மிளகாயில் அழுகல்/Choanephora கருகல் நோய் மேலாண்மை
|நோயின் அறிகுறிகள்:
- இந்த பூஞ்சான நோயானது நாற்று உற்பத்தியின் போதும் மற்றும் செடிகள் பூக்கும் நேரத்திலும் காணப்படுகிறது.
- பூஞ்சையானது ஆரம்ப நிலையில் செடிகளின் மேல் பகுதியில் காணப்படக்கூடிய இலைகள், பூக்கள், பிஞ்சுகள் மற்றும் தண்டு ஆகியவற்றை தாக்குகிறது.
- நீர்த்த புள்ளிகள் செடியின் பல்வேறு பாகங்களில் காணப்படும்.
- நாளடைவில் புள்ளிகள் பெரிதாகி புண்கள் போன்று மாறும்.
- புண்கள் பெரிதாகி பழுப்பு முதல் கருப்பு நிறமாக மாறும். பாதிக்கப்பட்ட இலைகள் சுருங்கி பின்னர் கருகி உதிரும்.
- பாதிக்கபட்ட தண்டுப் பகுதியானது கருப்பு நிற அழுகல் நோயால் பாதிக்கப்படுவதுடன் அதன் மேல் வெண்மை நிறப் பூஞ்சான வளர்ச்சி காணப்படும்.
- நாளடைவில் பாதிக்கப்பட்ட பகுதிகள் அழுகி உதிர்ந்து விடும்.
- இதனால் செடிகள் நுண்ணியிலிருந்து கருகிக்கொண்டே கீழ் நோக்கி வரும்.இதைப் பார்ப்பதற்கு நுனி கருகள் நோய் போன்று தெரியும் அதனை ஆங்கிலத்தில் டைபேக் (Die back) என்பார்கள்.
நோய் பூஞ்சை பற்றிய தகவல்:
- கத்திரி, மிளகாய், வெள்ளரி, தர்பூசணி, பரங்கி, பூசணி, மக்காச்சோளம் மற்றும் பல்வேறு பயிர்களை தாக்கும் வல்லமை படைத்தது.
- பொதுவாக இந்த பூஞ்சானமானது பூச்சி தாக்குதல் மற்றும் பண்ணை பணியினால் செடியில் ஏற்படும் காயங்களை பயன்படுத்தி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- பூஞ்சானம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பாதிக்கப்பட்ட செடிகள், தண்ணீர், மண் மற்றும் பண்ணை உபகரணங்களை பயன்படுத்தி பரவுகிறது.
தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலை:
- தொடர்ச்சியான மழைப்பொழிவு.
- அதிக காற்று ஈரப்பதம் நிலவுதல்.
- நிலத்தை அதிகம் காயவிட்டு பிறகு அளவுக்கு அதிகமாக நீர் பாய்ச்சுதல் உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.
- அதிக வெப்பநிலை நிலவும் போது அதிக நீர்ப்பாசனம் செய்தால் ஏற்படும் சீதோசன நிலை.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- இன் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்ட ஒட்டு ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
- வயலில் முந்தைய பயிர்களின் எச்சங்கள் குறிப்பாக மிளகாய், கொடி வகை பயிர்கள் சாகுபடி செய்திருந்தால் அதை முழுமையாக அகற்றிவிட்டு பின்பு உழவு செய்து நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
- மழைப்பொழிவு காலங்களில் மேட்டுப்பாத்தி அமைத்து பயிரிடலாம்.
- போதுமான வடிகால் வசதி கண்டிப்பாக இருக்கவேண்டும்.
- இறுகிய மண்ணில் சாகுபடி செய்வதற்கு முன்பு ஆழமாக உழவு செய்து ரோட்டாவேட்டர் பயன்படுத்தி நிலத்தை சீரமைக்கவும்.
- நடவு செய்யும்போது போதுமான பயிர் இடைவெளி இருக்க வேண்டும் இல்லை எனில் இது நோய் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
- இந்த நோய்கள் தாக்கப்படும் போது தெளிப்பு நீர் பாசனம் இருப்பின் அதை தவிர்க்கவும்.
- ஊடுபயிராக பயிறு வகை பயிர்களை பயிரிடலாம்.
- தாக்குதல்கள் காணப்படுகிறதா என அறிய அவ்வப்போது வயல்களை நன்கு ஆய்வு செய்ய வேண்டும்.
- நோய் தாக்குதல் தென்படும் பொழுது தழைச்சத்து உரத்தை சற்று குறைவாக பயன்படுத்தவும். இல்லையெனில் இது நோய் தாக்குதலை தீவிரப் படுத்தும்.
- நடவு செய்வதற்கு முன்பதாக நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் Trichoderma மற்றும் Bacillus ஆகிய உயிர் பூஞ்சான கொல்லிகளை கலந்து ஊட்டம் ஏற்றி பின்பு இடவும்.
- நோய் தாக்குதலை தவிர்த்திட நடவு செய்த 15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை நீர் பாய்ச்சும் பொழுது Trichoderma மற்றும் Bacillus முதலியவற்றைக் நீரில் கரைத்து விடலாம்.
- மேற்கண்ட வழிமுறையை 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் பின்பற்றலாம்.
- நோயின் தாக்குதல் சற்று அதிகமாக காணப்படுகிறது எனில் கீழ்கண்ட மருந்துகளில் மிக இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
பயன்படுத்த
வேண்டிய
மருந்துகள் |
முக்கிய நிறுவனங்களில் உள்ள பொருட்களை காண |
Propineb - 25 கிராம் 10 லிட்டர்
தண்ணீருக்கு |
|
Kresoxim methyl +
Hexaconazole - 25 கிராம்
10 லிட்டர்
தண்ணீருக்கு |
https://agribegri.com/products/buy-tata-rallis-ayaan-kresoxim-methyl-40--hexaconazole-8-wg.php |
Picoxystrobin +
Tricyclozole - 20 மில்லி
10 லிட்டர் தண்ணீருக்கு |
https://www.bighaat.com/products/corteva-galileo-sensa-fungicide |
Cymoxanil+ Mancozeb
- 25 கிராம்
10 லிட்டர்
தண்ணீருக்கு |
https://krishibharat.in/product/godrej-elpis-cymoxanil-8-mancozeb-64-5-wp-fungicide/ |
Captan + Hexaconazole
- 25 கிராம்
10 லிட்டர்
தண்ணீருக்கு |
|