வெண்டையில் தண்டு மற்றும் காய்ப்புழு மேலாண்மை
|வெண்டையில் தண்டு மற்றும் காய்ப்புழு:
முட்டை |
: |
வெளிர்
நீல நிற முட்டைகள் (200-300 எண்கள்) தளிர், மொட்டு மற்றும் பூக்களில் இடப்படுகிறது.
இதன் ஆயுட்காலம் 3-4 நாட்கள். |
இளம்புழு |
: |
பழுப்பு நிறத்தில் காணப்படும். |
கூட்டுப்புழு |
: |
தளிர்,
மொட்டு/ மலர்களில் படகு வடிவில் காணப்படும். |
பூச்சி |
: |
வெண்ணிறம் முதல் வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும். |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் புழுக்கள் நுனி தளிர், மொட்டு, பூக்கள் மற்றும் காய்களை துளைத்து உட்பகுதியை உண்ணும்.
- இதனால் பாதிக்கப்பட்ட தளிர் மற்றும் காய்களிலிருந்து எச்சங்கள் வெளிவரும்.
- மொட்டுகள் மற்றும் பூக்கள் நிறம் மாறி காய்ந்து உதிரும்.
- பாதிப்படைந்த தளிர்கள் வாடி காய்ந்து விடும்.
- இளம் இலைகளும் இதனால் பாதிப்படைவதால் வளர்ச்சி குன்றி காணப்படும்.
- தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளில் 25-30% குருத்துகள் பாதிப்பும் 60-90% வரை காய்கள் பாதிப்பும் ஏற்படுகிறது.
- காய்களின் வளர்ச்சி குன்றி நிலை குலையும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழித்தல்
- ஆரம்ப கால தாக்குதலின் போது
Bacillius
thuringiensis – 400ml/ acre
- அல்லது Beaurenia bassiana
-500 g/acre (அல்லது) Verticillium lecani - 400ml/
acre
ஏதேனும்
ஒன்றை 15 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதால் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
- ஏக்கருக்கு 200 கிலோ வேப்ப கொட்டையை இட்டு நீர் பாய்ச்சுதல்.
- தென்படும் புழுக்களை சேகரித்து அழித்தல்
- வயலை சுற்றி சோளம்/ செஞ்சோளம் தெளிப்பதால் தாக்குதலை குறைக்கலாம்.
- இனக்கவர்ச்சி பொறி 5-7/acre (20-30
நாட்களுக்கு மாற்ற வேண்டும்)
- 40-45 நாட்களில் Trichogramma
ஒட்டுண்ணி முட்டைகளை வெளியிடுவதால் இப்புழுவை நன்கு கட்டுப்படுத்தலாம்.
- NSKE@5%-ஐ 3 முறை 10-15 நாட்களுக்கு
இடைவெளியில் தெளிக்கலாம்.
- விளக்கு பொறிகளை வைப்பதால் தாய் அந்துப்பூச்சியை கவரலாம்.
- கீழ்க்காணும் உயிர் பூஞ்சாண கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்கலாம்.
- Spinetoram - 0.5 ml/ lit water
- Spinosad - 0.5 ml/ lit water
- Chlorfenapyr - 1-1.5 ml/ lit water
- Emamectin benzoate - 0.6 g/ lit water
- Fibronil + Spinosad - 0.5 ml/ lit water
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
0 Comments:
கருத்துரையிடுக