வாழையில் தண்டுகளை துளைக்கும் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள்
|வாழையில் தண்டுகளை தாக்கும் கூன் வண்டு:
வாழை சாகுபடியில் முதன்மை வகித்து வரும் இந்தியாவில் கடந்த சில வருடங்களாக கூன் வண்டு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. 10-90% மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் வல்லமை படைத்த இவ்வண்டானது எளிதில் அழிக்க முடியாதவை.
வாழ்க்கைச் சுழற்சி:
- முட்டை - தரைமட்டத்தில் உள்ள வாழை மட்டைகளில் தனிதனியாக இடப்படுகிறது. இதன் வாழ்நாள் 3-8 நாட்கள்
- புழு - நல்ல சதைப்பற்றுடன் வெளிர் மஞ்சள் முதல் வெள்ளை நிறத்தில் வெளிர் சிவப்பு நிற தலையுடன் காணப்படும்.
- கூட்டுப்புழு - பழுப்பு நிறத்தில் நார் போன்று இலையுறை/குப்பைகளில் தென்படும்.
- வண்டு - கருமை நிறத்தில் நீண்ட வளைந்த மூக்குடன் காணப்படும். இதன் வாழ் நாள் 6-10 மாதம்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் செடிகள் (3-5 மாதம்) இதன் தாக்குதலுக்கு உகந்தது.
- இவ்வண்டுகள் எளிதில் தாக்கக்கூடிய இரகங்களான பூவன், நேந்திரன், கதளி போன்ற இரகங்கள் பயிரிடுவதை தவிர்க்கலாம்.
- இளம் புழுக்கள் இலையுறைகளில் வட்ட வடிவில் துளையிட்டு எச்சங்களை வெளிதள்ளும்.
- மிகவும் சிறிய துளைகள் இலையுறைகளில் தென்படும்.
- இளம் சிவப்பு முதல் பழுப்பு நிற திரவம் தரைமட்டத்தில் காணப்படும்.
- கவனிப்பற்ற நிலையில் இவ்வண்டு தண்டுகளை உண்பதால் குன்றிய வளர்ச்சி, இலைகள் பழுப்பு நிறத்தில் மாற்றமடைதல், வாடல் மற்றும் குறைவான காய்பிடிப்பு திறனை காணலாம்.
- பலத்த காற்று வீசினால் மரம் சாய்தல்
- துளைகளை சுற்றி பழுப்பு நிறத்தில் இலையுறைகள் மாற்றமடைவதால் நோய் தாக்குதல் போன்று காட்சியளிக்கும்.
- தீவிரமராக பாதிக்கப்பட்ட வயல்களிலிருந்து வாடை வெளிவரும்.
கட்டுப்படுத்தும் முறைகள் :
- எதிர்ப்பு திறன் கொண்ட இரகங்களை பயிரிடலாம்(Rasthali, Ney poovan, Dwarf banana, Playankonden, Karpuravalli)
- வாழை கட்டையை நடவு செய்வதற்கு முன் வேர்கள் மற்றும் பட்டைகளை அகற்றி, நேர்த்தி செய்து நட வேண்டும்.
- நடவு செய்யும் போது குழி ஒன்றிற்கு பியூராடன் -20 கிராம் + வேப்பம் புண்ணாக்கு -500 கிராம் + Fibronil -20 கிராம் இடவும்
- 45 நாட்களுக்கு ஒருமுறை பக்கங்களை அகற்றுவதுடன் களைகள் இன்றி வயலை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
- நடவு செய்த 4-5 மாதங்களிலிருந்து பிரதி மாதமும் (7-ம் மாதம் வரை) Metarhizum anisopliae + Beaveria bassiana தண்டுகளில் ஊற்றுவதால் 70% வரை பூச்சி தாக்குதலை தவிர்க்கலாம்.
- காய்ந்த இலைகளை அகற்றி அழித்தல் வேண்டும்.
- ஆரம்ப காலத்தில் இலையுறையில் குருனை மருந்தினை மணலில் கலந்து இடுவதால் தாக்குதலை குறைக்கலாம்
- Celphos மாத்திரையை 2 எண்/ செடி வீதம் பயன்படுத்தலாம்.
- Dichlorovos (அல்லது) Chlorpyriphose 2.5 ml/ லிட்டர் தண்ணீரில் கலந்து வேரில் ஊற்றலாம். (அல்லது) தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் இலையுறையில் ஊசியில் செலுத்தலாம்.
- தீவிரமாக தாக்கப்பட்ட (அல்லது) காய் அறுவடை செய்த பயிர்களை முழுமையாக அகற்றுதல் நல்லது.
- இலையுறை கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தலாம். (25-30/ ஏக்கர்.
0 Comments:
கருத்துரையிடுக