கொய்யாவில் நூற்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|கொய்யாவில் நூற்புழு மேலாண்மை (மெலாய்டோனகனி):
இந்தியாவில் சுமார் 26 இலட்சம் எக்டர் நிலப்பரப்பில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து வகையான மண்ணிலும் வளரகூடிய திறன் படைத்த இவை உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அதிகமாக பயிரடப்பட்டுள்ளது.
இவற்றை பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் தாக்கினாலும் நூற் புழு தாக்குதல் தற்போது அதிகமாக காணப்படுகிறது. இதனால் 40-70% வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
வாழ்க்கைச் சுழற்சி:
முட்டை - முதிர்ந்த பெண் நூற் புழு சுமார் 500-1000 முட்டைகளை மண்ணில் இடும்.
இளம் புழு - இளம் புழுக்கள் தண்ணீர் மூலமாக பரவி உகந்த செடிகளின் வேர்களை துளைத்து நிலையான இருப்பிடத்தை உருவாக்கும்.
தாக்குதலில் அறிகுறிகள்:
- பார்ப்பதற்கு நீர் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது போன்று தோன்றும்.
- இளம் இலைகளின் ஓரங்கள் வெளிர் சிகப்பு நிறத்தில் காணப்படும்.
- முதிர்ந்த இலைகளின் ஓரங்களில் வெளிர் பழுப்பு நிறத்தில் கருகி காணப்படும்.
- பூக்களின் எண்ணிக்கை அளவு மற்றும் காய் பிடிப்பு திறன் குறைந்து காணப்படும்.
- மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் அதன் தரமும் குறையும்.
- கண்களுக்கு புலப்படும் அளவில் வேர்களில் முடிச்சுகள் உருவாகும்.
- புதிய வெள்ளை வேர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து அல்லது உருவாகமல் இருக்கும்.
- தீவிரமாக பாதிக்கப்பட்ட வேர்கள் சிறிய மற்றும் பெரிய வேர் முடிச்சுகளால் நாளடைவில் சிதைந்து விடும்.
- வேர்கள் பழுப்பு முதல் காவி நிறத்தில் மாறி பின்னர் செடிகள் வாடி இறந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- நூற் புழுவால் பாதிக்கப்படாத கன்றுகளைத் தேர்வு செய்து நட வேண்டும்.
- நூற் புழுவிற்கு எதிர்ப்பு திறன் கொண்ட கொய்யா இரகங்களை தேர்வு செய்து பயிரிடவும்.
- நூற் புழுவினால் பாதிக்கப்பட்ட செடிகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.
- பாதிக்கப்பட்ட வயலில் உள்ள மண்ணை வேறு வயலுக்கு செல்லா வண்ணம் தடுக்க வேண்டும்.
- கடைசி உழவின் போது ஏக்கர் ஒன்றிற்கு 3-10 கிலோ கார்போயூரான் + 200 கிலோ வேப்பம்புண்ணாக்கு (அ) புங்கம் புண்ணாக்கு இட்டு உழுதல் அவசியம்.
- இயற்கை விவசாயத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு நன்கு மக்கிய தொழுஉரம் 8 டன்கள் மற்றும் தலா 2 கிலோ சூடோமோனஸ் புளூரெசன்ஸ் + டிரைகோடெர்மா ஹர்சியானம் + Paecilomyces Lilacioun கலந்து அடியுரமாக பயன்படுத்தலாம்.
- ஆரம்ப நிலை தாக்குதலின்போது சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் 5 கி/ லிட்டர் மற்றும் டிரைக்கோடெர்மா ஹர்சியானம் 5 மி.லி./ லிட்டர் தண்ணீரில் கலந்து 30 நாட்களுக்கு ஒருமுறை தௌிக்க வேண்டும்.
- மேற்கண்ட உயிர் பூஞ்சானத்தை சொட்டு நீர் பாசனம் அல்லது வேர்களில் ஊற்றலாம்.
- தாவரங்களில் / செடிகளில் குன்றிய வளர்ச்சி மற்றும் மஞ்சள் நிற இலைகள் காணப்படும் போது செடி ஒன்றிற்கு 50-60 கிராம கார்போப்யூரான் இடவும் அல்லது குழி ஒன்றிற்கு வேப்பம்புண்ணாக்கு 500 கிராம மற்றும் டிரைகோடெர்மா 25 கி (அ) கார்போப்யூரான் 50 கி கலந்து இடவும்.
- நன்மை பயக்கும் நூற்புழுக்களான ஸ்பெல்ணெர்னேமா மற்றும் ஹெட்டெரோஸ்டிடிஸ் போன்ற சில வகையான நூற்புழுக்களை வயலில் பெருக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- Neoseiulus spp போன்ற வேட்டையாடும் பூச்சிகளை கவருவதால் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
- Fluopyrum - 2.5 ml/ lit - என்ற அளவில் வேரில் ஊற்றி ஆறு மாதங்கள் வரை மண்ணை கிளறாமல் இருப்பதால் நூற்புழுக்களை அழிக்கலாம்.
- நடவு செய்யவிருக்கும் குழிகளில் பர்ப்பூரியோசிலியம் லில்லியேசினஸ் கொண்டு ஊட்டமெற்றிய தொழு உரங்களை இடுதல் நல்லது.
- வேம்பு மற்றும் பூண்டு சாறுகளை வேரில் ஊற்றுவதால் நூற் புழுக்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை.
- சாமந்தி அல்லது கடுகு போன்ற பயிர்களை ஊடு அல்லது வரப்பு ஓரங்களில் நடுவதால் இவை நூற்புழுக்களை கவர்ந்து கொய்யாவில் ஏற்படுத்தும் தாக்குதலலை குறைக்கும்.
0 Comments:
கருத்துரையிடுக