முருங்கையில் காய் ஈ :
இந்தியாவை தாயகமாக கொண்ட முருங்கையானது தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் பெரும்பான்மையாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தொன்று தொட்டு காணப்படும் பல பல்லாண்டு முருங்கை இரகங்கள்-மூலனூர், வலைப்பாடி, செம்முருங்கை, யாழ்ப்பாணம், கொடிக்கால், பாலமேடு மற்றும் இதர. பராமரிப்பற்ற சாகுபடியால் 70% வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும்.
வாழ்க்கைச் சுழற்சி:
முட்டை- ஈக்கள் வெள்ளை நிற உருளை வடிவ முட்டைகளை தனித்தனியாக அல்லது 3-4 குழுக்களாகவே காய்களில் இடுகின்றன. இதன் ஆயுட்காலம் 3-4 நாட்கள்.
இளம் புழுக்கள்- இதன் ஆயுட்காலம் 18-25 நாட்கள்.
கூட்டுப்புழு- வளர்ச்சியடைந்த கிரீம் நிற புழுக்கள் மண்ணில் 5-9 நாட்கள் கூட்டுப்புழுவாக காணப்படும்.
முதிர்ந்த ஈக்கள்- மஞ்சள் நிற சிறிய ஈக்கள் சிகப்பு நிற கண்களுடன் காணப்படும். இதன் நடமாட்டம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் அதிகமாக காணப்படும். இதன் இறக்கைகள் உடலை விட பெரியதாக இருக்கும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம்புழுக்கள் (Maggots) மென்மையான இளம் காய்களின் முனையில் துளைகளை இட்டு நுழையும்.
- புழுக்கள் காய்களின் உட்பகுதியை உண்ணும்.
- இதனால் காய்களில் இருந்து தேன் போன்ற திரவம் வடிவதால் இதன் சந்தை மதிப்பு குறைகிறது.
- நாளடைவில் காய்களின் நுனியிலிருந்து மேல்புறமாக காய்ந்து கொண்டே வரும்.
- காய்கள் சுருக்கத்துடன் உட்பகுதி சில நேரங்களில் அழுகி காணப்படும் அல்லது காய்ந்து பின்னர் பிளவு அடையும்.
- தீவிரமாக தாக்கப்பட்ட வயல்களில் ஒரு காயிலிருந்து சுமார் 20-28 இளம் புழுக்களை காணலாம்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- 7 நாட்களுக்கு ஒரு முறை பாதிக்கப்பட்ட மற்றும் உதிர்ந்த காய்களை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- வெயில் காலங்களில் பயிர் இடைவெளியில் போதுமான வேப்பம் புண்ணாக்கு இட்டு உழுவதால் கூட்டுப்புழுக்களை கொன்று காய் ஈ உருவாவதை தவிர்க்கலாம்.
- காய்களின் 20-30 நாட்களில் மாலத்தியான் அல்லது டைகுளோராவாஸ் தெளித்து காய்களை நெருக்குவதை தவிர்க்கலாம்.
- காய்கள் உருவான 50 நாட்களில் நிம்பிடின் 3 மி.லி./ ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
- ஈக்களை விரட்ட citronella, வினிகர் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம் அல்லது கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தலாம்.
- வயலில் களைகள் மற்றும் இதர குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- Thiamethoxam ஐ தீவிர தாக்குதலின் போது மண்ணில் இட்டு நீர் பாய்ச்சலாம்.
- சற்று நொதித்த தக்காளி பழச் சாற்றுடன் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை கலந்து ஆங்காங்கே வைப்பதால் ஈக்கள் கவர்ந்து அழிக்கப்படும்.
- செவ்வந்தி (அ) பூண்டு போன்ற பயிர் ஊடு பயிரிடுவதால் இந்த ஈக்களின் தாக்கத்தை குறைக்கலாம்.
- கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றை நடவு செய்த 15 நாட்களிலிருந்து மாதம் இரு முறை தெளிப்பதால் பூச்சித் தாக்குதலை குறைக்கலாம்.
- Emamectin benzoate - 0.25 g / Lit.
- Dichlorovas - 0.5 g/ Lit.
- Spirotetramet + Imidacloprid - 2 ml/ Lit.
- Deltamethrin - 2.5 ml/ Lit.