சில முக்கிய நிறுவனங்களில் கிடைக்க பெறும் நுண்ணூட்டக் கலவை
|முன்னுரை:
- பயிர்களுக்கு மிகக் குறைந்த அளவில் தேவைப்படும் பல்வேறு வகையான உரங்களை உள்ளடக்கியதாக இந்த நுண்ணூட்டக் கலவை.
- மிகக்குறைந்த அளவில் தேவைப்பட்டாலும் இதன் குறைபாட்டால் பயிர்களில் ஏற்படும் விளைவுகள் பெரிதாக இருக்கும். மறைமுகமாக பயிர் வளர்ச்சியில் இருந்து மகசூல் வரைக்கும் இதன் பாதிப்பு இருக்கும். குறிப்பாக காய்கறிகள் மலர்கள் போன்ற குறைந்த வாழ்நாள் உடைய பயிர்களில் இதன் அறிகுறிகள் வெகுவாக தென்படுகிறது.
- தனியார் நிறுவனங்களில் கிடைக்கப்பெறும் சில முக்கிய நுண்ணூட்ட கலவையை பற்றி விரிவாக பார்க்கலாம்.
Rexolin (PR Agro Nutri Pvt. Ltd)
- இதில் EDTA வடிவத்தில் நுண்ணூட்டங்கள் அடங்கியுள்ளது.துத்தநாகம் 4.2%, இரும்பு 3.4%, மாங்கனிசு 3.2%, போரான் 1.5%, மெக்னீசியம் 1.2%, மாலிப்டினம் 0.05% மற்றும் சிறிதளவு காப்பர் நிறைந்துள்ளது.
- இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் மிகவும் தரமான முறையில் விற்கப்படுவதால் இதன் விலை சற்று அதிகம்.
- விலை அதிகமாக இருப்பதால் இலை வழியாக தெளிப்பதற்கும், சொட்டு நீர் வழியாக கொடுப்பதற்கு மட்டும் பயன்படுத்தலாம்.
- சராசரியாக 10 லிட்டர் தண்ணீருக்கு ஒன்று முதல் இரண்டு கிராம் வரை பயன்படுத்தலாம்.
- காய்கறிகள் மலர்கள் போன்ற குறுகிய கால பயிர்களுக்கு சிறப்பாக செயல்படுகிறது. இதனை 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தேவையின் அடிப்படையில் பயன்படுத்தலாம்.
- சொட்டுநீர் பாசன வழியாக பயிர்களுக்கு கொடுக்கும் போது ஏக்கருக்கு 250-400 கிராம் வரை பயன்படுத்தலாம்.
Surplus ( Tata rallies):
- நானோ(Nano) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் நுண்ணூட்ட கலவை.
- இதில் துத்தநாகம் 5%, இரும்பு 2%, மாங்கனிசு 2% மற்றும் போரான் 0.5% ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் ஊட்டச்சத்துக்கள் ஜெல்(Jel) வடிவில் இடம் பெற்றிருக்கிறது.
- இதனால் ஊட்டச்சத்துக்கள் இழப்பீடு ஏற்படுவது மிகவும் குறைவு அது மட்டும் இன்றி இதன் விளையும் சற்று குறைவுதான்.
- ஜெல் வடிவில் இருப்பதால் பயிர்கள் அதிக வெப்பநிலையினால் பயிர் வாடுவதை தவிர்த்து, ஊட்டச்சத்தை எடுத்துக் கொடுக்கிறது.
- ஏக்கருக்கு 400 மில்லி வரை பொதுவாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
- பயிர்களில் காணப்படும் அழுத்தத்தை போக்கி மகசூலை 15 சதவீதம் மேம்படுத்துகிறது. இது சற்று அதிகமாக பயன்படுத்தினாலும் பயிர்களை பாதிப்பு தென்படுவதில்லை.
Tracel (Tata rallies):
- பவுடர் வடிவில் கிடைக்கக்கூடிய இந்த நுண்ணூட்டக் கலவையில் துத்தநாகம் 5%, இரும்பு 2%, மாங்கனிசு 2%, போரான் 0.50%, காப்பர் 0.50% மற்றும் மாலிப்டினம் 0.05% நிறைந்துள்ளது.
- குறைந்த விலையில் தரமானதாக கிடைக்கக் கூடியது. ஏக்கருக்கு சுமார் 250 முதல் 500 கிராம் வரை இலை வழியாக தெளிக்கலாம்.
- இது பொதுவாக பெரும்பான்மையான நோய் மற்றும் பூச்சி மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம்.
- இதை மற்ற நீரில் கரையும் உரங்களுடன் கலந்து தெளிக்காமல் இருப்பது சிறந்தது குறிப்பாக கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் போன்ற உரங்களுடன்.
- நுண்ணூட்டங்கள் குறைந்த அளவு இருந்தாலும் அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் இரண்டு அல்லது மூன்று முறை.
Kiecite (IMT):
- நுண்ணூட்ட உரங்களின் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் இது ஒரு முன்னணி நிறுவனமாகும்.
- இதில் துத்தநாகம் 5%, இரும்பு 1%, மெக்னீசியம் 6%, மாங்கனிசு மற்றும் போரான் தலா 0.5 % உள்ளது.
- பொதுவாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் ஏக்கருக்கு 500 முதல் 700 கிராம் வரை.
- பவுடர் மற்றும் திரவ வடிவில் கிடைக்கப்பெறுகிறது விலை சற்று குறைவுதான் ஆனால் அனைத்து இடங்களிலும் கிடைப்பது சற்று கடினம்தான்.
Agromin (Aeries agro):
- பவுடர் திரவம் மற்றும் குருணை வடிவில் கிடைக்கப்பெறுகிறது. இதில் கோல்ட் மேக்ஸ் என பல வடிவங்களில் நுண்ணூட்டக் கலவை இருக்கிறது.
- குறைந்த விலையில் chelated வடிவில் கிடைக்கக் கூடியது. எனவே தாராளமாக பயன்படுத்தலாம்.
- இதில் துத்தநாகம் 3%, மாங்கனிசு 1%, காப்பர் 1%, போரான் 0.50%, சிறிதளவு காப்பர் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது.
- இழை வழியாக ஏக்கருக்கு 250 கிராம் பயன்படுத்தலாம்.
இது போன்ற தகவல் மற்றும் மேலும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD
0 Comments:
கருத்துரையிடுக