்றுவதால் மகசூல் குறைவாக காணப்படும்.
  • பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கீழ்கண்ட வளர்ச்சி ஊக்கினை தெளிக்கலாம்.
  • தர்பூசணி - GA3 1 ml / lit  water 
  • முலாம்பழம் - GA3 1 ml / lit  water  
  • வெள்ளரி -  Etheral-0.5 ml / lit  water  
  • பூசணி/ பரங்கி - Etheral -0.3 ml / lit  water 
  • புடலை  - Etheral- 1-2 ml / lit  water அளவு


திங்கள், 8 ஜனவரி, 2024

வறண்ட பூமியிலும் வருமானம் தரும் கொடுக்காப்புளி

எவ்வாறு சாகுபடிக்கு உகந்தது:

  • அனைத்து விதமான மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. (அமிலம் முதல் உப்பான மண் வரை, சுண்ணாம்பு மண்,  பாறைகள் கொண்ட நிலம், வளம் மற்றும் எவ்வித வளமற்ற மண்ணிலும் வளரக் கூடியது)
  • தமிழ்நாட்டில் நிலவும் எவ்வித தட்ப வெப்ப சூழ்நிலைகளையும் தாங்கி வளரக்கூடியது. (ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற குளிர் சூழ்நிலையிலும் செழித்து வளரும்) (5*-50* C வரை தாங்கி வளரும்)
  • கடுமையான வறட்சி முதல் நீர்தேக்கமுடைய மண்ணிலும் வளரும். (மழையளவு ஆண்டுக்கு 250 மி.மீ முதல் 180 மி.மீ வரையிலும்)
  • பராமரிப்பு செலவினம் மிக மிக குறைவு (உரமிடுதல், நீர்பாய்ச்சல், களை எடுத்தல், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் பணிகளில் செலவினம் மிகவும் சொற்பம்)
  • பெரிய விவசாயிகள் மற்றும் தரமற்ற மண், நீர், விலங்கினங்களின் தொந்தரவு போன்ற சூழ்நிலையில் இது சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.

பயன்கள்:
பழம் :

  • சாப்பிட உகந்தது, ஜாம், ஜெல்லி, பழச்சாறு மற்றும் இதர.
  • விட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து மிகுந்தது.
  • பல்வேறு குடல் நோய் மற்றும் புற்று நோயை தடுக்க வல்லது.
  • Oilments, Syrup மற்றும் மாத்திரை தயாரிப்பிலும்.


இலைகள், பட்டைகள்,விதைகள் பூ மற்றும் வேர்கள் :

  • எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.
  • பல்வேறு ஆய்வுகளில் இதன் மருத்துவ குணங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.


இதர பயன்கள்:

  • ஆடு, மாடுகள், குதிரை போன்றவற்றிற்கு தீவனமாக பயன்படுகிறது.
  • பசுந்தாள் உரமாக பயன்படுத்தலாம்
  • இயற்கை வேலி, காற்று தடுப்பான், மரக்கட்டை இதர பயன்கள்.

சாகுபடி குறிப்பு மற்றும் செலவினம் : (1 எக்டர்)

 

 

செலவினம்

1.

உழவு மற்றும் தொழு உரமிடுதல்

 (2-3 உழவு)

3600+6750

2.

குழி எடுத்தல் மற்றும் நடவு செய்தல் (8x8m-150 செடி/ எக்டர்)

4500+600

3.

செடி/ விதையின் அளவு மற்றும் செலவினம்

15000

4.

நோய் மற்றும் பூச்சி தாக்குதல்          

2000

5.

இதர செலவினம்       

2500

 

கூடுதல்

21950

மகசூல்:

செடி- 80-110 கி.கி (150 செடி – 13500 கி.கி)  -  10 வருடங்களுக்கு பிறகு.

விலை- ரூ.80-350  (ரூ.120- ரூ. 16,20,000)

Recent Posts

Popular Posts