google-site-verification: googled5cb964f606e7b2f.html மே 2024 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 29 மே, 2024

நெல் வயலில் பாசிகள் வளர்வதற்கான காரணங்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்

முன்னுரை:

  • நிலத்தில் தொடர்ச்சியான நீர்த்தேக்கம் அல்லது ஈரப்பதம் இருந்தால் அந்த இடத்தில் பாசிகள் வளர்வதை நாம் காண இயலும். 
  • பாசிகளின் வளர்ச்சி தற்காலிகமானதாக இருந்தாலும் இதனால் நன்மைகளும் உண்டு பல தீமைகளும் ஏற்படுகிறது.

  • நன்மை செய்யக்கூடிய நீலப்பச்சை பாசி, வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து கொடுக்கிறது. இது மட்டும் இன்றி பயிர் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்களை உற்பத்தி செய்து தருவதுடன் மண்ணில் இருக்கும் மணிச்சத்தை செடிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்கிறது. 
  • இந்த நன்மை செய்யக்கூடிய நீலப்பச்சை பாசியினை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது 25 சதவீதம் வரை ரசாயன உர தேவையை குறைக்கலாம்.
  • பொதுவாக நீரில் குறிப்பாக நிலத்தடி நீரில் பாசிகள் காணப்படும் இது இயற்கையாகவே சிதைந்து விடுவதால் இதன் வளர்ச்சி நம் காண்பதில்லை. 
  • இவ்வாறு இயற்கையாக நடக்கும் நிகழ்வில் மாற்றம் ஏற்பட்டு நாம் விடும் அதிகபட்ச உரத்தினால் பாசிகள் அபரிமிதமாக வளர்ந்து நெல் பயிரின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை பாதிக்கிறது.

நெல் வயலில் பாசிகள் வளர்வதற்கான காரணிகள்: 

  • தொடர்ச்சியாக நெல் பயில் நீர் தேங்கி இருப்பதால் இது பாசிகள் வளர்ச்சி ஊக்கப்படுத்துகிறது. 
  • இதனால் நாஸ்டாக் மற்றும் சைனோ பாக்டீரியா அதிகளவு பெருக்கமடைந்து நெல் வயலில் காணப்படும் நீரில் பச்சை நிற பாய் போன்று சூழ்ந்து விடுகிறது. 
  • அதிக அளவு அடி உரம் மற்றும் நீர் மேல் இடும் ரசாயன உரங்களினால் இதன் வளர்ச்சி அபரிமிதமாக தோன்றி பயிர் வளர்ச்சியை தடை செய்கிறது.

பாசி வளர்ச்சியால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

  • நாற்றங்காலில் இருந்து நெல் நாற்றுகளை பிடுங்கி நடுவதால் அதற்கு ஏற்படும் அழுத்தத்தினால் ஆரம்ப நிலையில் நல்ல வேர் பிடித்து செடிகள் பச்சை கட்ட குறைந்தபட்ச நாட்களை எடுத்துக் கொள்வோம்.
  • இந்த குறைந்தபட்ச நாட்களுக்கு முன்னதாக நாம் அளவுக்கு அதிகமாக ஈடும் ரசாயன உரங்களை பயன்படுத்தி பாசி வேகமாக வளர்ந்து விடுகிறது. 
  • இதனால் பயிர்களுக்கு ஊட்டச்சத்து, சூரிய ஒளி மற்றும் வளர்வதற்கான இடவசதி ஆகியவற்றில் குறைபாடு ஏற்படுவதால் பயிர்களால் வேகமாக வளர முடியாமல் குன்றி காணப்படும்.
  • இதனால் மற்ற பூச்சி மற்றும் பூஞ்சான நோய்களும் நெல் பயிரை எளிதில் தாக்குகிறது.
  • போதுமான வேர் வளர்ச்சி இல்லாத நெல் பயிர்கள் பாசி வளர்ச்சியினால் சரியாக சுவாசிக்க மற்றும் உணவு தயாரிக்க முடியாமல் எளிதில் தொய்வு அடைந்து இறந்து விடுகிறது. கிராமப்புறங்களில் இதனை பயிர் கரைகிறது என்பார்கள். 
  • பாசிகள் நெல் வயலுக்கு இடம் உரங்களை 80 சதவீதம் வரை எடுத்துக் கொள்வதால் பயிர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடும், இதன் அதிகமான வளர்ச்சியினால் மண்ணின் கார அமில தன்மை அதிகரித்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது. 
  • பாசியினால் வெளியிடப்படும் ரசாயன திரவத்தால் மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்களும் தற்காலிகமாக செயல்படாமல் போகிறது. 
  • நெல் வயலில் மீன் வளர்க்கும் பொழுது இது மீன் வளர்ச்சியையும் பாதிக்கிறது. 
  • அதிகம் பாசி படர்ந்த நெல் வயலில் கை களை எடுக்கும் பொழுது இது மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

நெல் பயலில் பாசியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • கோடை பருவத்தில் ஆழமான உழவு செய்வதால் பாசிகளின் உடலின் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு இறந்துவிடும். 
  • நெல் பயிருக்கு மாற்றாக வேறு ஏதேனும் பயிர் செய்யலாம்.
  • அல்லது ஒரு முறை நேரடி நெல் விதைப்பிலும் மற்றொரு முறை நஞ்சை தயார் செய்தும் நெல் பயிரிடலாம்.
  • நெல் வயலை மேடு பள்ளம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதால் குறிப்பிட்ட இடத்தில் நீர் தேங்கி பாசி வளர்வதை தவிர்க்கலாம்.
  • பயிர்களுக்கு காய்ச்சலும் பாய்ச்சலமாக தண்ணீர் விட வேண்டும். 
  • உப்பு கலந்த நீர் மற்றும் நிலத்தடி நீர் பயன்படுத்தாமல் இருக்கலாம்.
  • மழை பொழிவு காலங்களில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
  • கை களை எடுப்பதை நிறுத்திவிட்டு கோனோ வீடர் பயன்படுத்தி களையை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் படிப்படியாக நெல் பயலில் பாசி வளர்வதை தவிர்க்கலாம். 
  • ரசாயன உரங்கள் பயன்படுத்தும் போது மிகவும் கவனத்துடன் தேவையான அளவு தேவையான நேரத்தில் மட்டும் கொடுக்க வேண்டும்.
  • பயிர்களுக்கு இழை வழியாக ஊட்டச்சத்து தெளிப்பதில் முக்கியத்துவம் கொடுப்பதினால் பாசி வளர்ச்சியை தடை செய்யலாம்.
  • பாசிகளின் வளர்ச்சியை பொறுத்து ஏக்கருக்கு 1-2 கிலோ வரை காப்பர் சல்பேட் இட வேண்டும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


மிளகாயில் தவளை கண் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: 

  • மிளகாய் ஒரு காய்கறி பயிராக இருந்தாலும் பெரும்பான்மையாக இது நறுமண பொருளாகவும் உணவுகளில் சுவையை மேம்படுத்தவும் மற்றும் பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளதால் இதனை Wonder Spice  என்பார்கள். 
  • உலக அளவில் இந்தியா மிளகாய் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ளது குறிப்பாக வைட்டமின் ஏ,பி, சி, இ, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, காப்பர், சோடியம் மற்றும் பல நிறைந்துள்ளது. 
  • இந்தியாவில் வருடத்திற்கு சராசரியாக 4300 முதல் 4700 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திர பிரதேசம் இதில் முதலிடம் வகிக்கிறது.

நோய் பூஞ்சை விபரம்:

  • இந்நோய் Cercospora எனப்படும் பூஞ்சனத்தால் ஏற்படுகிறது. 
  • மிதமான வெப்பநிலை, அதிகமான காற்று ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு காலங்கள் இதன் தாக்குதலுக்கு உகந்ததாகும். 
  • பிரதானமாக விதை மூலமாக பரவக்கூடியது. 
  • இருப்பினும் மண் மற்றும் பயிர் கழிவுகளில் சுமார் ஒரு வருடம் வரை உயிர் வாழும் திறன் உடையது.
  • காற்று, மழை, வாய்க்கால் வழி நீர் பாசனம் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளினால் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பூஞ்சானம் பரவுகிறது. 

நோயின் அறிகுறிகள்: 


  • பயிரின் ஆரம்ப நிலை முதல் அறுவடை முடியும் தருணம் வரை இந்நோய் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
  • இதன் அறிகுறிகள் இலையின் இருபுறத்திலும் காணப்படும். 
  • ஆரம்ப நிலையில் இலையில் சிறிய வட்ட வடிவிலான செம்பழுப்பு நிறப்பு புள்ளிகள் காணப்படும்.
  • புள்ளிகளின் மையப்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். இதனைச் சுற்றி வெளிர் பழுப்பு நிற வளையம் காணப்படும்.இதனை பார்ப்பதற்கு தவளையின் கண் போன்று காணப்படும். 
  • நாளடைவில் புள்ளிகள் சற்று பெரிதாகி அதன் நடுப்பகுதியில் இருக்கும் சாம்பல் நிற பகுதி காய்ந்து உதிர்வதால் இலைகளில் துளைகள் காணப்படும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாற்ற முடிந்து வாடி உதிர்வதால் காய் மற்றும் பழங்கள் வெப்பநிலைக்கு உட்படும்.
  • நோய் தீவிரமடையும் பொழுது இதன் அறிகுறி இதைக்காம்பு பூவிதல் மற்றும் தண்டு பகுதியில் நீள்வட்ட வடிவில் காணப்படும்.
  • பழங்களிலும் இதன் அறிகுறிகள் தென்படுவதால் மகசூல் இழப்பீடு மற்றும் தரம் குறைகிறது.
  • இதன் உச்சபட்ச அறிகுறியாக தண்டு அடி அழுகல் நோய் காணப்படும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்நோய் விதை மூலமாக பரவக்கூடியதால் தேர்வு செய்யப்படும் விதை சான்றிதழ் பெற்றதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும்.
  • நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகம் அல்லது வீரிய ஓட்டு ரகத்தினை தேர்வு செய்யலாம்.
  • போதுமான பயிர் இடைவெளி இருப்பதால் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலையை குறைக்கலாம். 
  • தொடர்ச்சியான மண் ஈரப்பதம் இல்லாமல் அமைய மேட்டுப்பாத்திகள் அமைத்து சொட்டுநீர் பாசனம் வழியாக பயிரிடலாம். 
  • வயலில் தோன்றும் களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
  • தொடர்ச்சியாக ஒரே வயதில் மிளகாய் அல்லது குடைமிளகாய் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • சாகுபடி செய்த பிறகு பயிரின் எச்சங்களை முழுமையாக நிலத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
  • தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்த வேண்டும். 
  • பனிப்பொழிவு அல்லது மழை காரணங்களால் செடிகள் ஈரப்பதமாக இருக்கும் பொழுது நிலத்திற்குள் நடந்து பண்ணைப் பணிகளை செய்யக்கூடாது இதன் மூலமும் நோய் பூஞ்சை பரவும்.
  • நாட்டு ரகங்களை பயிரிடும் பொழுது விதைகளை நேர்த்தி செய்து பயிரிட வேண்டும். 
  • நோயின் ஆரம்ப நிலையில் இயற்கை வழி பூஞ்சான கொல்லிகளை ஏழு நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக தெளித்து வேண்டும்.
  • Trichoderma viride, Trichoderma harzianum, Pseudomonas மற்றும் Bacillus subtilis போன்ற இயற்கை பூஞ்சான கொல்லிகள் இந்த நோயை கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவி புரிகிறது.
  • இதனைத் தவிர இயற்கை வழி தயாரிப்பு திரவங்களான பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், ஈயம் கரைசல், போன்றவற்றையும் நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
  • ரசாயன மருந்துகளை பயன்படுத்த விரும்பினால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். 
  • Carbendazim - 2-4 கி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  • Carbendazim+Mancozeb - 2-3 கி/1 லிட்டர் தண்ணீருக்கு
  • Hexaconazole - 1 மி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  •  Chlorothaonil- 2 கி/1 லிட்டர் தண்ணீருக்கு
  • COC -2.5 கி/1லிட்டர் தண்ணீருக்கு

  • Tebuconazole -1.5 மி/ 1 லிட்டர் தண்ணீருக்கு
  • Azoxystrobin+Tebuconazole -1.5 மி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  • Pyraclostrbin+Tebuconazole -1-2 மி/1 லிட்டர் தண்ணீருக்கு 
  • Mettiram+ pyraclostrbin - 3 கி/1 லிட்டர் தண்ணீருக்கு 

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

 
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA



செவ்வாய், 28 மே, 2024

மரவள்ளியில் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: 

  • தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 3 ஹெக்டேர்  பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் தற்போது சுமார் மூன்று முதல் ஆறு மாதம் வயதுடைய மரவள்ளி பயிர்கள் சாகுபடியில் உள்ளது. இதில் பரவலாக, வைரஸ் பாதிப்பால் ஏற்படக்கூடிய தேமல் நோய் பரவலாக காணப்படுகிறது. 
  • இதை மஞ்சள் தேமல் நோய் என்றும் கூறுவார்கள் அல்லது ஜெமினி வைரஸ் நோய் என்றும் கூறுவார்கள். பராமரிப்பு இல்லாத நிலங்களில் சுமார் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு தேமல் நோயினால் ஏற்படுகிறது. 

நோயின் அறிகுறிகள்:

  • நுனி இலைகளின் மேற்பரப்பில் வெளிர் மஞ்சள் நிற திட்டுக்கள் உருவாகி நாளடைவில் வெள்ளை நிறமாக மாற்றமடைகிறது. 
  • இலைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பகுதிகள் உருவாகி தேமல் போன்ற அறிகுறியை ஏற்படுத்துகிறது. 
  • பாதிக்கப்பட்ட இலைகள் நாளடைவில் ஒழுங்கற்ற வடிவில் வளைந்து நெளிந்து காணப்படுகிறது.
  • நோய் தாக்குதல் தீவிரமடையும் போது நுனி இலைகள் வடிவம் இழந்து சுருங்கி உருமாறியும் தடித்தும் காணப்படுகிறது. 
  • இதனால் இலைகளின் உணவு உற்பத்தி தடைபட்டு பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. 
  • தட்பவெப்ப சூழ்நிலை, பயிரின் எதிர்ப்பு திறன் மற்றும் வெள்ளை ஈக்களின் அளவை பொறுத்து மீண்டும் மீண்டும் நுனி இலைகள் வடிவம் இழந்து தேமல் அறிகுறிகளுடன் தோன்றலாம். 
  • இவை அனைத்தும் கண்டிப்பாக கிழங்கு உற்பத்தியில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • கிழங்கு உற்பத்தியின் போது தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளில் கிழங்குகள் வெடிப்பதையும் காண இயலும்.

இந்நோய் எவ்வாறு பரவுகிறது:

  • பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து விதை குச்சிகளை தேர்வு செய்தல். 
  • ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈக்கள் மூலமாக பரவுகிறது. 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஆரோக்கியமான பயிர்களில் இருந்து விதை குச்சிகளை தேர்வு செய்ய வேண்டும். 
  • தேர்வு செய்த விதை  குச்சிகளை நடவு செய்வதற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்து நடவு செய்யலாம்.
  • வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம். 
  • நடவு செய்யும்போது போதுமான பயிர் இடைவெளி அவசியம் இதனால் வெள்ளை ஈக்களின் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம். 
  • பயிரின் ஆரம்ப நிலையிலோ அல்லது பிற்காலத்திலோ களைகள் இன்றி பராமரிக்க வேண்டும்.
  • குறிப்பாக சாகுபடி வயலுக்கு அருகில் அல்லது வரப்புகளில் அதிக களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

  • மரவள்ளி பயிருக்கு அருகில் எளிதில் வைரஸ் நோயால் பாதிக்கக்கூடிய மற்ற பயிர்களை சாகுபடி செய்ய கூடாது குறிப்பாக கொடி வகை காய்கறிகள்.
  • Monocrotophos, Cypermethrin, Quinalphos போன்ற பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதை தவிர்க்கவும். இந்த வகை மருந்துகளுக்கு வெள்ளை ஈக்கள் எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளது.
  • வயலை சுற்றி சூரியகாந்தி அல்லது பூச்செடிகளை நடலாம். (மஞ்சள்)
  • இயற்கை பூச்சி உண்ணிகளான குளவி மற்றும் வண்டுகளை வயல்களில் அதிகப்படுத்தவும்.
  • வேப்பங் கொட்டைச்சாறு 5%- ஐ 5 மி.லி. / லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம். அல்லது நித்திய கல்யாணி இலைச்சாறு அல்லது நொச்சி இலைச்சாறு 5% தெளிக்கலாம்.
  • இயற்கை வழி தயாரிப்பு திரவங்களான புகையிலை கசாயம், பத்திலை கரைசல் ஐந்திலை கரைசல், தேர்மோர் கரைசல், 3G கரைசல் மற்றும் பல உள்ளது இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு தேர்வு செய்து வாரம் ஒரு முறை தெளித்து வரலாம். 
  • இயற்கை பூச்சிக் கொல்லிகளை ஐந்து முதல் பத்து நாட்களுக்கு ஒரு முறை தெளித்த வரவேண்டும். Verticillum lecanii மற்றும் Mettarhizum.
  • கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை சுழற்சி முறையில் தெளிக்கலாம்
  • Afidopyropen – 2 ml/ lit
  • Diafenthiuron- 1g/ lit
  • Flonicamid – 2 ml/ lit
  • Imidacloprid + Spirotetramat – 1 ml/ lit.
  • Spiromesiefen –1 ml/lit.
  • Acetamaprid – 1 g/lit.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


திங்கள், 27 மே, 2024

பயிர்களில் போரான் நுண்ணூட்ட ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

முன்னுரை:

  • துத்தநாகம், இரும்பு, மாங்கனிசு, போரான், மாலிப்டினம், குளோரின் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைந்த அளவு பயிர்களுக்கு தேவைப்படுவதால் இதனை நுண்ணூட்ட சத்துக்கள் என்கிறோம்.
  • பேரூட்டச் சத்துக்கள் என்றால் என்ன அதன் பணிகள் என்னவென்று ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம். நுண்ணூட்ட சத்துக்கள் மிக குறைந்த அளவு தேவைப்பட்டாலும் இவற்றின் குறைபாடு பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும். இவைகள் மறைமுகமாக பேரூட்டச் சத்துக்களின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

போரான் நுண்ணூட்ட ஊட்டச்சத்தின் பணிகள்:

  • பயிர் வளர்ச்சிக்கு அடிப்படை செல்கள் வேகமாக வளர்ச்சி அடைவது. பயிரின் தளிர் பகுதி மற்றும் வேர் பகுதியில் இருக்கும் செல் வளர்ச்சியை மேம்படுத்துவதில் போரான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  • செல்களின்/திசுக்களின் சுவர்களை கடினப்படுத்துவது இதன் பிரதான பணியாகும். 
  • பயிர்களில் புரதம், அமினோ அமிலங்கள் மற்றும் இதர அமிலங்களின் உருவாக்க மற்றும் செயல்பாட்டிற்கு உறுதுணையாக திகழ்கிறது. இதன் மூலம் உருவாகக்கூடிய சத்துப் பொருட்களை செடிகளின் அனைத்து பாகத்திற்கும் கொண்டு சேர்க்கிறது. 
  • பயிர்களில் பூக்கள் உருவாதல், பூக்களில் ஆண் மற்றும் பெண் பாகங்கள் உருவாதல் மற்றும் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு போரான் ஊட்டச்சத்து மிக அவசியம்.
  • பழங்கள் மற்றும் விதைகள் தரமாக பயிர்களில் உற்பத்தி செய்யப்படுவதற்கு போரான் இன்றியமையாததாகும்.
  • பயிர்களில் தளிர் மற்றும் வேறு வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
  • பயிறு வகை பயிர்களில் வளிமண்டத்தில் உள்ள தழைச்சத்தை வேர்ப்பகுதியில் நிலைநிறுத்த உதவும் சைனோபாக்டீரியா போரான் ஊட்டச்சத்தை எடுத்துக் கொண்டுதான் வளர்கிறது. 

எப்போது போரான் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது:

  • மண்ணின் தன்மை அதாவது நம் நிலத்தின் மண் எந்த வகையான பாறைகளில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதனை பொறுத்து இதில் உள்ள போரான் சத்து மாறுபடும்.
  • மண்ணின் கார அமிலத்தன்மை அதாவது அமிலத்தன்மை கொண்ட மண்ணில் போரான் ஊட்டச்சத்து குறைவாகத்தான் இருக்கும். அமிலத்தன்மை கொண்ட மண்ணில் காணப்படும் இரும்பு மற்றும் தாமிரத்துடன் போரான் இணைந்து செடிகளுக்கு கிடைக்க வண்ணம் மாறிவிடுகிறது.
  • மண்ணின் அமைப்பு அதாவது மணல் பாங்கான பகுதிகளில் இந்த ஊட்டச்சத்தை குறைவாகத்தான் இருக்கும் ஏனெனில் இது எளிதில் நிலத்தை விட்டோ அல்லது நிலத்திற்கு அடியில் சென்று விடுகிறது. 
  • அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கும் மக்கு எந்த அளவில் நம் மண்ணில் உள்ளதோ அந்த அளவில் போரான் சத்து செடிகளுக்கு கிடைக்கப்பெறும்.
  • போரான் எளிதில் கரையக்கூடிய ஊட்டச்சத்து என்பதால் போதுமான ஈரப்பதம் மண்ணில் இருந்தால் மட்டுமே செடிகளுக்கு சென்றடையும்.
  • ஒட்டுமொத்த மண்ணின் வளம் மற்றும் அதில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பொறுத்து மண்ணில் இருக்கும் போரான் ஊட்டச்சத்து அளவு மாறுபடும்.

போரான் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:

  • பயிரின் குருத்துப் பகுதி மஞ்சள் நிறமாக மாற்றம் அடைந்து பின்னர் கருகுதல். 
  • தண்டுப் பகுதி தடிமனாகி வெடிப்பு காணப்படுதல். 
  • நுனி இலைகள் தடித்தல் மற்றும் கணு இடைவெளி குறைந்து இலைகள் மிக நெருக்கமாக காணப்படுதல். 
  • நுனி இலைகளின் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒழுங்கற்ற வடிவில் வெண்மை நிற புள்ளிகள் காணப்படுதல்.
  • இலை காம்புகள் வளைந்தும் சில நேரங்களில் அதில் அழுகல் நோயும் ஏற்படும். 
  • பழம் மற்றும் காய்கறிகளின் இதன் குறைபாட்டால் வெடிப்புகள் உருவாதல்.
  • பூ பிடித்தல் குறைந்து பூ உதிர்தல் அதிகரிக்கும். போரான் ஊட்டச்சத்து அதிக அளவு குறையும் பொழுது பூக்கள் காய்ந்து உதிரும். 
  • கோண வடிவ காய்கள் உருவாதல், இலை துணிகள் வளைதல், குரும்பை உதிர்தல், சிறிய பழம் அல்லது காய்கள் உருவாவதால் என பல்வேறு அறிகுறிகளை தோற்றுவிக்கிறது.
  • தென்னை- குரும்பை உதிர்தல், ஒல்லிகாய் உருவாதல், இலைகளின் நுனி வளைந்து காணப்படுதல் மற்றும் பருப்பு சரிவர பிடிக்காமல் இருக்கும்.
  • காய்கறி பயிர்கள் - பூக்கள் சரிவர போகாது, பூக்கள் விரியும் முன்னே கருகுதல், குறைந்த மகரந்த சேர்க்கை, செடிகளின் நுனி கருகுதல், காய் பிடிப்பு திறன் குறைதல், காய்கறி வெடிப்பு தோன்றுதல் மற்றும் பல.
  • திராட்சை -bசிறிய மற்றும் பெரிய காய்கள் கலந்து காணப்படுதல், புளிப்பு சுவை, பழங்களில் வெடிப்பு
  • வாழை - நுனி இலைகள் மஞ்சள் நிறமாதல், நுனி இலைகளின் விளிம்புகள் கருகுதல் மற்றும் இலைகள் உட்புறமாக சுருள்தல், பழங்களில் சுவை இன்மை மற்றும் பல.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
 


வியாழன், 23 மே, 2024

இயற்கை முறையில் கால்சியம் ஊட்டச்சத்தை பெரும் வழிமுறைகள்

முன்னுரை:

  • பயிரின் வளர்ச்சி மற்றும் பயிரின் பாகங்கள் திடமாக இருக்க கால்சியம் ஊட்டச்சத்து மிகவும் இன்றியமையாததாகும். பொதுவாக மண்ணின் கார அமிலத்தன்மை மண்ணில் இருக்கும் கால்சியம் ஊட்டச்சத்தை நிர்ணயிக்கிறது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 குறைவாக உள்ள அமைப்பில் கால்சியம் குறைபாடு காணப்படும். 
  • மண்ணில் அதிக அளவு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் இருந்தாலும் கால்சியம் ஊட்டச்சத்து குறைபாடு பயிர்களில் காணப்படும். அதே போன்று மண்ணில் அதிக அளவு பாஸ்பரஸ் இடும் பொழுது இது கால்சியத்துடன் வேதியல் வினைபுரிந்து கால்சியம் ஊட்டச்சத்தை செடிகளுக்கு கிடைக்காதவாறு செய்து விடுகிறது.

கால்சியம் பற்றாக்குறையினால் ஏற்படும் அறிகுறிகள்:

  • குன்றிய பயிர் வளர்ச்சி 
  • இளம் இலைகள் மற்றும் தளிர்கள் உட்புறமாக சுருண்டு காணப்படுதல். 
  • பூ மொட்டுக்கள் மற்றும் பூக்கள் வளர்ச்சி குறைதல். 
  • போதிய வேர் வளர்ச்சி அல்லது வேர் நுனி பகுதிகள் இறந்து காணப்படுதல்.
  • பயிரின் அடி இலைகள் மஞ்சள் நிறமாதல் மற்றும் உட்புறமாக சுருங்குதல். 
  • இலை துணிகளில் கருகிய தோற்றம். 
  • காய் மற்றும் பழங்களில் அழுகல் காணப்படுதல்.
  • களர் அல்லது உவர் நிலங்களில் அதிகம் கால்சியம் சத்து இருக்கும்பொழுது மற்ற நுண்ணூட்ட சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறாது குறிப்பாக துத்தநாகம், இரும்பு மற்றும் தழைச்சத்து.

கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உரங்கள்:

ஜிப்சம்:

  • கால்சியம் சல்பேட் எனப்படும் ஜிப்சம் நாம் அனைவரும் அறிந்த சிறந்த கால்சியம் மற்றும் சல்பர் சத்துகள் கொண்ட உரமாகும். 
  • பொதுவாக இது மண்ணின் கார அமில தன்மையை சரி செய்ய மற்றும் மண் இறுக்கத்தை போக்க இடப்படுகிறது. அதிக கார அமிலத்தன்மை கொண்ட மண்ணில் இதை விடுவதை தவிர்க்கவும்.
  • இதில் கால்சியம் 23 % மற்றும் சல்பர் 18 % நிறைந்துள்ளது. இந்த கால்சியம் கார்பனேட் மண்ணிலிருந்து எடுக்கப்படும் பாறைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதால் இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.

முட்டை ஓடு:

  • இயற்கை விவசாயம் பயிர்களுக்கு தேவையான கால்சியம் சத்தை கொடுப்பதில் முட்டை ஓடு மிக முக்கிய பங்கு வைக்கிறது. தேவையான அளவுக்கு முட்டை ஓட்டை சிறிதும் துண்டுகளாக நறுக்கி அல்லது பவுடர் வடிவில் தயார் செய்து பயிர்களுக்கு இலை வழியாகவும் வேர் பகுதியிலும் கொடுக்கலாம். 
  • இதனை சரியான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் அளவுக்கு அதிகமாக இடும் போது இது மண்ணின் கார அமில தன்மையை மாற்றும் தன்மை உடையது. எனவே இதனை கார அமிலத்தன்மை குறைவாக உள்ள மண்ணில் மட்டும் பயன்படுத்துவது சிறந்தது.

மீன் அமிலம்: 

  • பல்வேறு வகையான அமிலங்கள் நிறைந்திருக்கும் இயற்கை வழி தயாரிப்பு திரவமான மீன் அமிலத்தில் கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்திருக்க நாம் தயார் செய்யும் கரைசலை சுமார் ஆறு மாதம் வரை நொதிக்க விடும் பொழுது மீன் பாகத்தில் உள்ள எலும்புகள் சிதைந்து அதில் உள்ள கால்சியம் சத்து நமக்கு கிடைக்கப் பெறுகிறது. 
  • பொதுவாக மீன் அமிலம் 7 முதல் 10 நாட்களில் தயார் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதில் பெரிய அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்காது வளர்ச்சி ஊக்கிகள் மட்டும் நிறைந்ததாக இருக்கும்.

வேளாண்மை சுண்ணாம்பு: 

  • மண்ணில் புதையுண்டு இருக்கும் சுண்ணாம்பு பாறைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கால்சியம் கார்பனேட் எனப்படும் இயற்கை பொருள் தான் வேளாண்மை சுண்ணாம்பு. இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் குறைந்த கார அமிலத்தன்மை கொண்ட மண்ணில் அதன் தன்மையை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. 
  • இதை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இயற்கை வழி தயாரிப்பு பொருளாகும். மண் வளத்தை மேம்படுத்துவதால் இதர நுண்ணூட்ட சத்துக்களை பயிர்களுக்கு கிடைக்க செய்கிறது.

நீரில் கரையும் கால்சியம்: 

நீரில் கரையும் கால்சியம் என்பது முட்டை ஓடு மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்க கூடிய திரவமாகும். அதாவது முட்டையின் ஓட்டு பகுதியில் மிக அதிக அளவு கால்சியம் நிறைந்து இருப்பதால் இதை பிரித்து எடுத்து உடனடியாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டது தான் இந்த நீரில் கரையும் கால்சியம்.

முட்டை எலுமிச்சை கரைசல்: 

  • ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு இலை வழியாக தெளிப்பதற்கு ஏதுவாக சுமார் 15 முதல் 20 முட்டைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அது மூழ்கும் படி எலுமிச்சை சாற்றை ஊற்ற வேண்டும்.
  • இதனை மூடி வைத்து சுமார் பத்து நாட்களுக்கு பிறகு பார்க்கும் பொழுது மிகவும் மென்மையான அமைப்பாக இருக்கும் இதனை நன்றாக பிழிந்து அதனுடன் 250 கிராம் நாட்டு வெல்லம் சேர்த்து மீண்டும் 20 நாட்கள் மூடி வைக்க வேண்டும். 
  • இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் திரவத்தை சுமார் ஒரு ஏக்கருக்கு 150 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழியாக தெளிக்கலாம்.

எலும்பு உரம்: 


  • எலும்பு உரம் என்பது விலங்கினங்களின் எலும்புகளை பொடியாக்கி அல்லது துகள்களாக மாற்றி கிடைக்கப்பெறும் இயற்கை உரமாகும். இதில் அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் தழைச்சத்து நிறைந்துள்ளது.
  • மண்ணின் தன்மை மற்றும் அமைப்பை சரி செய்வதுடன் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை எடுத்து தருவதால் இது சிறந்த பயனளிக்கிறது.
  • தொடர்ச்சியாக வளர்ச்சியிலும் விளைச்சலிலும் செயல்படக்கூடிய பயிர்களுக்கு இதனை கொடுப்பதால் மண்ணின் தன்மை மாறாமல் இருக்கும்.

இது போன்ற தகவல் மற்றும் வேளாண் தொடர்பான சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வியாழன், 16 மே, 2024

சில முக்கிய நிறுவனங்களில் கிடைக்க பெறும் நுண்ணூட்டக் கலவை

முன்னுரை:

  • பயிர்களுக்கு மிகக் குறைந்த அளவில் தேவைப்படும் பல்வேறு வகையான உரங்களை உள்ளடக்கியதாக இந்த நுண்ணூட்டக் கலவை. 
  • மிகக்குறைந்த அளவில் தேவைப்பட்டாலும் இதன் குறைபாட்டால் பயிர்களில் ஏற்படும் விளைவுகள் பெரிதாக இருக்கும். மறைமுகமாக பயிர் வளர்ச்சியில் இருந்து மகசூல் வரைக்கும் இதன் பாதிப்பு இருக்கும். குறிப்பாக காய்கறிகள் மலர்கள் போன்ற குறைந்த வாழ்நாள் உடைய பயிர்களில் இதன் அறிகுறிகள் வெகுவாக தென்படுகிறது.
  • தனியார் நிறுவனங்களில் கிடைக்கப்பெறும் சில முக்கிய நுண்ணூட்ட கலவையை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Rexolin (PR Agro Nutri Pvt. Ltd)

  • இதில் EDTA வடிவத்தில் நுண்ணூட்டங்கள் அடங்கியுள்ளது.துத்தநாகம் 4.2%, இரும்பு 3.4%,  மாங்கனிசு 3.2%, போரான் 1.5%, மெக்னீசியம் 1.2%, மாலிப்டினம் 0.05% மற்றும் சிறிதளவு காப்பர் நிறைந்துள்ளது.
  • இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் மிகவும் தரமான முறையில் விற்கப்படுவதால் இதன் விலை சற்று அதிகம்.
  • விலை அதிகமாக இருப்பதால் இலை வழியாக தெளிப்பதற்கும், சொட்டு நீர் வழியாக கொடுப்பதற்கு மட்டும் பயன்படுத்தலாம்.
  • சராசரியாக 10 லிட்டர் தண்ணீருக்கு ஒன்று முதல் இரண்டு கிராம் வரை பயன்படுத்தலாம்.
  • காய்கறிகள் மலர்கள் போன்ற குறுகிய கால பயிர்களுக்கு சிறப்பாக செயல்படுகிறது. இதனை 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தேவையின் அடிப்படையில் பயன்படுத்தலாம்.
  • சொட்டுநீர் பாசன வழியாக பயிர்களுக்கு கொடுக்கும் போது ஏக்கருக்கு 250-400 கிராம் வரை பயன்படுத்தலாம்.

Surplus ( Tata rallies):

  • நானோ(Nano) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் நுண்ணூட்ட கலவை. 
  • இதில் துத்தநாகம் 5%, இரும்பு 2%, மாங்கனிசு 2% மற்றும் போரான் 0.5% ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் ஊட்டச்சத்துக்கள் ஜெல்(Jel) வடிவில் இடம் பெற்றிருக்கிறது.
  • இதனால் ஊட்டச்சத்துக்கள் இழப்பீடு ஏற்படுவது மிகவும் குறைவு அது மட்டும் இன்றி இதன் விளையும் சற்று குறைவுதான்.
  • ஜெல் வடிவில் இருப்பதால் பயிர்கள் அதிக வெப்பநிலையினால் பயிர் வாடுவதை தவிர்த்து, ஊட்டச்சத்தை எடுத்துக் கொடுக்கிறது.
  • ஏக்கருக்கு 400 மில்லி வரை பொதுவாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
  • பயிர்களில் காணப்படும் அழுத்தத்தை போக்கி மகசூலை 15 சதவீதம் மேம்படுத்துகிறது. இது சற்று அதிகமாக பயன்படுத்தினாலும் பயிர்களை பாதிப்பு தென்படுவதில்லை.

Tracel (Tata rallies):

  • பவுடர் வடிவில் கிடைக்கக்கூடிய இந்த நுண்ணூட்டக் கலவையில் துத்தநாகம் 5%,  இரும்பு 2%, மாங்கனிசு 2%,  போரான் 0.50%, காப்பர் 0.50% மற்றும் மாலிப்டினம் 0.05% நிறைந்துள்ளது. 
  • குறைந்த விலையில் தரமானதாக கிடைக்கக் கூடியது. ஏக்கருக்கு சுமார் 250 முதல் 500 கிராம் வரை இலை வழியாக தெளிக்கலாம். 
  • இது பொதுவாக பெரும்பான்மையான நோய் மற்றும் பூச்சி மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம். 
  • இதை மற்ற நீரில் கரையும் உரங்களுடன் கலந்து தெளிக்காமல் இருப்பது சிறந்தது குறிப்பாக கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் போன்ற உரங்களுடன்.
  • நுண்ணூட்டங்கள் குறைந்த அளவு இருந்தாலும் அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் இரண்டு அல்லது மூன்று முறை.

Kiecite (IMT):

  • நுண்ணூட்ட உரங்களின் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் இது ஒரு முன்னணி நிறுவனமாகும்.
  • இதில் துத்தநாகம் 5%, இரும்பு 1%, மெக்னீசியம் 6%, மாங்கனிசு மற்றும் போரான் தலா 0.5 % உள்ளது.
  • பொதுவாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் ஏக்கருக்கு 500 முதல் 700 கிராம் வரை.
  • பவுடர் மற்றும் திரவ வடிவில் கிடைக்கப்பெறுகிறது விலை சற்று குறைவுதான் ஆனால் அனைத்து இடங்களிலும் கிடைப்பது சற்று கடினம்தான்.

Agromin (Aeries agro):

  • பவுடர் திரவம் மற்றும் குருணை வடிவில் கிடைக்கப்பெறுகிறது. இதில் கோல்ட் மேக்ஸ் என பல வடிவங்களில் நுண்ணூட்டக் கலவை இருக்கிறது. 
  • குறைந்த விலையில் chelated வடிவில் கிடைக்கக் கூடியது. எனவே தாராளமாக பயன்படுத்தலாம். 
  • இதில் துத்தநாகம் 3%, மாங்கனிசு 1%,  காப்பர் 1%, போரான் 0.50%, சிறிதளவு காப்பர் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. 
  • இழை வழியாக ஏக்கருக்கு 250 கிராம் பயன்படுத்தலாம்.

இது போன்ற தகவல் மற்றும் மேலும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


ஞாயிறு, 12 மே, 2024

கத்தரியில் சிற்றிலை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • காய்கறிகளின் அரசன் என்று அழைக்கப்படும் கத்தரி, இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல்கள் கத்தரி சாகுபடிக்கு சவாலாக திகழ்கிறது அதில் சிற்றிலை நோய் குறிப்பிடத்தக்கது. 
  • சிற்றிலை நோயினால் கத்திரியில் சுமார் 40% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. குறிப்பாக இது கோடை பருவத்தில் தான் அதிகம் தென்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது:

பைட்டோபிளாஸ்மா (Phytoplasma) எனப்படும் நோய் காரணியால் இது ஏற்படுகிறது. பைட்டோபிளாஸ்மா என்பது கண்ணிற்கு புலப்படாத பாக்டீரியாக்களை போன்று செல் சுவர் அற்ற அமைப்பாகும். பொதுவாக இது பயிர்களின் நீர் மற்றும் உணவு கடத்தும் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தி அங்கேயே தங்கி விடுகிறது.

இதை எவ்வாறு பரவுகிறது:

பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து சாற்றை உறிஞ்சி வேறு செடிகளுக்கு நோயை தத்துப் பூச்சிகள் எனப்படும் பச்சை ஈக்கள் பரப்புகிறது. சில நேரங்களில் பாதிக்கப்பட்ட கத்தரி செடிகளை ஒட்டுக்காக பயன்படுத்தும் போதும் பரவுகிறது.

நோயின் அறிகுறிகள்:

  • 45 முதல் 60 நாட்கள் வயது உடைய கத்திரி செடிகள் அதிகம் பாதிப்படைகிறது.
  • பாதிக்கப்பட்ட செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறும், இலைகளின் அளவு குறையும், கணு இடைவெளி குறையும், செடியின் நுனிப்பகுதியில் அதிக சிற்றலைகள் தோன்றும்.
  • இதனை பார்ப்பதற்கு சூனியக்காரர்களின் துடைப்பம் போன்று காட்சி அளிக்கும்.
  • பூக்களின் உருவம் மாறி இலைகள் போன்று காட்சி அளிக்கும் இதனை phyllody என்பார்கள்.
  • பாதிக்கப்பட்ட செடிகளில் பூக்கள் பெரும்பாலும் தோன்றுவதில்லை, அவ்வாறு தோன்றினாலும் அதன் காய்கள் ஒழுங்கற்ற வடிவில் காட்சியளிக்கும்.
  • பராமரிக்கப்படாத வயலில் இதன் இழப்பீடு 100% வரை இருக்கக்கூடும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • நாட்டு கத்தரி ரகங்களை  சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து விதைகளை சேகரித்து மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
  • விதை மூலமாகவும் சிற்றலை நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • வீரிய ஒட்டு கத்தரி ரகங்களை சாகுபடி செய்பவர்களுக்கு விதை மூலம் பரவுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
  • பாதிக்கப்பட்ட செடிகளை பயன்படுத்தி ஒட்டு செடிகள் உற்பத்தி செய்வதை தவிர்க்கலாம்.
  • கோடை காலத்தில் பயிர் செய்யும் போது பயிர் இடைவெளி சற்று அதிகமானதாக இருக்க வேண்டும். போதுமான காற்றோட்ட வசதி இருக்கும் பொழுது இதன் தாக்குதல் குறைந்து காணப்படுகிறது.
  • வயலில் களைகள் இன்றி பராமரிப்பது மிகவும் அவசியம். களைகள் தத்துப் பூச்சிகளின் மாற்று வாழும் இடமாக கருதப்படுகிறது. களைகள் இருந்தால் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.
  • பாதிக்கப்பட்டு செடிகளை அவ்வப்போது வயலில் இருந்து அகற்றி அப்புறப்படுத்துவது மிகவும் அவசியம்.

  • நாற்றுகளை நடவு செய்யும் பொழுது அதன் 40 முதல் 60 நாட்கள் வாழ் நாட்களில் அதிக வெப்பம் இல்லாதவாறு நடவு மேற்கொள்ளலாம்.
  • ஏக்கருக்கு 12 முதல் 15 எண்கள் மஞ்சள் ஒட்டுப் பொறி பயன்படுத்த வேண்டும்.
  • நிலப் போர்வை பயன்படுத்தி சாகுபடி செய்யும் போது தத்துப் பூச்சிகளின் தாக்குதல் குறைவாக இருப்பது தெரிய வருகிறது.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் Verticillum lecanii, தேமோர் கரைசல், 3G கரைசல், கற்பூர கரைசல், ஐந்திலை கரைசல், பூண்டு கரைசல் போன்றவற்றில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்றினை தயார் செய்து ஏழு முதல் 10 நாட்கள் இடைவெளியில் தெளித்து வர வேண்டும்.
  • ரசாயன மருந்துகளை பயன்படுத்த விரும்பினால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து தெளிக்கலாம்.
  • Imidacloprid+Streptomycin sulphate- 10 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Thiamethoxam + Streptomycinsulphate- 10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Fibronil-25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Imidacloprid+ Acephate - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Flonicamid+ tetracycline hydrochloride
  • Spirotetramet+imidacloprid 
  • Afidopyrofen+ Tetracycline hydrochloride

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.


https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


செவ்வாய், 7 மே, 2024

மாம்பழத்தில் ஆந்த்ரக்னோஸ் (Anthracnose) எனப்படும் விதைப்புள்ளி நோய் மேலாண்மை

முன்னுரை:

  • உலக அளவில் மிக முக்கிய நோயாக கருதப்படும் ஆந்த்ரக்னோஸ் எனப்படும் விதைப்புள்ளி நோய் colletotrichum என்ற பூஞ்சானத்தால் ஏற்படுகிறது. 
  • மண்ணில் வாழும் இந்த வகை பூஞ்சானம் மிதமான வெப்பநிலை, அதிக காற்று ஈரப்பதம், குறைந்த மண்ணின் கார அமிலத்தன்மை என பல்வேறு சாதகமான சூழ்நிலை நிலவும் பொழுது பயிர்களை தாக்குகிறது.

நோயின் அறிகுறிகள்:

வியாழன், 2 மே, 2024

நீரில் கரையும் உரங்களின் பயன்பாடுகள் - ஒரு பார்வை

முன்னுரை:

  • அடி உரங்கள் போன்று இல்லாமல் இந்த உரங்கள் இலை வழியாகவோ அல்லது வேர் வழியாகவோ கொடுக்கும் பொழுது உடனடியாக அதன் பலனை நாம் காண இயலும். ஆனால் இந்த உரங்கள் அடி உரங்களுக்கு மாற்று கிடையாது. 
  • ஊட்டச்சத்துக்களை சரிவிகித அளவில் கொடுப்பதற்கும் ஊட்டச்சத்துக்களின் இழப்பை தடுப்பதற்கும் இது உதவுகிறது. இதன் முக்கியத்துவத்தின் காரணமாக நாளுக்கு நாள் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நமக்கு கிடைக்கப்பெறும் பெரும்பான்மையான நீரில் கரையும் உரங்களில் தழைச்சத்து, மணி சத்து மற்றும் சாம்பல் சத்து வெவ்வேறு விதத்தில் கிடைக்கப்பெறுகிறது. 
  • இதற்கு அடுத்தபடியாக கால்சியம், சல்பர் மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் நீரில் கரையும் உரங்களில் மிகவும் முக்கியமானது. இது போக மீதமுள்ள ஊட்டச்சத்துக்கள் ஒருங்கிணைந்து நுண்ணூட்ட கலவையாக கிடைக்கப்பெறுகிறது.

முக்கியமான சில நீரில் கரையும் உரங்களின் பயன்கள்:

19:19:19:

  • மிதமான அளவில் வேர் மற்றும் புதிய துளிர்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.
  • தழைச்சத்து, மணிச்சத்து மட்டும் சாம்பல் சத்து ஆகிய மூன்றும் சரிவிகித அளவில் இருப்பதால் இதை அனைத்து பயிர்களுக்கும் அனைத்து மிதமான வளர்ச்சி பருவத்திலும்  பயன்படுத்தலாம்.
  • இதில் மிகவும் சிறிய அளவு நுண்ணூட்ட சத்துக்களும் இருக்கும்.

கால்சியம் நைட்ரேட்:

  • பயிர்களின் செல் வளர்ச்சி அதிகப்படுத்துவதால் இலை மற்றும் தண்டு  பகுதிகளின் செயல்பாடுகளை அதிகப்படுத்துகிறது.
  • பழ பயிர்களில் செடிகளின் வளர்ச்சிக்கு உதவி புரிவதுடன் காய் அல்லது பழங்களின் அறுவடைக்குப் பின் பழங்கள் அழுகாமல் சற்று வாழ்நாளை அதிகரிக்கிறது.
  • இதைப் பகுதியில் உள்ள செல்களின் செயல்பாட்டை அதிகரித்து அதிக உணவை உற்பத்தி செய்வதால் பயிரின் மகசூல் அதிகரிக்கிறது.
  • மண்ணின் காரா அமில தன்மையை சரி செய்து இதர நுண்ணூட்ட சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதை இது உறுதிப்படுத்தும்.
  • காய்கள் உதிர்வதை குறைத்து காய் பிடிப்பு திறனை அதிகரிக்கிறது.

பொட்டாசியம் நைட்ரேட் (13:00:45):

  • அதிக சாம்பல் சத்து இருப்பதால் பூ பூத்தலை ஊக்கப்படுத்துகிறது.
  • செடிகளுக்கு தட்பவெப்ப சூழ்நிலை, நோய் மற்றும் பூச்சி தாக்குதலால் ஏற்படும் சவால்களை தாங்கி வளரும் தன்மை கொடுக்கிறது.
  • பிஞ்சுகள் உதிர்வதை குறைத்து காய்களின் எண்ணிக்கை, அளவு மற்றும் சுவையை மேம்படுத்துகிறது.
  • இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களான கால்சியம் மற்றும் மெக்னீசியம் செடிகளுக்கு கிடைக்க இது வழிவகை செய்யும்.
  • அனைத்து வகையான பயிர்களுக்கும் இதை பயன்படுத்தலாம்.

மோனோ அமோனியம் பாஸ்பேட் (12:61:00):

  • அதிக மணிச்சத்து இருப்பதால் பயிர்களின் ஆரம்ப நிலையில் பயன்படுத்துவதால் நல்ல வேர் வளர்ச்சியை அடைவதுடன் புதிய துளிர்களையும் ஊக்குவிக்கிறது.
  • மரவள்ளி, நிலக்கடலை, முள்ளங்கி, கேரட் போன்ற நிலத்திற்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகை பயிர்களில் மகசூலை அதிகப்படுத்துகிறது.
  • வேர் வளர்ச்சியை அதிகப்படுத்துவதால் வறட்சியை தாக்கு பிடித்தல், நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளர்தல், பூக்கள் உதிர்வதை குறைத்து மற்றும் காய் பிடிப்பு திறனை அதிகப்படுத்துகிறது.

13:40:13:

  • பயிர்களின் ஆரம்ப நிலையில் கொடுப்பதால் நல்ல வேறு வளர்ச்சி காணப்படும். இதனால் பயிர்களில் நல்ல வளர்ச்சி, நோய் எதிர்ப்பு திறன் மற்றும் வறட்சியை தாங்கி வளர்தல்.
  • இதனால் பூ பிடித்தல் அதிகமாக காணப்படும் பூ உதிர்தல் குறையும் காய் பிடிப்பு திறன் கூடுதலாகும் இதனால் மகசூல் எடை மற்றும் தரம் மேம்பட்டு காணப்படும்.
  • பயிர்கள் விரைந்து பூ பிடிக்க இது உதவி புரிகிறது.
  • கால்சியம் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக் கொண்ட நீரில் கரையும் உரத்துடன் இதனை கலக்கக் கூடாது.

00:52:34 (Mono potassium phosphate):

  • பயிரின் ஆரம்ப காலத்தில் வேர் வளர்ச்சிக்காகவும் பின்னர் மகசூலின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • பழங்கள் நன்றாக முதிர்ச்சி அடைவதற்கும் நல்ல நிறம் பெறுவதற்கு இது உதவி புரிகிறது.
  • மேலும் பழத்தின் சுவை மேம்பட்டு காணப்படும்.
  • குறிப்பாக இது மாதுளை சாகுபடியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

00:00:50+17.5 sulphur (potassium sulphate):

  • பிரதானமாக பூப்பூக்கும் தருணத்தில் இருந்து மகசூல் அறுவடை செய்யும் வரை பயன்படுத்தப்படுகிறது.
  • மகசூல் நல்ல முதிர்ச்சி மற்றும் அதிக மகசூல் பெற பயன்படுகிறது.
  • பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் திறன் அளிக்கிறது.

05:09:35+ நுண்ணூட்டம்:

  • இதில் பிரதானமாக சாம்பல் சத்து உள்ளது. பயிர்கள் பூக்கும் தருணத்தில் இருந்து அறுவடை செய்யும் வரை பயன்படுத்தலாம்.
  • தொடர்ச்சியாக அறுவடை செய்யும் பயிர்களில் குறிப்பாக காய்கறி பயிர்களுக்கு இது ஏற்ற உரம்.
  • இதனால் மகசூலின் அளவு, தரம், நிறம் மற்றும் சுவை மேம்படும்.
  • இதனை இழை வழியாகவும் சொட்டுநீர் பாசனம் வழியாகவும் கொடுக்கலாம்.
  • இது மட்டும் இன்றி இதில் நுண்ணூட்ட ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் மிகச் சிறப்பாக பயிர்களில் செயல்படுகிறது.

11:42:11:

  • பயிரின் ஆரம்ப நிலையில் நல்ல வேர் வளர்ச்சி மற்றும் துளிர் வருவதை தூண்டுகிறது.
  • பூ மற்றும் காய்கள் பிடித்தல், மற்றும் ஒருமித்த நேரத்தில் விளைச்சல் முதிர்ச்சி அடைவதற்கும் உதவி புரிகிறது.
  • வெங்காயம் கேரட் முள்ளங்கி போன்ற வேர் பகுதியில் விளைச்சலை கொடுக்கக்கூடிய காய்கறி பயிர்களுக்கு மகசூலை அதிகரிக்க உதவுகிறது.

24:24:00:

பயிரின் ஆரம்ப நிலையில் வேர் மற்றும் இலை வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.

18:18:18+6.10:

  • பயிரின் அனைத்து வளர்ச்சி நிலையிலும் பயன்படுத்தலாம்.
  • பயிர்கள் கிளை பிரிவதற்கு மற்றும் தூர்கள் கட்டுவதற்கு பெரிதும் துணை புரிகிறது.
  • அதிக வெப்பநிலை மிகவும் குறைந்த வெப்பநிலை நோய் மற்றும் பூச்சி தாக்குதல் ஆகியவற்றிற்கு எதிராக எதிர்ப்பு திறன் பெறுகிறது.
  • பயிரின் வேறு வளர்ச்சி மற்றும் ஒருமித்த நேரத்தில் அறுவடை செய்வதற்கு துணை புரிகிறது.

17:44:00 (Urea phosphate):

  • விதை முளைப்பு திறனை மேம்படுத்துகிறது.
  • வேர் வளர்ச்சி, பக்கவாட்டு வேர் வளர்ச்சி மற்றும் பயிர்கள் அதிக தூர்கள் கட்டுவதற்கு உதவி புரிகிறது.
  • பூ உதிர்வதைத் தடுத்து காய் பிடித்தலை அதிகப்படுத்துகிறது.
  • ஒட்டுமொத்த மகசூல் தரத்தை மேம்படுத்துகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு அமைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD



புதன், 1 மே, 2024

இயற்கை முறையில் பொட்டாசியம் ஊட்டச்சத்தை பெறும் வழிமுறைகள்

முன்னுரை:

  • பயிர்களுக்கு தேவையான பல்வேறு ஊட்டச் சத்துக்களில் சாம்பல் சத்து எனப்படும் பொட்டாசியம் பிரதான பங்கு வகிக்கிறது. பயிர்களில் பல்வேறு வகையான நொதிகளை உற்பத்தி செய்தல் மற்றும் செயல்பட தூண்டுதல், பயிர்கள் அசாதாரண சூழ்நிலையை தாங்கி வளரக்கூடிய சக்தியை கொடுத்தல், மகசூலின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்துதல், தழைச்சத்து மற்றும் மணிச்சத்து பயன்பாட்டை மேம்படுத்துதல் என பல்வேறு வகையான பணிகளை இது செய்கிறது. 
  • ரசாயன உரங்களின் விலை அதிகரிப்பு குறிப்பாக பொட்டாசியம் மற்றும் சரியான தருணத்தில் உரங்கள் கிடைக்காமல் இருத்தல் என பல காரணங்களால் பொட்டாசியம் உரத்தின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. 
  • ஒருபுறம் ரசாயன உரத்தின் பயன்பாடு குறைந்தாலும் அதற்கு மாற்றாக இயற்கை வழியில் ஊட்டச்சத்துக்களை கொடுத்தால் மட்டுமே பயிர்களில் இருந்து சராசரி மகசூல் பெற முடியும்.

பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:

  • குன்றிய பயிர் வளர்ச்சி.
  • இலையின் விளிம்புகள் மஞ்சள் நிறமாதல்,  நாளடைவில் கருகுதல்.
  • இலை நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதி வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல்.
  • தீவிரமான பற்றாகுறையின் போது மேல் நோக்கி சுருங்குதல் மற்றும் இலை உதிர்வு காணப்படுதல்.
  • பயிர்களின் நோய் எதிர்ப்பு திறன் குறைதல்.
  • தண்டு வளர்ச்சி போதுமானதாக இருக்காது.
  • மகசூல் இழப்பீடு ஏற்படும்.

இயற்கை முறையில் பொட்டாசியம் ஊட்டச்சத்தை பெரும் வழிமுறைகள்:

  • அடி உரங்களாக பொட்டாசியம் சத்து நிறைந்த இடு பொருட்களை குறிப்பாக புண்ணாக்கு வகைகள் அதிகம் கொடுக்க வேண்டும். சில உதாரணங்கள் மற்றும் அதில் உள்ள ஊட்டச்சத்தின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • பிரஸ்மட் - 3.0 -8.0%, தேங்காய் புண்ணாக்கு- 1.5-2.0%, பருத்தி கொட்டை புண்ணாக்கு- 2.0-2.5%
  • பிரஸ்மட் பயன்படுத்தும் போது அது நன்கு சிதைந்து இருக்க வேண்டும். புண்ணாக்கு வகைகளை பயன்படுத்தும் போது அதனுடன் வேப்பம் புண்ணாக்கு அல்லது உயிர் பூச்சிக் கொல்லிகளை கலந்து இடுவது சிறந்தது.
  • இயற்கை வழி தயாரிப்பு திரவங்களில் பொட்டாசியம் ஊட்டச்சத்து மிகுந்த திரவங்களை தொடர் இடைவெளியில் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு பஞ்சகாவியா மற்றும் அமிர்த கரைசல். இதில் சுமார் 1 -1.5 % வரை பொட்டாசியம் உள்ளது.
  • அதேபோல் பசு மாட்டு மற்றும் ஆட்டு கோமியத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது அவற்றை நீரில் கரைத்து விடலாம். பசு மட்டு கோமியம்- 1-1.5%, ஆட்டு கோமியம் - 2-2.5%
  • அடி உரமாக அல்லது பயிர்கள் பூ எடுப்பதற்கு முன்னதாக சாம்பல் இடலாம். சாம்பல் பெறப்படும் பொருள் மற்றும் தரத்தை பொறுத்து அதில் உள்ள ஊட்டச்சத்து வேறுபடும். உதாரணத்திற்கு கட்டைகள்- 2.0-35.0%, மக்காச்சோள தட்டை- 1.5-2.5%
  • மண்ணில் நிறைய பொட்டாசியம் சத்து செடிகளுக்கு கிடைக்கப் பெறாத வண்ணம் உள்ளது அதனை கிடைக்கச் செய்ய தொடர்ச்சியாக பொட்டாஸ் பாக்டீரியா திரவத்தை நீர் வழியாக கொடுக்க வேண்டும். இது மண் மற்றும் நாம் கொடுக்கும் இடு பொருட்களில் உள்ள பொட்டாசியத்தை செடிகளுக்கு கிடைக்க செய்கிறது.
  • புங்கம், வேங்கை, தேக்கு, நாய் தேக்கு போன்ற மரங்களின் இலைகளில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது. இவற்றை மக்க வைத்தோ அல்லது அடி உரம் ஆகவோ பயன்படுத்தலாம் உதாரணத்திற்கு புங்கம்- 2.5-3.0%, வேங்கை- 3.0-3.5%
  • பொட்டாசியம் சத்து மிகுந்த பசுந்தாள் மற்றும் பசுந்தலை பயிர்களை பயிரிட்டு மடக்கி உழவு செய்யலாம். உதாரணத்திற்கு தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, உளுந்து...
  • நமது பண்ணையில் கிடைக்கக்கூடிய கழிவுகளை பயன்படுத்தி இயற்கை பொட்டாஸ் தயார் செய்யலாம். இதற்கு பண்ணை கழிவுகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நிழற் பகுதி இடத்தில் குழி வெட்டி அதில் வேஸ்ட் டீ கம்போசர் மற்றும் பொட்டாஸ் பாக்டீரியா பயன்படுத்தி தயார் செய்யலாம். பயன்படுத்தப்படும் இடுபொருட்களை பொறுத்து மூன்று முதல் ஆறு மாதங்கள் மக்குவதற்கு தேவைப்படும்.
  • ஈயம் மற்றும் வேஸ்ட் டீ கம்போசர் கரைசல் பயன்படுத்தி நுண்ணூட்ட கலவை தயார் செய்யலாம். தயார் செய்யும் போது பொட்டாசியம் மிகுந்த பொருட்களை எங்கு பயன்படுத்தினால் போதும்.
  • கடல் வாழ் உயிரினங்களில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை பொட்டாஸ் வாங்கியும் பயன்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD



Recent Posts

Popular Posts