மரவள்ளியில் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
- தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 3 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் தற்போது சுமார் மூன்று முதல் ஆறு மாதம் வயதுடைய மரவள்ளி பயிர்கள் சாகுபடியில் உள்ளது. இதில் பரவலாக, வைரஸ் பாதிப்பால் ஏற்படக்கூடிய தேமல் நோய் பரவலாக காணப்படுகிறது.
- இதை மஞ்சள் தேமல் நோய் என்றும் கூறுவார்கள் அல்லது ஜெமினி வைரஸ் நோய் என்றும் கூறுவார்கள். பராமரிப்பு இல்லாத நிலங்களில் சுமார் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு தேமல் நோயினால் ஏற்படுகிறது.
நோயின் அறிகுறிகள்:
- நுனி இலைகளின் மேற்பரப்பில் வெளிர் மஞ்சள் நிற திட்டுக்கள் உருவாகி நாளடைவில் வெள்ளை நிறமாக மாற்றமடைகிறது.
- இலைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பகுதிகள் உருவாகி தேமல் போன்ற அறிகுறியை ஏற்படுத்துகிறது.
- பாதிக்கப்பட்ட இலைகள் நாளடைவில் ஒழுங்கற்ற வடிவில் வளைந்து நெளிந்து காணப்படுகிறது.
- நோய் தாக்குதல் தீவிரமடையும் போது நுனி இலைகள் வடிவம் இழந்து சுருங்கி உருமாறியும் தடித்தும் காணப்படுகிறது.
- இதனால் இலைகளின் உணவு உற்பத்தி தடைபட்டு பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது.
- தட்பவெப்ப சூழ்நிலை, பயிரின் எதிர்ப்பு திறன் மற்றும் வெள்ளை ஈக்களின் அளவை பொறுத்து மீண்டும் மீண்டும் நுனி இலைகள் வடிவம் இழந்து தேமல் அறிகுறிகளுடன் தோன்றலாம்.
- இவை அனைத்தும் கண்டிப்பாக கிழங்கு உற்பத்தியில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- கிழங்கு உற்பத்தியின் போது தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளில் கிழங்குகள் வெடிப்பதையும் காண இயலும்.
இந்நோய் எவ்வாறு பரவுகிறது:
- பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து விதை குச்சிகளை தேர்வு செய்தல்.
- ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈக்கள் மூலமாக பரவுகிறது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- ஆரோக்கியமான பயிர்களில் இருந்து விதை குச்சிகளை தேர்வு செய்ய வேண்டும்.
- தேர்வு செய்த விதை குச்சிகளை நடவு செய்வதற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்து நடவு செய்யலாம்.
- வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
- நடவு செய்யும்போது போதுமான பயிர் இடைவெளி அவசியம் இதனால் வெள்ளை ஈக்களின் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம்.
- பயிரின் ஆரம்ப நிலையிலோ அல்லது பிற்காலத்திலோ களைகள் இன்றி பராமரிக்க வேண்டும்.
- குறிப்பாக சாகுபடி வயலுக்கு அருகில் அல்லது வரப்புகளில் அதிக களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
- மரவள்ளி பயிருக்கு அருகில் எளிதில் வைரஸ் நோயால் பாதிக்கக்கூடிய மற்ற பயிர்களை சாகுபடி செய்ய கூடாது குறிப்பாக கொடி வகை காய்கறிகள்.
- Monocrotophos, Cypermethrin, Quinalphos போன்ற பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதை தவிர்க்கவும். இந்த வகை மருந்துகளுக்கு வெள்ளை ஈக்கள் எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளது.
- வயலை சுற்றி சூரியகாந்தி அல்லது பூச்செடிகளை நடலாம். (மஞ்சள்)
- இயற்கை பூச்சி உண்ணிகளான குளவி மற்றும் வண்டுகளை வயல்களில் அதிகப்படுத்தவும்.
- வேப்பங் கொட்டைச்சாறு 5%- ஐ 5 மி.லி. / லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம். அல்லது நித்திய கல்யாணி இலைச்சாறு அல்லது நொச்சி இலைச்சாறு 5% தெளிக்கலாம்.
- இயற்கை வழி தயாரிப்பு திரவங்களான புகையிலை கசாயம், பத்திலை கரைசல் ஐந்திலை கரைசல், தேர்மோர் கரைசல், 3G கரைசல் மற்றும் பல உள்ளது இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு தேர்வு செய்து வாரம் ஒரு முறை தெளித்து வரலாம்.
- இயற்கை பூச்சிக் கொல்லிகளை ஐந்து முதல் பத்து நாட்களுக்கு ஒரு முறை தெளித்த வரவேண்டும். Verticillum lecanii மற்றும் Mettarhizum.
- கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை சுழற்சி முறையில் தெளிக்கலாம்
- Afidopyropen – 2 ml/ lit
- Diafenthiuron- 1g/ lit
- Flonicamid – 2 ml/ lit
- Imidacloprid + Spirotetramat – 1 ml/ lit.
- Spiromesiefen –1 ml/lit.
- Acetamaprid – 1 g/lit.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக