google-site-verification: googled5cb964f606e7b2f.html ஜனவரி 2025 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 27 ஜனவரி, 2025

வேம்பு கரைசல் (Neemastra) தயாரிப்பு முறையும் பயன்பாடுகளும்...

 

முன்னுரை:

  • சாயன பூச்சி மருந்துகளுக்கு மாற்றாகவும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க பொருளாகவும் வேப்ப இலை திகழ்வதால் இயற்கை விவசாயத்தில் பூச்சி விரட்டிகள் தயாரிப்பில் வேப்ப இலை மற்றும் வேப்பங்கொட்டை பிரதான பங்கு வகிக்கிறது. 
  • வேப்ப இலைகளில் உள்ள பல்வேறு மூலக்கூறுகள் நோய் பூஞ்சைகளின் வளர்ச்சி தடை செய்வதாலும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை விரட்டி அடிக்க பயன்படுத்த படுவதாலும் இதை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி நான் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
  • வேப்ப இலைகளில் உள்ள அஜடிரக்டின், நிம்பின், சலன்னின், மெளியான்றில் போன்ற பல்வேறு மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் ஒரு விதமான பணிகளை மேற்கொள்வதால் இயற்கை விவசாயத்தில் வேப்ப இலை இன்றி அமையாதாக திகழ்கிறது. 

தேவையான இடுபொருட்கள்: 

1. 5 கிலோ வேப்ப இலை 

2. 10 லிட்டர் நாட்டு பசு கோமியம் 

3. இரண்டு கிலோ நாட்டு பசு சாணம் 

4. 200 லிட்டர் தண்ணீர்

5. 250 லிட்டர் கொள்ளளவு உடைய டிரம்

தயாரிக்கும் முறை: 

  • வேப்ப இலை மற்றும் அதன் உடன் கூடிய சிறு சிறு கிளைகளை அப்படியே அல்லது சிறிதாக நறுக்கி ட்ரம்மில் உள்ள 200 லிட்டர் தண்ணீரில் இடவேண்டும்.
  • பின்பு இதில் 10 லிட்டர் நாட்டு பசு கோமியத்தை ஊற்ற வேண்டும். பிறகு இரண்டு கிலோ சாணத்தை நன்றாக கரைத்து அதில் ஊற்றி வலது புறமாக கலக்க வேண்டும். 
  • இந்தக் கலவையை நிழற்பாங்கான இடத்தில் துணி அல்லது கோணி பயன்படுத்தி இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். 
  • சுமார் 48 மணி நேரம் கழித்து இந்த கலவையை எடுத்து நன்றாக வடிகட்டி பயிரில் தெளிக்கலாம். இதனை சுமார் மூன்று முதல் நான்கு மாதம் வரை பாதுகாப்பாக வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பயன்கள்: 

  • இலைபேன், அஸ்வினி, தத்துப்பூச்சி வெள்ளை ஈக்கள் போன்ற சாறு உறிஞ்சு பூச்சிகள் இளம் பயிர்களை பாக்காத வண்ணம் பாதுகாக்கிறது.
  • பூச்சிகளின் முட்டை, லார்வாக்கள் மற்றும் பியூப்பாவின் வளர்ச்சியை தடுத்து அவற்றின் நிலையை சீர்குலைக்கிறது.
  • இளம் புழுக்களின்   தோலுரித்தல் நிகழ்வை தடை செய்வதால் பூச்சிகளின் இனப்பெருக்கம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
  • பூச்சிகளுக்கு இடையே இனச்சேர்க்கை விகிதத்தை குறைக்கிறது.
  • இளம் பூச்சிகள் பயிரை உண்பதில் இருந்து தடுக்கிறது.
  • பூச்சிகள் முட்டையிடுவதை குறைப்பதால் தாக்குதல் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
  • மேலும் இது பயிர்களுக்கு ஒரு சில ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது. 

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


எள் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை..

  • தமிழ்நாட்டில் பிரதானமாக சாகுபடி செய்யப்படும் ரகங்கள்- TMV 3, TMV 4, TMV 7, VRI 3, VRI 4, YLM 66 மற்றும் ஒரு சில ரகங்கள் 
  • உகந்த பட்டம்- கோடை பருவம், ராபி மற்றும் காரிப்
  • விதை அளவு- எக்டருக்கு 5 கிலோ வரை 
  • விதை நேர்த்தி- Trichoderma  பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம் அல்லது தேவையின் அடிப்படையில் இதர உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தலாம்.
  • மண் அமைப்பு- கட்டிகள் இல்லாத பொல பொலப்பான மண் விதைகள் முளைப்பதற்கு சாதகமாக திகழும். இல்லையெனில் முளைப்புத் திறனில் பின்னடைவு ஏற்படும்.
  • விதைப்பு- அனுபவம் மிக்க விவசாயிகள் மணல் கலக்காமல் விதைப்பு மேற்கொள்வார்கள். தேவையில்லை போதுமான அளவு மணல் கலந்து நன்கு கலக்கி பின்பு விதை தெளிப்பு மேற்கொள்ள வேண்டும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் விதைகள் ஒரு இன்ச் ஆழத்தைத் தாண்டி செல்லக்கூடாது அவ்வாறு சென்றால் முளைப்பு திறன் பாதிக்கும் ஏனெனில் இது மிகவும் இலகுவான விதை அமைப்பு உடையது. 
  • ஊட்டச்சத்து மேலாண்மை- மண் பரிசோதனை அடிப்படையில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கொடுக்க வேண்டும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்துரை செய்யப்பட்ட பொதுவான உர பரிந்துரை மக்கிய தொழு உரம் 12.5 டன், 35 கிலோ தழைச்சத்து, தலா 23 கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து, நுண்ணூட்ட உரம் 12.5 கிலோ இட வேண்டும் ஒரு ஹெக்டர் நிலப்பரப்பிற்கு. 
  • மண் அமைப்பு பயிரின் வளர்ச்சி மற்றும் தேவையின் அடிப்படையில் இதர உரங்களை பயன்படுத்தலாம். 
  • களை நிர்வாகம்- 25 முதல் 30 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும் அப்பொழுது மிக நெருக்கமாக இருக்கும் செடிகளை கலைத்து விட வேண்டும்.
  • நீர் மேலாண்மை- நீர் மேலாண்மை மிகவும் முக்கியமானது. பயிரை நன்கு வதங்க விட்டு  வதங்க விட்டு பின்னர் நீர் கொடுக்க வேண்டும்.
  • பயிரின் மொத்த வாழ் நாட்களில் சராசரியாக 5 முதல் 6 முறை தண்ணீர் விட்டாலே போதுமானது. 
  • காய் பிடிப்பு தருணத்தில்  சல்பேட் இடுவதால் காய்களில் எண்ணெய் இருப்புத்திறன் சற்று மேம்படும் மேலும் இது மகசூலை அதிகரிக்கும்.
  • கிராமப்புறங்களில் ''பிடித்து எட்டு எள்'' என்பார்கள். இது எதனை குறிப்பிடுகிறது என்றால் அரை அடி உயரமுடைய தண்டு பகுதியில் சராசரியாக 8 காய்கள் இருக்க வேண்டும் என்பதுதான். 
  • அறுவடை- இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிரும் தருணம். தண்டுப் பகுதியின் அடிப்புறத்தில் உள்ள காய்கள் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அறுவடை செய்து மணிகளை பிரித்தெடுக்கலாம். 
  • அறுவடையை தாமதம் செய்தால் மணிகள் வெடித்து விதைகள் சிதறும் எனவே உரிய நேரத்தில் அறுவடை செய்வது மிக இன்றியமையாது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


எள் பயிருக்கு சல்பேட் உரம் இடுவதன் நன்மைகள்

முன்னுரை:

  • சமையல் பயன்பாட்டிற்காக உலகிலேயே அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது இதனால் சமையல் மற்றும் இதர பயன்பாட்டிற்காக சமையலை எண்ணெய் தேவையின் அளவு அதிகரித்த வண்ணமாக உள்ளது. 
  • இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 25 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் வழி நிறைய உள்ளது அதன் அடிப்படையில் சல்பர் (Sulphur) நுண்ணூட்ட சத்து இடுவதால் எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

எள் பயிரில் சல்பர் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்:

  • மற்ற பயிர்களை விட எள் அதிக அளவு சல்பர் ஊட்டச்சத்தை விரும்பி எடுத்துக் கொள்ளக் கூடியது. ஏனெனில் இதை பயன்படுத்தி குறிப்பிட்ட சில அமினோ அமிலங்கள், பல்வேறு நொதித்தல் நிகழ்வுகள் மற்றும் புரத உற்பத்தி நிகழ்வை மேற்கொள்கிறது. 
  • எள் பயிர் வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையதால் குறைந்த அளவு ஆவியாதல் நிகழ்வை மேற்கொள்வதால் குறிப்பிட்ட அளவுகிரகித்துட்டச்சத்தமட்டுமே எடுத்துக் கொள்ள இயல்கிறது.
  • எனவே தேவையான அளவு சல்பர் ஊட்டச்சத்தை நாம் கொடுக்கும் பொழுது இதன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரிக்கிறது என பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.
  • இந்த ஊட்டச்சத்து மண் தண்ணீர் உரம் மற்றும் காற்றில் இருந்து சிறிதளவு சல்பர் ஊட்டச்சத்தை சல்பேட் வடிவத்திலும் எடுத்துக் கொள்கிறது இருப்பினும் இது போதுமானதாக இல்லை. 

  • இவ்வாறு கிடைக்க பெறும் சல்ஃபர் ஊட்டச்சத்து அமினோ அமிலங்கள் உற்பத்திக்கு போதுமானதாக இல்லாததால் புரத உற்பத்தி, எண்ணெய் உற்பத்தி மற்றும் பாதுகாப்பிற்காக செலவிடப்படும் சல்பர் போதுமானதாக இல்லை.
  • போதுமான சல்பர் ஊட்டச்சத்து இதர ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து , சாம்பல் சத்து, இரும்புச்சத்து மற்றும் மாலிப்டினம் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை ஊக்கப்படுத்துகிறது.

சல்பர் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்: 

  • குன்றிய பயிர் வளர்ச்சி 
  • இலையின் வளர்ச்சி மற்றும் பரப்பளவு சற்று குறைந்து காணப்படும். 
  • இளம் இலைகள் பச்சை நிறத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • நாளடைவில் இலைகள் விளிம்புகளில் இருந்து கருக ஆரம்பிக்கும்.
  • இதனால் பூக்களின் எண்ணிக்கை மற்றும் காய்ப்பு திறன் குறையும். 
  • ஒட்டு மொத்தத்தில் மகசூல் இழப்பீடு ஏற்படும். 
  • எண்ணெய் அளவு சற்று குறைந்தே இருக்கும் தரத்திலும் சற்று பின்னடைவு காணப்படும். 

சல்பர் இடுவதன் நன்மைகள்:

  • நல்ல பயிர் வளர்ச்சி 
  • இலைகளின் எண்ணிக்கை மட்டும் இலை பரப்பளவு அதிகரித்து காணப்படும். 
  • கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
  • விதை பையின் நீளம் அதிகமாக இருப்பதால் அதிக விதை எண்ணிக்கை  காணப்படுகிறது. 
  • ஒட்டுமொத்தமாக மகசூல் அதிகரிக்கும் மேலும் எண்ணெய் பிரித்தெடுக்கும் திறனும் அதிகமாக காணப்படும். 
  • போதுமான அளவு சல்பர் ஊட்டச்சத்து கொடுப்பதால் நன்மை செய்யக்கூடிய அமினோ அமிலங்கள் அதிகமாக உற்பத்தி செய்து எண்ணெயில் தரம் மேம்பட்டு காணப்படும்.

சல்பர் தேவைப்படும் அளவு: 

இயற்கை அல்லது இரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ சல்பர் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்தால் அதிக விளைச்சல் காண இயலும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

வெள்ளி, 10 ஜனவரி, 2025

நவரை பட்டம் நெல் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

நவரை பட்டத்தின் சிறப்புகள்:

  • தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் திகழும் தட்பவெப்ப சூழ்நிலையை அடிப்படையாக வைத்து நெல் சாகுபடிக்கு என உருவாக்கப்பட்டது தான் இந்த இந்த நவரை பட்டம்.
  • பருவ மழையில் பெய்யக்கூடிய மழை நீரை சேகரித்து வைத்து அடுத்த கோடை பருவத்தில் நெல் பயிர் அறுவடைக்கு தயாராகுவது தான் இந்த பருவம்.
  • ஆரம்ப நிலையில் நீர் ஆதாரம் இருந்தாலும் அதிக வெப்ப காலங்களில் நீர் தேவையை குறைக்க குறைந்த வாழ்நாள் உடைய நெல் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்பயிர்கள்
  • அதாவது பயிர்கள் பூக்கும் தருணத்தில் அதிக வெப்ப நிலை காரணமாக ஆவியாதல் மற்றும் பயிர்கள் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் தேவையை குறைத்திட ஏதுவாக குறைந்த வாழ்நாள் உடைய ரகங்களை தேர்வு செய்தல் அவசியம். 
  • எனவே இந்த பட்டத்திற்கு அதிக வறட்சி மற்றும் வெப்பநிலையை தாங்கி வளரும் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் ரகங்கள் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளரும் தன்மையுடையதாக இருக்க வேண்டும். 
  • பொதுவாக இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிர்களின் அறுவடை தருணத்தில் அதிக மழை இல்லாத காரணத்தினால் மகசூல் இழப்பீடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை மேலும் இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய எளிதாக இருக்கும்.
  • இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் ரகங்கள் மிதமான உயரத்தில் இருப்பதால் காற்று மற்றும் மழை காரணமாக சாயும் அபாயம் இல்லை. 

சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை: 

  • தரமான ரகம் மற்றும் விதைகளை தேர்வு செய்வது மிக அவசியம்.
  • சான்றிதழ் பெற்ற ரகத்தை வாங்குவது சிறந்தது. 
  • பெறப்பட்ட விதைகளை காலை அல்லது மாலை வெப்பநிலை சிறிது நேரம் உலர்த்தி பின்பு விதைப்புக்கு பயன்படுத்தலாம். 
  • நாற்றங்காலில் அதிக உரம் இடுவதை தவிர்த்து காய்ச்சலும் பாய்ச்சலமாக நீர் விடுவதால் பயிர்கள் நடவுக்கு பின்பு செழித்து வளரும். 
  • இந்தப் பருவத்தில் சாகுபடி செய்யும் அநேக ரகங்கள் நடுத்தர சன்ன வகையை சார்ந்ததால் அதிக மகசூல் எதிர்பார்க்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் ரகங்கள் அதிக எண்ணிக்கையில் தூர் கட்டும் திறனுடையது. ஆரம்ப நிலையில் தூர்கள் வெடிப்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
  • இந்த ரகங்கள் அதிக மகசூலை தர வல்லது என்பதால் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கண்காணித்து சரிவிகித அடிப்படையில் கொடுக்க வேண்டும். 
  • குறிப்பாக நுண்ணூட்ட சத்துக்கள், துத்தநாக சல்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை பரிந்துரை செய்யப்படும் அளவில் சரியாக பயன்படுத்த வேண்டும்.

உகந்த ரகங்கள்: 

  • ADT 36, ADT 37, ASD 16, IR 64, ASD 18, ADT 42, ADT 43 MDU 5 மற்றும் பல ரகங்கள் உள்ளது.
  • தங்களது பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பிரதானமான மற்றும் அதிக சந்தை மதிப்புடைய ரகங்களை ஆராய்ந்து பின்னர் சாகுபடி செய்யவும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வியாழன், 9 ஜனவரி, 2025

தென்னையில் கருந்தலைப்புழு மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை

தென்னையில் கருந்தலைப்புழு மேலாண்மை...

  • இலை உண்ணும் புழு அல்லது கருந்தலைப்புழு என்று அழைக்கப்படும் இந்த புழுவானது ஒருவகை பட்டாம்பூச்சி இனத்தின் இளம் பருவம் ஆகும். புழு பருவம் மட்டுமே சேதப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பிரதானமாக தென்னை பயிரையும் தென்னை மரம் சாகுபடி இல்லாத இடங்களில் பரவலாக பனை மரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் உடையது.
  • தென்னை மரங்களில் வருடம் முழுவதும் இதன் தாக்குதல் பரவலாக காணப்பட்டாலும் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை அமையும் பொழுது அதிக அளவில் இனப்பெருக்கம் அடைந்து மிகப்பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும். 
  • பருவமழை முடியும் தருவாயில் இருந்து வசந்த காலம் மற்றும் கோடை பருவத்திற்கு இடைப்பட்ட காலத்தில் திகழும் சாதகமான வெப்பநிலை மற்றும் காற்று ஈரப்பதம் காரணமாக அதிக அளவு இனப்பெருக்கம் அடைந்து பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும். 
  • இலங்கையில் தென்னை மரங்களில் முதன் முதலில் பதிப்பை ஏற்படுத்திய இந்தக் கருந்தலைப் புழுக்கள் ஆரம்ப காலத்தில் பனை மரத்தை உண்டு சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
  • பெரும்பான்மையான பனை வகை மரம் மற்றும் செடிகளை மாற்றுப் பயிராக கருந்தலைப் புழுக்கள் உணவாக எடுத்துக் கொள்கிறது இதில் அழகு தாவரம் மற்றும் பாக்கு மரங்களும் உட்பட. 

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

தாய் அந்தப் பூச்சிகள் இரவு நேரத்தில் இலையின் அடிப்பிறத்தில் முட்டைகளை இடுகிறது இந்த முட்டைகள் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்குப் பிறகு வெடித்து புழுக்களை வெளிவிடுகிறது.
பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கருந்தலைப்புழுக்களின் இளம் புழுக்கள் சுமார் 40 முதல் 45 நாட்கள் பல தோல் உரித்தல் நிகழ்வின் மூலம் உயிர் வாழ்வதால் அதிக அளவு சேதத்தை ஏற்படுகிறது.இதன் மொத்த வாழ்நாள் சுமார் 60 முதல் 75 நாட்கள் ஆகும்.

தாக்குதலின் அறிகுறிகள்: 

  • இலையின் அடிப்பகுதியில் பச்சயத்தை உண்ணுவதால் இலைகள் எரிந்தது போன்ற அறிகுறிகளை தோற்றுவிக்கும். 
  • ஆரம்ப நிலையில் மரத்தின் வெளி இலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி படிப்படியாக அடுத்தடுத்த இலைகளுக்கு பரவும். 
  • தாக்குதல் தீவிரமடையும் போது பாதிப்படைந்த அடி இலைகள் காய்ந்து தொங்கும்.
  • தென்னங் குலைகள் விரைப்புத்தன்மை இல்லாமல் சற்று தொங்கும். மேலும் குரும்பை உதிர்தலும் காணப்படும்.
  • இலையின் அடி புறத்தில் எச்சங்களால் ஆன கூட்டின் உட்பகுதியில் புழுக்கள் காணப்படும். 
  • தீவிர நிலை தாக்குதலின் போது இலைகள் மட்டுமின்றி இலை காம்பு, பாலை மற்றும் காய்களிலும் பாதிப்பை காண இயலும்.
  • இதனால் இலைகளில் பச்சையத்தின் அளவு குறைந்து மரங்களின் உணவு உற்பத்தி திறன் குறைவதால் விளைச்சலில் இழப்பு ஏற்படுகிறது.தீவிரமாக பாதிப்படைந்த மரங்களில் சுமார் 45 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது இந்த மகசூல் இழப்பீடு சுமார் மூன்று வருடம் வரை காணப்படும்.


கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பாதிப்படைந்த இரண்டு முதல் மூன்று வெளி இலைகளை சேகரித்து அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும். 
  • முன்னெச்சரிக்கை அல்லது ஆரம்ப நிலை தாக்குதலின் போது  முட்டை அல்லது லார்வா ஒட்டுண்ணி அட்டைகளை எக்டருக்கு 3000 வீதம் கட்டலாம்.
  • ஒட்டுண்ணி அட்டைகளை மரத்தின் வெளி இலைகளில் கட்டுவது சிறந்தது.
  • முட்டை அல்லது லார்வா ஒட்டுண்ணிகளை தாக்குதலின் ஆரம்ப நிலையில் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 60 முதல் 90 நாட்களுக்கு பிறகு 75-80 சதவீதம் வரை புழுக்களை கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது எனவே அதற்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும்.
  • ஜனவரி முதல் மே மாதம் வரை தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிப்பதற்கு ஏதுவாக ஏக்கருக்கு ஒரு எண் வீதம் விளக்கு பொறி பயன்படுத்தலாம்.
  • பூண்டு மற்றும் வேப்பிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு கரைசல்களை இலை வழியாக தெளிக்கலாம். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்வதை தவிர்த்து இயற்கை உரங்களை அடிப்படையாக வைத்து சாகுபடி செய்யும் போது இதன் தாக்குதல் குறைந்தே காணப்படுகிறது. 
  • தாய் அந்து பூச்சியினால் சுரக்கப்படும் Tricosatrine மூலக்கூறு பொருளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தியும் இதன் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம்.
  • சிறிய மரங்களை தாக்கும் பொழுது ஆரம்ப காலகட்டத்தில் Bt தெளிப்பதாலும் இதன் பரவுதலை குறைக்கலாம். 
  • அல்லது Chlortraniliprole / Dichlorovos/ Quinalphose/ Malathion போன்ற ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். 
  • வேர் அல்லது தண்டு வழியாக ரசாயன மருந்துகளை கொடுப்பதால் சுமார் 6 மாதங்கள் வரை அதன் எச்சங்கள் மரத்தில் இருப்பதால் முடிந்த அளவு வேர் வழியாக கொடுப்பதை தவிர்க்கலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX



புதன், 8 ஜனவரி, 2025

தென்னை வேர் வாடல் நோயை கட்டுப்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை

  • தென்னை வேர் வாடல் நோயை கட்டுப்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை...
  • இயற்கையில் தென்னை மரங்கள் கடல் சார்ந்த பகுதிகளில் தோன்றி, அங்கிருந்து பல நாடுகளுக்கு சென்றதால்  தான் இதனை யாத்திரை செய்யும் கொட்டை எனவும் கூறுவார்கள்.
  • அவ்வாறு நாம் பார்க்கும் பொழுது கடல் சார்ந்த பகுதியில் திகழும் மண் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை இதன் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது என்பது தெரிய வருகிறது. 
  • தென்னை மரத்தின் அனைத்து பாகங்களும் தன் வாழ்நாள் முழுவதும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது அதில் வேர்களும் உட்பட. இதை அடிப்படையாக வைத்து தான் இதன் வேர் அமைப்பை அழியும் வேர்கள் மற்றும் அழியா வேர்கள் என வகை படுத்துகிறோம்.
  • இந்த அழியும் மற்றும் அழியா வேர்களின் செயல்பாடுகளும், புதுப்பிக்கும் விகிதமும் (Regenerative Capacity) தான் மரத்தின் ஆரோக்கியத்தையும் காய்ப்பு திறனையும் நிர்ணயிக்கிறது. 
  • தென்னை சாகுபடி செய்யப்படும் மண் அமைப்பு (மணல் பாங்கான இடம்) மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை இந்த வேர்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை நிர்ணயிக்கிறது. மணல் பாங்கான பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தென்னை மரங்களின் வேர்கள் ஆழமாகவும் மிக நீண்டு காணப்படுவதால் இவை அதிக நோய் எதிர்ப்பு திறன் மற்றும் காய்ப்பு திறனுடன் காணப்படுகிறது. மேலும் இது போன்ற இடத்தில் வளர்க்கப்படும் மரத்தில் வேர்களின் புதுப்பிக்கும் திறன் அதிகம் காணப்படுகிறது எனவே இவை நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளரும் தன்மை உடையது.
  • ஆனால் அதற்கு மாறாக சாகுபடி செய்யப்படும் இடங்களில் இவை அனைத்துமே கேள்விக்குறிதான். 
  • தென்னையில் வேர்கள் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டே தான் இருக்கிறது. வேர் வளர்ச்சி அதிகப்படுத்தக்கூடிய இயற்கை மற்றும் இரசாயன உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்து வரும் பொழுது வாத நோயால் பாதிக்கப்பட்ட மரங்களைக் கூட மீட்டு விடலாம் என பல ஆய்வுகள் கூறுகிறது. 
  • ஏனெனில், போதுமான அளவு புதுப்பிக்கக்கூடிய அழியும் வேர்களை உற்பத்தி செய்ய தூண்டும் பொழுது இவை அதிக அளவு நீர் மட்டும் ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு கடத்துகிறது இது மரங்களுக்கு தாங்கி வளரும் சக்தியை தருகிறது. 
  • Phytoplasma நோய் கிருமிகள் இந்த அழியும் வேர்களை தாக்கி அதன் செயல்பாடுகளை இழக்க வைத்து, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டு செல்வதை படிப்படியாக குறைத்து மரங்களை பலவீனமாக்கி பின்னர் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
  • பல்வேறு ஆய்வுகளில் அடிமரம் எனப்படும் தண்டுப் பகுதியில் இந்த அழியும் மற்றும் அழியா வேர்களை புதுப்பிக்க இயலும் அதனால் வாடல் நோயால் தாக்கப்பட்ட மரங்களை மீட்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
  • எனவே நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருபுறம் நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதும் மற்றொருபுறம் புது ஊட்டச்சத்து வேர்களை உற்பத்தி செய்யவும் கடைசியாக நோயை பரப்பக்கூடிய பூச்சிகளை கட்டுப்படுத்தவும் கூடிய நடவடிக்கை எடுத்தால் மரங்களை மீட்க சத்திய கூறுகள் அதிகம் உள்ளது. 
  • இது ஒருபுறம் இருக்க, வாஸ்குலார் கற்றையில் மட்டுமே வாழும் திறன் படைத்த இந்த Phytoplasma நோய் காரணி அந்தப் பகுதியை உண்டு வாழும் பூச்சியினால் மட்டுமே பரப்பப்படுகிறது. இவை இரண்டிற்கும் இடையேயான தொடர்பை துண்டிப்பதன் மூலம் வெகுவாக பரவுதலை கட்டுப்படுத்தலாம். 
  • வாடல் நோயால் தாக்கப்பட்ட மற்றும் தாக்கப்படாத மரங்களின் நீர் உறிஞ்சித் திறன் மற்றும் ஊட்டச்சத்து அளவை கணக்கிடும் பொழுது பாதிக்கப்படாத செடிகள் நல்ல வேர் வளர்ச்சி மற்றும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சரிவிகித அடிப்படையில் இருப்பதை காண முடிகிறது. எனவே பயிர்களின் ஆரோக்கியத்தன்மை மற்றும் இந்த ஊட்டச்சத்துக்கள் நோயை தாங்கி வளரும் தன்மையை மரத்திற்கு கொடுக்கிறது. 
  • நோய் காரணிகளின் இருப்பிடமாக திகழும் களைகள் குறிப்பாக ஒருவித்திலை களைகள் அதிக அளவு பைட்டோபிளாஸ்மா நோய்க் கிருமிக்கு அடைக்கலமாக திகழ்கிறது. எனவே தென்னந்தோப்பில் களை மேலாண்மை மிக இன்றியமையாத அகத்தி திகழ்கிறது.
  • அந்தந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் பாரம்பரிய ரகங்கள் வாடல் நோய் காரணியை தாங்கி வளரும் தன்மை உடையதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


திங்கள், 6 ஜனவரி, 2025

நெல் பயிரில் பாக்டீரியா இலை கோடு நோய் அறிகுறி மற்றும் கட்டுப்படுத்தும் முறை

  • நெல் சாகுபடியில் பல்வேறு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்பட்டாலும் அந்தந்த பருவத்தில் குறிப்பிட்ட சில நோய் அல்லது பூச்சிகள் பிரதானமாக காணப்படும். பருவத்திற்கு ஏற்ப என்ன நோய் அல்லது பூச்சி தாக்குதல் ஏற்படலாம் என்பதை அறிந்திருந்தால் சாகுபடி செய்வது மிக எளிது.
  • நெல் சாகுபடியில் ஒரே விதமான அறிகுறிகள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு காணப்படுவது நாம் அறிந்ததே எனவே அதன் அறிகுறிகளை வேறுபடுத்த தெரிந்து கொண்டால் சாகுபடி செலவை வெகுவாக குறைக்கலாம்.

பாக்டீரியா இலை கோடு நோய்:

  • இந்த நோயைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னதாக பாக்டீரியா இலை கருகல் நோய்
  • மற்றும் பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இலையின் நுனிப்பகுதியிலிருந்து பச்சை நிறத்தில் வெளிர் பழுப்பு நிற மாற்றம் காணப்படுவது பாக்டீரியா இலை கருகல் நோயின் பிரதான அறிகுறி ஆகும்.
  • அதேபோன்று இலையின் விளிம்புகள் தெளிவான நிறம் மாற்றம் அதாவது பச்சை முதல் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அதனை பொட்டாசியம் சத்து குறைபாடு எனலாம்.
  • இதேபோன்று அறிகுறிகளை தோற்று விக்கக் கூடியது தான் இந்த இலை கோடு நோய்.

நோயின் அறிகுறிகள்: 


  • ஆரம்ப நிலையில் வெளிர் பச்சை நிற நீள் வட்டப் புள்ளிகள் சிறிதாக இலைகளில் காணப்படும்.
  • நாளடைவில் இந்த புள்ளிகள் அளவில் மீண்டும் எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படும். தற்போது பார்க்கும் பொழுது சிறு சிறு கோடுகள் போன்று காணப்படும்.
  • படிப்படியாக இந்த கோடுகள் வெளிர் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாகவும் தீவிரமடையும் பொழுது பழுப்பு நிறத்திலும் காணப்படும். 
  • அதிகாலை வேளையில் இந்த நீள் வட்ட புள்ளிகளில் இருந்து பாக்டீரியாக்கள் திரவம் சுரக்கப்படும். 
  • பின்பு நிலை முழுவதும் கருகும் அபாயம் ஏற்படும் இதனால் உணவு உற்பத்தி திறன் குறைந்து பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் இழப்பீட்டில் தொய்வு ஏற்படும்.

சாதகமான சூழ்நிலை: 

  • மிதமான அல்லது அதிக வெப்பநிலை.
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • நோயால் தாக்கப்பட்ட வயலில் சாகுபடி செய்தல்
  • அதிக மழை, பனிப்பொழிவு, நீர் பாய்ச்சுதல் மற்றும் அதிக காற்று வீசும் தருணம்

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பருவத்திற்கு ஏற்றவாறு தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். 
  • சம்பா மற்றும் தாளடி பருவத்தில் ரகத்திற்கு ஏற்றவாறு உரிய பயிர் இடைவெளியுடன் நடவு செய்ய வேண்டும் அப்போதுதான் போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்க பெறும். 
  • சான்றிதழ் பெறப்பட்ட விதைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து அதனை விதை  நேர்த்தி  பயன்படுத்துவது மிக முக்கியம். 
  • நோயால் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து விதை நெல்லை தேர்வு செய்ய வேண்டும். 
  • விதை நெல்லை சுடு தண்ணீர் பயன்படுத்தி நேர்த்தி செய்தும் விதைக்கலாம். 
  • வயலில் அதிக சேர் இருக்க கூடாது அதே சமயம் அதிக அளவு தண்ணீரும் விட கூடாது எனவே காய்ச்சலும் பாய்ச்சலும் நீர் விடுவது சிறந்தது. 
  • ஏற்கனவே நெல் சாகுபடி செய்த வயதாக இருந்தால் முந்தைய பயிர்களின் கழிவு நன்கு மக்கும் வரை காத்திருந்து பயிர் செய்வது நல்லது.
  • கோடை பருவத்தில் வயலை ஆழமாக உளவு செய்து நோய் தாக்கும் கிருமிகளை அழிக்க முயற்சி செய்யலாம்.
  • களைகள் இன்றி சுத்தமாக பராமரித்தல் அவசியம்.
  • அதிக அளவு உரம் இதுவரை தவிர்க்கவும் இது மேலும் நோய் பரவுதல் ஊக்குவிக்கும்.
  • Xanthomonas வகையை சேர்ந்த இந்த பாக்டீரியா எளிதில் கட்டுப்படுத்துவது சற்று கடினம். 
  • நோய் தாக்குதலை தொடர்ச்சியாக ஆராய்ந்து ஆரம்ப நிலை தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழிக்கலாம். 

  • சாகுபடி செலவை குறைக்க Bacillus subtilis மற்றும் Pseudomonas கலந்து வாரம் ஒரு முறை தெளிப்பதால் நோயை கட்டுக்குள் வைக்கலாம். அல்லது கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை இலை வழியாக தெளிக்கலாம்.
  • Copper oxychloride- 50% - 2-2.5 கி/ 10 liter தண்ணீருக்கு
  • Coper hydroxide-  10கி/ 10 liter தண்ணீருக்கு
  • Streptomycin sulphate + Tetracycline Hydrochloride 90:10 SP- 20 கி/10 liter தண்ணீருக்கு

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

Recent Posts

Popular Posts