உளுந்து பயிரில் சாம்பல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|- இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஏக்கருக்கு சுமார் 200 கிலோ மகசூல் விளைவிக்க கூடியது.
- பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சிகள் உளுந்து பயிரை தாக்கினாலும் சாம்பல் நோய் மற்றும் தேமல் நோய் ஆகிய இரண்டும் மிக முக்கியமானது.சாம்பல் நோயினால் 40 முதல் 90% வரை கூட மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
நோய் தாக்குதலின் அறிகுறிகள்:
- ஆரம்பத்தில் சாம்பல் முதல் வெள்ளை நிற புள்ளிகள் ஒழுங்கற்ற வடிவில் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
- நாளடைவில் இந்த புள்ளிகள் பெரிதாகி இலையின் மேற்பரப்பை பெரிதளவில் பூஞ்சான வளர்ச்சியால் மூடும்.
- நோய் தாக்குதல் தீவிரமடையும் போது தளிர், தண்டு மற்றும் காய்களில் சாம்பல் நிற பூஞ்சான வளர்ச்சியை காணலாம்.
- சில நேரங்களில் இலையின் அடிப்பகுதியில் சாம்பல் நிற பூஞ்சாண வளர்ச்சியை காணலாம்.
- இதனால் செடிகளின் உணவு உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றும்.
- பின்னர் இலைகள் வெகுவாக பழுப்பு நிறமாகி இலை உதிர்வு அதிகமாக காணப்படும்.
- இதனால் சுமார் மகசூல் இழப்பீடு ஏற்படுவது உடன் காய்கள் எண்ணிக்கை மற்றும் அளவில் சிறிதாக காணப்படும். இது சந்தை மதிப்பீட்டையும் குறைக்கிறது.
எப்போது பாதிப்பு காணப்படுகிறது:
- காற்றில் அதிக ஈரப்பதம் காணப்படும் போது..
- குளிர்காலத்தில் மிக நெருக்கமாக பயிரிடும் போது..
- குறிப்பாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் அதிகமாக தென்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பற்றி பார்ப்பதற்கு முன்பு எளிதில் இந்த சாம்பல் நோய் பயிர்களை தாக்காத வண்ணம் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதை நாம் தடுப்பு நடவடிக்கைகள் என்போம்.
- இவ்வகை சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து பயிரிடுதல் வேண்டும்.
- Trichoderma அல்லது Pseudomonas 500 கிராம் கொண்டு விதைகளை 30-60 நிமிடம் வரை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- குளிர்காலத்தில் பயிரிடும் போது பயிர்கள் மிக நெருக்கமாக இல்லாதவாறு விதைகளை தெளிக்க வேண்டும்.
- பயிர்கள் முளைத்து வரும் மற்றும் பூ பிடிக்கும் தருணத்தில் காலை வேளையில் உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.
- அவ்வாறு நம் மேற்கொள்ளும் போது இந்த பூஞ்சான நோய் எளிதில் ஒரு செடிகளில் இருந்து இன்னொரு செடிகளுக்கு பரவுகிறது.
- வயலில் களைகள் அல்லது இதர பயிர்களின் எச்சங்கள் இருப்பின் அதில் இந்த வகை பூஞ்சானங்கள் நீண்ட நாட்கள் வாழக் கூடியதாகும். எனவே அவற்றை வயலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
- உரம் இடுவதை முறைப் படுத்தவும் அதாவது நோய் எதிர்ப்பு திறன் கொண்ட நுண்ணூட்ட உரங்களை போதுமான அளவு பயன்படுத்த வேண்டும்.
- தழைச்சத்து உர பயன்பாட்டை முறைப்படுத்தி போதுமான அளவு மட்டுமே இட வேண்டும்.
- இலையில் சாம்பல் வளர்ச்சி காணப்படும் போது உடனடியாக அவற்றை அகற்றி விடவும்.
- தாக்குதலின் ஆரம்ப நிலையின் போது வேப்ப எண்ணெய் விதை கரைசல் 5 சதவீதம் அல்லது ஆமணக்கு எண்ணெய் 1 சதவீதம் தெளிப்பதால் நோய் பரவுதல் தடுப்பதுடன் 15 சதவீதம் மகசூல் அதிகரிப்பு காணப்படுகிறது.
- தீவிரமாக பாதிக்கப்படும் தருணத்தில் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்.
- Carbendazim+ Mancozeb- 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Wettable sulphur -40-50 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Propiconazole - 10 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Captan+ hexaconazole -15 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Tridemorph- 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
மேலும் தகவலுக்கு கீழ்காணும் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
0 Comments:
கருத்துரையிடுக