மஞ்சளில் கொப்புள நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|மஞ்சளில் கொப்புள நோய்:
மிதமான வெப்பநிலை 21-28⁰C மற்றும் காற்றின் ஈரப்பதம், இந்த வகை பூஞ்சாணத்திற்கு உகந்தது. இது தென்னிந்தியாவில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலங்களில் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும். எளிதில் கட்டுப்படுத்தக் கூடியது.
அறிகுறிகள்:
- இவ்வகை பூஞ்சாணத்தால் ஆரம்பத்தில் அறிகுறிகள் இலையின் அடிப்பக்கத்தில் தோன்றும்.
- சிறிய வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் இலையின் கீழ்புறத்தில் இலை நரம்புகளுக்கு இடையே ஒழுங்கற்று காணப்படும். பின்னர் இலையின் மேற்பரப்பில் தென்படும்.
- இப்புள்ளிகள் விரிவடைந்து சிதைந்து செம்பழுப்பு நிறத்தில் காணப்படும்.
- நாளடைவில் இலைகள் கருகி காணப்படும். இதனால் மகசூல் இழப்பு கணிசமாக ஏற்படும்.
- பொதுவாக இவற்றின் அறிகுறிகள் நுனி இலைகளில் தென்படுவதில்லை.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- வயலை சுத்தமாக பராமரித்தல் மற்றும் அவ்வப்போது கருகிய இலைகளை அகற்றுதல்.
- நோய் தாக்கப்படாத கிழங்குளிலிருந்து விதை பொருட்களை தேர்வு செய்தல்.
- பயிற் சுழற்சி மற்றும் ஊடு பயிரிடுதல் முறையை பின்பற்றுதல்
- நடவு செய்யும் முன் விதை கிழங்குகளை டிரைக்கோ டெர்மா விரிடி - 5 கி/ கிலோ என்ற விகிதத்தில் நேர்த்தி செய்து சற்று நிழலில் உலர வைத்து நடவு செய்ய வேண்டும்.
- அல்லது Carbendazim/
Mancozeb
- 3கி/
கிலோ என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்தல்.
- நன்கு இடைவெளி விட்டு நடுவதால் இவ்வகை பூஞ்சாணத் தாக்குதலை தவிர்க்கலாம்.
- கீழ்க்கண்ட வற்றில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்கலாம்
- Azoxystrobin + Difenoconazole – 1 ml/ lit water
- Copper oxychloride – 2g / lit water
- Carbendazim/ Mancozeb – 2.5 g / lit water
- Bordeaux mixture – 3-4 ml/ lit water
- Zineb – 2.5 g / lit water
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD
0 Comments:
கருத்துரையிடுக