google-site-verification: googled5cb964f606e7b2f.html இலாபம் தரும் ஆமணக்கு பயிர் சாகுபடி... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 20 நவம்பர், 2023

இலாபம் தரும் ஆமணக்கு பயிர் சாகுபடி...

ஆமணக்கு சாகுபடி எவ்வாறு உகந்தது :

    அதிக வறட்சி, வளமற்ற மண், குறைந்த மழைப்பொழிவு, அதிக களைகள் வளரக்கூடிய நிலம், வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் நோய் /பூச்சி தாக்குதல் அதிகம் உள்ள இடம் என எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து வளரக்கூடியதாக திகழ்கிறது. எனவே தான் இதை சாகுபடி செய்யலாம் என விவசாயிகளுக்கு பரிந்துரை செய்கிறேன்.

விதைதேர்வு மற்றும் நேர்த்தி :

    கோ1, TMV-5, TMV-6, YRCH-1, YTP-1, GAUCH -4, TMVCH என பல்வேறு அரசு வெளியிடப்பட்ட ரகங்களும் அதைத் தவிர பல்வேறு தனியார் நிறுவன ரகங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு சுமார் இரண்டு கிலோ விதை தேவைப்படும். தனியார் நிறுவன விதைகள் நேர்த்தி செய்தே வரும். உள்ளூர் ரகங்களை தேர்வு செய்யும் போது அதனை Pseudomonas மற்றும் Trichoderma கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.https://oilseeds.dac.gov.in/Castor.aspx

நிலம் தயார் செய்தல் மற்றும் விதைப்பு மேற்கொள்ளுதல் :

    கோடைகாலத்தில் நன்கு உழவு செய்து மண் கட்டிகளை உடைத்து மண் கடினத்தன்மை இல்லாமல் இருந்தால் தான் நன்கு வேர் வளர்ச்சி காணப்படும். ஆமணக்கு வேர்கள் படர்ந்து வளரும் தன்மை கொண்டது எனவே மண் பொலபொலப்புடன்இருக்க வேண்டும் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிப்பு அடையும். அதிக மழை அல்லது நீர் தேங்கும் பகுதிகளில் பார் அமைத்து பயிரிடுதல் உகந்தது. ராகங்களை பொறுத்து பயிர் இடைவெளி 5 முதல் 8 அடி விடலாம்.https://agritech.tnau.ac.in/ta/Agriculture/oilseeds_castor_ta.html

உர மேலாண்மை :

    ஏக்கருக்கு நான்கு முதல் எட்டு டன் மக்கிய தொழு உரம். முடிந்தால் உயிர் பூஞ்சான் கொல்லி கொண்டு உட்டமேற்றி இடலாம். அடி உரமாக -DAP/காம்ப்ளக்ஸ் -100 கிலோ + Gypsum -50 கிலோ + நுண்ணூட்ட உரம் -10 கிலோ. நடவு செய்த 45 நாட்கள் கழித்து மேல் உரமாக காம்ப்ளக்ஸ் இரண்டு மூட்டை.

களை மேலாண்மை:

    ஆமணக்கு விதைகள் சற்று விரைவாக முளைப்பு திறன் கூடியது என்பதால் நடவு செய்த இரண்டாம் நாளில் களை கொல்லி அடிக்க வேண்டும். நடவு செய்த 45 நாட்களில் கை களை எடுக்க வேண்டும்.

அறுவடை செய்தல்:

    தேர்வு செய்யப்படும் ரகங்களை பொறுத்து 120 முதல் 175 நாட்கள்  கழித்து அறுவடை செய்யலாம். குளையில் காணப்படும் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு காய்கள் பழுப்பு நிறம்  மாறும் போது கொத்தை  வெட்டி  மூன்று நாட்கள் சாக்கியில் மூடி வைத்திருந்து பின்னர் நன்கு காய வைக்க வேண்டும்.https://agritech.tnau.ac.in/ta/post_harvest/pht_oilseeds_ta.html

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

    அதில் பெரிதாக நோய் அல்லது பூச்சிகள் வருவதில்லை. அவ்வாறு தோன்றும் பட்சத்தில் இயற்கை முறையில் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம்.https://agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_crop_insect_oil_castor_ta.html

மகசூல் மற்றும் விலை:

    ஏக்கருக்கு 1 டன் வரை கூட மகசூல் எடுக்கலாம். கிலோ 50 முதல் 80 ரூபாய் வரை விற்கும்.


மேலும், விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் (WhatsApp link) லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD 

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts