google-site-verification: googled5cb964f606e7b2f.html எள் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை.. ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 27 ஜனவரி, 2025

எள் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை..

  • தமிழ்நாட்டில் பிரதானமாக சாகுபடி செய்யப்படும் ரகங்கள்- TMV 3, TMV 4, TMV 7, VRI 3, VRI 4, YLM 66 மற்றும் ஒரு சில ரகங்கள் 
  • உகந்த பட்டம்- கோடை பருவம், ராபி மற்றும் காரிப்
  • விதை அளவு- எக்டருக்கு 5 கிலோ வரை 
  • விதை நேர்த்தி- Trichoderma  பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம் அல்லது தேவையின் அடிப்படையில் இதர உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தலாம்.
  • மண் அமைப்பு- கட்டிகள் இல்லாத பொல பொலப்பான மண் விதைகள் முளைப்பதற்கு சாதகமாக திகழும். இல்லையெனில் முளைப்புத் திறனில் பின்னடைவு ஏற்படும்.
  • விதைப்பு- அனுபவம் மிக்க விவசாயிகள் மணல் கலக்காமல் விதைப்பு மேற்கொள்வார்கள். தேவையில்லை போதுமான அளவு மணல் கலந்து நன்கு கலக்கி பின்பு விதை தெளிப்பு மேற்கொள்ள வேண்டும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் விதைகள் ஒரு இன்ச் ஆழத்தைத் தாண்டி செல்லக்கூடாது அவ்வாறு சென்றால் முளைப்பு திறன் பாதிக்கும் ஏனெனில் இது மிகவும் இலகுவான விதை அமைப்பு உடையது. 
  • ஊட்டச்சத்து மேலாண்மை- மண் பரிசோதனை அடிப்படையில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கொடுக்க வேண்டும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்துரை செய்யப்பட்ட பொதுவான உர பரிந்துரை மக்கிய தொழு உரம் 12.5 டன், 35 கிலோ தழைச்சத்து, தலா 23 கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து, நுண்ணூட்ட உரம் 12.5 கிலோ இட வேண்டும் ஒரு ஹெக்டர் நிலப்பரப்பிற்கு. 
  • மண் அமைப்பு பயிரின் வளர்ச்சி மற்றும் தேவையின் அடிப்படையில் இதர உரங்களை பயன்படுத்தலாம். 
  • களை நிர்வாகம்- 25 முதல் 30 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும் அப்பொழுது மிக நெருக்கமாக இருக்கும் செடிகளை கலைத்து விட வேண்டும்.
  • நீர் மேலாண்மை- நீர் மேலாண்மை மிகவும் முக்கியமானது. பயிரை நன்கு வதங்க விட்டு  வதங்க விட்டு பின்னர் நீர் கொடுக்க வேண்டும்.
  • பயிரின் மொத்த வாழ் நாட்களில் சராசரியாக 5 முதல் 6 முறை தண்ணீர் விட்டாலே போதுமானது. 
  • காய் பிடிப்பு தருணத்தில்  சல்பேட் இடுவதால் காய்களில் எண்ணெய் இருப்புத்திறன் சற்று மேம்படும் மேலும் இது மகசூலை அதிகரிக்கும்.
  • கிராமப்புறங்களில் ''பிடித்து எட்டு எள்'' என்பார்கள். இது எதனை குறிப்பிடுகிறது என்றால் அரை அடி உயரமுடைய தண்டு பகுதியில் சராசரியாக 8 காய்கள் இருக்க வேண்டும் என்பதுதான். 
  • அறுவடை- இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிரும் தருணம். தண்டுப் பகுதியின் அடிப்புறத்தில் உள்ள காய்கள் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அறுவடை செய்து மணிகளை பிரித்தெடுக்கலாம். 
  • அறுவடையை தாமதம் செய்தால் மணிகள் வெடித்து விதைகள் சிதறும் எனவே உரிய நேரத்தில் அறுவடை செய்வது மிக இன்றியமையாது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts