பயிர்களில் போரான் நுண்ணூட்ட ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்
|முன்னுரை:
- துத்தநாகம், இரும்பு, மாங்கனிசு, போரான், மாலிப்டினம், குளோரின் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைந்த அளவு பயிர்களுக்கு தேவைப்படுவதால் இதனை நுண்ணூட்ட சத்துக்கள் என்கிறோம்.
- பேரூட்டச் சத்துக்கள் என்றால் என்ன அதன் பணிகள் என்னவென்று ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம். நுண்ணூட்ட சத்துக்கள் மிக குறைந்த அளவு தேவைப்பட்டாலும் இவற்றின் குறைபாடு பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும். இவைகள் மறைமுகமாக பேரூட்டச் சத்துக்களின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.
போரான் நுண்ணூட்ட ஊட்டச்சத்தின் பணிகள்:
- பயிர் வளர்ச்சிக்கு அடிப்படை செல்கள் வேகமாக வளர்ச்சி அடைவது. பயிரின் தளிர் பகுதி மற்றும் வேர் பகுதியில் இருக்கும் செல் வளர்ச்சியை மேம்படுத்துவதில் போரான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
- செல்களின்/திசுக்களின் சுவர்களை கடினப்படுத்துவது இதன் பிரதான பணியாகும்.
- பயிர்களில் புரதம், அமினோ அமிலங்கள் மற்றும் இதர அமிலங்களின் உருவாக்க மற்றும் செயல்பாட்டிற்கு உறுதுணையாக திகழ்கிறது. இதன் மூலம் உருவாகக்கூடிய சத்துப் பொருட்களை செடிகளின் அனைத்து பாகத்திற்கும் கொண்டு சேர்க்கிறது.
- பயிர்களில் பூக்கள் உருவாதல், பூக்களில் ஆண் மற்றும் பெண் பாகங்கள் உருவாதல் மற்றும் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு போரான் ஊட்டச்சத்து மிக அவசியம்.
- பழங்கள் மற்றும் விதைகள் தரமாக பயிர்களில் உற்பத்தி செய்யப்படுவதற்கு போரான் இன்றியமையாததாகும்.
- பயிர்களில் தளிர் மற்றும் வேறு வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
- பயிறு வகை பயிர்களில் வளிமண்டத்தில் உள்ள தழைச்சத்தை வேர்ப்பகுதியில் நிலைநிறுத்த உதவும் சைனோபாக்டீரியா போரான் ஊட்டச்சத்தை எடுத்துக் கொண்டுதான் வளர்கிறது.
எப்போது போரான் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது:
- மண்ணின் தன்மை அதாவது நம் நிலத்தின் மண் எந்த வகையான பாறைகளில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதனை பொறுத்து இதில் உள்ள போரான் சத்து மாறுபடும்.
- மண்ணின் கார அமிலத்தன்மை அதாவது அமிலத்தன்மை கொண்ட மண்ணில் போரான் ஊட்டச்சத்து குறைவாகத்தான் இருக்கும். அமிலத்தன்மை கொண்ட மண்ணில் காணப்படும் இரும்பு மற்றும் தாமிரத்துடன் போரான் இணைந்து செடிகளுக்கு கிடைக்க வண்ணம் மாறிவிடுகிறது.
- மண்ணின் அமைப்பு அதாவது மணல் பாங்கான பகுதிகளில் இந்த ஊட்டச்சத்தை குறைவாகத்தான் இருக்கும் ஏனெனில் இது எளிதில் நிலத்தை விட்டோ அல்லது நிலத்திற்கு அடியில் சென்று விடுகிறது.
- அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கும் மக்கு எந்த அளவில் நம் மண்ணில் உள்ளதோ அந்த அளவில் போரான் சத்து செடிகளுக்கு கிடைக்கப்பெறும்.
- போரான் எளிதில் கரையக்கூடிய ஊட்டச்சத்து என்பதால் போதுமான ஈரப்பதம் மண்ணில் இருந்தால் மட்டுமே செடிகளுக்கு சென்றடையும்.
- ஒட்டுமொத்த மண்ணின் வளம் மற்றும் அதில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பொறுத்து மண்ணில் இருக்கும் போரான் ஊட்டச்சத்து அளவு மாறுபடும்.
போரான் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:
- பயிரின் குருத்துப் பகுதி மஞ்சள் நிறமாக மாற்றம் அடைந்து பின்னர் கருகுதல்.
- தண்டுப் பகுதி தடிமனாகி வெடிப்பு காணப்படுதல்.
- நுனி இலைகள் தடித்தல் மற்றும் கணு இடைவெளி குறைந்து இலைகள் மிக நெருக்கமாக காணப்படுதல்.
- நுனி இலைகளின் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒழுங்கற்ற வடிவில் வெண்மை நிற புள்ளிகள் காணப்படுதல்.
- இலை காம்புகள் வளைந்தும் சில நேரங்களில் அதில் அழுகல் நோயும் ஏற்படும்.
- பழம் மற்றும் காய்கறிகளின் இதன் குறைபாட்டால் வெடிப்புகள் உருவாதல்.
- பூ பிடித்தல் குறைந்து பூ உதிர்தல் அதிகரிக்கும். போரான் ஊட்டச்சத்து அதிக அளவு குறையும் பொழுது பூக்கள் காய்ந்து உதிரும்.
- கோண வடிவ காய்கள் உருவாதல், இலை துணிகள் வளைதல், குரும்பை உதிர்தல், சிறிய பழம் அல்லது காய்கள் உருவாவதால் என பல்வேறு அறிகுறிகளை தோற்றுவிக்கிறது.
- தென்னை- குரும்பை உதிர்தல், ஒல்லிகாய் உருவாதல், இலைகளின் நுனி வளைந்து காணப்படுதல் மற்றும் பருப்பு சரிவர பிடிக்காமல் இருக்கும்.
- காய்கறி பயிர்கள் - பூக்கள் சரிவர போகாது, பூக்கள் விரியும் முன்னே கருகுதல், குறைந்த மகரந்த சேர்க்கை, செடிகளின் நுனி கருகுதல், காய் பிடிப்பு திறன் குறைதல், காய்கறி வெடிப்பு தோன்றுதல் மற்றும் பல.
- திராட்சை -bசிறிய மற்றும் பெரிய காய்கள் கலந்து காணப்படுதல், புளிப்பு சுவை, பழங்களில் வெடிப்பு
- வாழை - நுனி இலைகள் மஞ்சள் நிறமாதல், நுனி இலைகளின் விளிம்புகள் கருகுதல் மற்றும் இலைகள் உட்புறமாக சுருள்தல், பழங்களில் சுவை இன்மை மற்றும் பல.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
0 Comments:
கருத்துரையிடுக