google-site-verification: googled5cb964f606e7b2f.html காய்கறி பயிர்களில் கோண வடிவ காய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 31 ஜனவரி, 2024

காய்கறி பயிர்களில் கோண வடிவ காய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கோண வடிவ காய்கள் தோன்ற காரணங்கள் :

1. சீரற்ற மகரந்த சேர்க்கை

-

1. இளம் காய்கள் / பூக்கள் ஒழுங்கற்ற மகரந்த சேர்க்கையினால் நுனிபகுதியிலிருந்து பழுப்பு நிறமாகி சுருங்கி கருகி பின்னர் உதிரும்.

2. சீரற்ற / போதுமான மகரந்த சேர்க்கை இல்லாததால் கருமுட்டை போதிய அளவு வளர்ச்சியின்றி ஒழுங்கற்ற / சிதைந்த வடிவில் காய்கள்/ பழங்களை உருவாக்குகிறது.

2. போரான் சத்து குறைபாடு

-

1. மண்ணின் கார அமில தன்மை அதிகமாக இருப்பதால் போதுமான போரான் சத்து செடிகளுக்கு கிடைக்காது.

2. இதனால் இலைகள் சற்று தடித்து ஒழுங்கற்ற வடிவில் காணப்படும்.

3. பழங்களில்/ காய்களில் வெடிப்புகள் தோன்றும்.

3. கால்சியம் சத்து குறைபாடு

-

1. குறைந்த கணு இடைவெளி, குன்றிய செடி வளர்ச்சி, இலைகள் கீழ்புறமாக சுருங்குதல் மற்றும் புதிய வெள்ளை வேர்களின் வளர்ச்சியின்றி காணப்படுதல்

2. நாளடைவில் காய்கள்/ பழங்களில் அழுகல் ஏற்படும் (BER)


4. தட்பவெப்ப சூழ்நிலை

-

பூக்கும் தருணத்தில் அதிக வெப்பநிலை / அதிக மழைப்பொழிவு மகரந்த சேர்க்கைக்கு சாதகமற்றதாக திகழ்வதால் குறைந்த பூ பிடித்தம் மற்றும் ஒழுங்கற்ற காய்களை உருவாக்கும்.

5. பூச்சி மற்றும் நோய்     தாக்குதல்

-

பழ ஈ தாக்குவதால் பெரும்பான்மையாக இவ்வகையான காய்கள் உருவாகிறது. இருப்பினும் பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினாலும் மறைமுகமாக காய்கள் பாதிக்கப்படுகிறது.

 

6. சில இரகங்கள் இயற்கையாகவே மரபியல் காரணங்களினால் சிதைந்த/ ஒழுங்கற்ற   காய்களை தோற்றுவிக்கிறது.

7. தவறான மருந்துகளை பூ பிடிக்கும் தருணத்தில்; தெளிப்பதால்; பூக்களின் மகரந்த

    சேர்க்கையில் மாறுதல் ஏற்பட்டு பழ உற்பத்தியில் சிதைவு ஏற்படுகிறது.

8. சிறிய காய்களில் காயங்கள் ஏற்படுவதால் ஒழுங்கற்ற வளர்ச்சியை காணலாம்.

 

ஒருங்கிணைந்த மேலாண்மை :

  • சான்றிதழ் பெறப்பட்ட இரகங்களை தேர்வு செய்தல்
  • மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்க தேனி பெட்டிகளை ஆங்காங்கே 4-5 எண்கள் இடுதல் (அல்லது) கருவுறாக்கனி கிரகங்களை தேர்வு செய்து பயிரிடுதல்
  • அதிக வெப்பநிலை/ மழை மகரந்த சேர்க்கையை பாதிப்பால் அதற்கேற்றவாறு நடவு செய்யும் பருவத்தை தேர்வு செய்தல்
  • உயிர் உரங்கள், உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை மக்கிய தொழு உரத்துடன் ஊட்டமேற்றி அடியுரமாக இடுவதால் மண்ணின் தன்மை மற்றும் வளத்தினை மேம்படுத்தி இதர ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெற செய்தல்.
  • மண் பரிசோதனை அடிப்படையில் நுண்ணூட்டச்சத்தை ஏக்கருக்கு 5-10 கிலோ  வீதம் அடியுரமாக இடுதல்
  • பூ பிடிக்கும் தருணத்தில் மருந்துகள் தெளிப்பதை தவிர்த்தல்
  • போதுமான அளவு போரான் மற்றும் கால்சியம் இடுதல் (ஏக்கருக்கு 2 கிலோ கால்சியம் சல்பேட் அடியுரம் இடுதல் மற்றும் நடவு செய்த 30, 45 மற்றும் 60 நாட்களில் CaNo3/Cacl -ஐ இலை வழியாகவும் தெளிக்கலாம்) 
  • சரியான இடைவெளியில் நீர் பாய்ச்சுதலை உறுதி செய்தல் அதுவும் பூ பிடிக்கும் தருணத்தில் செய்ய வேண்டும்.
  • வயலை சுத்தமாக வைத்தல், நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுக்குள் வைத்தல்.
  • மண்ணின் கார அமில தன்மையை சரி செய்தல் அடியுரமாக அல்லது இலை வழியாக போரான் சத்தை கொடுக்கலாம்.
  • செடியின் 15,30 மற்றும் 45 நாட்களில் கீழ்க்காணும் வளர்ச்சி ஊக்கியை தெளிக்கலாம்.
  • NAA- 0.5 ml/ 10 lit water
  • 13:00:45- 50 g/ 10 lit water
  • பழ ஈக்களை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியம்.  (ஊட்டச்சத்து மற்றும் பழ ஈக்களை கட்டுப்படுத்த ஏற்கனவே உழவன் நண்பன் குழுவில்  பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை காணவும்)

மேலும் தகவலுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts