லட்சத்தில் லாபம் தரும் எலுமிச்சை சாகுபடி
|- நல்ல மகசூல் மற்றும் தகுந்த விலை கிடைக்கிறது.
- வருடம் முழுவதும் காய்க்கும் திறன் உடையது.
- அதிக சுண்ணாம்பு மண்ணை தவிர அனைத்து விதமான மண்ணிலும் வளரும் தன்மையுடையது.
- மிகவும் குறைவான தண்ணீர் இருந்தால் போதும்.
- மிகவும் வறட்சியான சூழ்நிலையையும் தாங்கி வளரும்.
- மிகவும் குறைவான இடுபொருட்கள் மற்றும் பராமரிப்பு செலவினம்.
- நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இதில் மிகவும் குறைவு.
- கால்நடை, குரங்குகள் அல்லது மற்ற விலங்கினங்கள் செடிகள் அல்லது மகசூலை சேதம் செய்வதில்லை.
எந்த ரகம் சாகுபடி செய்யலாம்:
- தமிழ்நாட்டில் பொதுவாக இரண்டு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒன்று நாட்டு ரகமான பெரியகுளம் 1 மற்றொன்று ஓட்டு ரகம் பாலாஜி ஆகும்.
- பெரியகுளம் 1: திருநெல்வேலி மாவட்டம் கடயம் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ரகம் வருடம் முழுவதும் காய்க்கும் திறன் உடையது. வருடத்திற்கு சுமார் 3500- 4000 பழங்கள் கிடைக்கும். பழத்தின் எடை சராசரியாக 40-45 கிராம் இருக்கும். இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் மெல்லியதாகவும் காணப்படும். நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது. பராமரிப்பது மிகவும் எளிது.
- பாலாஜி: இது ஆந்திர மாநிலத்தால் வெளியிடப்பட்ட ரகம். இதன் இலைகள் கரும் பச்சை நிறத்தில் நாட்டு ரகத்தை விட இலைகள் சற்று பெரிதாகவும் மொத்தமாகவும் இருக்கும். வருடத்திற்கு சுமார் 2500 முதல் 3000 காய்கள் கிடைக்கும் ஒரு பழத்தின் சராசரி எடை 50 கிராம் இருக்கும். எளிதில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்படும். பராமரிப்பு மற்றும் உர செலவு அதிகம்.
எவ்வாறு நடவு செய்ய வேண்டும்:
- நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து இரண்டு அடி நீளம், அகலம், ஆழம் கொண்ட குழிகளை நடவுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக தயார் செய்து அதில் நன்கு மக்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, உயிர் பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லிகள் ஆகியவற்றை இட்டு நடவு செய்ய வேண்டும்.
- பயிர் இடைவெளி- 6 X 6 மீட்டர் (ஏக்கருக்கு 110 கன்றுகள்)
நீர் மற்றும் உர மேலாண்மை:
- மண்ணின் தன்மையை பொறுத்து ஏழு முதல் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் விடலாம். காய்ச்சலும் பாய்ச்சலுமாக தான் நீர் விட வேண்டும்.
- சொட்டுநீர் பாசனம் பயன்படுத்துவதால் கூடுதல் பலன்கள் உண்டு.
- நாம் விடும் நீர் நேரடியாக தண்டுப் பகுதியை தொடக்கூடாது அவ்வாறு நெருங்கினால் பூஞ்சான நோய்கள் தாக்குதல் காணப்படும்.
- வருடத்திற்கு நான்கு முறை உரம் இட வேண்டும். இயற்கை முறையில் உரம் இடுவது சிறந்தது. கண்டிப்பாக நுண்ணூட்ட சத்துக்கள் அதிகம் இட வேண்டும் குறிப்பாக காப்பர், இரும்பு, போரான், மாங்கனிசு மற்றும் துத்தநாக சத்துக்கள்.
- விரிவான உர மேலாண்மை பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.
களை மேலாண்மை மற்றும் ஊடு பயிரிடுதல்:
- முதல் ஐந்து வருடங்களுக்கு ஊடுபயிர் சாகுபடி செய்யலாம் நீர் இருப்பதின் அடிப்படையில். இடையில் உழவு செய்தால் வேர்கள் பாதிக்காத வண்ணம் செய்ய வேண்டும்.
- களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி பயன்படுத்தவே கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் செடிகளின் காய்ப்பு திறனை பெரிய அளவில் குறைத்து விடும்.
நோய் மற்றும் பூச்சி தாக்குதல்:
- சொறி நோய், die back எனப்படும் கருகல், வைரஸ் நோய்கள்,அஸ்வினி, மாவு பூச்சி, சில்லிட் இலை சுரங்க புழுக்கள், வேர்ப்புழு மற்றும் சில நோய் மற்றும் பூச்சிகள் தாக்கும் இதனை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம்.
- எலுமிச்சையில் காணப்படும் பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் ஒவ்வொன்றிற்கும் கட்டுப்படுத்தும் முறையை நாம் ஏற்கனவே நமது whatsapp குழு மற்றும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவாத்து செய்தல்:
- மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கிளைகளை மட்டும் வெட்டி அகற்றலாம் அதைத்தவிர எவ்வித கவாத்து பணியும் செய்யக்கூடாது.
மகசூல் மற்றும் லாபம்:
- சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு செடிகள் முழு திறனில் காய் பிடிக்கும். செடிகளை நன்கு பராமரித்தால் செடி ஒன்றிற்கு சராசரியாக 4000 பழங்களை அறுவடை செய்யலாம்.
- நன்றாக பராமரித்தால் எளிதாக வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து லட்சம் ஒரு ஏக்கரில் இருந்து லாபம் எடுக்கலாம்.
இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD
0 Comments:
கருத்துரையிடுக