-15 நாட்கள்:
(விதைப்புக்கு 15 நாட்களுக்கு முன்)
|
- ஐந்து அல்லது ஏழு பல் கலப்பைக் கொண்டு எதிரெதிர் திசையில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும்.
- நல்ல வடிகால் வசதி உள்ள வளமான மண் நிலக்கடலை சாகுபடிக்கு உகந்தது.
- கடினமான களிமண் பூமியை தவிர்க்கவும்.
- மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 7 ஆக இருக்க வேண்டும்.
- மண்ணின் கார அமிலத்தன்மை 7.5 க்கு மேல் இருப்பின் இலை மஞ்சள் நிறமாதல் மற்றும் ஒரு சில காய்கள் கருப்பு நிறமாதல் ஏற்படும்.
- 15 நாட்களுக்கு முன் நிலத்தை உழவு செய்து நன்கு காய விடுவதால் மண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கும் பூஞ்சானம் மற்றும் பூச்சிகளின் வாழ்க்கைப் படிநிலைகள் அழிக்கப்படும்.
|
-8 நாட்கள்:
|
- ஒன்பது பல் கலப்பைக் கொண்டு ஒரு முறை நிலத்தை உழவு செய்வதன் மூலம் நிலத்தில் காணப்படும் பெரும் மண் கட்டிகளை உடைக்கலாம்.
|
-5 நாட்கள்:
|
- பரிந்துரைக்கப்பட்ட மக்கிய தொழு உரம் ஏக்கருக்கு 5-8 டன் அல்லது மண்புழு உரம் 2-4 டன் இட வேண்டும்.
- உயிர் உரம் மற்றும் உயிர் பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தி தொழுவுரத்தை ஊட்டமேற்றி இடலாம்.
- உடனடியாக விதைப்பு மேற்கொள்ள இருக்கும் தருணத்தில் தேவையான ரசாயன உரங்களை அடி உரமாக இடலாம்.
- சுழற் கலப்பை கொண்டு நிலத்தை ஒரு முறை உழுவும் போது மண் நன்றாக தூளாக்கப்படுவதுடன் அடி உரம் மண்ணுடன் சீராக கலக்கப்படுகிறது.
|
-1 நாள்:
|
- பரிந்துரைக்கப்பட்ட ரசாயன உரங்களை அடி உரமாக கீழ்கண்ட அளவு ஒரு ஏக்கருக்கு இடவும்.
- தழைச்சத்து- 20 கிலோ, மணிச்சத்து- 50 கிலோ, சாம்பல் சத்து- 30 கிலோ, போராக்ஸ்-10 கிலோ, துத்தநாக சல்பேட்- 10 கிலோ, நுண்ணூட்டக் கலவை- 10 கிலோ இட்டு பார் மற்றும் பாத்தி அமைக்கவும்.
- அல்லது அட்டவணையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள உர மேலாண்மையை பின்பற்றலாம்.
- விதைப்பு மேற்கொள்ள நீர் பாய்ச்ச வேண்டும்.
|
·
நாள் 0 :
|
- விதை நேர்த்தி மற்றும் விதைப்பு மேற்கொள்ளுதல்.
- Carbendazim+
Mancozeb என்ற மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 2- 3 கிராம் வரை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து அரை மணி நேரம் நிழலில் உலர வைத்து பின்பு விதைப்பு மேற்கொள்ளலாம்.
- அல்லது ரைசோபியம், சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா ஆகியவற்றை தலா 250-400 கிராம் எடுத்துக்கொண்டு தேவையான அளவு அரிசி கஞ்சி உடன் கலந்து விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் 30 முதல் 45 நிமிடம் வரை முதலில் உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும்.
- உளுந்து, எள்ளு ,சின்ன வெங்காயம், தட்டைப்பயிறு போன்ற குறைந்த வாழ்நாள் கொண்ட பயிர்களை பாத்திக் கரைகளிலும் ஊடு பயிராக
பயிரிடலாம்.
|
நாள் 3-4:
|
- விதைப்பு மேற்கொண்ட மூன்று முதல் நான்காவது நாள் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு களைக் கொல்லியை தெளிப்பதன் மூலம் களை வளர்ச்சியை மட்டுப்படுத்தலாம்.
- Oxyfluorofen- 25-30 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Pendimethilin- 100 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Fluchloralin- 100 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
- Metachlor- 100 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
|
நாள் 6:
|
- உயிர் நீர் பாய்ச்ச வேண்டும் இதனால் ஒருமித்த விதை முளைப்பு மற்றும் பயிர் வளர்ச்சி காணப்படும்.
|
நாள் 10:
|
- விதைகள் சரியாக முளைக்காத இடங்களில் களை கொத்தி பயன்படுத்தி புதிய விதைகளை விதைப்பதன் மூலம் போதுமான/குறைந்தபட்ச செடிகளின் எண்ணிக்கையை பராமரிக்க இயலும்.
|
நாள் 15:
|
- நோய் மற்றும் பூச்சி தாக்குதல் வராமல் தடுக்க ஏதுவாக சூடோமோனஸ், டிரைகோடெர்மா மற்றும் வெர்ட்சிலியம் தலா 25 கிராம் கலந்து மாலை நேரத்தில் நன்றாக தெளிக்கவும்.
- அல்லது மீன் அமிலம்/வேப்பங்கொட்டை கரைசல்/ வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்.
|
நாள் 18-20:
|
- கை கொத்தி கொண்டு களையை அகற்ற வேண்டும். அதற்கு முன்னதாக தழைச்சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோ மற்றும் ஒரு மூட்டை ஜிப்சம் இடவேண்டும்.
- மேலும் இது மண்ணிற்கு பொல பொலப்பு தருவதால் வேர் வளர்ச்சி மற்றும் விழுதுகள் மண்ணை நோக்கி வளர உதவி புரியும்.
- அல்லது Sodium acifluorfen+ Clodinafop propargly என்ற களைக்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு 400 மில்லி வீதம் தெளிக்க வேண்டும். தெளிப்பதற்கு முன் போதுமான மண் ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்யவும்.
|
நாள் 25:
|
- இரண்டு கிலோ டிஏபி ஊறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் 250 கிராம் போராக்ஸ் மற்றும் பிளானோபிக்ஸ் 30 மில்லி எடுத்துக் கொண்டு ஒரு ஏக்கர் நிலக்கடலை பயிருக்கு தெளிக்க வேண்டும்.
- இது பூத்தலை அதிகரிப்பதுடன் செடிகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் உதவி புரிகிறது.
- பயிரின் ஆரம்ப கால வளர்ச்சியின் போது தாக்கக்கூடிய நோய் மற்றும் பூச்சிகள் விவரம்.
- தண்டு மற்றும் வேர் அழுகல்- நோய் அறிகுறி வயலில் பரவலாக தென்படும் போது காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தினை அம்மோனியம் சல்பேட் உரத்துடன் கலந்து தெளிக்கலாம் அல்லது வேர்களில் ஊற்றலாம்.
- அசுவினி-இதை கட்டுப்படுத்த imidacloprid என்ற இன்று மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற வீதம் கலந்து தெளித்தால் போதும்.
- இலை உண்ணும் புழுக்கள்- இதனை கட்டுப்படுத்திட 3G கரைசல் தெளிக்கலாம் அல்லது Emamectin benzoate என்ற மருந்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் கலந்து பொறுமையாக தெளித்தால் போதும்.
- பேன் தாக்குதல்- Fibronil/ Lambda cyhlothrin என்ற மருந்தினை 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிக்கவும்.
- பல்வேறு இலை புள்ளி நோய்கள்:
- சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா தலா 25
கிராம் எடுத்துக் கொண்டு பத்து லிட்டர் தண்ணீரில் கரைத்து நன்றாக
தெளிக்கவும். அல்லது
- Carbendazim+Mancozeb என்ற மருந்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் கலந்து தெளித்து வரவும்
|
நாள் 30-35:
|
- இரண்டு கிலோ டிஏபி ஊறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் 250 கிராம் போராக்ஸ் மற்றும் பிளானோபிக்ஸ் 30 மில்லி எடுத்துக் கொண்டு ஒரு ஏக்கர் நிலக்கடலை பயிருக்கு தெளிக்க வேண்டும்.
|
நாள் 40-45:
|
- கை கொத்தி கொண்டு களையை அகற்ற வேண்டும். அதற்கு முன்னதாக தழைச்சத்து 20 கிலோ அமோனியம்
சல்பேட் வடிவில் இட வேண்டும்.
- சாம்பல் சத்து 25 கிலோ மற்றும் ஒரு மூட்டை ஜிப்சம் இடவேண்டும்
|
நாள் 55:
|
- கடலை துருநோய்: இலையின் இரு புறங்களிலும் துரு போன்ற மஞ்சள் நிற கொப்புளங்கள் காணப்படும். பின்னர் இலைகள் சுருங்கி உதிர்வதால் பெரிய மகசூல் இழப்பீடு ஏற்படும். இதனை கட்டுப்படுத்த Carbendazim/Tebuconazole/Azoxystrobin தெளிக்கலாம்.
- இலைக் கருகள் மற்றும் இலை புள்ளி:
- சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா தலா 25 கிராம்
எடுத்துக் கொண்டு பத்து லிட்டர் தண்ணீரில் கரைத்து நன்றாக தெளிக்கவும். அல்லது
- Carbendazim+Mancozeb என்ற மருந்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் கலந்து தெளித்து வரவும்.
- இலைப்பேன்: இலையில் சுருங்கி குஷ்டம் வந்தது போல் காணப்படும். Fibronil ஏக்கருக்கு 250 மில்லி தெளிக்கவும்.
- சிலந்திப்பேன்: இலைகள் குஷ்டம் வந்தது போலவும் அதன் அடிப்பகுதியில் வெளிர் சிகப்பு நிற மாற்றமும் காணலாம். கட்டுப்படுத்த spiromesifen 200 மில்லி ஏக்கருக்கு தெளிக்கவும்.
- தத்துப்பூச்சி: Thiamethoxam/Acetamaprid 100 கிராம் தெளிக்கவும்.
|
நாள் 65:
|
|
நாள் 75:
|
|
நாள் 80-85:
|
- அடித்தண்டு மற்றும் கழுத்து அழுகல் நோய்- Trichoderma மற்றும் Bacillus முதலியவற்றைக் கொண்டு கட்டுப்படுத்தலாம் அல்லது Metalaxyl மருந்தினை வேரில் ஊற்றி கட்டுப்படுத்தலாம்.
- வேர்க்கடலை துளைப்பான்- Flubendamide என்ற மருந்தினை தண்ணீருக்கு 5 மில்லி என்ற வீதம் தெளிக்கலாம்.
- மொட்டு அழுகல்-ஒரு வைரஸ் நோய் அஸ்வினி மற்றும் இலைப்பேன் இதனை மற்ற செடிகளுக்கு பரப்புகிறது. இதனை கட்டுப்படுத்த imidacloprid தெளிக்கவும்.
|
நாள் 100-105:
|
|
0 Comments:
கருத்துரையிடுக