google-site-verification: googled5cb964f606e7b2f.html மாம்பழத்தில் ஆந்த்ரக்னோஸ் (Anthracnose) எனப்படும் விதைப்புள்ளி நோய் மேலாண்மை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 7 மே, 2024

மாம்பழத்தில் ஆந்த்ரக்னோஸ் (Anthracnose) எனப்படும் விதைப்புள்ளி நோய் மேலாண்மை

முன்னுரை:

  • உலக அளவில் மிக முக்கிய நோயாக கருதப்படும் ஆந்த்ரக்னோஸ் எனப்படும் விதைப்புள்ளி நோய் colletotrichum என்ற பூஞ்சானத்தால் ஏற்படுகிறது. 
  • மண்ணில் வாழும் இந்த வகை பூஞ்சானம் மிதமான வெப்பநிலை, அதிக காற்று ஈரப்பதம், குறைந்த மண்ணின் கார அமிலத்தன்மை என பல்வேறு சாதகமான சூழ்நிலை நிலவும் பொழுது பயிர்களை தாக்குகிறது.

நோயின் அறிகுறிகள்:

  • ஒழுங்கற்ற வடிவில் கருப்பு நிற புள்ளிகள் இலைகளின் இரு புறத்திலும் காணப்படும்.
  • குறிப்பாக புள்ளிகள் இலையின் விளிம்புகளில் அதிகம் காணப்படும். நாளடைவில் புள்ளிகள் பெரிதாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படும்.
  • மலர் கொத்து மற்றும் மலர்களில் இதன் பாதிப்பு தென்படும் தருணத்தில் பூக்கள் கருகி கருப்பு நிறமாக மாறி உதிரும்.
  • மேலும் சரிவர கருவுறாத பட்டாணி அளவில் உள்ள காய்கள் வெம்பி உதிரும்.
  • இன் நோய் தாக்குதலால் சற்று பெரிய காய்கள் உருமாற்றம் அடைந்து கருகி செடிகளில் காணப்படும். இதனை Mummified காய்கள் என்பார்கள்.
  • முதிர்ந்த அல்லது அறுவடை செய்யப்பட்ட காய்களின் மேற்பரப்பில் பழுப்பு முதல் கருப்பு நிற வட்ட வடிவ புள்ளிகள் காணப்படும். நாளடைவில் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து ஒன்றுடன் ஒன்று இணைந்து காய்களின் அடிப்பகுதி வரை நோய் தாக்குதல் காணப்படும்.
  • நோய் தாக்குதல் தீவிரமடையும் போது புள்ளிகள் மீது பூஞ்சான வளர்ச்சியை காண இயலும். இது மட்டுமின்றி கிளை பகுதியையும் தாக்கி பின் கருகல் நோயை ஊக்குவிக்கிறது.
  • தாக்குதலின் ஆரம்ப நிலையில் பழங்களின் உட்பகுதி பாதிப்பு அடைவதில்லை ஆனால் தீவிரம் அடையும்போது உட்பகுதியும் பாதிக்கப்பட்டு நிறம் மற்றும் சுவை மாறுதல் காணப்படும்.

நோய் பரவும் விதம்:

  • ஆரம்பத்தில் நோயை ஏற்படுத்தக்கூடிய  பூஞ்சானங்கள் இலை மற்றும் பூங்கொத்து பகுதியில் இருக்கும்.
  • மழையை பயன்படுத்தி காய்கள் அல்லது பழங்களை தாக்குகிறது.
  • காய் அல்லது பழங்களில் ஏற்படும் நோய் தாக்குதல் அறுவடை செய்யும் வரை நமக்கு தெரியாது. அறுவடை செய்த பிறகு மட்டுமே அதன் தாக்கம் மற்றும் அறிகுறிகள் தென்படும்.
  • பாதிக்கப்பட்ட பழங்களில் இருந்து மற்ற பழங்களுக்கு நோய் பரவுவது மிகவும் குறைவு.
  • ஊடுபயிராக அல்லது அருகில் பப்பாளி, வாழை, வெண்ணெய் பழம், எலுமிச்சை, காபி போன்ற பயிர்கள் இருந்தால் நோய் தாக்குதல் அதிகம் காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • ஒரு சில வீரிய ஒட்டு  ரகங்கள் விதைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்பு திறன் உடையது அந்த ரகத்தை தேர்வு செய்து பயிரிடலாம்.
  • பயிர் இடைவெளி போதுமான அளவு இருக்க வேண்டும்.
  • ஊடுபயிராக அல்லது கலப்பு பயிராக மேலே கூறிய பயிர்களை சாகுபடி செய்யக்கூடாது.
  • போதுமான அளவு காற்றோட்டம் கிடைப்பதற்கு வருடம் தோறும் கவாத்து செய்வது மிக அவசியம்.
  • தோப்பில் காணப்படும் கலைகள் மற்றும் உதிர்ந்த இலைகளை அவ்வப்போது அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் ஏனெனில் இதன் மூலமாகவும் பூஞ்சானம்  பரவுகிறது.
  • மரங்களுக்கு நல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி ஏற்படுத்த வேண்டும்.
  • அறுவடை செய்த காய்கள் அல்லது பழங்களை நல்ல காற்றோட்டம் கிடைக்கும் படி சேமித்து வைக்க வேண்டும்.
  • குறைந்த வெப்பநிலையில் சேமித்து வைப்பதை தவிர்க்கலாம். ஏனெனில் அப்போது நிலம் காற்று ஈரப்பதம் நோய் பூஞ்சானாகள் செயல்பட உதவுகிறது.
  • நோய் தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும் போது ரசாயன அல்லது இயற்கை வழி திரவங்களை இரண்டு அல்லது மூன்று முறை தெளிப்பதால் பரவும் வீதம் குறைக்கப்படுகிறது.
  • ஆனால் நோய் தாக்குதல் ஏற்படுவதற்கு முன்னதாக அதாவது மரங்கள் ஊக்க ஆரம்பிக்கும் தருணத்தில் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்றை சுழற்சி முறையில் தெளித்து வரவேண்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில்.

  1. பேசில்லஸ் சப்டில்ல்ஸ் மற்றும் சூடோமோனஸ்
  2. Carbendazim
  3. Carbendazim+ mancozeb
  4. Azoxystrobin
  5. Azoxystrobin+ mancozeb
  6. Tebuconazole+Trifloxystrobin

  • அறுவடை செய்த பழங்களை சுடு தண்ணீர், உயிர் பூஞ்சான கொல்லிகள் அல்லது ரசாயன மருந்துகள் பயன்படுத்தியும் அதில் இருக்கும் பூஞ்சானங்களை அழிக்கலாம்.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

 https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts