எலுமிச்சையில் காணப்படும் சொறிநோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|எலுமிச்சையில் பாக்டீரியா சொறிநோய் :
அறிகுறிகள் :
- இந்நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இலைத்துளைகள், செடிகளில் ஏற்படும் காயங்கள் வழியாக நுழைகிறது.
- இலைகள், காய் மற்றும் தண்டுகளில் நுழைந்து அதன் பகுதியை உண்ண ஆரம்பித்து பின்னர் இனப்பெருக்கமடைந்து நிலை கொள்கிறது.
- பொதுவாக இலைகளில் சற்று உயர்ந்த வட்ட வடிவில் அல்லது ஓவல் வடிவத்தில் சொறி போன்ற புண்களை தோற்றுவிக்கிறது. முதிர்ச்சி அடைந்த புண்கள் சற்று பெரியதாகவும், அதனை சுற்றி வெண்ணிற / மஞ்சள் நிற விளிம்புகள் காணப்படும்.
- பழங்களும் இவ்வகை பாக்டீரியாவால் பாதிப்படைகிறது. பழங்களில் காணப்படும் புண்களால் சந்தை மதிப்பு குறைகிறது. ஆனால் சொறி போன்ற புண்கள் மேலோட்டமானவை மட்டுமே. இதனால் சதை பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
- கடுமையாக பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் பழங்கள் இரண்டுமே முதிர்ச்சியடையும் முன்பே உதிரும்.
- பாதிக்கப்படும் இலைகள் சிதைந்து உதிர்வதால் பூ பிடிக்கும் திறன் குறைந்து மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
- இலைகள், தண்டுகள் மற்றும் கிளைகளிலும் சொறிபுண்கள் காணப்படுகிறது. இவை நீள் வடிவ தோற்றத்தில் இருக்கும்.
பாதிப்புக்கு உகந்த நிலை :
- சற்று சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை இதன் தாக்கத்திற்கு உகந்தது. (25-30•C).
- அதிக காற்றின் ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு பாக்டீரியா தாக்குவதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.
- மழைநீர் இதன் பரவுதலுக்கு உதவுகிறது.
- மழை, பணி அல்லது நீர் பாசனத்தால் செடிகளில் ஏற்படும் நீடித்த ஈரத்தன்மை பாக்டீரியா செடிகளில் நுழைவதற்கு ஏற்புடையதாகும்.
- எலுமிச்சை மிகவும் பாதிக்கக்கூடிய இனமாகும்.
- பராமரிப்பற்ற செடிகள், மிதமான காற்று, மிதமான ஈரப்பதம், அடர் நடவு ஆகியவை நோய் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலைகள்.
- மகசூல் இழப்பீடு 10-30% வரை ஏற்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகள், உதிர்ந்த இலை, பழங்கள் மற்றும் சிறு தண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
- நன்கு இடைவெளி இட்டு நடுவதால் போதுமான சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் கிடைக்கப்பெறுவதால் இந்நோயின் தாக்குதல் குறையும்.
- நோய்த் தாக்குதல் இல்லாத செடிகளை தேர்வு செய்து நடுதல் மிகவும் அவசியமாகும்.
- கவாத்து சரியான முறையில் மேற்கொள்ளப்படும் செடிகளில் நோய்த் தாக்குதல் மிகவும் குறைவாகவே காண்பது குறிப்பிடத்தக்கது.
- இந்நோய் தாக்குதலுக்கு தாங்கி வளரக் கூடிய PKM -1 இரகத்தினை பயிரிடலாம்.
- காப்பர் ஆக்ஸி குளோரைடு -25 கி/ லிட்டர் தண்ணீர் அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு -1 கி/ லிட்டர் தண்ணீர் + Streptomycin - 0.2 கி/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
- NSKE - 5% தெளிக்கலாம்.
- கவாத்து மேற்கொண்டு பின்னர் Pseudomonas (0.5%) தெளிப்பதால் நோய் பரவுதல் தடுக்கப்படும்.
இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD
0 Comments:
கருத்துரையிடுக