குளிர்காலத்தில் மல்லிகை சாகுபடியை ஊக்குவிக்கும் வழிமுறை
|குளிர்காலத்தில் மல்லிகை உற்பத்தியில் ஏற்படும் சவால்களும் சாத்தியக் கூறுகளும்:
சாகுபடியில் ஏற்படும் சவால்கள்:
- பொதுவாக மல்லிகை உற்பத்தி தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து செப்டம்பர் முதல் வாரத்திற்குள் முடிவடைந்து விடுகிறது.
- மல்லிகை அதிக வெப்பநிலையில் தாங்கி வளரக் கூடியதாக இருப்பதால் குளிர்ந்த வெப்பநிலை மற்றும் பனி பொழிவு காரணமாக அதன் வளர்ச்சி, இலைப் பரப்பளவு, உணவு தயாரிக்கும் அளவு மற்றும் பூ உற்பத்தி முதலியன குன்றியே காணப்படுகிறது.
- குளிர்காலங்களில் போதுமான சூரிய ஒளி அளவு மற்றும் அதன் தீவிரம் (Intensity) குறைவாகவே இருப்பதால் அதன் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது.
- மல்லிகை செடிகள் ஈரப்பதத்தினை விரும்பினாலும் செடி புதர்களிலிருந்து வெளியேறும் வெப்பம் காற்றை உலர்த்தி தாவரங்களுக்கு அழுத்தத்தினை ஏற்படுத்துகின்றன.
- இது புதிய தளிர்கள் மற்றும் பூ பிடித்தலை குறைக்கும்.
- போதுமான கவாத்து மற்றும் அதன் பின்பு பின்பற்றப்பட வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மேலாண்மை கடை பிடிக்காததாலும் பூக்கும் திறன் குறையும்.
- பொதுவாக வெப்பத்துடன் கூடிய குளிர் காலத்தில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் தீவிரமாக இருப்பதால் மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
மேலாண்மை தொழில் நுட்பங்கள்:
- செப்டம்பர் மாத இறுதியில் தரையிலிருந்து 40 முதல் 60 செ.மீ. உயரத்தில் செடிகளை கவாத்து செய்தல் வேண்டும்.
- போதுமான காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி படுவதற்காக செடிகள் அகலமாக உள்ள தருணத்தில் பக்கவாட்டிலும் கவாத்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
- கவாத்து செய்யும் போது காய்ந்த பகுதிகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட பகுதிகளை அகற்றுதல் அவசியம்.
- கவாத்து செய்த பிறகு 1 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தை கலந்து செடிகளை நன்கு நனைத்தல் வேண்டும்.
- கவாத்து செய்யும் முன்னர் போதுமான அளவு மக்கிய தொழு உரம், DAP மற்றும் நுண்ணூட்ட உரங்களை (மண் பரிசோதனை அடிப்படையில்) இடுதல் வேண்டும்.
- அல்லது பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 60:120:120 கிராம்/ செடி என்ற விகிதத்தில் பிரித்து இட வேண்டும்.
- செயற்கை உரங்களை இடுவதற்கு முன் தொழு உரங்களை உயிர் உரங்கள் கொண்டு ஊட்டமெற்றி இடவும்.
- சொட்டு நீர் பாசன வசதியுடைய வயல்களில் CaNo3 மற்றும் Fno3 நீரில் கரையும் உரத்தினை ஒரு நாட்களிலும் மற்றொரு நாள் நுண்ணூட்டம் மற்றும் Humic acid ஐ சொட்டு நீரில் இட வேண்டும்.
- கவாத்து செய்த 15 நாட்களுக்கு ஒரு முறை இதனை மூன்று முறை இடுவதால் துளிர் மற்றும் மொட்டு வளர்ச்சி போதுமானதாக இருக்கும்.
- கவாத்து செய்து துளிர் வரும் தருணத்தில் Cycocel / Mepiquat chlorite தேவையான அளவு தெளிப்பதால் இரண்டாம் நிலை துளிர்களை தூண்டுவதுடன் பூ பிடித்தலை அதிகப்படுத்துகிறது.
- வயலைச் சுற்றி இடுப்பளவிற்கு நிழல் வலைகளை கட்டி விடுவதால் பனி மற்றும் ஈரமான காற்று தவிர்க்கப்படுகிறது.
- கவாத்து செய்த 35-45 நாட்களில் போதுமான பொட்டாஷ் உரமிடுதல், NAA அமிலத்தை தெளிப்பதால் கிளைப்பிரிதல், பூப்பிடித்தலை ஊக்குவித்தல் மற்றும் பூவின் அளவு பெரிதாகவும் காணப்படும்.
- மொட்டு வரும் போது Znso4 + Mgso4 + Fso4 வாரம் ஒருமுறை தெளிக்கவும்.
இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
0 Comments:
கருத்துரையிடுக