மல்லிகை மொட்டு துளைப்பானை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|மல்லிகையில் பொங்கு துளைப்பான்:
வாசனை மலர்களில் மிகவும் முதன்மையான ஒன்றாக கருதப்படும் மல்லிகை பயிர் ‘கடவுளின் பரிசு” என்றழைக்கப்படுகிறது. உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 12,000 எக்டர் நிலப்பரப்பில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மல்லிகை பயிரை தாக்கக்கூடிய பூச்சிகளில் மிக முக்கியமானதாக மிட்ஜ் பூச்சியும் அதனைத் தொடர்ந்து பொங்கு துளைப்பான் திகழ்கிறது. இவ்வகை புழுக்களால் சுமார் 40-70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிட தக்கது.
வாழ்க்கைச் சுழற்சி:
முட்டை - தாய் பூச்சிகள் மொட்டுகளில் முட்டைகளை தனி தனியாக இடுகிறது. வெண்ணிறமாக காணப்படும். ஆயுட்காலம் - 3-4 நாட்கள் ஆகும்.
புழு - இளம் புழுக்கள் வெளிர் மஞ்சள் நிறத்துடன் கருப்பு நிற தலையுடன் காணப்படும். இதன் ஆயுட்காலம் 11-12 நாட்கள்.
கூட்டுப் புழு -கூட்டுப் புழுக்கள் இலை, மொட்டு, மண்ணில் மற்றும் இலை காம்புகளில் காணப்படும். இதன் ஆயுட்காலம் 5-6 நாட்கள் ஆகும்.
அந்துப்பூச்சி- வெண்ணிறம் முதல் வெளிர் மஞ்சளில் காணப்படும். இவைகளின் இறக்கைகளில் பழுப்பு நிறக் கோடுகளை காணலாம்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் புழுக்கள் மொட்டுகளைத் துளைத்து அதன் உட்பகுதிகளை உண்ணும்.
- இதனால் மொட்டுகளில் சிறிய துளைகள் ஏற்படும். பின்னர் இதன் வழியாக வெளியே வந்து அடுத்த மொட்டுகளை தாக்கும்.
- நாளடைவில் மொட்டுகள் வெளிர் சிகப்பு நிறத்தில் மாறி பின்னர் உதிரும்.
- தீவிரமாக பாதிக்கப்படும் நிலையில் 2-3 மொட்டுகள் இணைந்து வலைப்பின்னல் போன்று காட்சியளிக்கும்.
- இதன் தாக்குதல் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாத காலங்களில் அதிகமாக இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- வாரம் ஒருமுறை பாதிக்கப்பட்ட பூக்ககளை/ பகுதிகளை சேகரித்து அழிப்பதால் இளம் புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.
- சரியான இடைவெளியில் கன்றுகளை நடுதல் மற்றும் தருணத்தில் கவாத்து மேற்கொள்ளுதல் அவசியம்.
- வெயில் காலங்களில் நிலத்தினை கிளறி விடுவதால் மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
- Carbofuran குருணையை செடி ஒன்றிற்கு 40 கிராம் என்ற அளவில் இட்டு நீர்ப் பாய்ச்சுதல் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.
- களைகள் மற்றும் இதர குப்பைகள் இல்லாமல் நிலத்தை பராமரிக்க வேண்டும்.
- வேப்பெண்ணெய் கொட்டை விதை 5% சாற்றை 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பதால் 30-40% வரை தாக்குதலை குறைக்கலாம்.
- தைலப்புல் அல்லது காட்டாமணக்கு எண்ணெய் 0.5-1% தெளிப்பதால் பூச்சி தாக்குதல் 20% வரை குறைக்கப்படும்.
- Helilure இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 எண்கள் (அ) விளக்கு பொறி 1 எண். வைப்பதால் தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
- பேசில்லஸ் துர்ஞ்சியன்ஸ் 0.1% மற்றும் பேவேரியா பேஸியானா 0.1 சுழற்சி முறையில் தெளிப்பதால் மட்டும் தாக்குதல் சதவீதம் மிகவும் குறைவு (15-16%)
- கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றை நடவு செய்த 15 நாட்களிலிருந்து மாதம் இரு முறை தெளிப்பதால் பூச்சித் தாக்குதலை குறைக்கலாம்.
- Chlorantraniliprole - 0.6 ml/ Lit.
- Spinosad - 0.5 ml/ Lit.
- Thiacloprid - 2 ml/ Lit.
- Fenvalarate- 1ml/ Lit.
- Diflubenzuron - 0.5 g/ Lit.
- Novaluron + Emamectin - 4.5 ml/ Lit.
இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்... https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD
0 Comments:
கருத்துரையிடுக