google-site-verification: googled5cb964f606e7b2f.html கத்தரியில் சிற்றிலை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஞாயிறு, 12 மே, 2024

கத்தரியில் சிற்றிலை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • காய்கறிகளின் அரசன் என்று அழைக்கப்படும் கத்தரி, இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல்கள் கத்தரி சாகுபடிக்கு சவாலாக திகழ்கிறது அதில் சிற்றிலை நோய் குறிப்பிடத்தக்கது. 
  • சிற்றிலை நோயினால் கத்திரியில் சுமார் 40% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. குறிப்பாக இது கோடை பருவத்தில் தான் அதிகம் தென்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது:

பைட்டோபிளாஸ்மா (Phytoplasma) எனப்படும் நோய் காரணியால் இது ஏற்படுகிறது. பைட்டோபிளாஸ்மா என்பது கண்ணிற்கு புலப்படாத பாக்டீரியாக்களை போன்று செல் சுவர் அற்ற அமைப்பாகும். பொதுவாக இது பயிர்களின் நீர் மற்றும் உணவு கடத்தும் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தி அங்கேயே தங்கி விடுகிறது.

இதை எவ்வாறு பரவுகிறது:

பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து சாற்றை உறிஞ்சி வேறு செடிகளுக்கு நோயை தத்துப் பூச்சிகள் எனப்படும் பச்சை ஈக்கள் பரப்புகிறது. சில நேரங்களில் பாதிக்கப்பட்ட கத்தரி செடிகளை ஒட்டுக்காக பயன்படுத்தும் போதும் பரவுகிறது.

நோயின் அறிகுறிகள்:

  • 45 முதல் 60 நாட்கள் வயது உடைய கத்திரி செடிகள் அதிகம் பாதிப்படைகிறது.
  • பாதிக்கப்பட்ட செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறும், இலைகளின் அளவு குறையும், கணு இடைவெளி குறையும், செடியின் நுனிப்பகுதியில் அதிக சிற்றலைகள் தோன்றும்.
  • இதனை பார்ப்பதற்கு சூனியக்காரர்களின் துடைப்பம் போன்று காட்சி அளிக்கும்.
  • பூக்களின் உருவம் மாறி இலைகள் போன்று காட்சி அளிக்கும் இதனை phyllody என்பார்கள்.
  • பாதிக்கப்பட்ட செடிகளில் பூக்கள் பெரும்பாலும் தோன்றுவதில்லை, அவ்வாறு தோன்றினாலும் அதன் காய்கள் ஒழுங்கற்ற வடிவில் காட்சியளிக்கும்.
  • பராமரிக்கப்படாத வயலில் இதன் இழப்பீடு 100% வரை இருக்கக்கூடும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • நாட்டு கத்தரி ரகங்களை  சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து விதைகளை சேகரித்து மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
  • விதை மூலமாகவும் சிற்றலை நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • வீரிய ஒட்டு கத்தரி ரகங்களை சாகுபடி செய்பவர்களுக்கு விதை மூலம் பரவுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
  • பாதிக்கப்பட்ட செடிகளை பயன்படுத்தி ஒட்டு செடிகள் உற்பத்தி செய்வதை தவிர்க்கலாம்.
  • கோடை காலத்தில் பயிர் செய்யும் போது பயிர் இடைவெளி சற்று அதிகமானதாக இருக்க வேண்டும். போதுமான காற்றோட்ட வசதி இருக்கும் பொழுது இதன் தாக்குதல் குறைந்து காணப்படுகிறது.
  • வயலில் களைகள் இன்றி பராமரிப்பது மிகவும் அவசியம். களைகள் தத்துப் பூச்சிகளின் மாற்று வாழும் இடமாக கருதப்படுகிறது. களைகள் இருந்தால் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.
  • பாதிக்கப்பட்டு செடிகளை அவ்வப்போது வயலில் இருந்து அகற்றி அப்புறப்படுத்துவது மிகவும் அவசியம்.

  • நாற்றுகளை நடவு செய்யும் பொழுது அதன் 40 முதல் 60 நாட்கள் வாழ் நாட்களில் அதிக வெப்பம் இல்லாதவாறு நடவு மேற்கொள்ளலாம்.
  • ஏக்கருக்கு 12 முதல் 15 எண்கள் மஞ்சள் ஒட்டுப் பொறி பயன்படுத்த வேண்டும்.
  • நிலப் போர்வை பயன்படுத்தி சாகுபடி செய்யும் போது தத்துப் பூச்சிகளின் தாக்குதல் குறைவாக இருப்பது தெரிய வருகிறது.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் Verticillum lecanii, தேமோர் கரைசல், 3G கரைசல், கற்பூர கரைசல், ஐந்திலை கரைசல், பூண்டு கரைசல் போன்றவற்றில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்றினை தயார் செய்து ஏழு முதல் 10 நாட்கள் இடைவெளியில் தெளித்து வர வேண்டும்.
  • ரசாயன மருந்துகளை பயன்படுத்த விரும்பினால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து தெளிக்கலாம்.
  • Imidacloprid+Streptomycin sulphate- 10 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Thiamethoxam + Streptomycinsulphate- 10 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Fibronil-25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Imidacloprid+ Acephate - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Flonicamid+ tetracycline hydrochloride
  • Spirotetramet+imidacloprid 
  • Afidopyrofen+ Tetracycline hydrochloride

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.


https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts