வறண்ட பூமியிலும் வருமானம் தரும் கொடுக்காப்புளி
ஜனவரி 08, 2024
In மற்றவைகள் |
|
எவ்வாறு சாகுபடிக்கு உகந்தது:
- அனைத்து விதமான மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. (அமிலம் முதல் உப்பான மண் வரை, சுண்ணாம்பு மண், பாறைகள் கொண்ட நிலம், வளம் மற்றும் எவ்வித வளமற்ற மண்ணிலும் வளரக் கூடியது)
- தமிழ்நாட்டில் நிலவும்
எவ்வித தட்ப வெப்ப சூழ்நிலைகளையும் தாங்கி வளரக்கூடியது. (ஊட்டி மற்றும் கொடைக்கானல்
போன்ற குளிர் சூழ்நிலையிலும் செழித்து வளரும்) (5*-50* C வரை
தாங்கி வளரும்)
- கடுமையான வறட்சி முதல் நீர்தேக்கமுடைய மண்ணிலும் வளரும். (மழையளவு ஆண்டுக்கு 250 மி.மீ முதல் 180 மி.மீ வரையிலும்)
- பராமரிப்பு செலவினம் மிக மிக குறைவு (உரமிடுதல், நீர்பாய்ச்சல், களை எடுத்தல், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் பணிகளில் செலவினம் மிகவும் சொற்பம்)
- பெரிய விவசாயிகள் மற்றும் தரமற்ற மண், நீர், விலங்கினங்களின் தொந்தரவு போன்ற சூழ்நிலையில் இது சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.
பயன்கள்:
பழம் :
- சாப்பிட உகந்தது, ஜாம், ஜெல்லி, பழச்சாறு மற்றும் இதர.
- விட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து மிகுந்தது.
- பல்வேறு குடல் நோய் மற்றும் புற்று நோயை தடுக்க வல்லது.
- Oilments, Syrup மற்றும் மாத்திரை தயாரிப்பிலும்.
இலைகள், பட்டைகள்,விதைகள்
பூ மற்றும் வேர்கள் :
- எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.
- பல்வேறு ஆய்வுகளில் இதன் மருத்துவ குணங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதர பயன்கள்:
- ஆடு, மாடுகள், குதிரை போன்றவற்றிற்கு தீவனமாக பயன்படுகிறது.
- பசுந்தாள் உரமாக பயன்படுத்தலாம்
- இயற்கை வேலி, காற்று தடுப்பான், மரக்கட்டை இதர பயன்கள்.
சாகுபடி குறிப்பு மற்றும்
செலவினம் : (1 எக்டர்)
|
|
செலவினம் |
1. |
உழவு மற்றும் தொழு உரமிடுதல் (2-3 உழவு) |
3600+6750 |
2. |
குழி எடுத்தல் மற்றும் நடவு செய்தல் (8x8m-150 செடி/ எக்டர்) |
4500+600 |
3. |
செடி/ விதையின் அளவு மற்றும் செலவினம் |
15000 |
4. |
நோய் மற்றும் பூச்சி தாக்குதல் |
2000 |
5. |
இதர செலவினம் |
2500 |
|
கூடுதல் |
21950 |
மகசூல்:
செடி- 80-110 கி.கி (150 செடி – 13500 கி.கி) - 10 வருடங்களுக்கு பிறகு.
விலை- ரூ.80-350 (ரூ.120- ரூ. 16,20,000)
0 Comments:
கருத்துரையிடுக